இஸ்கான் மறுமலர்ச்சி இயக்கம்
இறுதிக் கட்டளை
ஸ்ரீல
பிரபுபாதரே இஸ்கானின் தீக்ஷை குரு என்பதற்கான நிரூபணங்கள்
இங்ஙனம் கிருஷ்ணகாந்த்
முன்மொழிந்தவர். டாக்டர். கிம் நாட்
இறையியல்
பேராசிரியர், லீட்ஸ் பல்கலைக் கழகம், லண்டன் முதன்முதலில்
அக்டோபர் 1996 ஆம் ஆண்டில் இஸ்கான் GBC-இன் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட
குழுவினர்களுக்கு
சமர்பிக்கும்படி வேண்டிக் கொள்ளப்பட்டது.

பொருளடக்கம்
டாக்டர் கிம் நாட் அவர்களின் முன்னுரை………………………………… 6
முகவுரை ……………………………………………………………………… 8
முன்னுரை ………………………………………………………………………… 14
ஆதாரங்கள் …………………………………………………………………….. 17
ஸ்ரீல பிரபுபாதரின் இறுதி கட்டளையின் தோற்றம் மற்றும்
சூழ்நிலைகள் தொடர்பான நேரடியான மறுப்புரைகள் ………….. 25
நியமன ஒலி நாடா …………………………………………………………… 61
தொடர்புடைய பிற ஆட்சேபணைகள் …………………………………… 80
முடிவுரை ………………………………………………………………………… 113
ரித்விக் என்றால் என்ன ?…………………………………………………… 136
வரைபடங்கள் ………………………………………………………………… 139
ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளிலிருந்து தகுந்த மேற்கோள்கள்
● குரு என்பவர் உடல்ரீதியாக இருந்தாக வேண்டுமா ?………… 143
● உபதேசத்தைப் பின்பற்றுங்கள், உடலை அல்ல ………………. 147
● புத்தகங்களே போதுமானது .……………………………………… 150
● ஸ்ரீல பிரபுபாதரே நம்முடைய நித்திய குரு ……………………… 152
பிற்சேர்க்கைகள்
ஜூலை 9, 1977 கடிதம்: “எல்லா GBC -களுக்கும், கோயில் நிர்வாகிகளுக்கும் ”…… 156
ஜூலை 10, 1977 கடிதம் …………………………………………………………… 160
ஜூலை 11, 1977 கடிதம் …………………………………………………………. 164
ஜூலை 21, 1977 கடிதம் …………………………………………………………… 167
ஜூலை 31, 1977 கடிதம் …………………………………………………………… 170
ஸ்ரீல பிரபுபாதரின் உயில் பிரகடனம் (ஜூன் 4, 1977) & விருப்ப
ஆவணங்களின் தொகுப்பு (நவம்பர் 5, 1977) …………………………… 174
அறை உரையாடல்கள் ………………………………………………………… 179
தமால கிருஷ்ணர் பிரமிட் வீட்டில் தனது
குற்றங்களை ஒப்புக்கொள்ளல்……………………………………………… 192

தெய்வத்திரு .அ . ச . பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியார்
இறுதி கட்டளைக்கான முன்மொழிவு
இங்கணம்
டாக்டர் கிம் நாட், இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் மத ஆய்வு மூத்த விரிவுரையாளர்.
இயக்கத்தின் அங்கத்தினர்கள் மற்றும் வெளியிருப்பவர்கள் மீதான ஸ்ரீல பிரபுபாதரின் கண்ணோட்டம்’ (Insider and Outsider Perceptions of Srila Prabhupada) என்ற சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றை நான் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது, 1977-ல் ஸ்ரீல பிரபுபாதரின் மறைவுக்கு பின்னர், இஸ்கான் குருக்களின் நிலைப்பாடுகள் மற்றும் குருசீடப் பரம்பரை தொடர்பான வெவ்வேறு பக்தர்களின் வெவ்வேறுவிதமான கண்ணோட்டத்தில் பல்வேறு விதமான நியாயப்படுத்தும் கருத்துக்களைப் பற்றியும் நான் இங்கு சுருக்கமாக கூற முயற்சி செய்கிறேன். இயற்கையாகவே, இதற்கு முன்பாக நான் தனிப்பட்ட ஒவ்வொரு குருக்களின் ஆன்மீக வீழ்ச்சியினால் ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை குறித்தும், அதனை தொடர்ந்து அவர்களிடம் தீக்ஷை பெற்ற சீடர்கள், அவர்களின் ஆன்மீக சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் சோகத்தின் அலைகளைக் குறித்தும் அறிந்திருந்தேன். 1980-ல் குருக்கள் அமைப்பின் மீதான முடிவு செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் இஸ்கானின் தலைமை பொறுப்பு மற்றும் தீக்ஷை குறித்த குழப்பங்களை தீர்க்கும் என்று நான் நம்பினேன். ஆனால் பிறகு, நான் திரும்பவும் ஆய்வுக் கட்டுரையை தயாரித்துக் கொண்டிருந்தபோது தற்போதைய கட்டமைப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் சில கேள்விகளும் விவாதங்களும் எழுவதைக் கண்டேன். மேலும், குருக்கள் மற்றும் குருபரம்பரை குறித்து பல்வேறு அறிஞர்கள் எழுப்பும் கேள்விகளையும் கண்டேன். இது இன்றும்கூட தெளிவாக ஒரு நேரடி பிரச்சனையாகவே இருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜான் ப்ரெஜின்ஸ்கின் “வைஷ்ணவ கல்வியியல் பத்திரிகை” 5-ஆம் அத்தியாயத்தில் பரம்பரை கல்வி(n ‘The Paramparä Institution’ in volume 5 of Journal of Vaishnava Studies)” என்ற தலைப்பில் அவர் இதை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்துள்ளார். அதில் இஸ்கானின் எதிர்காலத்திற்குத் தேவைப்படும் தீர்க்கமான தலைமை மற்றும் தகுதியின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார். அவருடையது ஒரு கண்ணோட்டம் மட்டுமே ஆகும், ஆனால் அது இயக்கத்திற்கு உள்ளும் வெளியிலும் சுவாரசியத்தை தூண்டுவதின் மூலம் அந்த விஷயத்தின் ஆற்றலின் அளவீடு என்னவென்று தெரிகிறது.
1996 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இறுதிக்கட்டளையை ( ‘The Final Order’ ) படித்து, எனது கருத்துக்களைக் கூறவும், அப்புத்தகத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளைப் பற்றி கலந்துரையாடவும் என்னிடம் கேட்டுகொள்ளப்பட்டது. அதை படித்துக்கொண்டிருக்கும் போது, இது இஸ்கானின் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றது என்பதும், இதையே பல பக்தர்களின் ஆழ்மனதில் குழப்பமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதில் எந்த வித ஐயமும் எனக்கு இல்லை. இப்புத்தகத்தில் ஆன்மிக அதிகாரி மற்றும் அவர்களின் பரிமாற்றம், கிருஷ்ணரின் பிரதிநிதி மற்றும் அவரின் சீடருக்குமான உறவு, குரு மற்றும் பக்தி வழிபாட்டில் முறைப்படி வழிபடத்தக்கவர் குறித்தும் முக்கியமான ஆன்மீகக் கேள்விகளை எழுப்புவதாக எனக்குத் தெரிகிறது. நான் இயக்கத்திற்கு வெளியே இருப்பவன் என்ற முறையில், (தற்போதைய ஆச்சாரிய வழிமுறைக்கு எதிராக என்னால் ஆதாரங்களை கொடுப்பதோ மற்றும் இது தொடர்பான விஷயங்களை என்னால் தீர்மானிக்கவோ எடைபோடவோ) இந்த விஷயத்திற்கு தீர்ப்பளிக்க முடியவில்லை. எனினும் இங்கே மிகவும் சிரத்தையுடன் வழங்கப்பட்டுள்ள, ஸ்ரீல பிரபுபாதரால் முறையாக நிறுவப்பட்டு மற்றும் அவரின் சார்பில் எதிர்காலத்தில் தீக்ஷை அளிக்கும் ரித்விக் குருக்கள் குறித்தும் முறையான கருத்துக்களை என்னால் பாராட்டிக் கூற முடியும். இது எதிர்காலத்தில் மிக கவனமாக படிக்கப்பட்டு பரவலாக உரையாடப்படும் என நம்புகிறேன். இது ஏதோ நான் ஆதரிப்பதாலோ அல்லது கண்டிப்பதாலோ அல்ல. ஆனால் மிக அடிப்படை ஆதாரமான விஷயம் பற்றிய பிரச்சினையாக எழுந்துள்ளதன் காரணமாகவும் எல்லா தளத்திலும் உள்ள நபர்களுடைய எதிர்பார்ப்பின் காரணமாகவும் நான் கூறுகின்றேன். அனைத்து பக்தர்களும் இந்த விஷயம் பற்றி பேராவல் கொண்டுள்ளனர்.
ஒரு மூன்றாம் நபரான நான் இந்த வகையான முன்மொழிவை எழுதுவது அவ்வளவு சரியான செயலாக தோன்றவில்லை என்பதில் சந்தேகமில்லை. எனினும், இந்த இயக்கத்தின் மீதான அக்கறையும் எனது ஆர்வமுமே என்னை இவ்வாறு எழுத ஊக்கப்படுத்தியுள்ளது.
கிம் நாட் , பிப்ரவரி 1997
ஐந்தாம் பதிப்பிற்கான முகவுரை
முதன்முதலில் 1996-ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட இறுதி கட்டளை என்ற இந்த புத்தகம் தற்போது பத்து ஆண்டுகளைக் கடந்து ஐந்தாம் பதிப்பிற்கு தயாராகியுள்ளது. முதன்முதலில் இஸ்கான்-இல் தீக்சை அளிப்பது சம்பந்தமாக ஸ்ரீல பிரபுபாதரின் உபதேசங்கள் பற்றிய உரையாடல் தாள்களாக தான் இறுதி கட்டளை-யில் நான் விளக்கமளித்திருந்தேன். இந்த கடிதங்கள் எப்படிப்பட்ட ஒரு நல்ல சர்ச்சையை தூண்டியது என்பதை இந்த இயக்கத்தை பற்றி தெரிந்த யாரும் மறுக்கமுடியாது. இது இந்த பிரச்சினையை வெளிக்கொண்டுவந்து வெளிச்சப் படுத்தி காட்டும் நோக்கத்தை நிறைவேற்றி வெற்றியடைந்துள்ளது.
தற்போது இஸ்கான்-இன் தலைமை பொறுப்பாளர்களுக்கு கடினமாகியுள்ள விஷயம் என்னவென்றால், ஸ்ரீல பிரபுபாதரால் சுயமாக கையெழுத்திடப்பட்ட சட்டபூர்வமான ஆவணங்களை அவர்களுக்குச் சாதகமாக மாற்றமுடியாமல் போனதும், அதில் தம்மால் கட்டமைத்த இயக்கத்திற்கு தாமே எதிர்காலத்தில் தீக்ஷை அளிக்கும் ஒரே குரு என்ற தன்னுடைய தெளிவான விருப்பத்தை தெரிவித்துள்ளதும் தான். தற்போது சட்டரீதியான ஆவணங்களை உள்ளடக்கிய “இறுதி கட்டளை” என்ற இந்த நூலானது உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு மேலும் இணையதளத்திலும் இது மிக எளிமையாக கிடைக்கின்றது. சில நாடுகளில் இறுதி கட்டளை என்ற புத்தகம் அந்தந்த நாட்டின் மொழியிலேயே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (செப்டம்பர் 2008 அளவில், கீழ்கண்ட மொழிகளில் கிடைக்கின்றன: பிரஞ்ச், ஸ்பேனிஷ், ஜெர்மன், ரஷ்யன், சைனீஸ், ஹிந்தி, பங்காளி, கன்னடம், கிரேச் , இத்தாலியன், ஹங்கேரியன்..… மேலும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது). இந்த நிலையில் தற்போதைய இஸ்கான் தலைவர்கள் அனைத்து இஸ்கான் மையங்களிலும் இந்தப் புத்தகம் விநியோகிக்கப்படக்கூடாது என்று தடை விதித்திருக்கின்றனர். இந்த காரணத்தினாலேயே, இவ்வளவு இணையதள வசதிகள் இருப்பினும் கூட, சர்ச்சைகள் நடந்துகொண்டு இருப்பினும் கூட, இன்னும் பலருக்கு இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு இல்லாமல்தான் இருக்கின்றது. குறைந்தபட்சம் இஸ்கான்-இல் செயல்படுகின்ற தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கும், குருக்களுக்கும், ஆன்மீக தீக்ஷை சம்பந்தமான ஸ்ரீல பிரபுபாதருடைய கட்டளையை, தெரிந்து கொள்ளாமல் இருப்பது என்பது, ஒரு அலட்சிய மனப்பான்மை ஆகும். இந்த இறுதி கட்டளை என்ற நூலின் அறிமுகத்தில் நாங்கள் குறிப்பிட்டுள்ள விஷயம் என்னவென்றால்,
“ஸ்தாபக ஆச்சாரியரின் நேரடியான கட்டளையை வேண்டுமென்றே கீழ்பணியாமல் இருப்பது அல்லது மற்றவர்களை கீழ்பணியாதபடி செய்வது என்பது மிகவும் விரும்பத்தகாத ஒரு விஷயமாகும்.”
GBC (ஆட்சி குழு ஆணையர்களின்)- அலட்சியப் போக்கு, தெளிவற்ற தன்மை, வன்முறை கலந்த அடக்குமுறை மற்றும் இறுதிக் கட்டளை சம்பந்தமான நேர்மையற்ற போக்கு, இந்த மேற்கண்ட விஷயங்களை இப்போது மீண்டும் மறுபார்வை செய்ய வேண்டிய அவசியமாகிறது.
தற்போது இஸ்கான் மறுமலர்ச்சி இயக்கம் ( IRM - ISKCON Revival Movement ) உலகளாவிய ஒரு இயக்கமாக தோன்றி இறுதி கட்டளையின் அடிப்படையை வலியுறுத்தியும் அதனுடைய இறுதி முடிவை முன்னெடுத்துச் செல்ல அமைக்கப் பட்டுள்ளது. www.iskconirm.com என்ற இணையதளத்தில் நூற்றுக்கும் மேலான ஆவணங்களை அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் “பிரபுபாதரிடம் திரும்பு” ( Back to Prabhupada) என்ற ஒரு காலாண்டு வண்ண இதழை மூலமாக இன்று வரைக்கும் ஆயிரக்கணக்கான எங்களுடைய சந்தாதாரர்களுக்கு இலவசமாக விநியோகித்தும் வருகின்றோம். மேலும் உலக அளவில் இஸ்கான் மறுமலர்ச்சி இயக்கத்தின் செயல்பாடுகளை ஆன்லைன் மூலமாக உலக அளவில் அவ்வப்போது தெரிவித்தும் வருகின்றோம். இதில் எண்ணற்ற பல பத்திரிகைத் துறை வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளையும் BBC-ல் வெளியிட்டதும் அடங்கும். இஸ்கான் மறுமலர்ச்சி இயக்கம், பெரிய அளவிலான கல்வி மாநாடுகளை உலகளாவிய கலாச்சார ஆராய்ச்சி கழகம், CESNUR, அமெரிக்க மத கல்விக்கூடம் போன்றவற்றில் நிகழ்த்தி செய்திகளை மக்களுக்கு வழங்கியுள்ளோம். அத்துடன், கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ், மார்ட்டின் லூதர் யூனிவர்சிட்டி Halle-Wittenberg, , Continuum International Publishing போன்ற பெரிய பெரிய பல்கலைக் கழகங்களில் நாங்கள் இந்த விஷயங்களை உண்மையின் மீதான ஆவணங்களாக பகிர்ந்துள்ளோம். இதன் மூலமாக சிறந்த அறிஞர்களின் மத்தியில் இஸ்கான் மறுமலர்ச்சி இயக்கம் என்ற இந்த இயக்கமானது பிரபலமடைந்துள்ளது மேலும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இஸ்கானில் உள்ள கற்றறிந்த பல அறிஞர்கள் கூட இதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இஸ்கான் மறுமலர்ச்சி இயக்கம் சார்பாக வெளியிடப்பட்ட "இறுதி கட்டளை" என்ற இந்த நூலின் முடிவை இஸ்கான் பக்தர்களும் பல்வேறு மையங்களும் கூட பெரிய அளவில் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இஸ்கான் மறுமலர்ச்சி இயக்கம்(IRM) பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இஸ்கான் மறுமலர்ச்சி இயக்கம் என்பது உலகம் முழுவதிலும் உள்ள, இஸ்கான் இயக்கத்தை மீண்டும் சரியான முறையான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறை கொண்ட பக்தர்கள் ஒன்றிணைந்து, இஸ்கானுடைய ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கமாகும்.
நவம்பர் 14, 1977 ஆம் ஆண்டில் இஸ்கானுடைய ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரின் மறைவுக்கு பிறகு, இஸ்கானுடைய பொதுவான கௌரவம் மற்றும் ஆன்மீக புனிதத்துவம் போன்றவை பெருமளவிலான சீர்குலைவுக்கு உட்பட ஆரம்பித்தது. ஸ்ரீல பிரபுபாதர் தன்னந்தனியாக 1966 ஆம் ஆண்டில் இந்த உலகத்திற்கு மாபெரும் ஒரு பரிசாக இஸ்கான் இயக்கத்தை ஸ்தாபனம் செய்தார். பிறகு அவர் மறைந்த பிறகு இது மேலும் விரிவடையக்கூடிய ஒரு சக்தியாகவும், மனிதகுலத்திற்கு ஒளி காட்டுகின்ற ஒரு கலங்கரை விளக்கமாகவும் திகழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் இன்று இஸ்கான் இயக்கம் உடைந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மையை 2000-ஆம் ஆண்டில் GBC-ன் முதல்வராக இருந்த ரவீந்திர ஸ்வரூப தாஸர் அவர்கள் இந்த கடிதத்தை ஒப்புக்கொண்டு அவரே முன்வைத்தார். அதில் அவர் கூறியதாவது :-
“இங்கே கேள்வி என்னவென்றால்:- இனி நாம் என்ன செய்ய முடியும்? ஒருதலைபட்சமாக செயல்படுகின்ற மற்றும் உடைந்து கொண்டிருக்கும் இந்த இயக்கத்தை நாம் எப்படி சமாளிக்கப் போகின்றோம் ? “
இந்த சரிவு எங்கிருந்து ஆரம்பித்தது என்று ஆராய்ந்தால், ஸ்ரீல பிரபுபாதரால் கொடுக்கப்பட்ட உபதேசங்களிலிருந்தும், வழிகாட்டுதல்களிலிருந்தும் விலகிச் சென்றதன் காரணத்தாலேயேதான். மேலும் “இஸ்கானுடைய ஒரேயொரு தலையாய தீக்ஷா குரு ஸ்ரீல பிரபுபாதரே!” என்ற நிலையை மாற்றியமைத்ததன் காரணத்தால்தான் இந்நிலை ஏற்பட்டது. இஸ்கான் மறுமலர்ச்சி இயக்கமானது முயற்சி செய்வது எதற்காகவென்றால், இஸ்கானுடைய முந்தைய பெருமை, புனிதத்துவம் மற்றும் தத்துவத்தின் மீதான அதன் நேர்மைதன்மை போன்றவற்றை, இஸ்கானுடைய தன்னிகரற்ற அதிகாரியும் தீக்ஷா குருவுமாகிய ஸ்ரீல பிரபுபாதரால் கொடுக்கப்பட்ட உபதேசங்கள் மற்றும் வழிமுறைகள் மூலம் மீண்டும் ஸ்தாபனம் செய்வதாகும். இஸ்கான் மறுமலர்ச்சி இயக்கத்தின் நிலை என்னவென்றால் பிரபுபாதரின் இறுதி கட்டளையை அமைப்பதும், இஸ்கானுக்கு என்று அவர் வழிகாட்டிய முறையிலிருந்து மாற்றம் அடையாமல் பார்த்துக் கொள்வதுதான். இந்த இரண்டு விஷயங்களையும் வலியுறுத்தும் ஆதாரங்கள் நம் இணையதளத்தில் (www.iskconirm.com) கிடைக்கின்றது.
இது இஸ்கானில் மறுமலர்ச்சியும் புத்துணர்வும் ஏற்படவேண்டும் என விரும்பும் இஸ்கானின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்படுத்தும் இஸ்கான் இயக்கத்திற்குள் இருக்கும் ஒரு இயக்கமாகும்.
இல்லை. இது ஸ்ரீல பிரபுபாதரால் வழங்கப்பட்ட உண்மையான இஸ்கானை புனரமைப்பதாகும். இந்த நோக்கம் அடையப்பட்ட உடனேயே இஸ்கான் மறுமலர்ச்சி இயக்கம் கலைக்கப்படும்.
முதலில், ஆன்மீக வாழ்வின் அடிப்படையான தத்துவம் என்னவென்றால், ஆன்மீக குருவின் கட்டளையை முறையாகப் பின்பற்றினால் மட்டுமே ஒருவர் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியும் என்பதுதான். ஒரு குருவானவர் தன் சீடனிடம் தனக்கு பால் வேண்டும் என்று கேட்க, அவரிடம் தண்ணீரைக் கொண்டுபோய் கொடுத்தால், அதனால் குரு மகிழ்ச்சியடைவாரா? குரு மகிழ்ச்சியடையாத பட்சத்தில் எப்படி ஒருவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நெருங்க முடியும் ?
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீல பிரபுபாதரால் கட்டளையிட்டபடி, இஸ்கானில் விஷயங்கள் நடைபெறவில்லை. ஸ்ரீல பிரபுபாதரின் உடல்ரீதியான மறைவிற்குப் பிறகு, அவரால் நியமிக்கப்பட்ட ரித்விக் குருக்கள் அல்லது பிரிதிநிதி அமைப்பின் மூலமாக, ஒரு நபருக்குக்கூட ஸ்ரீல பிரபுபாதரின் சார்பாக தீக்ஷை அளிக்கப்படவில்லை. இந்த முறை மட்டுமே தீக்ஷை அளிக்கின்ற வழிமுறையாக ஸ்ரீல பிரபுபாதரால் அங்கீகரிக்கப்பட்டதும், எப்போதும் தொடர வேண்டிய முறையும் ஆகும். இஸ்கானின் அங்கத்தினர்கள் மீண்டும் அவரது கட்டளையான இந்த வழிமுறையை பின்பற்ற தொடங்கினால், பிறகு தாமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை திருப்திப்படுத்துவர். பின்னர் இயல்பாகவே எல்லா ஆன்மீக வெற்றிகளும் அவர்களை பின்தொடரும். மேலும் ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடராக நேரடி தொடர்பில் இருக்கும்போது, பிரிவினைவாதம் என்பது வராது. அனைவரும் ஒருமித்த ஒற்றுமை உணர்வோடு, ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீல பிரபுபாதரின் புகழுக்காகவும் சேவைக்காகவும் ஒரே நோக்கத்துடன் செயல்படுவர். பல இஸ்கான் குருக்கள் ஆன்மீக வீழ்ச்சியடைந்த பின்னர், பாவ காரியங்களை செய்பவர்களாகவும், ஆயிரம் மற்றும் லட்சக்கணக்கான பணத்தையும், பல சீடர்களையும் அவர்களுடன் எடுத்துச் சென்றதையும் வரலாற்றில் காணலாம். இவ்வாறாக தொடர்ந்து சொத்துக்களை இழத்தல், நம்பிக்கையை இழக்க வைத்தல், தொண்டர்களை இழக்க வைத்தல் போன்ற நஷ்டங்களை தவிர்க்க ஸ்ரீல பிரபுபாதரின்மீது மட்டுமே நம்பிக்கையை ஏற்படுத்துவதின் மூலம் தவிர்க்கலாம். சீடர்களால் கொடுக்கப்படும் 80 சதவீதம் காணிக்கை பணம் குருக்களுக்கு செல்வதற்கு பதிலாக நேரடியாக கோயிலின் சேவைக்கு செல்வதின் மூலம் அவர்களை ஆரோக்கியமுள்ளவர்களாகவும் பலமுள்ளவர்களாகவும் ஆக்கும்.
இஸ்கான் மறுமலர்ச்சி இயக்கத்தின் நிலைப்பாடு சரியானது என்று சொல்வதற்கு மூல காரணம் அவர்களிடம், ஸ்ரீல பிரபுபாதரால் கையெழுத்திடப்பட்டு, மொத்த இயக்கத்திற்கும் விநியோகிக்கப்பட்ட சட்ட ரீதியான ஆவணங்கள் இருக்கின்றன. மாறாக, GBC-ஆல் வழங்கப்பட்ட மூன்று தெளிவற்ற ஆதாரங்களும் முரண்பாடுகள் நிறைந்தவையாயும் (அவற்றில் ஒன்றுகூட சட்ட ரீதியான ஆவணங்களால் ஆதரிப்பவையாயும் இல்லை) ஆகையால் நடைமுறையில் அவர்களுக்கு நிலைப்பாடு எதுவுமில்லை, சரியானது என்று பேச ஒன்றுமில்லை. நாம் இங்கு மேலும் கவனித்துப் பார்த்தால், அவைகள் மற்ற ஆவணங்களோடு ஒத்துப் போகாமல் இருப்பது ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் அவைகளுக்கள் உள்ள கருத்துகளுடனேயே அவைகள் முரண்பாடுகளைக் கொண்டவைகளாக இருக்கின்றனர். உதாரணமாக, அவர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறோம். எப்போது ஸ்ரீல பிரபுபாதர் தனக்கு பதிலாக உங்களை இஸ்கானின் தீக்ஷை குருவாக நியமித்தார் என்று கேள்வி கேட்டால், அவர்கள் கீழ்கண்ட மூன்று GBC-யின் தாள்களை முன்வைக்கின்றனர்.
அ) என்னுடைய கட்டளையின் பேரில் புரிந்துகொள்ளப்பட்டது(On My Order Understood)(GBC, 1995): ஸ்ரீல பிரபுபாதர் தன்னுடைய தொண்டர்களுக்கும், தீக்ஷை கொடுக்கும் குருக்களிடமும் கூறியது என்னவென்றால் அவர்தம் சார்பாக செயல்பட வேண்டும் என்று. இது நடந்தது ஜூலை 7-ஆம் தேதி 1977. (GBC 1995, இஸ்கானில் குருக்கள் மற்றும் தீக்ஷை-GII பக்கம் 28 )
ஆ) என்னுடைய சீடரின் சீடர் (அருள்திரு. உமாபதி ஸ்வாமி, 1997) : 1977-ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி 11 தீக்ஷை அளிக்கும் குருக்களும் நியமிக்கப்பட்டு தயாராக உள்ளனர். இங்கே ரித்விக் என்றால் “பிரதிநிதிக்கும் ஆச்சாரியார்” அல்லது “தீக்ஷா குரு” என்பதுதான்.
இ ) பிரபுபாதரின் உத்தரவு ( பத்ரிநாராயண தாஸா 1998) : ஜூலை 9, 1977, ஸ்ரீல பிரபுபாதரின் இருக்கும் வரை அவர் முன்னிலையில் தனது ஆசாரத்தை வெளிப்படுத்திக் கொண்டு இந்த 11 பேரும் முழுமையான குருக்களாக செயல்படுவர்.
மேலே உள்ளதை பார்த்தால், GBC-ஆனது மூன்று வெவ்வேறு தேதிகளில் ஸ்ரீல பிரபுபாதர் தனக்கு பதிலாக அமர்த்துதல் தொடர்பாக கூறியுள்ளார் என்கின்றனர். அதில் அ)-என்பது ஒரு தோட்டத்தில் நடந்த உரையாடலை குறிக்கிறது, ஆ)-என்பது ஸ்ரீல பிரபுபாதருக்கும் அவரது மூத்த சீடர்களுக்கும் நடந்த சந்திப்பைக் குறிக்கிறது. இ)-என்பது கையெழுத்திடப்பட்ட தீக்ஷைக்கான வழிகாட்டுதல்கள் என்று கூறப்பட்டு பின்னர் அந்த புத்தகத்திற்கு பெயரிடப்பட்டது. இவ்வாறாக GBC-இன் நிலை குறித்தான தாள்கள் முற்றிலும் வேறுவிதமான கட்டுக்கதையைக் கூறுகின்றன. இந்த விஷயத்தை மேலும் மோசமாக்கும் வகையில் :-
2004 பிப்ரவரி மாதம், மாயாப்பூரில் நடந்த வருடாந்திர கூட்டத்தில் GBC- ஆனது என்னுடைய கட்டளையின் பேரில் புரிந்துகொள்ளப்பட்டது என்ற கடிதத்தை பின்வாங்கி, தனிப்பட்ட முறையில் அது பொய் என்றும் உண்மையைப் போல திரிக்கப் பட்டது என்றும் கூறினர். இதே கடிதம்தான் இறுதிக் கட்டளையை முதன்முதலில் சவாலுக்கு தூண்டியது.(தயவுசெய்து அறிமுகப் பக்கம் XIII -ஐ பார்க்கவும்) இந்த உண்மையை வெட்கக்கேடான முறையில் பின்வாங்கியதுதான் மேற்கொண்டு இஸ்கான் மறுமலர்ச்சி இயக்கத்தின்(IRM) நிலையையும் நியாயப்படுத்துகிறது.
மிக தெளிவாகவே தெறிகின்ற விஷயம் என்னவென்றால் GBC - ஆனது குழப்பமுற்று அடுத்தடுத்த தீக்ஷா குருக்களை அங்கீகரித்துள்ளது. இஸ்கான் மறுமலர்ச்சி இயக்கம் வாதம் செய்வது என்னவெனில், ஸ்ரீல பிரபுபாதர் ரித்விக்குகளைத் தவிர, தனக்கு மாற்றான எப்போதும் தீக்ஷை குருக்களை உருவாக்கவில்லை என்பதாகும். அவர் ரித்விக் அமைப்புகளை மட்டுமே உருவாக்கி செயல்படுத்துமாறு கூறி, தனக்குப் பிறகு அதை நிறுத்துமாறு கோரும்படியான எந்த கட்டளையும் இல்லை. இந்த அடிப்படையிலேயே, நாம் வாதிடுவது என்னவெனில் GBC- முதலில் தனது ஒருமித்த நிலைப்பாட்டினை தீர்மானிக்க வேண்டும். அதன் பிறகே அதனுடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்த முடியும்.
இதில் வருந்தத்தக்க உண்மை என்னவெனில், இன்றைக்கும் கூட, எவரேனும் GBC-யின் முரண்பாடான சாட்சியங்களை குறித்து கேள்வி ஏதேனும் கேட்டால் அவர் சமுதாயத்திலிருந்து இரக்கமின்றி வெளியேற்றப்படுகிறார்கள் என்பதுதான்.
கிருஷ்ணகாந்த்,
செப்டம்பர் 2008
IRM-(இஸ்கான் மறுமலர்ச்சி இயக்கம்) தொடர்பாக மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள, அதன் இலவச சந்தாவினை பெறுவதற்கு, இறுதிக்கட்டளை தொடர்பான மேலும் கேள்விகளை கேட்டு தெரிந்து கொள்ள, இந்நூலின் ஆசிரியரை தொடர்பு கொள்ள விரும்ம்பினால், தயவு செய்து கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்பவும்:
அல்லது
என்ற இணைய தளத்தை அணுகவும்.
முன்னுரை
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்திற்குள் (இஸ்கான்) தீக்ஷை அளிக்கும் வழிமுறை எவ்வாறு தொடர வேண்டும் என்பதற்கு ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள் மேலாண்மை குழு ஆணையத்திற்கு (Governing Body Commission) வழிமுறைகளை எவ்வாறு வகுத்துக் கொடுத்துள்ளார் என்பதனை எடுத்துச் சொல்வதற்கான ஒரு தாழ்மையான முயற்சிதான் இந்த புத்தகம். இந்த விஷயத்தில் மூத்த இஸ்கான் பக்தர்களால் வெளியிடப்பட்ட பல ஆவணங்கள் மற்றும் கட்டுரைகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம் என்றாலும் மிக முக்கியமானதாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்னவென்றால் “இஸ்கானின் குருக்கள் மற்றும் தீக்ஷை (Gurus And Initiation In ISKCON இதன்பிறகு GII என குறிப்பிடுவோம்) என்ற தலைப்பில் (ஜீபிசியின்) மிக சமீபத்திய கையேட்டின் மீதானதாகும். மற்றொன்று "என்னுடைய கட்டளையை புரிந்துகொள்ளப்பட்டது(On My Order Understood)" என்ற பத்திரிக்கையின் மீதாகும். அது இஸ்கானின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வரக்கூடியதாகும்.
"’என்னுடைய கட்டளை புரிந்துகொள்ளப்பட்டது(On My Order Understood)’ என்ற புத்தகத்தை(paper) மேலாண்மை குழு ஆணையம்(GBC) அங்கீகரித்து, அதில் ஸ்ரீல பிரபுபாதரின் மறைவுக்குப் பிறகு, குருசீடப் பரம்பரை தொடர்வதற்கான ஸ்ரீல பிரபுபாதரின் விருப்பத்தின் அடிப்படையிலான இஸ்கானின் சட்டம் மற்றும் இறுதி சித்தாந்தம் என்று அது தீர்மானிக்கப்பட்டுள்ளது . [பகுதி-II ஜிபிசி நிலைப்பாடு ஆவணங்களை இப்புத்தகத்தில் காண்க]”(GII, p.1)
ஜிபிசியினால் வெளியிடப்பட்ட “இஸ்கானின் குருக்கள் மற்றும் தீக்ஷை (GII) என்ற புத்தகத்தில் தெளிவாகவும் குறிப்பாகவும் கூறப்பட்டுள்ள விஷயம் என்னவென்றால் இஸ்கானின் சட்டங்களில் உள்ள, தொடர்பின்மை, குருக்கள், சீடர்கள் மற்றும் பொதுவான குரு தத்துவம் குறித்த முரண்பாடுகளை நீக்குவதும் இறுதி சித்தாந்தத்தை ஸ்தாபனம் செய்வதும் ஆகும். நாமும் இங்கே சிரத்தையுடன் பிரார்த்திப்பது என்னவென்றால் இந்த புத்தகமும் அதே நோக்கங்களை பின்தொடர வேண்டும் என்பதுதான்.
நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் தத்துவ ரீதியான நேர்மையுடனும், நாங்கள் கூற விரும்புவது என்னவென்றால், GII-இல் முழுமையாக குறிப்பிடப்படாத ஒன்றிரண்டு முரண்பாடுகள் இன்னும் உள்ளன என்பதை நாங்கள் உணர்கிறோம். அவைகள் மேலும் விசாரணை மற்றும் கலந்துரையாடல்களுக்கு உட்படும்போது பல நன்மைகளை அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதும் சில முரண்பாடுகளை தெளிவுபடுத்துவதற்கு முன்னெடுத்தாலும் கூட, அவைகள் தீவிரமானதாவும், சமாளிக்க முயலும்போது வேதனையை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன. எனவே அவைகள் தற்போது சமாளிக்கப்பட்டால் எதிர்கால குழப்பங்களும் பயங்கரமான திசை திருப்புதலிலிருந்தும் பெருமளவில் குறைக்க முடியும் என நம்புகிறோம். இஸ்கானில் குரு வழிமுறையை மறுபரிசீலனை செய்வது என்பது ஏதோ முன்னெப்போதும் இல்லாத புதிதான விஷயம் ஒன்றும் அல்ல. கடந்த காலங்களில் சின்னங்கள் அகற்றப்பட்டன, விழாக்கள் குறைக்கப்பட்டன மற்றும் முன்னுதாரணங்கள் மாற்றப்பட்டன. அவை நீண்ட கால இடையூறுகள் இல்லாமல் செய்யப்பட்டவை.
இஸ்கானுடைய மொத்த திட்டங்களும் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி இந்த உலகத்திற்க்கு மிக முக்கியமான சமூகம் ஆகும். ஆகவே அதன் ஸ்தாபக ஆச்சாரியரால் வகுக்கப்பட்ட தத்துவரீதியிலான கோட்பாடுகளிலிருந்தும் நிர்வாக அமைப்பிலிருந்தும் அணுவளவும் விலகாதவாறு அதன்மீது தொடர்ந்த கண்காணிப்பை பராமரிப்பது என்பது மிக மிக கட்டாயமானதாகும். ஸ்ரீல பிரபுபாதர் தொடர்ந்து வலியுறுத்தியது என்னவெனில், நாம் எதையும் மாற்றக்கூடாது, புதிதாக கண்டுபிடிக்கக் கூடாது மற்றும் கற்பனையை புகுத்தக் கூடாது என்பதுதான். மாறாக, அவரால் கடினப்பட்டு மிகக் கவனமாக கட்டமைத்த இயக்கத்தினை அப்படியே உள்ளது உள்ளபடி விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது தான். 1996-ஆம் ஆண்டில் வருகின்ற ஸ்ரீல பிரபுபாதரின் நூறாம் ஆண்டு பிறந்த நாள் நேரத்தில், நாம் ஸ்ரீல பிரபுபாதரின் நோக்கத்தை முறையாக கொண்டுவந்துள்ளோமா? என்பதை மிகத் தெளிவாக உற்று நோக்க வேண்டும்.
எங்களுடைய உறுதியான நம்பிக்கை என்னவென்றால், இஸ்கானில் இருக்கும் தற்போதைய குரு அமைப்பு பிரபுபாதரால் கையெழுத்திடப்பட்ட, கடைசியாக தீக்ஷை கொடுப்பது சம்பந்தமாக உத்தரவுக்கு இணங்க முழுமையாகக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான். தீக்ஷை சம்பந்தமான அவருடைய இறுதிக் கட்டளை ஜூலை 9, 1977 அன்று வெளியிடப்பட்டது (தயவுசெய்து ஜூலை 9, 1977 கடிதத்தை பிற்சேர்க்கை பக்கம்: 158-ல் பார்க்கவும்)
சில சமயங்களில், மற்ற கடிதங்கள் மற்றும் போதனைகளை விட இந்த கடிதத்தில் உள்ள வலியுறுத்தலை பற்றி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எங்களுடைய தரப்பில் நாங்கள் மீண்டும் மீண்டும் GBC - யினுடைய சட்டமான GII (Gurus And Initiation In ISKCON)- புத்தகத்தில் கூறப்படும் கருத்துக்கள் தான். அதில்
“கடைசி வாக்குமூலங்கள், அதற்கு முந்தைய வாக்கு மூலங்களை அடக்கிவிடும் என்பதுதான் நியாயம் “.(GII, p.25)
ஜூலை 9-ஆம் தேதி கடிதமானது இஸ்கானுக்குள் தீக்ஷை தொடர்பான இறுதி உபதேசமாக இருப்பதின் காரணமாக, அதையே மொத்த இயக்கத்திற்குமானதாக எடுத்துக்கொண்டு அதனை அதனுடைய வகையிலேயே காணப்படவேண்டும். ஆகவே அந்த கட்டளையை முழுமையாக ஏற்றுக்கொள்வதும் நடைமுறைபடுத்துவதும் ஸ்ரீல பிரபுபாதருடைய போதனைகளுடன் எந்தவகையிலும் முரண்பட்டதாக இல்லாததால் அதை காண்பிக்கப்படும்.
நமக்கு சூழ்ச்சி செய்வது தொடர்பான எந்த கருத்துக்களிலோ அல்லது துரதிஷ்டமான தனிப்பட்ட நபர்களின் ஆன்மீக வீழ்ச்சியின் விளக்கங்களையும் தோண்டி எடுக்கவோ விருப்பமும் இல்லை. நடந்தது நடந்துவிட்டது. முந்தைய தவறுகளில் இருந்து நாம் நிச்சயமாக கற்றுக்கொள்ளலாம். வெறுமனே பழைய தவறுகளை தொடர்ந்து நிலைநிறுத்தாமல், மன்னித்து மீண்டும் எதிர்கால திருத்தங்களுக்கு வழிவகை அமைக்க முயற்சி செய்கிறோம். இந்நூலின் ஆசிரியரின் கருத்தைப் பொறுத்தவரை, இஸ்கானில் உள்ள பெரும்பான்மையான பக்தர்கள், ஸ்ரீல பிரபுபாதரை மகிழ்விக்க உண்மையாக முயற்சி செய்கிறார்கள்; ஆனால் எவரேனும் நம் ஸ்தாபக ஆச்சாரியாரின் நேரடியான கட்டளையை வேண்டுமென்றே கீழ்படியாமல் இருப்பதும் அல்லது மற்றவர்களை கீழ்ப்படியாமல் இருக்கும்படி செய்வதும் மிக மிக விரும்பத்தகாத விஷயம் என்று நாங்கள் கருதுகிறோம். அப்படியிருப்பினும் கூட, பொதுவான இஸ்கானுக்குள் ஏதாவது முறையில் சில தெளிவில்லாத தத்துவங்களும் நிர்வாகம் சம்பந்தமான தகவல்களும் கடந்த பத்தொன்பது வருடங்களில் பாழடைந்ததன் காரணமாக, அதனை மீண்டும் சீர்தூக்கி பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது. அவ்வாறாக சில பாழ்பட்ட பகுதிகளை கண்டறிவதின் மூலம், ஸ்ரீல பிரபுபாதருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குமான நம் பக்தி சேவையில் சில தடைகளை வேரறுக்க ஏதேனும் உதவியாளராக இருக்கும்படியாக நாம் பிரார்த்திப்போம்.
இந்த புத்தகத்தில் ஸ்ரீல பிரபுபாதரால் தனிப்பட்ட முறையில், கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் எழுத்துவடிவங்களாக மாற்றப்பட்டவற்றை உரையாடல்கள், குறிப்பாக இவை அனைத்தும் மேலாண்மை குழு ஆணையத்தினால்(GBC) அங்கீகரிக்கப்பட்டவை என்றறிந்து நாங்கள் வழங்கியுள்ளோம். பிறகு நாம் கவனமாக, இந்த ஆவணங்களின் மீதான இருதரப்பு வாதங்களையும் சூழ்நிலையையும் கண்டு, அதில் உள்ள கருத்துக்களை இலக்கிய ரீதியாக அப்படியே எடுத்துக்கொள்ளலாமா அல்லது நடைமுறைப்படுத்துவதில் அல்லது நியாயப்படி அதன் அர்த்தங்களை மாற்றியமைக்கும் உபதேசங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்தும் அடுத்தடுத்து தெளிவாக ஆராய்ந்து பார்ப்போம். மேலும் நாம் இந்த ஆவணங்கள் தொடர்பாக எழுப்பப்படும், தகுந்த தத்துவ ரீதியிலான அனைத்து பிரச்சினைகளையும் ஆராய்ந்து, மேலும் தீக்ஷை கொள்கை ஆவணமான ஜூலை 9-ம் தேதி கடிதத்தை அப்படியே நேரடி இலக்கிய ரீதியான அர்த்தங்களை ஏற்றுக் கொள்வதற்கு, எதிராக எழுப்பப்படும் பொதுவான ஆட்சேபனைகளுக்கும் பதிலளிப்போம். மேலும், இறுதியாக "பிரதிநிதிக்கும் ஆச்சாரிய அமைப்பு" எவ்வாறு ஜூலை 9-ஆம் தேதி கடிதத்தில் வரையறுக்கப் பட்டுள்ளது என்பதைக் கண்டு, குறைந்தபட்ச தொந்தரவுகளுடன் எவ்வாறு அதனை செயல்படுத்தப்படலாம் என்பதையும் பார்ப்போம்.
நமது எல்லா வாதங்களும் ஸ்ரீல பிரபுபாதரால் தனது புத்தகங்கள், கடிதங்கள், உபன்யாசங்கள் மற்றும் உரையாடல்கள் ஆகியவற்றை மட்டுமே அடித்தளமாக கொண்டு வழங்கியிருக்கிறோம். நாங்கள் பணிவுடன் அனைத்து வைஷ்ணவர்களின் கருணையையும் வேண்டி கேட்டுக்கொள்வது என்னவென்றால் நாங்கள் யாருக்கும் அபராதத்தை இழைக்கவோ அல்லது எந்த வகையிலும் தெய்வத்திரு.பக்தி வேதாந்த ஸ்வாமி ஸ்ரீல பிரபுபாதரின் சக்திமிகுந்த நோக்கத்தில் சீர்குலைவு ஏற்படுத்தும்படியோ அமையக்கூடாது என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
ஆதாரங்கள்
ஸ்ரீல பிரபுபாதரை அறிந்த எவருக்கும் அவருடைய நுணுக்கமாக உற்றுநோக்கும் தன்மையையும் அடிக்கடி கவனித்திருப்பார்கள். அவர் பக்தி சேவையின் ஒவ்வொரு விஷயமும் அதன் விளக்கத்துடன் மிகத் துல்லியமாக இருக்கவேண்டும் என விரும்புவது ஸ்ரீல பிரபுபாதரின் தனிப்பெரும் பண்புகளில் ஒன்றாகும்; மேலும் அவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மீது எந்த அளவிற்கு ஆழ்ந்த பக்தியும் ப்ரேமையும் பெற்றிருந்தார் என்பதற்கான ஆதாரம் யாரென்றால், யார்யாரெல்லாம் அவருக்கு நெருக்கமான விதத்தில் சேவை செய்தனரோ அவர்கள்தான். அவருடைய ஆன்மீக குருவாகிய ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி அவர்களின் கட்டளையை நிறைவேற்ற தன்னுடைய மொத்த வாழ்க்கையையே அர்ப்பணித்ததோடு மட்டுமல்லாமல், அந்தக் கடமையில் அசாத்தியமான கவனத்தோடும் அவர் இருந்தார். அவர் அலட்சியமாக எதையும் விட்டுவிடவில்லை. எப்போதும் தனது சீடர்களை திருத்துவதும் வழிநடத்துவதும் அவர்களைக் கண்டிப்பதுமான செயல்களில் கவனத்தைச் செலுத்தி, இஸ்கானை நிறுவ தனது சக்தியை செலவிட்டார். அவரது நோக்கமே அவரது வாழ்க்கையும் ஆன்மாவாகவும் இருந்தது.
அப்போது வளர்ந்துகொண்டிருந்த அவருடைய இயக்கத்திற்கு எதிர்கால தீக்ஷை பற்றிய அந்த முக்கியமான விஷயத்தினை, அலட்சியமாக ஏதோ காற்றில் பறக்கவிட்டாற்போலவோ, தெளிவற்ற நிலையிலோ அல்லது விவாதபொருளாக மாற்றுவது அல்லது யூகத்திற்கு விட்டுச்செல்வது போன்றவை, நிச்சயமாக ஸ்ரீல பிரபுபாதரின் இயல்பிற்கு முற்றிலும் அப்பாற்பட்டதாகும். இதை அவர் குறிப்பாக வெளிச்சம் போட்டு காட்டுவது என்னவென்றால், அங்கீகரிக்கப்படாத குருசீட அமைப்பின் மூலம் தனது ஆன்மீக குருவின் இயக்கம் (கௌடீய மடம்) எவ்வாறு பெரும்பாலும் சீர்குலைந்தது என்பதை அடிக்கடி அவர் சுட்டிக்காட்டினார். இதை மனதில் கொண்டு யாரும் மறுக்க முடியாத சில உண்மைகளை இப்போது ஆராயத் தொடங்கலாம்:-
ஜூலை 9, 1977 அன்று, அதாவது ஸ்ரீல பிரபுபாதரின் உடல்ரீதியான மறைவிற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், “ரித்விக்குகள்” அல்லது "ஆச்சாரியரின் பிரதிநிதிகள்" என்பவர்களை பயன்படுத்தி தீக்ஷை கொடுப்பதற்கான வழிமுறையினை அவர் அமைத்திருந்தார். இந்த “பிரதிநிதிக்கும் ஆச்சாரிய” வழிமுறையினை உடனடியாக நிறுவப்பட வேண்டும் என்றும், “இனிமேல்” அவை அன்றிலிருந்தே இயங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். (தயவுசெய்து பிற்சேர்க்கை பக்கம் 158-ல் பார்க்கவும்). இந்த நிர்வாக ரீதியான உத்தரவானது அகில உலக கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் அனைத்து மேலாண்மை குழு ஆணையர்கள்(Governing Body Commission) மற்றும் கோயில் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டது. அன்றிலிருந்து புதியதாக இணையும் சீடர்களுக்கு ஆன்மீக பெயர்கள் வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு ஜெப மாலைகள் மற்றும் காயத்ரி மந்திரங்களை, ரித்விக்குகள் என்றழைக்கப்படும் இந்த பதினோரு நபர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த ரித்விக்குகள் அனைவரும் ஸ்ரீல பிரபுபாதர் சார்பாக செயல்பட வேண்டும் என்றும், அவ்வாறு அந்த ரித்விக்குகளால் தீக்ஷை பெறுபவர்கள் அனைவரும் ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள் இவ்வாறாக தீக்ஷை பெறுகின்ற நபர்களின் மீதான முழு அதிகாரத்தினையும் ரித்விக்குகளிடம் ஒப்படைத்தார். அந்த சமயத்திலிருந்து புதிய பக்தர்களிடம் இனிமேல் நேரடியாக ஆலோசனை வழங்கபடமாட்டாது என்பதை தெளிவுபடுத்தினார். (ரித்விக்குகளின் கடமைகள் என்ன என்பதனை, “ரித்விக் என்றால் என்ன ? “ என்ற தலைப்பின் கீழ் பக்கம் எண் 136-ல் காணவும் )
நவம்பர் 14, 1977 அன்று ஸ்ரீல பிரபுபாதரின் உடல்ரீதியாக மறைந்தவுடனே, ஜிபிசி-யானது இந்த ரித்விக் முறையினை நீக்கியது. 1978-இல் கௌர பூர்ணிமா தினத்தன்று, 11 ரித்விக்களும் தங்களை மண்டல ஆச்சாரிய தீக்ஷை குருக்களாக (Zonal Acharya Diksha gurus) தங்களை பிரகடனம் செய்து கொண்டு சுயமாக தனது சார்பாகவே தீக்ஷை அளித்து சீடர்களை ஏற்று கொண்டனர். அவ்வாறு அவர்கள் செயல்பட்டு வலியுறுத்தி கூறிய காரணமானது, ஸ்ரீல பிரபுபாதரிடமிருந்து தாங்கள் பெற்ற கட்டளையானது, “ஸ்ரீல பிரபுபாதருக்குப் பிறகு தாங்கள்தான் தீக்ஷை அளிக்கும் ஆச்சாரியர்கள்” என்பதுதான். ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு இந்த மண்டல ஆச்சாரிய தீக்ஷை குரு (Zonal Acharya Diksha Gurus) முறையானது வாதவிவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது, ஆனால் இது ரித்விக் முறையினை மீண்டும் கொண்டு வராமல், அதற்கு பதிலாக புதிய பல்வேறு குருக்களை டஜன் கணக்கில் சேர்த்துவிட்டு, அதனுடன் வேறொரு விதமான விரிவடைந்த கட்டமைப்பை நிறுவி, யார்யார் திசை திரும்பினார்களோ, அவர்களை கட்டுப்படுத்தும்படியாக அமைத்தனர். ஆனால் அப்படி ஏற்படுத்தப்பட்ட குருவாக ஆவதற்கான இந்த கட்டளையானது ஏற்கனவே இருக்கின்ற அந்த 11 பேருக்கு மட்டும் பொருந்தக்கூடியது அல்ல. மேலும் ஜிபிசி குழுவினரில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்கு ஆதரவைப் பெற்றவருக்கும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட கொள்கையினை சரியாக பின்பற்றும் ஒருவருக்கு இந்த மாற்றம் பொருந்தும் என அறிவித்தனர்.
மேற்கண்ட விஷயங்கள் ஒரு அரசியல் கருத்து அல்ல. இது வரலாற்று உண்மை. ஜிபிசி உட்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஜூலை 9-ஆம் தேதி வெளியிடப்பட்ட கடிதமானது ஜிபிசி மற்றும் அனைத்து கோயில் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்ட, மேலும் இன்றுவரை ஸ்ரீல பிரபுபாதரால் கையெழுத்திடப்பட்ட, தீக்ஷை தொடர்பாக மொத்த இஸ்கான் சமுதாயத்திற்கும் எப்போதைக்குமாக ஒரே வழிமுறை இதுவே. ஜூலை 9-ஆம் தேதி உத்தரவு குறித்து எச். எச் ஜெயத்வைத சுவாமி அவர்கள் சமீபத்தில் எழுதியது :-
அதனுடைய அதிகாரம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது [....] தெளிவாக, இந்த கடிதம் ரித்விக்-குரு அமைப்பினை ஸ்தாபிக்கிறது.
(ஜெய அத்வைத ஸ்வாமி, ரித்விக் மக்கள் என்பவர்கள் தவறானவர்கள், 1996)
இந்த மாறுபட்ட கருத்துக்கள் எழுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால். தெளிவான மற்றும் அதிகாரப்பூர்வமான கட்டளையின் மீது அவர்கள் வலுக்கட்டாயமாக இரண்டு மாற்றங்களை திணித்ததுதான் :
மாற்றம் அ): பிரதிநிதிகள் அல்லது ரித்விக்குகளை நியமித்தது என்பது தற்காலிகமானதும், குறிப்பாக ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்குப் பிறகு அது நிறுத்தப்படவும் வேண்டும்
மாற்றம் ஆ): அவர்களின் பிரதிநிதித்துவ செயல்பாட்டை நிறுத்தியதும், அந்த ரித்விக்குகள், தாமாக தீக்ஷா குருக்களாக மாறி, நபர்களுக்கு தீக்ஷை அளித்து, அவர்களை ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்களாக ஆக்காமல், தங்களின் சீடர்களாக ஏற்க தொடங்குவார்கள்.
1987-ஆம் ஆண்டில் நிகழ்ந்த மண்டல ஆச்சாரிய அமைப்பின் (Zonal Acharya System) மீதான சீர்திருத்தங்களில் இந்த இரண்டு அனுமானங்களையும் அப்படியே தக்கவைத்துக் கொண்டனர். அவர்களால் மாற்றியமைக்கப்பட்ட சட்டங்கள் அனைத்துடனும், மேலே குறிப்பிட்ட இந்த அனுமானங்களையும் சேர்த்து விட்டனர். மேலே நாம் குறிப்பிட்ட அவர்களால் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் அ) மற்றும் ஆ)-ல் உள்ள வாக்கியங்கள் எதுவும் ஜூலை 9-ஆம் தேதி கடிதத்திலோ அல்லது ஸ்ரீல பிரபுபாதரால் வெளியிடப்பட்ட அடுத்தடுத்த கொள்கை ரீதியான ஆவணங்களிலோ காணப்படவில்லை.
GBC-யின் புத்தகமான GII-ல், தெளிவாக மேற்குறிப்பிட்ட மாற்றங்களை அப்படியே தாங்கிப்பிடிக்கின்றது:
“ஸ்ரீல பிரபுபாதரின் மறைவுக்குப் பின்னர், இஸ்கான் இயக்கத்தை யார் தொடர்வது என்று அவரிடமே கேட்ட போது, அவர் தனது சீடர்களில் சிலரை பரிந்துரை செய்வதாகவும் தான் இருக்கும் வரை அவர்கள் தன் சார்பாக தீக்ஷை அளிப்பவர்களாகவும் மற்றும் தனது மறைவுக்குப் பின்னர் அவர்கள் வழக்கமான குருக்களாக செயல்படுவார்கள் என்றும் கூறினார். அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் சீடர்கள் ஸ்ரீலபிரபுபாதரின் பேர சிஷ்யர்களாக (Grand Disciples ) இருப்பர் ”.(GII பக்கம் 14)
ஆண்டுகள் கடப்பதற்கேற்றவாறு அதிகரித்து வந்த பக்தர்கள், இந்த அடிப்படை அனுமானங்களின் அதிகாரத்தின்மீது கேள்வி எழுப்பத் தொடங்கினர். பலருக்கு, இதை முறைப்படி உறுதிப்படுத்தவே முடியவில்லை என்ற காரணத்தினால், சங்கடமான உணர்வுநிறைந்த சந்தேகம் மற்றும் அவநம்பிக்கை போன்ற ஒரு உணர்வுகள் இயக்கத்தின் உள்ளேயும் வெளியேயும் வளர்ந்தது. தற்போது புத்தகங்கள், ஆவணங்கள், மின்னஞ்சல், வலைதளங்கள் மூலம் இஸ்கான் மற்றும் அதன் திசைமாறப்பட்ட குரு அமைப்பு குறித்த தினசரி செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த முரண்பாடுகளுக்கு ஏதாவது ஒருவிதமான தீர்மானத்தை கொண்டு வரக்கூடிய எதுவும் ஸ்ரீல பிரபுபாதரின் இயக்கத்தின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்ட எவருக்கும் நன்மையைக் கொண்டுவரும்.
அனைவரும் ஏற்கக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், இஸ்கானின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஸ்ரீல பிரபுபாதரே இறுதி அதிகாரி என்பதும், அவர் திருவுள்ளத்தின் கட்டளை எதுவாக இருந்தாலும் அதனை நிறைவேற்றுவதே தம்முடைய கடமை என்பதுமாகும். மற்றொரு ஏற்கக்கூடிய என்னவென்றால், எதிர்கால தீக்ஷை குறித்தான, இயக்கத்தின் அனைத்து தலைவர்களுக்கும் அனுப்பப்பட்ட கையொப்பமிடப்பட்ட ஒரே கொள்கை அறிக்கை எதுவென்றால் அது ஜூலை 9ஆம் தேதி உத்தரவுதான்.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் GII (Gurus And Initiation In ISKCON)-யினால் ஜூலை 9 ஆம் தேதி கடிதத்தை இன்றுவரை கருத்தில் கொள்ளாமல் இருப்பதுதான். ஆனால் உண்மையில், 11 ரித்விக் ஆச்சாரியர்களைப் பற்றி முதன்முதலில் குறிப்பிடப்பட்ட கடிதம் இதுவே. இந்த நிராகரிப்பு குழப்பத்தை ஏற்படுத்தி. அதிலும் குறிப்பாக GII-தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்க இறுதியான சித்தாந்தத்தை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டதாகும்.
மேலே குறிப்பிட்ட அனுமானங்கள் அ) மற்றும் ஆ) -ஐ ஆதரிக்கும் வகையில் ஏதேனும் உள்ளதா என பார்ப்பதற்கு ஜூலை 9-ஆம் தேதி கட்டளையை உற்று நோக்கலாம்.
கட்டளையேதான்
முன்னர் குறிப்பிட்டபடி, ஜூலை 9-ன் கட்டளை கூறுவது என்னவென்றால், ரித்விக் அமைப்பைத்தான் “இனிமேல்” பின்பற்றப்பட வேண்டும். இங்கே “இனிமேல்”(henceforward) என்ற சொல்லுக்கு ஒரே அர்த்தம் என்னவென்றால், அது “இப்போதிருந்து” என்பதுதான். இந்த வார்த்தையானது, ஸ்ரீல பிரபுபாதரால் சுயமாக பயன்படுத்தப்பட்ட போதும் மற்றும் பொதுவாக ஆங்கிலத்தில் பயன்படுத்தும் போதும் ஒரே அர்த்தத்தையே கொண்டுள்ளன. மற்ற வார்த்தைகளைப் போல் அல்லாமல், "இனிமேல்" என்ற வார்த்தையானது பல அர்த்தங்களைக் கொண்டதல்ல. அது ஒற்றை அர்த்தம் கொண்ட ஒரு வார்த்தையாகும். ஸ்ரீல பிரபுபாதரின் மொத்த வாக்குகளிலும், 86 முறை பல்வேறு இடங்களில் அவர் "இனிமேல்" என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார் என்பது நாம் வேதா பேஸ் (vedabase folio)-ல் காணலாம். அப்போதெல்லாம் எவருமே "இனிமேல்" என்ற இந்த வார்த்தைக்கு "இப்போதிருந்து" என்ற அர்த்தத்தைத் தவிர வேறு ஏதேனும் அர்த்தம் இருக்கலாமா? என்று கேள்வி கேட்டதே கிடையாது. "இனிமேல்" என்ற வார்த்தைக்கு "இப்போதிருந்து நான் மரணப்படும் வரை" என்ற அர்த்தமும் கிடையாது. அதற்கு “இப்போதிருந்து” என்ற ஒரு அர்த்தம் மட்டுமே. ஸ்ரீல பிரபுபாதர், தனது மறைவிற்குப்பிறகு இந்த வழிமுறையை நிறுத்த வேண்டும் என்று எந்த ஒரு கடிதத்திலுமே அவர் குறிப்பிடவும் இல்லை மேலும் தான் இருக்கும் வரைக்கும் மட்டுமே இந்த ரித்விக் வழிமுறை செயல்படும் என்றும் அவர் எங்கும் குறிப்பிடவும் இல்லை. மேலும் சிலபேர் கூறுகையில், மொத்த ரித்விக் மக்களும் "இனிமேல்" என்ற வார்த்தையை மட்டுமே பிடித்துக் கொண்டு இருக்கின்றனர் என்று கூறுகின்றனர். அந்தவார்த்தையை தக்கவைத்துக்கொள்ளாமல், அந்தக் கடிதத்திலிருந்து அதனை அகற்றினாலும் கூட, அந்தக் கடிதத்தில் உள்ள எதுவும் மாறவில்லை. ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே அவரால் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பினை, நிறுத்தும்படி கூறுவதான எந்தவொரு பிற்படியான உபதேசமும் இல்லை. அப்படிப்பட்ட மறுப்பு உபதேசம் ஏதுமில்லாததினால், தீக்ஷையின் மீதான ஸ்ரீல பிரபுபாதரின் இறுதி கட்டளை இந்தக் கடிதமே எனக் கண்டு, அதையே நாம் பின்பற்ற வேண்டும்.
ஆதரிக்கும் உபதேசங்கள்
ஸ்ரீல பிரபுபாதர் மற்றும் அவரது செயலாளரால் வழங்கப்பட்ட பிற அறிக்கைகள் ஜூலை 9-ஆம் தேதி கடிதத்தைத் தொடர்ந்து பிந்தைய நாட்களில் வெளியிடப்பட்டன. அதில் ரித்விக் அமைப்பு நிறுத்தாமல் தொடரப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (அனைத்து வலியுறுத்தல்களும் சேர்க்கப்பட்டுள்ளது).
".......தீக்ஷைக்கான இந்த வழிமுறையை எதிர்காலத்தில் பின்பற்றபட வேண்டும்" (ஜூலை 11,1977).
".......ரித்விக்காக தொடர்ந்து இருந்து, என் கட்டளையின்படி செயல்படுங்கள்" (ஜூலை 19, 1977).
".......ரித்விக்காக தொடர்ந்து இருந்து, என் சார்பாக செயல்படவும்" (ஜூலை 31, 1977).
( தயவுசெய்து பிற்சேர்க்கைகளைப் பார்க்கவும்)
இந்த ஆவணங்களில், “தொடருங்கள்” மற்றும் “எதிர்காலம்” போன்ற சொற்களுடன் “இனிமேல்” என்ற சொல்லையும் சேர்த்து பார்க்கும் பொழுது ரித்விக் அமைப்பின் நிரந்தர தன்மையினை சுட்டிக்காட்டுகின்றன. அவரின் மறைவிற்குப் பிறகு இந்த அமைப்பை நிறுத்த வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதரிடமிருந்து எந்த அறிக்கையும் இல்லை.
பிற்படியான உபதேசங்கள்:
ரித்விக் வழிமுறை செயல்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும்போது, அதை நிறுத்துமாறு அடுத்தடுத்த எந்த ஒரு கட்டளையையும் ஸ்ரீல பிரபுபாதர் ஒருபோதும் வெளியிடவில்லை அல்லது அவரின் உடல்ரீதியான மறைவிற்குப் பிறகு அதனை கலைக்க வேண்டும் என்றும் அவர் ஒருபோதும் கூறவில்லை. ஆனால் தெரிந்துகொள்ளபட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் ஒருவேளை இந்த ஒரு செய்தியானது தவறுதலாகவோ அல்லது வேறு விதமாகவோ புரிந்து கொள்ளப்படும் என்பதை உணர்ந்துதான் அவர் தன்னுடைய கடைசி உயிலில் இஸ்கானுக்குள் இருக்கும் "நிர்வாக முறை" தொடர வேண்டும் என்றும் அதை மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த கட்டளையானது அவருடைய மறைவுக்கு 9 நாட்களுக்கு முன்பு இஸ்கானுடைய சட்ட விதிகளில் சேர்க்கப்பட்டது. ரித்விக் முறையினை கலைக்க வேண்டும் என்று அவர் விரும்பி இருந்தால், இந்த கடிதமானது அவருக்கு அது ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்திருக்கும். ரித்விக்குகள் மூலமாக தீக்ஷை அளித்து பெயர்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் நிர்வாக அமைப்பின் ஒரு அங்கமாக தெரிவிக்கப்பட்டதை கீழே காணலாம்:
1975-ஆம் ஆண்டில், GBC-யின் அனுமதிக்கப்பட்ட முக்கியமான தீர்மானங்களில் ஒன்று, GBC -ஆனது நிர்வாக விவகாரங்கள் அனைத்திற்கும் முழு பொறுப்பு ஏற்கும் என்பதுதான். அந்த ஆண்டு GBC-யினால் கையாண்ட சில நிர்வாக சிக்கல்கள் கீழ்கண்டவாறு:
"முதல் தீக்ஷையைப் பெற, ஒருவர் 6 மாதங்களுக்கு முழுநேர அங்கத்தினராக இருந்திருக்க வேண்டும். இரண்டாவது தீக்ஷையைப் பெற முதல் தீக்ஷைக்குப் பிறகு குறைந்தது ஒரு வருடம் வேண்டும்".
(ஜிபிசி தீர்மானம் எண் 9, மார்ச் 1975)
"சன்யாசிகளுக்கு தீக்ஷை அளிக்கும் முறை"
(ஜிபிசி தீர்மானம் எண் 2, மார்ச் 1975)
இந்தத் தீர்மானங்கள் ஸ்ரீல பிரபுபாதராலேயே தனிப்பட்ட முறையில் அங்கீகரிக்கப்பட்டது. அவர்களே(GBC) இறுதியாக செய்துகாட்டிய விஷயம் என்னவென்றால், தீக்ஷை நிகழ்ச்சியை நடத்துவதற்கான வழிமுறை என்பது நிர்வாக அமைப்பின் ஒரு அங்கம் என்பதாகும். தீக்ஷை அளிப்பது தொடர்பான இந்த மொத்த வழிமுறைகளும், ஸ்ரீல பிரபுபாதரால் அமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பு என்று கருதினால், பின்னர் ரித்விக்குகள் மூலமாக தீக்ஷை அளித்து ஆன்மீக பெயர்கள் வழங்குதல் என்பது அதே ஆதாரங்களின்படி சட்டபூர்வமான ஒன்றாகும்.
ஆகவே ரித்விக் தீக்ஷை வழிமுறையை மாற்றுவது ஸ்ரீல பிரபுபாதரின் இறுதி விருப்பத்தை நேரடியாக அத்து மீறுவதாகும்.
ஸ்ரீல பிரபுபாதரின் உயிலில் குறிப்பிட்டுள்ள மற்றொரு உபதேசம், அவரால் விரும்பப்பட்ட ரித்விக் வழிமுறையின் நீண்ட ஆயுட்காலத்தைப் பற்றியது, அதாவது இந்தியாவில் உள்ள அவருடைய நிரந்தர சொத்துக்களுக்கான நிர்வாக இயக்குநர்கள் ஸ்ரீல பிரபுபாதரால் தீக்ஷை அளிக்கப்பட்ட சீடர்கள்தான் வர முடியும் என்று கூறுவதாகும்:
"...அடுத்தடுத்து வரும் இயக்குனர்கள் அல்லது எஞ்சியிருக்கும் இயக்குநர்களால் நியமிக்கப்படும் இயக்குனர்கள் என்பவர்கள் நிபந்தனையின்படி அந்த புதிய இயக்குனர்கள் என்னால் தீக்ஷ அளிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்…. " (ஸ்ரீல பிரபுபாதரால் வெளியிடப்பட்ட உயில், ஜூன் 4, 1977).
ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்கு பிறகு, ரித்விக் வழிமுறையானது தொடர்ந்து செயல்பட்டால் மட்டுமே இது நிகழக்கூடிய ஒரு விஷயமாகும். இல்லையென்றால், திறமையான இயக்குநர்களின் குழுவாக இருந்தாலும், காலம் போகிற போக்கில் ஊக்கம் இழந்து வறண்டுவிடுவர்.
மேலும், ஜூலை 9-ஆம் தேதிக்கு பிறகு தீக்ஷையைப் பற்றிப் ஸ்ரீல பிரபுபாதர் பேசும்போதெல்லாம் அவர் ரித்விக் வழிமுறையையே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி பேசினார். அவர்தம் மறைவிற்குப் பிறகு இந்த ரித்விக் வழிமுறை நிறுத்தப்பட வேண்டும் என்றோ, அருகில் வரிசையில் நிற்கும் சீடர்கள் "தீக்ஷை கொடுக்கும் குரு” என்ற நிலையை ஏற்கத் தயாராக இருக்கிறார்கள் என்றோ எந்த ஒரு சிறு குறிப்பையும் அவர் ஒருபோதும் கொடுக்கவேயில்லை. ஆகவே குறைந்தபட்சம் நேரடியாக கிடைக்கின்ற ஆதாரங்களைப் பொறுத்தவரைக்கும், முன்பு GII (Gurus And Initiation In ISKCON)-யினால் கொடுக்கப்பட்ட யூகங்களான அ) மற்றும் ஆ)-வை ஒத்துப்போகும்படியான எந்த ஆதாரமும் இல்லை. ஏற்கனவே கூறப்பட்டபடி, மறைவிற்கு பிறகு ரித்விக் வழிமுறை நிறுத்தப்பட்டு அப்போதைய ரித்விக்குகள் பின்னர் தீக்ஷை குருக்களாக மாறுவார்கள் என்னும் யூகங்கள்தான் இஸ்கானில் தற்போது இருக்கும் குரு அமைப்பை மாற அடித்தளம் அமைத்தது. அவர்கள் செல்லுபடி ஆகாதவர்கள் என்பது நிரூபணமாகும் போதெல்லாம், GBC-யினால் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுவது நிச்சயம் அவசியமாகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள விஷயம்தான் இப்போது மையக் கருத்தாக அமைகிறது. முன்பு கூறிய அறிவுறுத்தல்களும் அதன் துணை அறிவுறுத்தல்களும் மற்றும் அடுத்தடுத்து கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களும், ரித்விக் வழிமுறை தொடர வேண்டும் என்றுதான் ஆதரிக்கின்றன. ஸ்ரீல பிரபுபாதர் தனது மறைவுக்கு பின்னர் ரித்விக் முறையினை நிறுத்த எந்தவொரு உத்தரவையும் கொடுக்கவில்லை என்பது சம்பந்தப்பட்ட அனைவராலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. மேலும் ஸ்ரீல பிரபுபாதர்தான் ரித்விக் முறையினை அமைத்து ஜூலை 9-ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்தினார் என்பதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். ஆகவே நம்முடைய நிலையானது நம் ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர்:
1) ரித்விக் முறையினைப் பின்பற்ற ஒரு தெளிவான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
2) தனது உடல்ரீதியான மறைவிற்கு பிறகு, ரித்விக் அமைப்பை பின்பற்றுவதை நிறுத்தும்படியான எந்த ஒரு கட்டளையும் கொடுக்கப்படவில்லை.
இறுதியாக, ஒரு சீடரானவர் இந்த உத்தரவை பின்பற்றுவதை ஏதேனும் ஒரு சட்டரீதியான அளவில் நிறுத்த விரும்பினால், அவ்வாறு செய்வதற்கான சில உறுதியான ஆதாரங்களை வழங்க வேண்டும். ஸ்ரீல பிரபுபாதர் உண்மையிலேயே நம்மிடம் அறிவுறுத்தி பின்பற்றும்படி கூறிய ஒரே விஷயம் இந்த ரித்விக் முறையினை பின்பற்றுவதுதான். அதனை பின்பற்றுவதை நிறுத்தும்படி அவர் ஒருபோதும் நம்மிடம் கூறவில்லை, அல்லது உயிருடன் இருக்கும் வரை மட்டும்தான் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் எங்கும் கூறவில்லை. நம்முடைய ஆச்சரியரால் வகுக்கப்பட்ட எந்த ஒரு வழிமுறையினையும் நிறுத்த வேண்டும் என்று விரும்புபவர்கள், இனிமேல் எந்த வழிமுறை நடந்தேற வேண்டும் என்பதற்கான முறையான ஆதாரங்களைக் காண்பித்தாக வேண்டும். இது ஒரு வெளிப்படையான கருத்தாகும்; குருவின் கட்டளையை பின்பற்றுவதை எவ்வித காரணமுமின்றி ஒருவர் சுயமாக தனது விருப்பப்படி நிறுத்த முடியாது:
"...ஆன்மீக குருவின் உத்தரவை நீங்கள் மாற்ற முடியாது என்பதுதான் வழிமுறை."
(ஸ்ரீல பிரபுபாதர். CC. உபன்யாசம், 2/2/1967, சான் பிரான்சிஸ்கோ)
ஒரு சீடன் குருவிடமிருந்து ஒரு நேரடியான உத்தரவைத் தொடர்ந்து பின்பற்றுவதை நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை, குறிப்பாக அதைப் தொடர்ந்து பின்பற்றும்படி அவர்களிடம் கூறப்படும்போது. ஏனென்றால் அது வெளிப்படையானது. அதுவே "சீடர்" என்ற சொல்லின் பொருளும் ஆகும்.:
“ஒருவர் சீடர் ஆகும்போது, ஆன்மீக குருவின் கட்டளைக்கு கீழ்படியாமல் இருக்க முடியாது.”
(ஸ்ரீல பிரபுபாதர், பகவத் கீதை உபன்யாசம், 11/02/1975, மெக்சிகோ)
ஸ்ரீல பிரபுபாதரின் உடல்ரீதியான மறைவிற்குப் பிறகு ரித்விக் வழிமுறையினை கைவிட வேண்டும் என்பதற்கு நேரடியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதால், கைவிடும் விஷயமானது, மறைமுக ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க முடியும். அப்படிப்பட்ட மறைமுக ஆதாரங்கள்கூட சில சிறப்பான சூழ்நிலைகளில், நேரடி கட்டளைகளை மையமாக கொண்டு எழுப்பப்படலாம். மீறப்படவேண்டிய சூழ்நிலை ஏதேனும் இருந்தாலும்கூட, எந்த சூழ்நிலைக்காக, எழுத்து வடிவத்திலான நேரடிக் கட்டளைகள் மீறப்பட்டுள்ளது என்பதற்கான வலுவான ஆதாரங்களையும் கொடுக்க வேண்டும். ஜூலை 9-ஆம் தேதி கட்டளைக்கான சூழ்நிலைகளை இப்போது நாம் ஆராய்வோம். ஏனென்றால் மாற்றியமைக்கும் சூழ்நிலைகள் உண்மையில் இருந்திருந்ததா மற்றும் அனுமானங்களான அ) மற்றும் ஆ)-ஐ ஆதரிக்கும் வகையில், ஏதேனும் கருத்துப்பூர்வமாநா விஷயம் இருக்கின்றதா என்றும் பார்க்க வேண்டும்.
ஸ்ரீல பிரபுபாதரின் இறுதி உத்தரவுக்கான சூழ்நிலைகள் மற்றும் அமைப்பின்மீது நேரடித் தொடர்புடைய ஆட்சேபனைகள்
|
1. “ஜூலை 9-ஆம் தேதி கடிதம் தெளிவாக கூறுவது ஸ்ரீல பிரபுபாதர் உடல்ரீதியாக இருக்கும்போது மட்டுமே இருப்பதற்கான அமைப்பாகும்.” |
அந்தக் கடிதத்தில் ஸ்ரீல பிரபுபாதர் உடல்ரீதியாக இருந்தபோது மட்டுமே அந்த கட்டளையானது அமல்படுத்த வேண்டும் என்று எங்குமே குறிப்பிடவில்லை. உண்மையில் அக்கடிதத்தில் கொடுக்கப்பட்ட ஒரே தகவல் என்னவெனில் ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்குப் பிறகும் ரித்விக் வழிமுறை தொடரப்பட வேண்டும் என்பதைத்தான் ஆதரிக்கிறது. ஜூலை 9-ஆம் தேதி கடிதத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், தீக்ஷை பெறும் அனைவரும் ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்களாக மாறுவார்கள் என்று மூன்று முறை கூறப்பட்டிருப்பதுதான். ஸ்ரீல பிரபுபாதர் நேரடியாக இருக்கும்வரை மட்டுமே அவர் முன்னிலையில் வேறு யாரும் தீக்ஷை வழங்க முடியாது என்பது மீற முடியாத சட்டம் ஆகும் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் தெளிவுபடுத்தியுள்ளார் என்று GBC -ஆனது தற்போதைய குரு அமைப்பிற்கு ஆதாரவாக தீவிரமாக வாதம் செய்து வருகின்றது. அப்படியானால், வருங்கால சீடர்களின் மேல் ஸ்ரீல பிரபுபாதருக்கு உள்ள உரிமையினை கூற வேண்டியது அவசியமாதலால் அவரது மறைவிற்குப் பிறகு அவரது உரிமையானது ஒரு சர்ச்சையாக இருக்கும்பொழுது எந்த குறிப்பிட்ட காலம் வரை அவருடைய உபதேஷம் மற்றும் எதிர்கால சீடர்களின் மீதான அவரது உரிமை இருக்கும் என்று கூறவேண்டியது கட்டாயமாகும்.
சில ஆண்டுகளாக ஸ்ரீல பிரபுபாதர், தம்முடைய பிரதிநிதிகளை பயன்படுத்தி ஜப மணிகள் மீது ஜபம் செய்தல், காயத்ரி மந்திரத்தை வழங்குதல் போன்ற செயல்களுக்கு பயன்படுத்தினார். அந்த சமயத்தில் புதிதாக தீக்ஷை பெறுபவர்கள் யாருக்கு சொந்தமானவர்கள் என்று எவரும் கேள்வி எழுப்பவில்லை. ஜூலை 9-ஆம் தேதி கடிதத்தின் தொடக்கத்திலேயே உறுதியாக சொல்லப்பட்டது என்னவென்றால், நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஸ்ரீல பிரபுபாதரின் பிரதிநிதிகள் என்று உறுதியாக அழைக்கப்பட்டனர். இந்தக் கடிதத்தில் இருந்த ஒரு புதுமையான செய்தி என்னவென்றால் பிரதிநிதிகளின் கடமை செயல்பாட்டை முறைபடுத்தும் விதமாக அமைக்கப்பட்டதுதான். இங்கு மிக அரிதாக சிறிய அளவில் அவர்களை குழப்பமடைய செய்யக்கூடிய ஒரூ விஷயம் என்னவென்றால், அவர்களை முழுமையாக சுதந்திரமான தீக்ஷா குருக்களாக நேரடியாக கட்டளை கொடுத்தாற்போல சொல்வதுதான். ஆனால் தனது சீடர்கள் மீதான உரிமையானது, அவர் இவ்வுலகில் இருக்கும் வரை மட்டுமே அவரால் அமைக்கப்பட்ட வழிமுறை செயல்பாட்டில் இருக்கும் என்பது முற்றிலும் அர்த்தமற்ற பேச்சாகும். அதிலும் குறிப்பாக, அவர் இவ்வுலகில் இருந்தவரைக்கும் போலியாக யாரும் அவருடைய சீடர்கள் மீது உரிமை கொண்டாடியது இல்லை. மேலே குறிப்பிட்டுள்ளபடி, கடிதத்தில் மூன்றுமுறை ஆணித்தரமாக வலியுறுத்திய விஷயம் மிக சுருக்கமாகவும் கருத்தை தெளிவாக வலியுறுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.
"எனவே ஒரு விஷயம் மூன்று முறை வலியுறுத்தப்பட்டால், அதுவே இறுதியானது என்று அர்த்தம் "
(ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதை. உபன்யாசம். 27/11/1968, லாஸ் ஏஞ்சல்ஸ்)
ஜூலை 9 ஆம் தேதி கடிதத்தில் புதிதாக தீக்ஷை அளிக்கப்பட்ட சீடர்களின் பெயர்கள் ஸ்ரீல பிரபுபாதருக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆதலால் ஸ்ரீல பிரபுபாதர் இவ்வுலகில் இருக்கும் போது மட்டுமே இந்தத் வழிமுறை இயங்க வேண்டும் என்று கூற முடியுமா? சில பக்தர்கள் இந்த பெயர்களை இனி ஸ்ரீல பிரபுபாதருக்கு அனுப்ப முடியாது என்பதால், ரித்விக் வழிமுறை செல்லாது என்ற வாதத்தை முன்வைத்தனர்.
இங்கு கவனிக்க வேண்டிய முதல் விஷயம், ஸ்ரீல பிரபுபாதருக்கு பெயர்கள் அனுப்பப்படுவதற்கான கூறப்பட்ட நோக்கம் என்னவென்றால், அப்பெயர்களை அவருடைய தீக்ஷை பெற்ற சீடர்களின் பட்டியல் புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்பதற்குத்தான். ஜூலை 7ஆம் தேதி உரையாடலிலிருந்து நாம் தெரிந்து கொள்கின்ற விஷயம் (தயவு செய்து பின் இணைப்பு, பக்கம் -181 ஐப் பார்க்கவும்) என்னவெனில், இந்தப் பட்டியல் புத்தகத்தில் புதிய பெயர்களை எழுதுவதில் ஸ்ரீல பிரபுபாதருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. மாறாக அது அவரது செயலாளரால் செய்யப்பட்டது. பெயர்களை புத்தகத்தில் சேர்ப்பதற்காக அனுப்பப்பட வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதரின் விருப்பம் அல்ல என்பதற்கான கூடுதல் ஆதாரம் என்னவெனில், அடுத்த நாள் ஹம்ஸதூதருக்கு எழுதிய கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தமால் கிருஷ்ண கோஸ்வாமி புதிய ரித்விக்குகளின் கடமைகளை அவருக்கு விளக்குகினார்:
"...தாங்கள் அவர்களின் பெயர்களை ஸ்ரீல பிரபுபாதரால் தீக்ஷை அளிக்கப்பட்ட சீடர்கள் புத்தகத்தில் சேர்க்கபடவேண்டும் என்பதால் அனுப்ப வேண்டும்".
(10/07/1977, தமால கிருஷ்ண கோஸ்வாமி, ஹம்ஸதூதருக்கு எழுதிய கடிதம்)
பெயர்களை ஸ்ரீல பிரபுபாதருக்கு அனுப்ப வேண்டிய அவசியம் குறித்து இங்கு குறிப்பிடப்படவில்லை. ஸ்ரீல பிரபுபாதரின் மறைவுக்குப் பிறகும்கூட இந்த நடைமுறை எளிதில் தொடரக்கூடும். தீக்ஷை பட்டியல் புத்தகம் ஸ்ரீல பிரபுபாதரிடமிருந்து உடல்ரீதியாக பிரிந்திருப்பதால் அவரது மறைவுக்கு பின்னர், தீக்ஷை அளிக்கும் அனைத்து முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று இறுதி ஆணையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
அடுத்த விஷயம் என்னவென்றால், புதியதாக தீக்ஷை வாங்கிய சீடர்களின் தீக்ஷை-பெயர்களை ஸ்ரீல பிரபுபாதருக்கு அனுப்பும் நடைமுறையானது, தீக்ஷை வழங்கப்பட்ட பின்னர் நடக்கின்ற செயல்முறையுடன் தொடர்புடையது. அதாவது, சீடர்களுக்கு தீக்ஷை கொடுக்கப்பட்ட பின்னரே தீக்ஷை பெயர்களை அனுப்ப முடியும். ஸ்ரீல பிரபுபாதரால் நேரடியாக தீக்ஷை சடங்கு நிகழ்வதற்கு முன்பே ரித்விக் முறையினால் தீக்ஷை அளிக்கும் முறை நடைமுறையில் இருந்திருந்தது. எனவே தீக்ஷை அளித்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று கூறுகின்ற உபதேஷத்தைப் பயன்படுத்தி தீக்ஷைக்கு முன்பு நடைமுறைப்படுத்திய அல்லது உண்மையான தீக்ஷை முறையை எந்த விதத்திலும் இடைமறிக்க முடியாது. (நிஜமான தீக்ஷை சடங்கு நடைபெறுவதற்கு முன்பாகவே ரித்விக்குகளின் நிலைப்பாடு ஏற்கனவே நன்றாக நிறைவேற்றப்பட்டுவிட்டது). பெயர்களை ஸ்ரீல பிரபுபாதருக்கு அனுப்பப்படுகிறதோ இல்லையோ, அது தீக்ஷை முறையில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஏனென்றால் தீக்ஷை பெயர்கள் அனுப்பப்படுவதற்கு தயாராக இருக்கும்போதே, அங்கு தீக்ஷை ஏற்கனவே நடந்துவிட்டது.
கடைசி விஷயம் என்னவென்றால், பெயர்களை ஸ்ரீல பிரபுபாதருக்கு அனுப்புவது சடங்கின் ஒரு முக்கிய அங்கமாக இருந்திருந்தால், ஸ்ரீல பிரபுபாதரின் உடல்ரீதியிலான மறைவுக்கு முன்னரே இந்த அமைப்பு செல்லுபடியாகாமல் போயிருக்கும், அல்லது குறைந்தபட்சம் நடைமுறையில் இருப்பதற்கு தொடர்ந்து சிரமமாக இருந்திருக்கும். அந்த சமயத்தில் பொதுவாக புரிந்து கொள்ளப்பட்ட விஷயம் என்னவென்றால், ஸ்ரீல பிரபுபாதர் எந்த நேரத்திலும் இவ்வுலகை விட்டு புறப்பட தயாராக இருந்ததனால், பெயர்களை எங்கும் அனுப்ப முடியாத ஆபத்தான நிலை, கடித உத்தரவின் முதல் நாளிலிருந்தே இருந்தது. வேறு விதமாகக் கூறினால், ஸ்ரீல பிரபுபாதர் எந்த நேரத்திலும் இவ்வுலகை விட்டு புறப்படலாம் என்ற தருணத்தில் எவரேனும் அந்த நேரத்தில் ரித்விக் முறையினால் தீக்ஷை வழங்கப்பட்டு, அவருடைய பெயர் தபால் மூலமாக சென்றடைவதற்கு முன்பே ஸ்ரீல பிரபுபாதர் இவ்வுலகை விட்டு சென்றிருந்தால், தபால் வேகமாக செல்லாத காரணத்தினால், அவர் ஸ்ரீல பிரபுபாதரால் தீக்ஷை பெற்ற சீடர் இல்லை என்று கூற முடியுமா.
தெய்வீகமான தீக்ஷை முறையானது, நிறைவடைவதற்கு பல பிறவி காலம் எடுத்துக்கொள்ளும் என்றோ, அல்லது வெறுமனே தபால் சேவையினால் தடுக்கப்படக்கூடும் என்றோ, ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகத்தில் குறிப்பிட்டது போல எங்கும் நம்மால் காணமுடியாது. ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்கள்-பட்டியல் புத்தகத்தில் புதிதாக தீக்ஷை வாங்கியவர்களின் பெயர்கள் நுழைவதை நிச்சயமாக எதுவும் தடுக்க முடியாது. எப்போது வேண்டுமோ அப்போது இந்த புத்தகத்தை ஸ்ரீல பிரபுபாதருக்கு அர்பணிக்கவும் செய்யலாம்.
|
2. “இக்கடிதத்தில் ‘ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்கு இந்த முறை தொடர்ந்து இருக்கும்’ என்று குறிப்பாக என்று சொல்லவில்லை; ஆகவே, ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்குப் பின்னர் ரித்விக் அமைப்பினை நிறுத்துவது சரியானதே.” |
பின்வரும் விஷயங்களை தயவுசெய்து கருத்தில்கொள்ளவும்:
1) ஜூலை 9-ஆம் தேதி கடிதம் இவ்வாறும் குறிப்பிட்டு கூறவில்லை: “ரித்விக் அமைப்பு ஸ்ரீல பிரபுபாதரின் மறைவுக்குப் பிறகு நிறுத்தப்பட வேண்டும் என்று. ஆயினும் அவர் மறைவுக்கு பிறகு உடனடியாக அது நிறுத்தப்பட்டது.
2) கடிதம் இவ்வாறும் கூறவில்லை: ‘ஸ்ரீல பிரபுபாதரின் முன்னிலையில் மட்டும்தான் ரித்விக் அமைப்பு இயங்க வேண்டும்’. இருப்பினும் அவர் இருந்தபோதே, அது இயங்கப்பட்டுக் கொண்டே இருந்தது.
3) கடிதம் இவ்வாறும் கூறவில்லை: ‘ரித்விக் அமைப்பு ஸ்ரீல பிரபுபாதரின் மறைவுக்கு முன்புவரை மட்டுமே இயங்க வேண்டும் என்று’. ஆயினும் அவருடைய மறைவு வரைக்கும் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டது.
4) கடிதம் இவ்வாறும் கூறவில்லை: ‘ரித்விக் அமைப்பு கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும் என்று’. ஆயினும் அது நிறுத்தப்பட்டது.
சுருக்கமாக, ஜிபிசி பின்வருவனவற்றை வலியுறுத்துகிறது:
● ரித்விக் அமைப்பு கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும்.
● ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்குப் பிறகு ரித்விக் அமைப்பு கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்.
GBC-யால் கூறப்படும் மேற்கண்ட நிபந்தனைகள் எதுவும் ஜூலை 9-ஆம் தேதி கடிதத்திலோ, அல்லது கையொப்பமிடப்பட்ட வேறு எந்த உத்தரவிலோ காணப்படவில்லை. இருப்பினும் GBC-உறுப்பினர்கள் சேர்ந்து, மண்டல ஆச்சாரியர் அமைப்பு(zonal acharya system) மற்றும் பன்மடங்கு ஆச்சாரிய வாரிசு அமைப்பு (Multiple Acharya Successor System - இனி M.A.A.S என குறிப்பிடுவோம்) என்ற இந்த இரண்டு வழிமுறைக்கும் அடித்தளம் அமைத்தனர். (இந்த பத்தியில் நாம் “ஆச்சாரிய” என்ற சொல்லை அதனுடைய பலமான அர்த்தத்தில் புரிந்துகொள்ள வேண்டும் அதாவது தீக்ஷை வழங்கும் ஆன்மீக குரு அல்லது தீக்ஷா குரு என்பதைக் குறிக்கும்.
இந்த கடிதத்தில் உள்ள கட்டளைகள் எதுவரைக்கும் இயங்கவேண்டும் என்ற கால அளவை குறிப்பிடவில்லை என்பதால், அதனை அவரின் மறைவிற்குப் பிறகு நிறுத்த வேண்டும் என்று வாதம் செய்வது முற்றிலும் நியாயமற்றது. மாறாக, இக்கடிதத்தில் ரித்விக்முறை ஜூலை 9-ஆம் தேதியில் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடாததால் அவர்களால் கூறப்படும் தர்க்கப்படி பார்த்தால் அதை எப்போதுமே பின்பற்றியிருக்கவே கூடாது. “இப்போதிலிருந்து” என்பதை ஏற்றுக்கொண்டாலுமே கட்டளை பிறப்பித்த அந்த ஒரு நாளின் இறுதிவரைக்குமாவது நீட்டித்து, ஜூலை 10-ஆம் தேதிக்கு பின்பற்ற வேண்டும் என்றும் அது கூறவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் பின்னர் அநேகமாக நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ரித்விக் வழிமுறை ஒரு நாளைக்கு மட்டும்தான் இயங்கப்பட வேண்டும் என்ற தேவை இருந்திருந்தால், அடுத்த 126 நாட்களுக்கு 24 மணி நேரங்கள் வரை (அதாவது நான்கு மாதங்கள்) அனைவரும் பின்பற்றியது முரண்பாடான விஷயமாகும். அவ்வாறு 126 நாட்கள் என்பதும் கடிதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அந்த 126 நாட்கள் வரைக்கும் அனைவரும் இந்த வழிமுறையை மகிழ்ச்சியாகத்தான் இந்த காலகட்டத்தில் பின்பற்றி கொண்டிருந்தார்கள். ‘இப்போதிலிருந்து’ (henceForward) என்னும் வார்த்தைக்கு “கால வரையறைக்கு அப்பாற்பட்டது” என்ற அர்த்தத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்றால், அதனை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தியிருக்கலாமே. எதனால் மறைவு தினத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் ?
ஸ்ரீல பிரபுபாதரின் 86 ஒலிப்பதிவின் பயன்பாட்டிலும் அல்லது ஆங்கில மொழியின் மொத்த வரலாற்றிலும் கூட “இப்போதிலிருந்து” (henceforward) என்ற வார்த்தைக்கு கீழ்கண்ட இந்த அர்த்தம் இருந்ததே கிடையாது:
“உத்தரவை வழங்கிய ஒருவர் மறையும் வரை இருக்கும் கால அளவு”
ஆயினும் தற்போதைய சிந்தனையின்படி ஜூலை 9-ஆம் தேதி கடிதத்தில் அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டபோது இப்படித்தான் அர்த்தம் கொள்ளவேண்டும் என்கின்றனர். அக்கடிதம் வெறுமனே கூறுவது என்னவென்றால் ரித்விக்முறை “இப்போதிலிருந்து” பின்பற்றப்பட வேண்டும் என்பதுதான். ஆகவே அது ஏன் நிறுத்தப்பட்டது?
|
3. “சில உபதேசங்களை ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்குப்பின் நிச்சயமாக தொடர முடியாது. ஆகவே அவைகளை பிரபுபாதரின் முன்னிலையில் மட்டுமே செயல்படுத்த முடியும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். உதாரணமாக, யாரேனும் தன்னுடைய வழக்கமான செய்தியை ஸ்ரீல பிரபுபாதரிடம் கொடுப்பதற்கு ‘இப்போதிலிருந்து’ கொடுப்பதற்கு நியமிக்கப்பட்டிருக்கலாம். ஆகவே ரித்விக்முறை என்பது அந்த வகையில் ஒன்றாக இருக்கலாமல்லவா? |
ஒரு உபதேசத்தை பின்பற்றுவது சாத்தியமில்லை எனில், எடுத்துக்காட்டாக பிரபுபாதரின் மறைவிற்குப் பின்னர், அன்றாட செய்திகளை அவருக்கு வழங்க முடியாது எனில், பின்னர் அதனை செய்வதில் எந்தவித ஆட்சேபனைகளும் இருக்க முடியாது. ஒரு சீடரின் கடமை என்பது வெறுமனே குருவின் கட்டளையை தன்னால் பின்பற்ற முடியாமல் போகும் காலம் வரை பின்பற்றிக்கொண்டே இருக்க வேண்டும் அல்லது அந்த குரு அந்த கட்டளையை மாற்றிக்கொடுக்கும் வரை பின்பற்ற வேண்டும். இப்போது கேள்வி என்னவென்றால் இங்கே ரித்விக் வழிமுறையானது, ஸ்ரீல பிரபுபாதர் நேரடியாக முன்னிலையில் இல்லையென்றால் பின்பற்றப்பட வசதிகரமானதா என்பதுதான்.
உண்மையில் ரித்விக் வழிமுறை என்பதே ஸ்ரீல பிரபுபாதரின் எந்தவிதமான நேரடியான ஈடுபாடும் இல்லாமல் செயல்படுவதற்காக சிறப்பாக அமைக்கப்பட்டதே. ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்குப் பின்னர் ரித்விக்முறை தொடரப்பட முடியுமா என்றால், ஸ்ரீல பிரபுபாதர் இருந்தபோது அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டதோ, அதேபோல ஒவ்வொரு விஷயத்திலும் அவரது கட்டளைகளை நினைவுபடுத்தி செயல்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். ஜூலை 9-க்கு பிறகு ஸ்ரீல பிரபுபாதரின் நேரடியான ஈடுபாடுகள் பெரும்பாலும் இல்லாமால் ஆகிவிட்ட நிலையில் அவர் மறைந்திருந்தால் எவ்வாறு செயல்படுமோ அவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருந்தது. அது அவ்வாறு இருக்கும்போது, வெறுமனே ஸ்ரீல பிரபுபாதரின் மறைவைக் காரணம் காட்டி ரித்விக் அமைப்பை இயங்காததாகவும், செயல்படுத்த முடியாததாகவும் வகைப்படுத்த முடியாது. வேறு விதமாக சொல்ல வேண்டுமானால், ரித்விக்முறை குறிப்பாக ஸ்ரீல பிரபுபாதர் இல்லாத நிலையில் செயல்பட அமைக்கப்பட்டதனால், அவர் இவ்வுலகை விட்டு நீங்குவது என்பது, எந்தவகையிலும் இந்த அமைப்பை செல்லாத தாக்காது.
|
4. “உண்மையில் அந்த கட்டளையானது கடிதத்தில் மட்டுமே வெளியிடப்பட்டதோ தவிர எந்தவொரு புத்தகத்திலும் அல்ல, எனவே அதனை மறைமுகமாக அர்த்தம் எடுத்துக்கொள்ளும் உரிமையை நமக்கு வழங்குகிறது.” |
இது ஒரு சாதாரண கடிதம் இல்லை என்பதனால் அது ஒரு கடிதமா அல்லது புத்தகமா என்ற வாதத்திற்கே இங்கு இடமில்லை. பொதுவாக ஸ்ரீல பிரபுபாதர் தனிப்பட்ட ஒரு சீடரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு கடிதத்தை எழுதுவார், அல்லது தனிப்பட்ட வழிகாட்டுதல் அல்லது கண்டிக்கும் விதத்தில் கடிதங்கள் எழுதுவார். ஆகையால் அந்த விஷயங்களைப் பொறுத்தவரை இயற்கையாகவே இது போன்ற தருணங்களில் சீடர்கள் அல்லது பக்தர்களின் தனிப்பட்ட கேள்விகள், சூழ்நிலைகள், திசைதிருப்பங்கள் போன்ற தனிப்பட்ட உபதேஷங்கள் மாற்று விளக்கங்களுக்கு இடம் கொடுக்கலாம். ஸ்ரீல பிரபுபாதரின் கடிதங்களில் உள்ள அனைத்தையும் பொதுவாக நடைமுறைபடுத்த முடியாது. ஆயினும், தீக்ஷையின் மீதான இறுதி கட்டளையைப் பொறுத்தவரை அப்படி மாற்று விளக்கத்திற்காக இடமளிக்காது. ஏனெனில் அது தனிப்பட்ட ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் எழுதப்படவில்லை அல்லது ஏதோ ஒரு சீடரின் தனிப்பட்ட சூழ்நிலைக்கோ அல்லது நடத்தைக்கோ வேண்டி பதிலளித்த கடிதமும் அது கிடையாது. ஜூலை 9 கடிதம் என்பது ஒரு முறைப்படுத்தும் உபதேஷமாக அல்லது நிர்வாகக் கொள்கை ஆவணமாக இருந்ததினால் அது இயக்கத்தின் ஒவ்வொரு தலைவருக்கும் அனுப்பப்பட்டது.
இந்தக் கடிதம் ஸ்ரீல பிரபுபாதரால் வெளியிடப்பட்ட மற்றும் இயக்கத்திலுள்ள ஒவ்வொருவரும் எந்தவொரு மாற்று விளக்கமும் இன்றி பின்பற்ற வேண்டிய முக்கிய உபதேஷத்தின் முறைமையை பின்பற்றுகிறது. அவர் அதனை எழுத்துப்பூர்வமாக செய்து, அவர் அதனை அங்கீகரித்து, பின்னர் அதனை தனது நிர்வாக சீடர்கள் அனைவருக்கும் அனுப்பி வைத்தார். எடுத்துக்காட்டாக, 1972 - ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி அவர் "எல்லா கோவில் நிர்வாகிகளுக்கும்" கீழ்கண்டவாறு செய்தி அனுப்பினார்.
"மண்டல செயலாளர்களின் கடமை, அவரவர்களுடைய பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆன்மீகக் கொள்கைகள் மிக நேர்த்தியாக பின்பற்றப்படுகின்றதா என்பதை கண்காணிக்க வேண்டும். அப்படியில்லையெனில், ஒவ்வொரு ஆலயமும் சுதந்திரமானதாகவும் சுய ஆதரவுடனும் இயங்கும்.
(அனைத்து கோயில் நிர்வாகிகளுக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் கடிதம் 22/04/1972).
ஸ்ரீல பிரபுபாதர் ஒவ்வொரு முறையும் ஒரு முக்கியமான அறிவுறுத்தலை வெளியிட்ட பிறகும், அவர் மறைவிற்குப் பிறகு இந்த சட்டம் தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமா என்பது குறித்த ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டு கொண்டிருக்கவில்லை. எனவே கட்டளைகள் கடித வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளது என்பதற்காக, அதன் அர்த்தத்தை திரித்துக்கூற இடம்கொடுத்துவிட்டது என்று எண்ணக்கூடாது அல்லது அந்த கட்டளைகளை எந்த வகையிலும் செல்லுபடியற்றதாக மாற்றாது.
|
5. “ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்குப்பிறகு அவரால் வெளியிடப்பட்ட அந்த உத்தரவினை நடைமுறைப் படுத்துவதற்குத் தடையாக, சில முக்கியமான சூழ்நிலைகள், பின்னணிக் காரணங்களாக இருந்திருக்கலாமல்லவா ?”. |
அத்தகைய சூழ்நிலைகள் இருந்திருந்தால், ஸ்ரீல பிரபுபாதர் அவற்றை அந்தக் கடிதத்திலோ அல்லது பின்தொடரும் ஒரு ஆவணத்திலோ குறிப்பிட்டிருப்பார். ஸ்ரீல பிரபுபாதர் எப்போதுமே தனது கட்டளைகளை சரியாக செயல்படுத்த போதுமான தகவல்களை கொடுத்தார். அவருடைய கோயில் நிர்வாகிகள் அனைவரும் ஏதோ யோகசித்தி பெற்ற மனமுடையவர்கள் என்று யூகித்துக்கொண்டு அவர் நிச்சயமாக இயக்கவில்லை. ஏதோ ஒரு பகுதியை மட்டுமே கொண்ட அல்லது முழுமையடையாத அறிவுரைகளை கொடுத்துவிட்டு, பிறகு அதனை மனதின் மூலமாக அவர்களுக்கு தெரிவித்து விடலாம் என்று ஸ்ரீல பிரபுபாதர் விட்டுவிடவில்லை. எடுத்துக்காட்டாக, ஸ்ரீல பிரபுபாதர் தனது மறைவிற்குப்பிறகு ரித்விக் அமைப்பை நிறுத்துவிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தால், அவர் பின்வரும் ஏழு வார்த்தைகளை ஜூலை 9-ஆம் தேதி கடிதத்திலேயே சேர்த்திருப்பார் — "எனது மறைவிற்குப் பிறகு ரித்விக் அமைப்பு நிறுத்தப்பட வேண்டும்". நாம் அக்கடிதத்தில் பார்த்தவுடனே சொல்வது "இப்போதிலிருந்து" இது தொடரப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதுதான். (தயவுசெய்து பின் இணைப்பு, ப.109 - ஐப் பார்க்கவும்.)
சிலநேரங்களில் வாதிடுவது என்னவென்றால், ஸ்ரீல பிரபுபாதர் உடல்நிலை சரியில்லாத நிலையில் மட்டுமே இயங்க ரித்விக் அமைப்பு அமைக்கப்பட்டது என்று.
ஸ்ரீல பிரபுபாதருக்கு உடல்நிலை எந்த அளவுக்கு சரியில்லாமல் இருக்கும் என்பது குறித்து பக்தர்கள் அறிந்திருக்கலாம் அல்லது அறியாமல் இருக்கலாம். ஆனால் அவரது உடல்நிலை குறித்து எதுவும் அக்கடிதத்தில் கூறாதபொழுது, “இக்கடிதத்தை வெளியிட இதுதான் காரணம்” என்று அவர்கள் எப்படிக் கூறமுடியும்? அவர் வழங்கிய எந்த ஒரு கட்டளையாக இருந்தாலும் அதனை “தனது சமீபத்திய மருத்துவ அறிக்கையை அடிப்படையாக வைத்து கூறுகின்றேன்”, என்று ஸ்ரீல பிரபுபாதர் எப்போதாவது கூறியிருக்கின்றாரா? தீக்ஷை தொடர்பான இறுதி கட்டளையை பெற்றவர்கள் அக்கட்டளைகளை திரித்துக் கூறாமல் ஏன் அது ஒரு பொதுவான கட்டளை என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்?
ஸ்ரீல பிரபுபாதர் தனது உடலை விட்டுவிடுவதற்காக விருந்தாவனத்திற்கு வந்திருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அவர் முக்காலத்தையும் உணர்ந்த திரிகாலக்ஞ (கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அறிந்தவர்) இருந்ததால் அவர்தாம் நான்கு மாத காலத்தில் மறையப்போவதைப் பற்றி மிக நன்றாக அறிந்திருந்தார். அதனால் தனது இயக்கம் தொடர்ந்து இயங்குவதற்கான இறுதி கட்டளை இயங்குவதற்கு அவர் வழிவகை அமைத்தார். அவர் ஏற்கனவே BBT (பக்திவேந்த புத்தக அறக்கட்டளை) மற்றும் GBC தொடர்பான தனது விருப்ப உயிலையும் மற்ற ஆவணங்களையும், பிற ஆவணங்களையும், அதிலும் குறிப்பாக அவர்தம் மறைவிற்குப் பின்னர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டிருந்தார். அவரின் மறைவிற்குப் பிறகு தீக்ஷையை எவ்வாறு செயல்படுத்துவது என்கிற அந்த ஒரு விஷயம் மட்டும் முடிவு செய்யப் படாமல் இருந்ததது. அந்த குறிப்பிட்ட தருணத்தில்தான், அவர் மறைவிற்குப் பிறகு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த உறுதியற்ற நிலை இன்னும் நிலவிக்கொண்டிருந்தது. ஜூலை 9-ஆம் தேதி கட்டளையானது அவர் இல்லாத நிலையில் தீக்ஷை விஷயத்தில் எவ்வாறு இயங்க வேண்டும் என்பது குறித்து அனைவருக்கும் தெளிவுபடுத்தியது.
சுருக்கமாக சொல்லப்போனால், யாருக்கு விளக்கத்துடன் கூடிய உபதேஷமானது கொடுக்கப்படுகின்றதோ, அந்த உபதேசத்தை மாற்றியமைப்பதற்கு அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. எதனால் ஸ்ரீல பிரபுபாதர், தனது உபதேஷங்களுக்குள் தகுந்த விளக்கங்களை அவர்களுக்கு கொடுக்காமல் இருந்திருந்தால்தானே, அந்த அறிவுரையை யாராலும் சரிவர பின்பற்ற முடியாது என்று முன்னரே தெரிந்துகொண்டு, அந்த நோக்கத்துடன் ஒரு கட்டளையை வெளியிட்டார்? இந்த ரித்விக் வழிமுறை அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அமைக்கப்பட்டது என்றிருந்தால், அதனை ஸ்ரீல பிரபாதர் அந்தக் கடிதத்திலோ, அல்லது அதனை பின்தொடர்ந்து வந்த சில கடிதத்திலோ அல்லது ஆவணத்திலோ குறிப்பிட்டிருப்பார். ஆனால் ஸ்ரீல பிரபுபாதர், அப்படிப்பட்ட எந்தவொரு தெளிவற்ற, குறைவான தகவல் கொண்ட எந்தவொரு விஷயத்தையும் வேண்டுமென்றே, அதிலும் குறிப்பாக மொத்த இயக்கத்திற்கும் கட்டளை வழங்கும் விஷயத்தில் அவர் இவ்வாறாக செயல்பட்டார் என்பதற்கான எந்தவொரு ஆதாரப் பதிவும் கிடையாது. ஸ்ரீல பிரபுபாதர் எப்போதும் பதற்றத்துடன் அவசர அவசரமாக கையெழுத்திட்ட தில்லை. யாரேனும் அவருடைய உன்னத உபதேசத்தின் மீது இவ்வாறு கேள்வியெழுப்பினால், அவர் ஏதோ அடிப்படைத் தகவலை விட்டுவிட்டார் என்பதை சூட்சகமாக புரிந்துகொள்ளலாம்.
|
6. ஜூலை 9-ஆம் தேதி உத்தரவானது, ஸ்ரீல பிரபுபாதர் உடல்ரீதியாக இருந்த காலத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியது என்பதை தெளிவாக ஆதரித்துக்கூறும் பொருத்தமான தகவல்கள் "Appointment tape" கொண்டிருக்கவில்லையா? |
GBC-யின் கையேடாகிய GII(Gurus And Initiation In ISKCON)-இல், மாற்றங்கள் அ) மற்றும் ஆ) - க்கு ஆதரவாக வழங்கப்படும் முக்கியமான ஆதாரங்கள் மே 28, 1977 அன்று நடந்த ஒரு உரையாடலிலிருந்து எடுக்கப்பட்டது. அந்தக் கையேட்டில் ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்கு பிறகு ரித்விக் வழிமுறையுடன் நேரடியாக தொடர்புடைய எந்த அறிவுறுத்தலும் இல்லை என்று இந்தத் தாள் ஒப்புக்கொள்கிறது.
“ஸ்ரீல பிரபுபாதர் தனது அறிவுரையை மீண்டும் சொல்லவில்லை என்றாலும், இந்த சீடர்களே எதிர்காலத்தில் தீக்ஷை அளிப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்தார் என்பது பொதுவாகப் புரிந்து கொள்ளப்பட்டது.” (GII, பக்கம்.35)
இதுதான் மையமான சான்று என்பதால், அந்த புத்தகத்தில் 33-ஆம் பக்கத்தில் மே 28 உரையாடலுக்கு பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட பக்கம் 33 -ல் ஒரு பிரிவு உள்ளது. உண்மையை சொல்லப்போனால், ஜூலை 9 கடிதத்தில் அதனை குறிப்பிடவும் இல்லை, அல்லது அன்று ஒலிப்பதிவு செய்யப்பட்ட உரையாடலின் நகலை இறுதி கட்டளையுடன் சேர்த்து அனுப்புமாறு ஸ்ரீல பிரபுபாதர் எங்கும் கூறவும் இல்லை. ஆகவே இதிலிருந்து இறுதி உத்தரவினை புரிந்து கொள்வதற்கான முக்கியமான தகவல்களை மாற்றியமைக்கும்படியான கருத்துக்கள் ஏதும் அதில் இடம் பெற்றிருக்க முடியாது என்கிற தெளிவான கருத்தை நாம் முழு உத்திரவாதத்துடன் முடிவு செய்யலாம். மற்றுமொரு உண்மை என்னவெனில், மே 28 - ஆம் தேதி நடந்த உரையாடலின் ஒலிப்பதிவினை பிரபுபாதரின் மறைவிற்குப் பிறகு பல வருடங்களுக்கு அவர்கள் வெளியிடவேயில்லை. ஆகவே, மேலும் நாம் எதிர்பார்ப்பது என்னவென்றால், அந்த உபதேசங்களை வெளியிட்ட நபர்களுக்கே, தெளிவாக எழுதப்பட்டதொரு உபதேசத்தின் விளக்கங்களை மாற்றியமைக்கும் எந்த உரிமையும் கிடையாது. பின்னர் பார்க்கப் போகின்ற விஷயத்தின்படி மே மாத உரையாடல் இறுதிக்கட்டளையை எந்த விதத்திலும் முரண்பட்டு இருக்க வில்லை.
ஒரு பொதுவான விஷயமாக, குருவின் பிற்கால உபதேஷங்கள் எப்போதும் முந்தைய உபதேஷத்தை மாற்றிவிடும்; இறுதிக்கட்டளை என்பது இறுதிக்கட்டளையே, மேலும் அதையே கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்:
"நான் உன்னிடம் பல விஷயங்களை சொல்லலாம். ஆனால் ‘இப்போது இதை செய்” என்று நான் நேரடியாக ஏதாவது சொல்லும்போது, அதைச் செய்வதுதான் உன் முதல் கடமை. "ஐயா, இதற்கு முன்பு என்னிடம் இப்படி சொன்னீர்களே" என்று வாதிட முடியாது. இல்லை, அது உன் கடமையல்ல. இப்போது நான் என்ன கூறுகிறேனோ, அதை நீ செய்ய வேண்டும். அதுவே கீழ்படிதல். அதை எதிர்த்து நீ வாதம் செய்ய முடியாது.”
(ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவு, 15/04/1975, ஹைதராபாத் )
ஸ்ரீமத் பகவத் கீதையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனருக்கு பல்வேறு வகையான உபதேசங்களை வழங்கியதை நாம் காணலாம். உதாரணமாக அவர் தியானம் முதல் ஞானம் வரை அனைத்து வகையான யோகத்தையும் பேசினார். ஆனால் அந்த அனைத்தும் அவருடைய கீழ்கண்ட இறுதிக் கட்டளையின் முன்பு காணாமல் போனது:
““நீ அனைத்தையும் கைவிட்டு என் பக்தனாக மாறி என்னை வழிபடுவாயாக!” இந்த கட்டளையை இறுதியானதாக ஏற்றுக்கொண்டு, ஒருவர் அந்த கட்டளையையே பின்பற்ற வேண்டும்”
( பகவான் சைதன்யரின் உபதேசங்கள், அத்தியாயம் 11)
“பஜ கோவிந்தம்” என்று ஸ்ரீ சங்கராச்சாரியார் இறுதிக்கட்டளையை வழங்கிய பின்னர், அவருடைய முந்தைய உபதேசங்கள் அனைத்தையும் அது செல்லுபடியற்றதாக மாற்றியது. இந்த GII-புத்தகத்தின் அறிமுகத்திலேயே GBC - யே இந்த ஒரு மாறாத உண்மையை கீழ்கண்டபடி ஏற்றுக்கொண்டுள்ளது.
“நியாயப்படி, பிந்தைய அறிக்கையானது, முந்தைய அறிக்கைகளை திருத்தியமைக்கும்” (GII, பக்கம். 25)
முந்தைய அறிக்கையானது, இறுதியாகக் அறிக்கையை நிராகரித்து செல்லமுடியாது. ஆகவே GBC-யின் நியாயப்ப்படியே, நாம் ரித்விக் வழிமுறையையே பின்பற்றியாக வேண்டும்.
|
7. அவரின் அனைத்து சீடர்களும் கண்டிப்பாக குருவாக மாறவேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் பல முறை கூறியிருக்கின்றார்.” நிச்சயமாக இது நிரூபிப்பது என்னவென்றால், ஸ்ரீல பிரபுபாதர் ரித்விக் அமைப்பு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்ற விருப்பமற்றவராக இருந்தார் என்றுதானே?. |
ஸ்ரீல பிரபுபாதர் தன்னுடைய மறைவிற்குப் பிறகு, இவர்தான் தீக்ஷை குரு என்று யாரையும், ஒருபோதும் நியமித்ததுமில்லை அல்லது உபதேசித்ததுமில்லை. இந்த உரிமைக்கோரலுக்கான ஆதாரத்தை எப்போதும் வழங்கியதில்லை. இப்போதும் இஸ்கானில் இருக்கும் மூத்த பக்தர்களால் பொதுவாக ஒப்புக்கொள்ளப்படும் ஒரு கருத்து என்னவென்றால்:
“‘சரி ஆகட்டும், இவர்தான் அடுத்த ஆச்சாரியர், இவர்கள்தான் அடுத்த 11 ஆச்சாரியர்கள், இவர்கள்தான் இந்த இயக்கத்தின் அல்லது மொத்த உலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஆச்சாரியர்கள்” என்று ஸ்ரீல பிரபுபாதர் எப்போதும் கூறியதில்லை என்பதுதான் உண்மை.’ அதை அவர் செய்யவும் இல்லை.”
( ஜெய அத்வைத சுவாமி, இஸ்கான் தெற்கு லண்டன், 1993)
ஸ்ரீல பிரபுபாதர் பாரபட்சமற்று கூறுகின்ற விஷயம் என்னவென்றால், தீக்ஷை குரு என்பவர் ஒரு மஹா பாகவதராகவும் (இறையுணர்வில் உன்னத தளத்தை அடைந்தவர்), அதிலும் குறிப்பாக தனது சொந்த குருவால் அங்கீகரிக்கப் பட்டவராகவும் இருக்க வேண்டும். அவர் எப்போதும், தகுந்த தகுதி இல்லாமலும், அங்கீகரிக்கப்படாமலும் இருக்கும் நபர்கள் தங்களை குருவாக சொல்லிக்கொள்வதை பலமாக கண்டித்திருக்கிறார். ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகத்திலிருந்து தீக்ஷை குருவுக்கான தகுதியை நாம் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருப்பதை மேற்கோள் காட்டியுள்ளோம்:
“மஹா-பாகவத ஷ்ரேஸ்டோ ப்ராஹ்மணோ வை குருர் ந்ருணாம்
ஸர்வேஷாம் ஏவ லோகாநாம் அஸெள பூஜ்யோ யதா ஹரி:
மஹா குல ப்ரஸூதோ ‘பி ஸர்வ யக்னேஷு தீக்ஷித:
ஸஹஸ்ர ஷகாத்யாயி ச ந குரு: ஸ்யாத் அவைஷ்ணவ:
குரு என்பவர் பக்தி தொண்டின் மிக உன்னதமான தளத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும். மூன்றுவிதமாக தளங்களில் பக்தர்கள் இருப்பர். அதில் குரு என்பவர் உன்னத தளத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். (சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 24.330, பொருளுரை )
“ஒருவர் மஹாபாகவதரின் மிக உன்னத தளத்தை அடைந்தபிறகு, அவரை ஒரு குருவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, பரம புருஷ பகவானாகிய ஹரியை வணங்குவதைப் போலவே வணங்கப்பட வேண்டும். அத்தகைய நபர் மட்டுமே ஒரு குருவின் பதவியை வகிக்க தகுதியுடையவர். (சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 24.330, பொருளுரை )
தகுதி மட்டுமல்லாமல், எவரேனும் தீக்ஷை குருவாக செயல்படும் முன்பு தனது முந்தைய ஆச்சாரியரிடமிருந்து சிறப்பான அங்கீகாரம் பெற்றிருப்பதும் மிக அவசியம் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் கற்பித்துள்ளார்:
"ஒட்டுமொத்தமாக பார்த்தால், அவர் ஒரு முக்திபெற்ற நபர் அல்ல என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். எனவே கிருஷ்ண உணர்வுக்கு அவர் எந்த நபரையும் தீக்ஷை அளிக்க முடியாது. இதற்கு உயர் அதிகாரிகளிடமிருந்து சிறப்பான ஆன்மீக ஆசீர்வாதத்தைப் பெற்றிருப்பது அவசியமானதாகும்." (ஸ்ரீல பிரபுபாதர் ஜனார்தருக்கு எழுதிய கடிதம், 26/04/1968)
"அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவிடமிருந்து ஒருவர் தீக்ஷை பெற வேண்டும். அவர் குருசீடப் பரம்பரையிலிருந்து வரும் அவருக்கு முந்தைய ஆன்மீக குருவினால் அங்கீகரிக்கப்பட்டவராக இருக்கவேண்டும். இதுவே தீக்ஷா விதானம் என்று அழைக்கப்படுகிறது." ( ஸ்ரீமத் பாகவதம் 4.8.54, பொருளுரை)
இந்திய நபர்: "நீங்கள் கிருஷ்ண உணர்விற்கு ஆன்மீக தலைவராக எப்போது
ஆகத் தொடங்கினீர்கள்?"
ஸ்ரீல பிரபுபாதர்: "என்னது?"
பிரம்மானந்தா: "நீங்கள் கிருஷ்ண உணர்விற்கு ஆன்மீக தலைவராக எப்போது
ஆகினீர்கள்?” என்று அவர் கேட்கிறார்.
ஸ்ரீல பிரபுபாதர்: "எனது குரு மகாராஜர் எனக்கு கட்டளை இட்டபோது. இதுவே
குருசீட பரம்பரை"
இந்திய நபர்: “அது நடந்ததா...”
ஸ்ரீல பிரபுபாதர்: “புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதிக வேகமாக போகக்
கூடாது. ஒருவர் எப்போது குருவாக மாறலாம் என்றால், அவர்
தனது குருவால் கட்டளையிடப்படும்போது. அவ்வளவுதான்.
அவ்வாறு இல்லையெனில், யாரும் குருவாக முடியாது.”
(ஸ்ரீல பிரபுபாதர் பகவத் கீதை உபன்யாசம், 28/10/1975)
ஆகவே, ஸ்ரீல பிரபுபாதரின் கூற்றுப்படி, தகுதி மற்றும் அங்கீகாரம் என்ற இந்த இரண்டும் ஒருசேர இருக்கும்போது மட்டுமே ஒருவர் தீக்ஷை குருவாக மாற முடியும். ஸ்ரீல பிரபுபாதர் அப்படியாக எவரையும் குருவாக அங்கீகரிக்கவில்லை. அதேபோல தன்னுடைய சீடர்களில் எவரையேனும் தீக்ஷை கொடுக்க தகுதியானவர் என்று கூறியதுமில்லை. மாறாக, ஜூலை 9ஆம் தேதிக்கு சற்று முன்னதாகக்கூட, அவர்கள் இன்னும் “பந்தப்பட்ட ஆத்மாக்களாகதான்” இருக்கிறார்கள் என்று அவர் ஒப்புக்கொண்டார். ஆகவே, குறைந்த தகுதிகளுடன் தங்களை குருவாக காட்டிக்கொள்பவர்மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். (தயவு செய்து பிற்சேர்க்கை, பக்கம்-126, ஏப்ரல் 22, 1977 உரையாடலைப் பார்க்கவும்)
ரித்விக் வழிமுறைக்கு மாற்றாக, செயல்படுத்தப்படும் வழிமுறைக்கு ஆதரவாக பயன்படுத்தப்படும் ஆதாரங்கள் மூன்று அடிப்படை பிரிவுகளாக இருக்கின்றன:
1. “அமார ஆக்ஞா குரு ஹோய்” என்ற ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் வாக்கியத்தை அடிக்கடி சுட்டிக்காட்டி, அனைவரும் குருவாக வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறுவதாக, இவர்கள் பிரகடனம் செய்கின்றனர்.
2. அரை டஜன் அல்லது அந்த அளவிலான தனிப்பட்ட கடிதங்களில் ஸ்ரீல பிரபுபாதர் தனது மறைவிற்குப் பிறகு அவருடைய சீடர்களில் சிலர் தீக்ஷா குருவாக செயல்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
3. ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் மற்றும் உபன்யாசங்களில் உள்ள மற்ற அறிக்கைகளில், சீடர்களின் கோட்பாட்டின்படி அவர்கள் தீக்ஷா குருவாக மாறப்போவதைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
வகை 1) - ஐ முதலில் காண்போம்:
ஸ்ரீல பிரபுபாதரால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும், அனைவரும் குருவாக வேண்டும் என்ற உபதேஷம் சைதன்ய சரிதாம்ருதத்தில் கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.
“ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கொடுக்கப்பட்ட கட்டளைகளை பின்பற்றுமாறு அனைவருக்கும் உபதேசியுங்கள்! அவ்வாறாக ஆன்மீக குருவாக ஆகி, பூமியில் உள்ள அனைவரும் மோக்ஷம் அடைவதற்கு முயற்சி செய்யுங்கள்”
(சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 7.128)
ஆயினும், பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் ஊக்கப்படுத்தும்படியான அனைவரும் ஆகுங்கள் என்பது எந்த வகையான குருவாக இருக்க வேண்டும் என்பதனை அந்த ஸ்லோகத்தின் பொருளுரையில் தெளிவாக கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளன.
“அது என்னவென்றால், ஒருவர் தம் இல்லத்தில் தங்கி, ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபித்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் ஸ்ரீமத் பகவத் கீதை, மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ள உபதேசங்களை பிரச்சாரம் செய்யவேண்டும்.”
(சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 7.128, பொருளுரை )
ஒருவர் கிரஹஸ்தராகவோ, மருத்துவராகவோ பொறியியலாளராகவோ அல்லது என்னவாகவோ இருகட்டும். அது பொருட்டல்ல. அவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உபதேசங்களை மட்டும் பின்பற்றி, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபித்து, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகவத்கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ள போதனைகளை உபதேசிக்க வேண்டும்.[...]. சீடர்கள் என்று யாரையும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது.
(சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 7.130, பொருளுரை )
ஒருவர் குருவாக செயல்படும்முன் அவர் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தளத்தில் தன்னுணர்வு அடைந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்பதை மேற்கண்ட உபதேசத்தில் நாம் காணலாம். உடனடியாக செயற்படும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறது. இதிலிருந்து நமக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால், தனக்கு என்ன தெரியுமோ அந்த தெரிந்த விஷயங்களை அனைவருக்கும் பிரச்சாரம் செய்ய ஊக்கப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும், அவ்வாறாக ஒருவர் உபதேசம் கொடுக்கும் சிக்ஷா குருவாக ஆகலாம் என்பதுதான். தீக்ஷா குருவாக அல்ல:
சீடர்கள் என்று யாரையும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது. (சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 7.130, பொருளுரை )
சீடர்களை ஏற்றுக்கொள்வது என்பதே தீக்ஷா குருவின் முக்கிய வேலையாகும். அதேசமயம் சிக்ஷா குரு என்பவர் வெறுமனே தீக்ஷா குருவினால் கொடுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றிக்கொண்டு, தன்னால் முடிந்த வரை சிறந்த முறையில் கிருஷ்ண உணர்வை பிரச்சாரம் செய்வதுதான். ஸ்ரீல பிரபுபாதரின் மேற்கண்ட பொருளுரையிலிருந்து நமக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால், பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு சிக்ஷா குருவைத்தான் அங்கீகரிக்கிறார். தீக்ஷா குருவை அல்ல.
இதனை மேலும் சிறந்த அளவில் தெளிவாக்கும் விதமாக, ஸ்ரீல பிரபுபாதர் அனைவரையும் குருவாகும்படி ஊக்கப்படுத்தும் வகையில் கூறப்பட்டிருக்கும் மற்ற பல ஆதாரங்களும் கிடைக்கின்றன.
“யாரே தேக, தாரே கஹ, ‘கிருஷ்ண’ உபதேஷ. [சைதன்ய சரிதாம்ருதம், மத்ய லீலை 7.128]. நீங்கள் எதையும் உற்பத்தி செய்யத் தேவையில்லை. ஏற்கனவே கிருஷ்ணர் எதை கூறினாரோ, அதை திரும்பக் கூறுங்கள். அவ்வளவுதான். அதில் சேர்க்கவோ, அல்லது மாற்றவோ கூடாது. அப்போதுதான் நீங்கள் குருவாகலாம்[...] நான் முட்டாளாகவோ அயோக்கியனாகவோ இருக்கலாம்[...]. ஆகவே, நாம் இந்த வழிமுறையினை பின்பற்ற வேண்டும். அவ்வாறு குருவாகி, பக்கத்து வீட்டினர், நண்பர்கள் என அனைவரையும் மோக்ஷம் அடையச் செய்யலாம். ஆனால் கிருஷ்ணருடைய அதிகார பூர்வமான வார்த்தைகளையே பேச வேண்டும். அப்போதுதான் அது செயல்படும் [...]. இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு குழந்தை கூட செய்யலாம்.
(ஸ்ரீல பிரபுபாதர் மாலை தரிசனம், 11/5/77, ஹ்ரிஷிகேஷ், வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது)
“ஏனென்றால், மக்கள் அறியாமை இருளில் இருக்கின்றனர், அவர்களுக்கு அறிவு ஒளி கொடுக்க நமக்கு லட்சக்கணக்கான குருக்கள் தேவைப்படுகின்றனர். ஆகவே, சைதன்ய மஹாபிரபுவின் இயக்கம் என்னவென்றால், 'அனைவரும் குருவாக வேண்டும்' என்று.அவர் கூறுகிறார்”
(ஸ்ரீல பிரபுபாதர் உபன்ஞாசம் 21/5/1976, ஹோனுலுலு )
“நீங்கள் வெறுமனே கூறுங்கள்[...] கிருஷ்ணர் கூறுவதை, 'எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டிரு' மற்றும் என்னுடைய பக்தனாகி எனக்கு வந்தனை செய்.” தயவு செய்து இதை செய்யுங்கள். நீங்கள் யாரேனும் ஒருவரை இந்த நான்கு விஷயங்களை செய்யுமாறு ஊக்கப் படுத்தினால், நீங்கள் குருவாவீர்கள். இதில் ஏதேனும் கஷ்டம் இருக்கிறதா ?”
(ஸ்ரீல பிரபுபாதர் உரையாடல் 2/8/1976, நியூ மாயாப்பூர் )
கிருஷ்ணர் என்ன கூறினாரோ அதை அப்படியே கூறுபவர்தான் உண்மையான குருவாவார். நீங்கள் வெறுமனே கூறவேண்டியதும் இதுதான், ‘இது இப்படித்தான் இருக்கின்றது. ‘ அவ்வளவுதான். இது கஷ்டமான காரியமா ?”
(ஸ்ரீல பிரபுபாதர் உபன்ஞாசம் 21/5/1976, ஹோனுலுலு )
“ஆனால் எனக்குதான் தகுதி எதுவும் இல்லையே. நான் எப்படி குருவாவது?” அதற்கு தகுதி அவசியம் இல்லை. நீ யாரைக்கண்டாலும், கிருஷ்ணர் கூறியதை அப்படியே கூறு. அவ்வளவுதான், நீ குருவாகி விடுகிறாய்.
(ஸ்ரீல பிரபுபாதர் உபன்ஞாசம் 21/5/1976, ஹோனுலுலு )
(ஆச்சர்யமூட்டும் வகையில், சில பக்தர்கள் இப்படிப்பட்ட மேற்கோள்களை பயன்படுத்தி, "குறைந்தபட்ச தகுதியுடைய தீக்ஷை குருக்களை"*(1), நியாயப்படுத்தும் விதமாக பேசுகின்றனர். இதனை தீக்ஷை குருவுக்கான தகுதி என்று ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள், கடிதங்கள், உபன்ஞாசங்கள், உரையாடல்கள் என எதிலும் காணமுடியாது.)
எந்த தகுதியும் இல்லாமல் ஓர் குருவாக இருப்பதற்கான உதாரணம், தான் என்ன கேட்டோமோ அதை திரும்பக்கூறும் பக்தர்களிடம் அதனைக் காணலாம், இது இஸ்கானில் புதிய பக்தர்களை ஊக்கபடுத்தும் வகுப்புகளில் காணலாம். ஆகவே, மிகத் துல்லியமாக தெளிவாவது என்னவென்றால், மேலே குருவாக மாற வேண்டும் என கூறுவது, உபதேசிக்கும் அல்லது சிக்ஷா குருவாக மாற அழைப்பு விடுப்பது ஆகும். ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களிலிருந்து, நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், தீக்ஷா குருவிற்கான தகுதிகள் மிகக் கடுமையாக இருக்கின்றது என்பதைத் தான்.
“ஒருவர் உயர்ந்த தளமான மஹா-பாகவத தளத்தை அடையும்போது, அவரை ஓர் குருவாக ஏற்றுக்கொண்டு, பரம புருஷ பகவானாக ஹரிக்கு சமமாக வழிபடப்படுகிறார். அப்படிப்பட்டவரே குருவின் ஸ்தானத்தை ஏற்பதற்கு தகுதி வாய்ந்தவர் ஆவார்.”
( சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 24.330, பொருளுரை )
“அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவிடமிருந்து ஒருவர் தீக்ஷை பெற வேண்டும். அவர் குருசீடப் பரம்பரையிலிருந்து வரும் அவருக்கு முந்தைய ஆன்மீக குருவினால் அங்கீகரிக்கப்பட்டவராக இருக்கவேண்டும். இதுவே தீக்ஷா விதானம் என்று அழைக்கப்படுகிறது.“
(ஸ்ரீமத் பாகவதம் 4.8.54, பொருளுரை )
மேலே உள்ள மேற்கோளில் ஸ்ரீல பிரபுபாதர் கூறுவது என்னவென்றால், தீக்ஷா குருவாக ஆவதற்கான கட்டளையை ஒருவர் தன்னுடைய குருவிடமிருந்து சிறப்பாக பெற்றிருக்க வேண்டும். பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பொதுவான கட்டளையானது கடந்த 500 வருடங்களாக தொடர்ந்து இருந்துவருகிறது. நமக்கு தெளிவாக தெரிகின்ற விஷயம் என்னவென்றால் ஸ்ரீல பிரபுபாதர் “அமார ஆக்ஞா குரு ஹய “ என்ற வார்த்தையை குறிப்பாக தீக்ஷா குருவை குறிப்பதாக எங்கும் குறிப்பிடவில்லை. அவ்வாறு இல்லையெனில், நம்முடைய சமீபத்திய ஆச்சரியரிடமிருந்து ஏன் மற்றுமொரு சிறப்பான கட்டளை நமக்குத் தேவைப்படுகிறது? ஆகவே பகவான் ஸ்ரீ சைதன்ய மஹா பிரபுவின் பொதுவான இந்த உபதேஷம் சிக்ஷா குருவைத்தான் குறிக்கிறது, தீக்ஷை குருவை அல்ல. தீக்ஷை குரு என்பவர் விதிவிலக்கானவர். விதிமுறை அல்ல. இங்கே ஸ்ரீல பிரபுபாதர் தொலைநோக்குப் பார்வையில் கோடிக்கணக்கான சிக்ஷா குருக்களை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரையும் காண்கிறார்.
இப்போது வகை 2) - ஐ காண்போம்:
அதிபிரசிங்கித்தனமான சீடர்களில் சிலர் ஸ்ரீல பிரபுபாதர் வீற்றிருக்கும்போதே, அவர் முன்னிலையில் தீக்ஷை கொடுத்துக்கொண்டிருந்ததை அறிந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதங்களையே பல்முனை ஆச்சாரிய அமைப்பினை(Multiple Acharya Successor System(M.A.S.S.)) ஆதரிக்க பயன்படுத்தப் படுகிறது. ஸ்ரீல பிரபுபாதர் இப்படிப்பட்ட அவசரப்படும் நபர்களை கையாள்வதற்கு ஒரு நெறிப்படுத்தப் பட்ட ஒரு முறையைக் கையாண்டார். அப்படிப்பட்டவர்களை தொடர்ந்து ஸ்திரமான பயிற்சியில் ஈடுபடுமாறும் எதிர்காலத்தில் தன்னுடைய உடல் ரீதியான மறைவிற்குப் பிறகு அவர்கள் சீடர்களை ஏற்றுக்கொள்ளலாம் என்று அவர் கூறினார் என்று கீழ்கண்ட ஆதாரங்களைக் கொண்டு நிரூபிக்க முயல்கின்றனர்.
“முதல் விஷயம், நான் அச்யுதானந்தாவை எச்சரிக்கிறேன், தீக்ஷை அளிக்க முற்படாதே. எவருக்கும் தீக்ஷை அளிக்கும் அளவுக்கு நீ இன்னும் பக்குவப்படவில்லை. இப்படிப்பட்ட மாயையினால் கவரப் படாதே. எதிர்காலத்தில் நீங்கள் குருவாக வேண்டும் என்பதற்காக நான் இப்போது உங்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கின்றேன். ஆதலால் நீங்கள் அவசரப்படாதீர்கள்”
(அச்யுதானந்தா மற்றும் ஜெய கோவிந்தாவிற்க்கு ஸ்ரீல பிரபுபாதரின் கடிதம் 21/8/1968)
“சில காலங்களுக்கு முன்பு நீ சில சீடர்களை ஏற்றுக்கொள்ள என்னிடம் அனுமதி கேட்டிருந்தாய். இப்போது அதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நீ உன்னுடைய பலமான பிரச்சார செயல்பாடுகளால் பல சீடர்களை பெறுவாய்.”
(அச்யுதானந்தாவிற்கு ஸ்ரீல பிரபுபாதரால் எழுதப்பட்ட கடிதம், 16/05/1972)
“மற்ற பக்தர்களால் உனக்கு சில பூஜைகள் நடைபெறுவதாக நான் கேள்விப்பட்டேன். ஒரு விதத்தில் வைஷ்ணவருக்கு வந்தனம் செலுத்துவது என்பது சரிதான். ஆனால் அதனை ஆன்மீக குருவின் முன்னிலையில் செயல்படுத்தக்கூடாது. ஆன்மீக குருவின் மறைவிற்குப் பிறகு அதற்கென்று ஒரு காலம் வரும். இப்போது காத்திரு. இல்லையேல் அது பிரிவினைகளை ஏற்படுத்தும்.
(ஹம்ஸதூதாவிற்கு ஸ்ரீல பிரபுபாதரால் எழுதப்பட்ட கடிதம், 1/10/1974)
“ஸ்திரமான பயிற்சியில் உன்னை ஈடுபடுத்திக்கொள். அப்போதுதான் நீ ஒரு முறையான குரு. பிறகு நீ அதனடிப்படியில் சீடர்களை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், உன்னுடைய ஆன்மீக குரு வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்தில், முன்னேற்றம் அடைகின்ற பக்தர்களை நீ உன் குருவினிடம் கொண்டுவர வேண்டும். அவர் இல்லாதபோதும் அல்லது அவரின் மறைவிற்குப் பிறகும் நீ எந்த வரம்புமின்றி சீடர்களை ஏற்றுக்கொள்ளலாம். இதுதான் குருசீட பரம்பரையின் சட்டமாகும். என்னுடைய சீடர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருக்களாக மாறி, உலகம் முழுக்க கிருஷ்ண உணர்வினை மிகப் பரவலாக பரப்ப வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். அதுவே என்னையும் கிருஷ்ணரையும் மகிழ்விக்கும் .
(துஸ்ட கிருஷ்ணாவிற்கு ஸ்ரீல பிரபுபாதரால் எழுதப்பட்ட கடிதம், 2/12/1975)
இங்கே கவனிக்க வேண்டிய சுவாரசியமான விஷயம், GII - ஆனது மேற்கண்ட "சட்டத்தை", M.A.S.S. -ன் சித்தாந்தத்தை ஆதரிக்கப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களுடைய அதே ஆவணத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல உண்மையில் இந்த ஆவணங்கள் எதுவும் சட்டவிதிகளே அல்ல:
“சாஸ்திரங்களில் குருவின் முன்னிலையில் அவரின் சீடர்கள் தீக்ஷை கொடுத்த பல சம்பவங்கள் உள்ளன, [...]. சாஸ்திரங்களில் தன் குருவின் முன்னிலையில் ஒரு சீடர் தீக்ஷை கொடுக்கக் கூடாது என்பது போன்றதான குறிப்பிட்ட உபதேசங்கள் எதுவும் இல்லை.” (GII, பக்கம் 23)
தொண்டர்களையும் அவர்களின் வழிபாடுகளையும் ஏற்கும் ஆசை என்பது உண்மையில் ஓர் ஆன்மீக குருவை தகுதியற்றதாக்குகிறது. இதுவரை வரலாற்றிலேயே காணக் கிடைக்காத சக்திமிகுந்த ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரின் முன்னிலையில் தம்மை தீக்ஷை அளிக்க போதுமான தகுதி உள்ளவனாக கற்பனையாக நினைத்துக் கொண்டு சீடர்களை ஏற்றுக்கொள்வது என்பது நம்முடைய அகங்காரத்தின் சக்தியினால் உந்தப்பட்டு செய்யப்படும் காரியமாகும்.*(2)
இந்த பக்தர்களுக்கு இவ்வாறு கடிதம் எழுதும்போதும் இன்னும் சிறிது காலத்திற்கு அவர்கள் தாக்குப்பிடித்தால் சீடர்களை ஏற்கலாம் என்று கூறி ஸ்ரீல பிரபுபாதர் அவர்களை பக்தி சேவையில் தொடர்ந்து தக்கவைக்க முயற்சிக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அவ்வாறு செய்வதனால், குறைந்தபட்சம், காலப்போக்கில் அவர்களின் அவசரபுத்தி தூய்மையடைய ஏதோ வாய்ப்புள்ளது என்பதற்காகத்தான்.
தங்களது ஆன்மீக குருவுக்கு தன்னலமற்ற தன்மையுடனும் தியாகத்துடனும் மற்றும் விடாமுயற்சியுடனும் சேவையினை செய்த பணிவான பக்தர்கள் எவருக்கும், தனது எதிர்கால பிரகாசமான தீக்ஷை குருக்களாக விவரிக்கும் கடிதத்தை ஒருபோதும் பெற்றதேயில்லை. ஏன் தீக்ஷை குரு அமைப்பை ஸ்ரீல பிரபுபாதர், சுயநோக்கமுள்ள மனநிலையுடைய மற்றும் குறைந்தபட்ச தகுதி உடையவர்களிடம் மட்டும் செயல்படுமாறு வாக்களித்தார்?
ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்கு பிறகு அவர்கள் தங்களது சீடர்களை அமைத்துக்கொள்ள சுதந்திரமாகச் செயல்படுவார்கள் என்ற அறிக்கை உண்மைதான். உதாரணமாக, இங்கிலாந்தில் இருப்பதைப் போலவே ஒருவர் 17 வயதை அடைந்ததும் காரை ஓட்ட சுதந்திரம் இருப்பினும், அந்த இரண்டு சிறிய விதிமுறைகளை நாம் மறந்துவிடக்கூடாது. முதலாவதாக ஒருவர் வாகனம் ஓட்ட தகுதி உடையவராக இருக்க வேண்டும். இரண்டாவதாக ஓட்டுனர் உரிமம் அதிகாரிகளால் அங்கிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இதன்மீதான விளக்கத்தை வாசகர்களே நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
M.A.S.S(Multiple Acharya Successor System - பல்முனை ஆசாரிய வழிமுறை அமைப்பு ) - ஐ ஆதரிக்க மேற்கோள் காட்டப்படும் மற்றொரு கடிதம் என்னவெனில்,
"1975-ஆம் ஆண்டின்போது, மேற்கூறிய அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் கிருஷ்ண உணர்வுடைய மக்கள் தொகையை அதிகரிக்க குறிப்பாக அதிகாரம் வழங்கப்படும்".
( ஸ்ரீல பிரபுபாதர், கீர்த்தனானந்தாவிற்கு எழுதிய கடிதம், 12/01/1969)
மேற்கண்ட அறிக்கை இறுதி உத்தரவை(The Final Order ) முடிவுக்கு கொண்டுவர தகுந்த வாக்கியங்களா ?
இது தனிப்பட்ட முறையிலான கடிதங்களை பயன்படுத்தி ரித்விக் வழிமுறையை நிறுத்துவதற்கான ஒரு முயற்சி என்பதால், நாம் இங்கே ஸ்ரீல பிரபுபாதரின் "குரு சீட வழிமுறைக்கான சட்டத்தை" முன்வைக்கிறோம். "அந்த சட்டத்தின் முதல் பகுதியில், ஒரு சீடர் தனது குருவின் முன்னிலையில் சுயமான ஆச்சாரியனாகி நிச்சயமாக தீக்ஷை அளிக்கக் கூடாது என்று கூறுகிறது. இது "சட்டம்" என்பதால் மேற்கண்ட கடிதத்தில் கூறியபடி பார்த்தோமானால், ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் முன்னிலையில் சீடர்கள் தங்களுக்கென்று சீடர்களை அமைத்துக் கொள்ள முடியாது. ஸ்ரீல பிரபுபாதர் 1975ஆம் ஆண்டில் இவ்வுலகில் தானே இருந்தார். ஆகவே நாம் இங்கு முடிவு செய்வது என்னவென்றால் அவர் 1969 ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்தே ஒருவித "அதிகாரப்பூர்வ" தீக்ஷை முறையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார். காலப்போக்கில் பின்னர் 1975இல், ஸ்ரீல பிரபுபாதர் உண்மையில் அதிகாரம் அல்லது அங்கீகாரம் பெற்ற கீர்த்தனானந்தா போன்ற பக்தர்களிடம் தனது சார்பாக தீக்ஷை முறையை நடத்துங்கள் என்று கூறினார் என்பதையும் முன்வைக்கிறோம். மேற்கண்ட கடிதத்தை பிந்தைய காலத்தில் தீக்ஷை அளிக்கும் நோக்கத்திற்கான பிரதிநிதிகளை பயன்படுத்தும் முன்னறிவிப்பாகத் தோன்றுகிறது. பின்னர் அவர் இந்த பிரதிநிதிகளை ரித்விக் என்று அழைத்தார், மேலும் ஜூலை 9-ஆம் தேதியில் அவர்களின் செயல்பாட்டை முறைப்படுத்தி அமைத்தார். மீண்டும் முட்டாள்தனமாக கூறுவது என்னவெனில், ஸ்ரீல பிரபுபாதர் உண்மையில் ஒரு சில தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வரை தீக்ஷை வழங்கும் ஒரு சம்பிரதாய ஆச்சாரியராக செயல்பட கீர்த்தனானந்தாவிற்கு அங்கீகாரம் வழங்கினார் என்பது.
அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியின் வழிகாட்டுதலை பின்பற்றி பகவான் சைதன்யரின் உத்தரவை பின்பற்றும் எவரும் ஆன்மீக குருவாக முடியும் என்பதனால், நான் இல்லாத நிலையில் எனது சீடர்கள் அனைவரும் கிருஷ்ண உணர்வை உலகம் முழுவதும் பரப்புவதற்கு ஆன்மீக குருவாக மாறவேண்டும் என விரும்புகிறேன்.
(ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள் மதுசூதனாவுக்கு எழுதிய கடிதம், 02/11/1967)
மேலே உள்ள மேற்கோளை பயன்படுத்தி, ஸ்ரீல பிரபுபாதர் தான் இல்லாத நிலையில் தனது சீடர்கள் ஆன்மீக குருக்களாக மாற வேண்டும் என குறிப்பிடுவதாலும், ஏற்கனவே அவர்கள் சிக்ஷா குருக்களாக இருப்பதன் காரணத்தினாலும், அவர் தீக்ஷாவை குருவைத்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று வாதிடப்படுகிறது. ஆயினும் ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர்கள் அனைவரையும் சிறந்த ஆன்மீக சிக்ஷா குருக்களாக மாறவும் தான் இல்லாத வேளையில் தொடர்ந்து நல்ல ஆன்மீக சிக்ஷா குருக்களாக இருக்கவும் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் அவர்கள் அவர் இல்லாத தருணத்தில் அவரின் சீடர்கள், தங்களுக்கென்று சீடர்களை தீக்ஷை அளித்து ஏற்றுக் கொள்வதை மேற்கண்ட மேற்கோளில் நிச்சயமாக குறிப்பிடப்படவில்லை. உலகெங்கிலும் கிருஷ்ண உணர்வை பரப்புவதற்கான நல்ல ஆன்மீக குருக்கள் என்ற சொல் ஒரு சிக்ஷா குருவுக்கும் சமமாக பொருந்தும்.
இதுபோன்ற கடிதங்கள் வேறு சில வகையான குரு அமைப்பை குறிக்கின்றன என்றாலும் ஜூலை 9-ஆம் தேதியன்று இறுதியாக கொடுக்கப்பட்ட வழிமுறையை மாற்றுவதற்கு அவற்றைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் மேற்கண்ட அந்த உபதேசங்கள் இயக்கத்திலுள்ள மற்ற அனைவருக்கும் மீண்டும் மீண்டும் கூறப்படவில்லை. அந்த கேள்விக்குரிய கடிதங்கள் 1986 வரை கூட வெளியிடப்படவில்லை. இந்த தனிப்பட்ட கடிதங்கள் இயக்கத்தின் மற்ற சில உறுப்பினர்களுக்கு மிக அரிதாக வெளிவந்ததாக கூறப்படுகிறது. இது நிகழ்ந்திருக்கலாம் அல்லது இல்லாது இருக்கலாம். ஆனால் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் அத்தகைய விநியோகத்தின் செயல்முறையானது ஒருபோதும் ஸ்ரீல பிரபுபாதரால் அமைக்கப்பட்டதாகவோ அல்லது தனிப்பட்ட முறையில் அங்கீகரிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. தனது தனிப்பட்ட கடிதத்தை அனைவருக்கும் விநியோகிக்குமாரு உத்தரவிட்டது போன்ற எந்த ஆதாரத்தையும் நாம் காணவும் இல்லை. நேரம் இருந்தால் தனது கடிதங்களை வெளியிடலாம் என்று அவர் ஒருமுறை பரிந்துரைத்தார். ஆனால் இந்த ஆவணங்கள் இல்லாமல் M.A.S.S ஐ எவ்வாறு சரியாக இயக்குவது என்று யாருக்கும் தெரியாது என்று அவர் ஒருபோதும் தெரிவிக்கவில்லை.
1977-இல் என்ன செய்யப்பட வேண்டும் என்பது குறித்து ஒரு வழக்கை உருவாக்க, அந்த நேரத்தில் அங்கீகரிக்கப்பட்ட வடிவத்தில் உடனடியாகக் கிடைத்த ஆதாரங்களை மட்டுமே ஒருவர் பயன்படுத்த முடியும். அத்தகைய கடிதங்களில் பத்தாயிரம் ஆண்டுகள் வரை இயக்கம் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதற்கான திறவுகோலை வைத்திருந்தால் அதனை நிச்சயமாக ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள் புத்தக வெளியீடாக மக்கள் மத்தியில் மிகுந்த அவசர நிலையை கருதி விநியோகம் செய்திருப்பார். எல்லாவற்றிற்கும் மேலாக தலைவர்களாக செயல்படும் அவரது சீடர்கள் அனைவரும் அவரது தனிப்பட்ட கடிதங்களை படிக்கவில்லை என்பதற்கான நியாயமான சாத்தியக் கூறுகள் இருந்தது. இதன் விளைவாக ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்குப் பிறகு, தீக்ஷை முறையினை எவ்வாறு இயக்குவது என்பது பற்றிய தெளிவான புரிதலை பெறவில்லை. மே 28, 1977 அன்றும் அதற்குப் பிறகும் ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள் என்ன திட்டமிடுகிறார் என்பது முழு ஜிபிசிக்கும் இன்னும் தெரியாமல் இருந்தது. நமக்குத் தெரிந்து ஒரு சாத்தியக் கூறுக்கும் அதிகமாக இருப்பதனால், மே 28, 1977 க்குப் பிறகு ஸ்ரீல பிரபுபாதர் எவ்விதமாக திட்டமிடுகிறார் என GBC க்கு எதுவுமே தெரியாது. (தயவுசெய்து மே 28 உரையாடலை பிற்சேர்க்கை, ப.166 இல் காண்க)
மேற்கூறியவற்றை வெளிச்சம் போட்டு காண்கையில், இந்த சில கடிதங்களின் அடிப்படையில் ஜூலை 9-ஆம் தேதி சட்டத்தை மாற்றுவதற்கான எந்த ஒரு முயற்சியும் பொருத்தமற்றதாகவே இருக்கும். அத்தகைய கடிதங்கள் அவரது இறுதி உத்தரவுக்குக் முக்கிய பின் இணைப்புகளாக இருந்திருந்தால், ஸ்ரீல பிரபுபாதர் நிச்சயமாக அக்கடிதத்திலோ அல்லது அதனுடன் இணைந்த சில ஆவணத்திலோ அதை தெளிவுபடுத்தியிருப்பார்.
முடிவாக, இயக்கத்தில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், தீக்ஷை விவகாரத்தைப் பொறுத்தவரை, வழங்கப்பட்ட ஒரே நிலைப்பாடு ஆச்சாரியரின் பிரதிநிதிகளாக ரித்விக்குகளாக இருப்பதேயாகும்.
இறுதியாக நாம் வகை 3 ஐப் பார்ப்போம்
ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் மற்றும் உபன்யாசங்களில் பல்வேறு அறிக்கைகள் வைத்து ரித்விக் அமைப்பைக் கலைப்பதை நியாயப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆதாரத்தைப் பற்றி இப்போது நாம் ஆராய்வோம்.
ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களில், தீக்ஷை குருவின் தகுதிகளை பற்றி பொதுவாக கூறப்பட்ட அறிக்கைகளை நாம் காண்கிறோம். அவரது சொந்த சீடர்கள், தீக்ஷை குருக்களாக மாறி தொடர வேண்டும் என்பதற்கான குறிப்பிட்ட குறிப்புகள் எதுவும் இல்லை. மாறாக, மேற்கோள்கள் வெறுமனே ஒருவர் தகுதி மற்றும் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன.
“இப்போது சீடராக இருப்பவர் அடுத்த ஆன்மிக குரு. ஒருவர் தனது ஆன்மீக குருவிற்கு சிரத்தையாக கீழ்படிந்தாலொழிய, ஒரு நேர்மையான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருக்களாக இருக்க முடியாது.”
(ஸ்ரீமத் பாகவதம் 2.9.43 பொருளுரை)
மேற்கண்ட உபதேஷம் தங்கள் குரு இவ்வுலகை விட்டு வெளியேறிய காரணத்தினால் யார்வேண்டுமானாலும் தீக்ஷை அளித்து சீடர்களை உருவாக்க முழு உரிமையை கொடுப்பதாக தெரியவில்லை. குரு இவ்வுலகை விட்டு வெளியேறுவது என்ற கருத்தே இங்கே குறிப்பிடப்படவில்லை. இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஒரே கருத்து என்னவெனில் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் நிச்சயம் கீழ்ப்படிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே. அவர்கள் முதலில் மஹா-பாகவதத்தின் தளத்தை அடைந்திருக்க வேண்டும் என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.
சில பக்தர்கள் மற்ற கிரகங்களுக்கு எளிமையான பயணம் (Easy Journey to Other Planets) என்ற புத்தகத்தில் பக்கம் 32-ல் உள்ள பகுதியை மேற்கோள்காட்டி, "மேற்பார்வையிடும் குருக்களை" பின்பற்றுவதை குறிப்பிட்டு, M.A.S.S க்கு ஆதரவாகவும் ரித்விக் அமைப்பினை கலைப்பதற்கும் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் பின்வரும் இந்த புத்திசாலித்தனமான வகுப்பறை ஒப்புமை சிக்ஷா குருவின் நிலையை தெளிவாக வரையறுக்கிறது, தீக்ஷா குருவை அல்ல. இந்த பத்தியில் மேற்பார்வையிடுபவர் ஆசிரியரின் சார்பாக செயல்படுவார். ஆனால், அவரே ஓர் ஆசிரியராக அல்ல. அவர் ஒரு ஆசிரியராக மாற தகுதி பெறக்கூடும். ஆனால் அதற்கென்று ஓர் வழிமுறை இருக்கின்றது. வெறுமனே தாமாக தன் ஆசிரியர்(இங்கே ஆசிரியர் என்பது தீக்ஷா குருவை குறிப்பிடுகிறது) இவ்வுலகை விட்டு நீங்கிய பிறகு அல்ல. மேற்பார்வையிடும் குருவுக்கான வரையறையின்படி, அவர் சில சிக்ஷா சீடர்களையும் மற்றும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரையிலான சீடர்களையும் கொண்டிருக்கலாம். அத்தகைய மேற்பார்வையிடும் ஒருவர் தகுதிபெற்றவுடன் அதாவது மஹா பாகவதத்தின் தளத்தை அடைந்த பின்னர் அவரது முந்தைய ஆச்சாரியரால் அங்கீகரிக்கப்படுவார். அதன்பின்னர், அவரை மேலும் மேற்பார்வையிடுபவர் என்று அழைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர் தனது சொந்த உரிமையில் ஆசிரியராக இருப்பார். அவர் தனது சொந்த உரிமையில் ஆசிரியராக மாறியவுடன் அவர் எண்ணற்ற சீடர்களை ஏற்றுக்கொள்ளலாம். எனவே மேற்பார்வையிடுபவர் சிக்ஷா குரு என்றும், ஆசிரியரானவர் தீக்ஷா குரு என்றும் அறியப்பட வேண்டும். சடங்கு முறையிலான அங்கீகாரம் பெறுவதற்கு முன்பே, தீக்ஷா குருவை சிரத்தையாகப் பின்பற்றுவதன் மூலம் சிக்ஷா குருவானவர் படிப்படியாக தீக்ஷா குருவாக மாறத் தேவையான தளத்திற்கு உயர்வார். மேலும் ஆசிரியர் இருக்கும்போது மேற்பார்வையிடுபவர் ஆசிரியருக்கு உதவுவதற்காக இருக்கிறார். இது மீண்டும் குரு சீட முறைக்கான சட்டத்தை சற்று மாறுபடுத்தி M.A.S.S. ஐ ஆதரிக்க தவறாக பயன்படுத்தப்படுத்தி மேற்பார்வையிடுபவரை உண்மையான தீக்ஷை குருவாக எடுத்துக்கொள்ளலாம். வேறுவிதமாகக் கூறினால், மேற்பார்வையிடுபவர் என்பவர் ஆசிரியரை மாற்றுவதற்கோ அல்லது ஆசிரியரின் வாரிசுதாரராக மாறவோ அமைக்கப்பட்ட முறை அல்ல. ஆனால் ஆசிரியருக்கு உதவியாகவும் அல்லது அவருடன் சேர்ந்து இயங்கவும் உள்ளது.
நிச்சயமாக மேற்பார்வையிடும் அமைப்பானது எந்த வகையிலும் ஜிபிசியின் அ) & ஆ) அனுமானங்களை ஆதரிக்கவில்லை: அதாவது ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்குப் பிறகு ரித்விக் அமைப்பினை நிறுத்த வேண்டும் மற்றும் ரித்விக்குகள் தாமாகவே தீக்ஷை குருக்களாக மாறக்கூடும் என்பவை.
ஸ்ரீல பிரபுபாதரின் தனிப்பட்ட கடிதங்களுக்கு அப்பாற்பட்டு வேறு சில சந்தர்ப்பங்களும் உள்ளன. அவை அவருடைய சீடர்களுக்கும் தீக்ஷா குருக்களாக மாறுவதற்கு அங்கீகாரம் அளிப்பதாக மேற்கோள் காட்டப்படுகின்றன:
"இப்போது பத்தாவது, பதினொன்றாவது, பன்னிரெண்டாவது... என் குரு மஹாராஜர் சைதன்ய மஹாபிரபுவிலிருந்து பத்தாவது, நான் பதினொன்றாவது, நீ பன்னிரெண்டாவது. எனவே இந்த அறிவை விநியோகிங்கள்"
(ஸ்ரீல பிரபுபாதர் உபன்யாசம்,18/05/1972, லாஸ் ஏஞ்சல்ஸ்)
"அதே சமயத்தில், அவர்கள் அனைவரையும் ஆன்மீக குருவாக மாற நான் வேண்டுகிறேன். அடுத்தாவதாக நீங்கள் ஒவ்வொருவரும் ஆன்மீக குருவாக இருக்க வேண்டும்.”
( ஸ்ரீல பிரபுபாதர் வியாசபூஜை உபன்யாசம், 05/09/1969, ஹாம்பரக்)
முதல் மேற்கோளில், “நீங்கள் பன்னிரெண்டாவது” என்று தெளிவாக குறிப்பிடுவதனால், ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்கள் ஏற்கனவே பன்னிரெண்டாவதாக ஆகிவிட்டனர். இது எதிர்காலத்தில் அவர்கள் தீக்ஷை குருக்களாக மாறுவதற்கான ஏதோவொரு அங்கீகாரமும் அல்ல, மாறாக அவர்கள் ஏற்கனவே பரம்பரையின் செய்தியினை முன்னெடுத்துச் செல்கின்றனர் என்ற அறிக்கையை மட்டுமே உணர்த்துகிறது. இரண்டாவது மேற்கோளும் இதே போன்ற தளத்தில்தான் அமைந்துள்ளது. அவருடைய சீடர்கள் அடுத்த வரிசையில் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் முதல் மேற்கோளில் கூறபட்டுள்ளதுபோல் சீடர்களின் தீவிரமான பிரசாரத்தின் மூலம் அந்த பரம்பரைமுறை ஏற்கனவே நடந்தேறிவிட்டது. இவ்விரண்டு வகையிலும் சீடர்களை ஏற்றுக்கொள்ள தெளிவான வெளிப்படையான உத்தரவு இல்லை. மாறாக வெறுமனே பிரசாரம் செய்ய வேண்டும். வெறுமனே அடுத்த ஆன்மீக குருக்களாக மாற அவர்தம் சீடர்களைக் கேட்டுக் கொண்டதால் அவர்கள் அடுத்த தீக்ஷை அளிக்கும் ஆன்மீக குருக்களாக மாற வேண்டும் என்று அவர் விரும்பினார் என்று அர்த்தமல்ல. அவர் அவ்வாறுதான் கூறினார் என்று அர்த்தம் கொண்டால் அது மனக்கற்பனையே. உண்மையில், அவரது சீடர்கள் ஆச்சாரியரின் பிரதிநிதிகளாக மட்டுமே செயல்பட வேண்டும் என்பதை இறுதி கட்டளையில் தெளிவுபடுத்தியதால் அது தவறு என்பது நமக்குத் தெரியும், அது எந்த வகையான தீக்ஷையை அளிக்கும் அல்லது தீக்ஷை தளத்தையும் சார்ந்தும் இல்லை.
அத்தகைய அறிக்கைகளைக் கொண்டு இறுதி உத்தரவை மாற்றியமைக்க வேண்டும் என்று வாதிடுவதை ஆதரிக்க முடியாதது மேலும் ஸ்ரீல பிரபுபாதரின் பிற அறிக்கைகளை மேற்கோள்காட்டுவதன் மூலம் எளிதில் முறியடிக்க முடியும். அதிலும் குறிப்பாக அவர் மறைந்த பின்னர் என்ன நடக்கும் என்று குறிப்பிட்டது தொடர்பானவை அவரால் முன்பு கூறப்பட்ட வாக்குகளுக்கு முற்றிலும் முரணானது:
நிருபர்: "நீங்கள் இறக்கும்போது அமெரிக்காவில் இருக்கும்
இயக்கத்திற்கு என்ன நடக்கும்? "
ஸ்ரீல பிரபுபாதர்: "நான் ஒருபோதும் இறக்க மாட்டேன்"
பக்தர்கள்: "ஜெய! ஹரிபோல்!" (சிரிப்பொலி)
ஸ்ரீல பிரபுபாதர்: “நான் என் புத்தகங்களில் வாழ்வேன். நீங்கள் பயன்படுத்திக்
கொள்வீர்கள்”
( ஸ்ரீல பிரபுபாதர் பத்திரிக்கையாளர் சந்திப்பு, 16/07/1975, சான் பிரான்சிஸ்கோ)
ஸ்ரீல பிரபுபாதர் தனது திட்டங்களை M.A.S.S க்குகாக வகுக்கும் எண்ணம் இருந்திருந்தால் இங்கே ஒரு தெளிவான வாய்ப்பு இருந்தது. ஆனால் அவருடைய சீடர்கள் அவருக்கு பின் தீக்ஷை குருக்களாக இருந்து வருவார்கள் என்று கூறுவதற்கு பதிலாக, ‘தான் ஒருபோதும் இறக்க மாட்டேன்’ என்றும் அவர்தம் புத்தகங்கள் தேவையானதை செய்யும் என்றும் கூறி இருக்கிறார். மேற்கண்ட பரிமாற்றத்திலிருந்து புரிந்து கொள்ளும் செய்தி என்னவெனில், ஸ்ரீல பிரபுபாதர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆன்மீக குரு ஆவார். அவர் தனது புத்தகங்கள் மூலம் ஆன்மீக அறிவை, (அதிலும் குறிப்பாக, தீக்ஷா குருவாக இருந்து) தொடர்ந்து அளித்தும் வருகிறார்; மேலும் இஸ்கான் இருக்கும் வரை இது தொடரும். அவரது சீடர்களின் பங்கு இந்த செயல்முறைக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்வதேயாகும்.
பக்குவமடையாத ஆச்சாரியராக ஆகாதீர்கள். முதலில் ஆச்சாரியரின் கட்டளைகளை பின்பற்றி நீங்கள் பக்குவம் அடையுங்கள். அதன்பின் ஆச்சரியமாக மாறுவது நல்லது. ஆச்சாரியர்களை உருவாக்குவதில் நாம் ஆர்வமாகத்தான் உள்ளோம். ஆனால் தகுந்த முறை என்னவென்றால் குறைந்தபட்சம் குரு இருக்கும் காலம் வரை ஒருவர் ஆச்சாரியராக மாறக்கூடாது. அவர் முழுமைஅடைந்திருந்தாலும் அவ்வாறு செய்யக் கூடாது, ஏனென்றால் அதுவே பண்பாடு. யாரேனும் ஒருவர் தீக்ஷை பெற வந்தால் அவ்வாறு விண்ணப்பிக்கும் அந்த முன்னேறும் நபரை தனது ஆச்சாரியரிடம் அழைத்து வருவது அத்தகைய நபரின் கடமையாகும்.
( ஸ்ரீல பிரபுபாதர் சைதன்ய சரிதாம்ருத உபன்யாசம், 06/04/1975, மாயாபூர்)
மேலே உள்ள மேற்கோளின்படி, அவரது சீடர்கள் ஆச்சாரியராக மாற தேவையான கோட்பாடுகளை குறிப்பிடுகிறது. ஆனால் மொத்தமாக வலியுறுத்துவது என்னவெனில் அவர்கள் இப்போது அதனை செய்யக் கூடாது. உண்மையில் ஸ்ரீல பிரபுபாதர் தன் சீடர்களிடம் ஆச்சாரியராக மாறத் தேவையான கோட்பாட்டினை குறிப்பிடுகிறார். வெறுமனே அவர் வீற்றிருக்கும்போது மட்டும் குருவாக மாறக்கூடாது என்று எச்சரிப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. இது மேலே குறிப்பிட்டுள்ள தனிப்பட்ட கடிதங்களுடன் ஒத்துப் போவதாகும். இது எந்த ஒரு குறிப்பிட்ட நபர்களும் தனக்கென்று சீடர்களை ஏற்றுக் கொள்வதற்கான ஒரு குறிப்பிட்ட உத்தரவும் அல்ல. மாறாக ஒரு பொதுவான கொள்கை அறிக்கையாகும். M.A.S.S க்கான கொள்கை ஆதாரமாக GII-(Gurus And Initiation In ISKCON) இஸ்கானில் குரு மற்றும் தீக்ஷை கொள்கை)-இல் பயன்படுத்தப்படும் "நியமன ஒலிநாடா" "APPOINTMENT TAPE"(பக்கம் - 33 ) இல் பின்னர் காணப்படுகிறது. ஆனால் ஸ்ரீல பிரபுபாதர் மே-1977-களின் பிற்பகுதியில் கூட தீக்ஷை குருவாக இவர்கள் மாறுவதற்கான உத்தரவை வழங்கவில்லை என்பது தெளிவாக குறிப்பிடுகிறது. ( "எனது உத்தரவின் பேரில்[…] ஆனால் என்னுடைய உத்தரவின்படி[...], நான் கட்டளை அளிக்கும்போது "). மற்றும் அவர் மறையும் வரை இந்த நிலை மாறாமல் இருந்தது. மேலும் அதேசமயத்தில் தனது உபன்யாசத்தில், ஆச்சாரியராகும் இலட்சியங்களை முன்கொண்டு செல்ல அவர் தனது சீடர்களை கீழ்கண்டவாறு ஊக்குவிக்கிறார்:
"மேலும் ஆச்சாரியராக மாறுவது மிகவும் கடினம் அல்ல.[...]. ஆமார ஆக்ஞா குரு ஹோய் தார ஏய் தேஷ், யாரே தேக தாரே கஹ ‘கிருஷ்ண’-உபதேஷ: "எனது உத்தரவை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் குருவாகுங்கள்.” [...] பின்னர், எதிர்காலத்தில்… ஒருவேளை உங்களுக்கு இப்போது பத்தாயிரம் பேர் கிடைத்துவிட்டனர் என்று வைத்துக்கொள்வோம். அதனை நாம் லட்சமாக விரிவாக்க வேண்டும். பின்னர் அதனை மில்லியனாகவும் மற்றும் மில்லியனை கோடியாகவும் ஆக்கவும்”.
(ஸ்ரீல பிரபுபாதர் சைதன்ய சரிதாம்ருதம் உபன்யாசம், 06/04/1975, மாயாப்பூர்)
எல்லோரும் தீவிரமாக பிரச்சாரம் செய்ய வேண்டும், பெருமளவில் கிருஷ்ண உணர்வினை பின்தொடர்பவர்களை உருவாக்க வேண்டும், ஆனால் சீடர்களை ஏற்கக் கூடாது என்ற பகவான் சைதன்யரின் உபதேஷம் என்பது ஏற்கனவே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்த மீண்டும் வலியுறுத்திக்கூறும் விஷயம் என்னவென்றால் ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர்களிடம் இன்னும் பல பக்தர்களை உருவாக்க ஊக்குவிக்கிறார். இங்கே ஸ்ரீல பிரபுபாதர் கூறும் முக்கியமான விஷயம் “உங்களுக்கு இப்போது பத்தாயிரம் கிடைத்துவிட்டனர் என்று வைத்துக்கொள்வோம்…” ( இவ்வாறு கூறுவது ஸ்ரீல பிரபுபாதர் வீற்றிருக்கும்போது..) என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் பேசுவது கிருஷ்ணர் உணர்வினை பின்பற்றுபவர்களை பற்றியது "அவருடைய சீடர்களின் சீடர்களை" அல்ல. ஏனெனில் உபன்யாசத்தின் முக்கிய அம்சம் அவர் இருக்கும்போது அவர்கள் தீக்ஷை அளிக்கக் கூடாது என்பதே. அந்த நேரத்தில் கிருஷ்ண உணர்வை பின்தொடர்பவர்கள் பத்தாயிரம் இருந்திருக்கலாம், எதிர்காலத்தில் இன்னும் மில்லியன் கணக்கில் சேருவார்கள். ரித்விக் அமைப்பு உறுதி செய்வது என்னவெனில், இதனை பின்பற்றுபவர்கள் தீக்ஷை எடுத்துக்கொள்ள தகுந்த தகுதியுடையவர்களாக ஆகும்போது, எவ்வாறு மேற்கண்ட உபன்யாசம் கொடுத்துக்கொண்டிருக்கும் போது சாத்தியமானதோ அவ்வாறே அவர்கள் ஸ்ரீல பிரபுபாதரிடமிருந்து தீக்ஷை பெற முடியும்.
முடிவாக:
ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர்கள் தீக்ஷை குருக்களாக மாற குறிப்பிட்ட உத்தரவுகளை வழங்கியதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஆகவே ரித்விக் அமைப்பை மட்டுமே மாற்றாக அமைத்தார்.
(அந்த சமயத்தில்) அவர்களிடம் இருந்தது ஒரு சில வெளியிடப்படாத தனிப்பட்ட கடிதங்கள் மட்டுமே. அதைக்கொண்டு ஸ்ரீல பிரபுபாதர் இருக்கும்போதே அவர் முன்னிலையில் தீக்ஷை குருக்களாக மாற விரும்பும் நபர்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக சமீபத்தில் இயக்கத்தில் சேர்ந்த நபர்களுக்கும் அனுப்பப்பட்டது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் சுயவிருப்பங்களை நிறைவேற்ற வேண்டுமெனில் ஸ்ரீல பிரபுபாதரின் மறைவு வரை காத்திருக்குமாறு கூறப்பட்டது. முக்கியமான உண்மை என்னவெனில் ஜூலை 9-ஆம் தேதி கடிதத்தின்போது அவை வெளியிடப்படவில்லை என்பதே. இதன் பொருள் என்னவெனில் இஸ்கானுக்குள் எதிர்கால தீக்ஷை குறித்து அவர்கள் எந்த ஒரு நேரடி நோக்கத்தையும் கொண்டிருக்க விரும்பவில்லை என்பதாகும்.
மேலும், ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் மற்றும் உரையாடல்களில் அவரது சீடர்கள் சிக்ஷா குருக்களாக இருக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் மட்டுமே உள்ளன. ஒரு சீடர் தீக்ஷா குருவாக மாற பொதுவான கொள்கை குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர்கள் தீக்ஷை அளித்து, அவர்களுக்கென்று சீடர்களை ஏற்க குறிப்பாக கட்டளையிடவில்லை.
மேற்கண்ட மேற்கோள்கள் எந்த வகையிலும் மொத்த இயக்கத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கொள்கை ஆவணமாக விநியோகிக்கப்பட்ட ஜூலை 9-ஆம் தேதி கடிதத்திற்கு வெளிப்படையான துணைக்கடிதமாக அமையவில்லை. M.A.S.S-ஐ ஆதரிக்கும்படி காட்டும் சமமான ஆவணம் எதுவும் தெளிவாக இல்லை.
எனவே விஷயம் என்னவெனில், அவரது சீடர்கள் அனைவருமே அவர் மறைந்தவுடனேயே, அல்லது பின்னர் அல்லது எப்போதாவது தீக்ஷா குருக்களாக மாறவேண்டும் என்ற ஸ்ரீல பிரபுபாதர் பரவலாகக் கூறியிருந்தார் என்று கூறுவது வேறொன்றும் அல்ல, அது ஒரு கட்டுக்கதையே.
தனது புத்தகங்கள், கடிதங்கள், சொற்பொழிவுகள் மற்றும் உரையாடல்களில் ஏற்கனவே எதிர்காலத்தில் தீக்ஷையை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று மீண்டும் மீண்டும் விளக்கம் அளித்திருந்ததால் ஜூலை 9-ஆம் தேதி கடிதத்தில் ஸ்ரீல பிரபுபாதர் சொல்லத் தேவையில்லை என்று பொதுவாகக் கூறுவது முற்றிலும் பொய்யே. அது மேலும் கீழ்கண்ட குழப்பங்களுக்கு வழிவகுக்கிறது:
● ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள் இல்லாத நிலையில் அவர் தீக்ஷை வழிமுறையினை எவ்வாறு தொடர விரும்பினார் என்பது குறித்த முந்தைய போதனைகள் உண்மையிலேயே மிகவும் தெளிவாக இருந்திருந்தால், எதனால் GBC-யானது அவர் படுத்த படுக்கையாய் இருந்த போது முதல் காரியமாக, ஒரு ஒரு சிறப்புக் குழுவை அனுப்பி கேள்விகளை முன்வைக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? குறிப்பாக அவர் அவர்களுடன் இல்லாத நேரத்தில் தீக்ஷை விஷயத்தை எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே GBC அவ்வாறு முடிவை எடுத்தது. (தயவுசெய்து, நியமன ஒலிநாடா பக்கம் 33 ஐ பார்க்கவும்) ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்து இவ்வுலகை விட்டு மறையவிருந்த தருணத்தில் அங்கே அவரது மிக மூத்த சீடர்கள் அவரிடம் மிகவும் அடிப்படையான கேள்வியை கேட்கிறார்கள். அதற்கு அவர் முந்தைய ஆண்டுகளில் ஏற்கனவே பலமுறை பதில் அளித்திருக்கிறார்.
● ஸ்ரீல பிரபுபாதர் M.A.S.S அமைப்பைப் பற்றி தெளிவாகக் கூறியிருந்தால், அதை எவ்வாறு அமைப்பது என்பது குறித்த சிறிய உபதேசம் கூட கொடுக்காமல் அவர் ஏன் விட்டுவிட்டார்? அதனால் தானே அவர் இவ்வுலகை விட்டு வெளியேறிய குறுகிய காலத்திலேயே அவரது மிக மூத்த சீடர்கள் அதை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து கௌடிய மடத்தை சேர்ந்த ஸ்ரீதர் மஹாராஜரிடம் கேள்விகேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
● குறிப்பாக ஸ்ரீல பிரபுபாதர் அனைவரும் தீக்ஷா குருவாக மாற வேண்டும் என்று விரும்பினார் என்பது உண்மையிலேயே அனைவருக்கும் தெளிவாக இருந்திருந்தால், பின்னர் ஏன் ஜிபிசி தீக்ஷை குரு முறையினை கட்டுப்படுத்தும் மண்டல ஆச்சாரிய அமைப்பை அமைத்து கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் வரை அதனை இயக்க அனுமதித்தது?.
ஜிபிசியின் அறிக்கை ஆவணமான GII-யானது பெரும்பாலும் முரண்பாடாக இருந்தாலும், இந்தப் பிரச்சனை தொடர்பாக ஒரு பத்தியில் உள்ள ஒரு விஷயம் நம்மை ஸ்ரீல பிரபுபாதரின் குடும்பத்துடன் ஒன்றிணைக்கும் என்ற நம்பிக்கை மனோநிலையை ஏற்படுத்தும் படியாக உணர வைக்கிறது:
"ஒரு சீடனின் ஒரே கடமை தன்னுடைய ஆன்மீக குருவை வணங்குவதும் அவருக்கு சேவை செய்வதுமாகும். தான் எப்படி ஒரு குருவாக மாற முடியும் என்று அவரது மனம் கிளர்ந்தெழக் கூடாது. ஆன்மீக முன்னேற்றத்தை உண்மையாக விரும்பும் ஒரு பக்தர் ஒரு ஆன்மீக குருவாக இல்லாமல் சீடராக மாற முயற்சிக்க வேண்டும்.”
(GII- பக்கம்-25, ஜிபிசி 1995, வலியுறுத்தல்கள் சேர்க்கப்பட்டது)
இதற்கு மேல் நம்மால் ஒப்புக்கொள்ள முடியாது
* (1) 1990 இல் ஜிபிசியின் இஸ்கான் பத்திரிக்கையில், அஜாமிளா தாஸாவின் "ரெகுலர் அல்லது ரித்விக்" தாளில் இந்த விளக்கம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
* (2) மேலே குறிப்பிட்டுள்ள பெரும்பாலான பக்தர்கள் தங்கள் தவறுகளை அங்கீகரித்து இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதனால் நாம் ஏதேனும் ஒரு குற்றமோ அல்லது சங்கடமோ என ஏற்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். உண்மையில் ஸ்ரீல பிரபுபாதர் தனிப்பட்ட முறையில் அனுப்பிய கடிதங்கள் அவரவர்களின் தனிப்பட்ட அனர்த்தங்களை குறிப்பிட்டு காட்டுவதற்காக அனுப்பப்பட்டது. ஆனால் அவைகள் தற்போது M.A.S.S-ஐ ஆதரிக்க பயன்படுத்தப்படுகின்றன என்பது இஸ்கானுக்குள் பாராட்டக்கூடும்.
|
8. “குரு மற்றும் சீடர் ஒரே இடத்தில் இல்லாத நிலையில் தீக்ஷை வழங்குவதை தடை செய்யும் வகையிலான சில சாஸ்திர ரீதியிலான கொள்கைகள் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களில் இருந்திருக்கலாமே ?. |
ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களில் அத்தகைய அறிக்கை எதுவும் இல்லை. ஏனெனில் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களில் அனைத்து அத்தியாவசிய கொள்கைகளை மட்டும் கொண்டிருப்பதால் வெறுமனே அப்படியொரு தடையானது நமது தத்துவத்தில் இருக்க முடியாது.
ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்குப் பிறகு ரித்விக் முறையை பயன்படுத்துவது என்பது உண்மையில் குரு மற்றும் சீடர் இவர்களின் நேரடியான தொடர்பில் இருக்கமுடியாத சாத்தியகூறுகளில் எவ்வாறு செயல்படுத்தலாம் என்ற ஸ்ரீல பிரபுபாதரின் பல உபதேசங்களுடன் ஒத்துப் போகிறது. (தயவு செய்து பின் இணைப்புகளை பார்க்கவும்). இந்த மேற்கோள்களைப் படித்த பிறகு, ஜிபிசியின் சில உறுப்பினர்கள் எவ்வாறு பல ஆண்டுகளாக சற்றே மாறுபட்ட கருத்துக்களை வழங்கியுள்ளனர் என்பதை காணலாம்:
"குருசீட பரம்பரை என்பது ஒரு உயிரோட்டமுள்ள நடைமுறை என்று ஸ்ரீல பிரபுபாதர் நமக்கு கற்பித்திருக்கிறார்[...] குருசீட பரம்பரையின் சட்டம் என்னவென்றால், ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு ஆன்மீக குருவை அணுகுவதாகும். வாழ்ந்துகொண்டிருப்பது என்பது உடல்ரீதியாக இருப்பது.
(ஷிவராம ஸ்வாமி, இஸ்கான் பத்திரிகை பக்கம் 31, ஜிபிசி 1990)
மேற்கண்டகூற்றை ஸ்ரீல பிரபுபாதரின் கீழ்கண்ட அறிக்கைகளுடன் ஒப்புமைபடுத்துவது கடினமாக இருக்கிறது.
"உடல் ரீதியாக இருப்பது முக்கியமல்ல"
( ஸ்ரீல பிரபுபாதர் அறை உரையாடல், 06/10/1977, vandhavana)
"உடல்ரீதியாக இருப்பது என்பது உலகாயதமானதல்ல"
(ஸ்ரீல பிரபுபாதரின் கடிதம், 19/01/1967)
நிச்சயமாக நாம் ஒரு வெளிப்படையான குருவை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். ஏனென்றால் கட்டுண்ட நிலையில் பரமாத்மாவை தூய உள்ளத்தோடு சார்ந்திருப்பது என்பது சாத்தியமில்லை, ஆனால் இங்கு ஸ்ரீல பிரபுபாதர் நமக்கு கற்றுக்கொடுப்பது என்னவென்றால், இந்த விதமான உடல்ரீதியான குரு என்பவர் கண்டிப்பாக உடல் ரீதியாக இருக்க வேண்டும்:
"எனவே நாம் வாணி(உபதேசத்தை)-ஐப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
உடல்ரீதியிலான இருப்பை அல்ல".
(சைதன்ய சரிதாம்ருதம் அந்த்ய லீலை, முடிவான வார்த்தைகள்)
ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர்களை நேரடியாக சந்திக்காமலேயே ஏராளமான சீடர்களுக்கு தீக்ஷை அளித்ததன் மூலம் இந்த கொள்கையை நடைமுறையில் செய்துகாட்டியிருக்கிறார். குருவிடமிருந்து எந்த ஒரு நேரடியான தொடர்பும் இல்லாமல் தீக்ஷையைப் பெறமுடியும் என்பதை இந்த உண்மை நிரூபிக்கிறது. சாஸ்திரத்திலோ, அல்லது ஸ்ரீல பிரபுபாதரிட,மிருந்தோ, தீக்ஷையையும் உடல்ரீதியிலான இருப்பையும் தொடர்புபடுத்தும் விதமாக எதுவுமில்லை. ஆகவே ரித்விக் அமைப்பை தொடர்வது என்பது சாஸ்திரத்துடனும் மற்றும் நமது ஆச்சாரியர் உடல்ரீதியாக இருந்தபோது எடுத்துக்காட்டாக அமைத்ததுடனும் துல்லியமாக ஒத்துப்போகிறது.
ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களில் தீக்ஷை பற்றிய முக்கிய பிரிவு ஒன்றில் அதைப் பெறுவதற்கான ஒரே தேவை குருவின் ஒப்புதல் மட்டுமே. இந்த ஒப்புதல் உரிமம் முழுமையாக ரித்விக்குகளுக்கு ஒப்படைக்கப்பட்டது.
"எனவே எனக்காக காத்திருக்காமல், எங்கெங்கெல்லாம் அது சரியானது என்று நீங்கள் கருதுகிறீர்களோ… அது சுய பகுத்தறிவைச் சார்ந்ததாகும்"
(ஸ்ரீல பிரபுபாதரின் அறை உரையாடல், 07/07/1977, பிருந்தாவன்)
ஸ்ரீல பிரபுபாதர் நமக்கு உபதேசித்தது என்னவெனில்:
“தீக்ஷை காலத்தைப் பொருத்தவரை அனைத்தும் குருவின் நிலையை சார்ந்ததாகும். சத்-குருவான அந்த அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குரு ஒப்புதல் அளித்தால் பொருத்தமான நேரம் அல்லது இடத்திற்காக காத்திருக்காமல் உடனடியாக தீக்ஷையை கொடுத்துவிட வேண்டும்.”
(சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை, 24.331, பொருளுரை )
தீக்ஷா குரு மற்றும் முன்னேறிக்கொண்டிருக்கும் சீடர் ஆகியோர் நேரடியான தொடர்பில் இருக்க வேண்டும் அல்லது தீக்ஷா குரு தனது ஒப்புதலைக் கொடுக்க உடல்ரீதியாக இவ்வுலகில் இருக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை என்பது முக்கியமாக கவனிக்கத்தக்கது (ஸ்ரீல பிரபுபாதர் இங்கே சத்குரு எனும் வார்த்தையை தீக்ஷா குரு என்ற வார்த்தையுடன் சமன் செய்வது சுவாரஸ்யமானது). ஸ்ரீல பிரபுபாதர் பலமுறை கூறியது என்னவென்றால், அவர் கற்பித்த விதிமுறைகளை வெறுமனே மீண்டும் மீண்டும் கடைப்பிடிப்பதே தீக்ஷை பெற விரும்பும் சீடர்களின் அவசியம் என்பதாகும்:
"இதுவே தீக்ஷைக்கான வழிமுறையாகும். சீடர் இதற்குமேல் பாவச்செயலைச் செய்யமாட்டேன் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். ஆன்மீக குருவின் கட்டளைகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதி அளிக்கிறார். பிறகு ஆன்மீக குரு அவரை கவனித்து, ஆன்மீக தளத்திற்கு உயர்த்துவார்”.
(சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 24.256 பொருளுரை )
பக்தர்: "சடங்குரீதியான தீக்ஷை என்பது எவ்வளவு முக்கியம்"?
ஸ்ரீல பிரபுபாதர்: "சடங்குரீதியான தீக்ஷை என்பது என்பது ஸ்ரீகிருஷ்ணர் மற்றும்
அவரது பிரதிநிதியின் கட்டளைகளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்
கொள்வது அதுவே சடங்குரீதியான தீக்ஷை ஆகும்."
(ஸ்ரீல பிரபுபாதர் உபன்யாசம், 22/02/1973, ஆக்லாந்து)
ஸ்ரீல பிரபுபாதர்: "என் சீடர் யார்? முதலாவதாக அவர் ஒழுக்க விதிமுறைகளை
கண்டிப்பாக பின்பற்றட்டும்"
சீடர்: "ஒருவர் பின்தொடரும் வரை அவர் இருக்கிறார்…."
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியானால் அவர் சரியாக இருக்கிறார்.
(ஸ்ரீல பிரபுபாதரின் "காலை உலா", 13/06/1976, டெட்ராய்ட் )
"...ஒழுக்கம் இல்லாவிட்டால், சீடர் என்ற பேச்சுக்கே இடமில்லை. சீடர் என்றால் ஒழுக்கத்தைப் பின்பற்றுபவர் என்று பொருள்."
(ஸ்ரீல பிரபுபாதரின் "காலை உலா", 08/03/1976, மாயாபூர்)
தீக்ஷை என்ற வார்த்தையின் வரையறை, ஒரு குருவானவர் இவ்வுலகில் உடல்ரீதியாக இருந்தால் மட்டுமே நடைமுறைப்படுத்தக் கூடியதா?
"தீக்ஷா என்ற வழிமுறையின் துணை கொண்டு ஒருவர் தனது ஆன்மீக ஞானத்தை எழுப்பவும், மற்றும் தனது பாவச் செயல்களால் ஏற்படும் அனைத்து எதிர்வினைகளையும் வெல்லவும் முடியும். வெளிப்படுத்தப்பட்ட சாஸ்திரங்களை கற்பதில் நிபுணரான ஒருவர் இந்த செயல்முறையினை தீக்ஷை என்று அறிவார்”.
(சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை,15.108, பொருளுரை )
"தீக்ஷா" வரைபடத்தையும் தயவுசெய்து காண்க, ப-138.
தீக்ஷையின் வரையறையின்படி, குருவும் சீடரும் ஒரே நேரத்தில் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருந்ததால்தான் அது சரியாக வேலை செய்யும் என்று கூறும்படியாக எதுவும இல்லை. மாறாக, குருவின் நேரடியான ஈடுபாடு இல்லாமல் தீக்ஷை வழிமுறையினை பயன்படுத்தப்படலாம் என்பதை ஸ்ரீல பிரபுபாதரின் உபதேசங்களும் தனிப்பட்ட உதாரணங்களும் திட்டவட்டமாக நிரூபிக்கின்றன:
"ஆன்மீக அறிவினைப் பெறுவது என்பது எந்த ஒரு உலகாயத்தமான சூழ்நிலைகளும் ஒருபோதும் தடுக்க முடியாது".
(ஸ்ரீமத் பாகவதம் . 7.7.1, பொருளுரை)
"சப்தத்தை எழுப்புபவர் அங்கே இல்லை என்பதற்காக ஆன்மீக சப்தத்தின் ஆற்றலானது ஒருபோதும் குறைவதில்லை".
(ஸ்ரீமத் பாகவதம் 2.9.8, பொருளுரை )
எனவே தீக்ஷையின் ஒவ்வொரு அங்கங்களும் அதாவது — ஆன்மீக அறிவு, மந்திரத்தைப் பெறுதல் போன்றவை குருவின் நேரடி இருப்பு இல்லாமலேயே அதே ஆற்றலுடன் வழங்க முடியும்.
சுருக்கமாக, குரு இவ்வுலகத்தை விட்டு வெளியேறியவுடன் தீக்ஷை வழங்குவதைத் தடுக்கும் கொள்கை எந்த புத்தகத்திலும் எந்தக் கோட்பாட்டிலும் குறிப்பிடப்படவில்லை என்பதை உறுதியாக காட்டலாம். சில சந்தர்ப்பங்களில் வரலாற்று உதாரணங்களில் ஆட்சேபனை குறிப்பிடப்பட்டிருந்தாலும், வரலாற்று உதாரணங்களை சாஸ்திரக் கொள்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது. வரலாற்று உதாரணங்களானது சாஸ்திரங்களின் கொள்கையைப் நடைமுறைப் படுத்துவதற்கான ஆதாரங்களாக செயல்படக்கூடும். ஆனால், ஒரு வரலாற்று முன்னுதாரணத்தில் ஏதேனும் குறைகள் இருப்பின் அது சாஸ்திரக் கொள்கையை மீறப்பட்டுள்ளது என்பதால் அதைத் துணையாகக் கொண்டு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே நமது தத்துவம் சாஸ்திர விதிமுறைகளை பின்பற்றுவதை அடிப்படையாகக் கொண்டதே தவிர, வரலாற்று மரபை அல்ல. இதுவே இஸ்கானை மற்ற எல்லாவகை கௌடிய வைஷ்ணவ குழுவில் இருந்தும் வேறுபடுத்துகிறது. இந்தியாவில் பலர் செல்வாக்குமிக்க "ஸ்மார்த்த பிராமணர்கள்" பாரம்பரிய பழக்க வழக்கங்களோடு ஸ்ரீல பிரபுபாதரால் வெளிப்படுத்தப்பட்டவைகள் குறைவாக ஒத்துப் போகின்றன என்று கடுமையாக விமர்சிக்கின்றனர்.
சாஸ்திர வாக்கியங்கள், ஸ்ரீல பிரபுபாதரின் நடைமுறை எடுத்துக்காட்டுடன், தீக்ஷை என்பது குருவின் நேரடியான இருப்பை எந்த வகையிலும் சார்ந்தது இல்லை என்ற கொள்கையை முழுமையாக ஆதரிக்கிறது.
|
9. "இந்த உபதேஷமானது, பாரம்பரிய வழிமுறையுடன் ஒத்துப்போகாத காரணத்தாலும், வரலாற்றுப் பின்னணி இல்லை என்பதாலும், அதனை நிராகரிக்க வேண்டும்.” |
ஜூலை 9-ஆம் தேதி உத்தரவை நிராகரிக்க இதை ஒரு காரணமாக காட்ட முடியாது. ஏனெனில் ஸ்ரீல பிரபுபாதர் பல விஷயங்களை மாற்றியமைத்துள்ளார். ஜபங்களின் எண்ணிக்கையை 64-லிருந்து 16-ஆக குறைத்தது; திருமணங்களை செய்வித்தல், கோயில்களில் பெண்கள் வசிக்க அனுமதித்தல், காயத்ரி மந்திரத்தை ஒலிபதிவுநாடா மூலமாக வழங்குதல் முதலியவை. உண்மையில், இது நமது பரம்பரை ஆச்சாரியர்களின் ஒரு தனித்துவமான அம்சமாகும், இது நடைமுறை விதிவிலக்கு இல்லாமல், அவர் தமது வரலாற்று முன்மாதிரியை அமைத்திருக்கிறார். ஓரு ஆச்சாரியர் என்ற முறையில் இதை செய்வது அவர்களின் தனிச்சிறப்பாகும். ஆயினும் அது சாஸ்திரக் கொள்கைகளுடன் முழுமையாக ஒத்துப் போகும். ஏற்கனவே கூறியதுபோல, குருவின் நேரடித் தொடர்பு இப்பூமியில் இல்லாதபோது, ரித்விக் வழிமுறையைப் பின்பற்றுவது எந்த வகையிலும் சாஸ்திரக் கொள்கையை மீறுவதாக ஆகாது. ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களில் அனைத்து சாஸ்திரங்களின் அடிப்படையான கோட்பாடுகளும் சாராம்சமாக உள்ளன. மேலும் அவரது புத்தகங்களில் தீக்ஷை நேரத்தில் குருவின் இருப்பு இப்பூமியில் இருக்க வேண்டும் என்ற எந்தவொரு குறிப்பும் இல்லை. அது ஒரு கொள்கையாக இருக்கவும் முடியாது. ஆகவே, அவரது மறைவிற்குப் பிறகு, ரித்விக்கை தொடர்ந்து இயக்குவது என்பது வரலாற்று பின்னணியின் ஒரு மாறுபட்ட விளக்கமே தவிர, கோட்பாடு அல்ல.
ஸ்ரீல பிரபுபாதர் பல விஷயங்களை செய்துள்ளார், அதிலும் குறிப்பாக தீக்ஷை விஷயத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆயினும் நாம் அவற்றை நிராகரிக்கவில்லை (தயவுசெய்து பக்கம்-83-ல் உள்ள அட்டவணையை காண்க). இந்த மாற்றங்களில் சிலவற்றை அவர் தனது புத்தகங்களில் விளக்கியுள்ளார் என்று சிலர் வாதிடலாம். இது உண்மைதான், ஆனால் அவர் தனது புத்தகங்களில் விளக்காத விஷயங்கள் பல உள்ளன. அது மட்டுமல்லாமல், அவரது புத்தகங்களில் ரித்விக் அமைப்பு பற்றிய விரிவான விளக்கங்களை வழங்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், பல ஆண்டுகளாக அவர், அதன் முன்மாதிரிகளை நடைமுறைபடுத்தி நிரூபித்துள்ளார். ஆகவே ஜூலை 9-ஆம் தேதி கடிதத்தில், இறுதிக் கட்டளையாக, அது எவ்வாறு தொடரப்பட வேண்டும் என்று முழுமையாகத் தெளிவுபடுத்தியுள்ளார். பாரம்பரியத்தை கண்மூடித்தனமாக பின்பற்ற ஸ்ரீல பிரபுபாதர் நமக்கு ஒருபோதும் கற்பிக்கவில்லை:
"நம் ஒரே பாரம்பரியம் விஷ்ணுவை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்பதுதான்"
(ஸ்ரீல பிரபுபாதர் பகவத் கீதை .உபன்யாசம்,30/07/1973, லண்டன்)
"இல்லை. பாரம்பரியம், மதம், அவைகள் அனைத்தும் உலகாயதமானவை. அவைகள் அனைத்தும் அடையாளங்களே"
(ஸ்ரீல பிரபுபாதர் அறை உரையாடல், 13/03/1975, டெஹ்ரான்)
ஸ்ரீல பிரபுபாதரிடமிருந்து நமக்கு கிடைத்த அதே உத்தரவுகளை முந்தைய ஆச்சாரியர்கள் எப்போதாவது வழங்கினார்களா என்று கேட்டால் அது முற்றிலும் பொருத்தமற்ற கேள்வி. நமது ஒரே கடமை நம்முடைய சொந்த ஆச்சாரியர் நமக்கு வழங்கிய கட்டளைகளை பின்பற்றுவதாகும்.
வரலாற்று முன்மாதிரியே இல்லை என்ற அடிப்படையில் மட்டுமே ஒரு தீக்ஷை முறை நிராகரிக்கப்பட வேண்டுமானால், தற்போதைய இஸ்கானுக்குள் இருக்கும் குருமுறையை அதே அடிப்படையின் மூலம் நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இதற்கு முன்னர் எப்போதாவது தீக்ஷா குருக்களின் குழு தங்கள் தீக்ஷை நடவடிக்கைகளை இடைநிறுத்துதலோ அல்லது நிராகரிப்போ செய்தனரா? நம்முடைய பரம்பரையில், எப்போதாவது ஒரு குழுவில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் பெற்றவரை தீக்ஷா குருவாக மாற்றியுள்ளனரா அல்லது மொத்த பாவச் செயலுக்கு இரையாகிவிட்டு, அதன் விளைவாக “குரு சீட பரம்பரையிலிருந்து” தங்களை அவசர அவசரமாக விலக்கிக் கொண்டனரா. இத்தகைய ஒழுங்கற்ற நடைமுறைகளை நாம் நிராகரிக்கிறோம். வரலாற்று முன் மாதிரியின் அடிப்படையில் அல்ல. ஆனால் அவர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களில் காணப்படும் வைஷ்ணவ தத்துவத்தின் பல அடிப்படைக் கோட்பாடுகளை மிகத் தீவிரமாக மீறியுள்ளனர் என்பதனால். அவ்வாறே அவர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் இறுதி கட்டளையையும் மீறியுள்ளனர்.
ரித்விக் அமைப்பானது சாஸ்திரங்களில் பண்டைய வேத நூல்களில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்று அவர்கள் கூறுவதும் பொருத்தமானதல்ல. சில வேத விதிகளின்படி சூத்திரர்களும் பெண்களும் பிராமண தீக்ஷையை பெறவேகூடாது என்று கூறப்பட்டுள்ளது:
“தீக்ஷையை ஒரு க்ஷூத்ரருக்கு வழங்க முடியாது[...] இந்த தீக்ஷை வேத விதிகளின்படி வழங்கபட்டதல்ல. ஏனென்றால் ஒரு தகுதி வாய்ந்த பிராமணரைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்”.
(ஸ்ரீல பிரபுபாதர் பகவத் கீதை, உபன்யாசம், 29/03/1971, பாம்பே)
ஆகவே, கண்டிப்பாகச் சொல்வதனால், ஸ்ரீல பிரபுபாதர் தனது மேற்கத்திய சீடர்கள் எவரையும் தீக்ஷை அளித்து ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் அனைவரும் வேதபடியான சாதியை விடக் மிகத் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள். இத்தகைய வேத சட்டங்களின் கடுமையான தடைகளை ஸ்ரீல பிரபுபாதர் சாஸ்திரங்களின் உன்னதமான விதிமுறைகளை வெளிப்படுத்தியதன் மூலம் அடக்க முடிந்தது. சில சமயங்களில் இந்த விதிமுறைகளை இதற்கு முந்தைய காலங்களில் நடைமுறையில் இல்லாதபோதும் அவர் சில வழிகளில் பயன்படுத்தினார்.
"ஹரி என்பவர் எவ்வாறு இவ்வுலக விதிகள் மற்றும் ஒழுங்கு முறை சம்பந்தமான விமர்சனத்திற்கு உட்பட்டவரல்லவோ, அவ்வாறே அவரால் சக்தியளிக்கப்பட்ட ஆன்மீக குருவும் உட்பட்டவரல்ல."
(சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை, 10.136, பொருளுரை )
"ஆகவே பரமபுருஷ பகவானின் கருணை மற்றும் ஈஸ்வர புரி ஆகியோர் எந்த வேத விதிகளுக்கும் நெறிமுறைகளுக்கும் உட்பட்டவர்களல்ல."
(சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை,10.137 பொருளுரை )
முக்கியமான விஷயம் என்னவென்றால் ரித்விக் அமைப்பு முற்றிலும் தனித்துவமானதாக இருந்தாலும் (குறைந்தபட்சம் நமக்கு தெரிந்தவரை) இது உன்னதமான சாஸ்திரக் கொள்கைகளை மீறுவதில்லை. நேரம், இடம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய மற்றும் புதுமையான வழிகளில் இத்தகைய கோட்பாடுகளை அவரால் கருணையுடன் பயன்படுத்த முடிந்தது என்பது ஸ்ரீல பிரபுபாதரின் நிபுணத்துவத்திற்கு சான்றாகும்.
அநேகமாக ஸ்ரீல பிரபுபாதர் எவ்வளவு தனித்துவமானவர் என்பதை நாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. இதற்கு முன்பு இவ்வுலகில் இவரைப்போல் எந்த ஆச்சாரியரும் இருந்ததில்லை. அவரது புத்தகங்கள் அடுத்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு சட்ட புத்தகங்களாக விளங்கும் என்று இதற்கு முந்தைய எந்த ஆச்சாரியரும் இதுவரை கூறியதில்லை. இதற்கு முன்பு இஸ்கான் போன்ற எதுவும் இருந்ததுமில்லை. இது போன்ற முன்னோடியில்லாத ஒரு நபர் வழக்கத்திற்கு மாறான ஒரு தீக்ஷை முறையை அமைக்க முடிவு செய்வதில் ஏன் ஆச்சரியம் கொள்ள வேண்டும்?
|
10. “ஜூலை 9, 1977-க்கு முன்னர் ரித்விக் அமைப்பு பற்றி குறிப்பிட்ட குறிப்பு எதுவும் இல்லாத காரணத்தினால், ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்குப் பிறகு அக்கொள்கையை தொடர விரும்பாமல் இருக்க சாத்தியம் இருக்கிறது” |
இந்த ஆட்சேபனை ஸ்ரீல பிரபுபாதர் ஒருபோதும் இயக்கத்தில் புதிதாக எந்த விஷயத்தையுமே புகுத்தியதில்லை என்று கூறுவதுபோல் உள்ளது. வாக்கியங்கள் ரீதியாகப் பார்த்தாலே, இந்த ஆட்சேபனை அபத்தமானது. ஏனென்றால் குருவிடமிருந்து வரும் எந்த ஒரு கட்டளையும் புதியதாக இருந்தால் நிராகரிக்கப்படலாம் அல்லது முன்பு வெளியிடப்பட்டவற்றிலிருந்து சற்று வித்தியாசமாக இருந்தால் நிராகரிக்கப்படலாம் என்று கூறும் அர்த்தத்தில் அமைந்துள்ளது. இது எவ்வாறு இருக்கிறதென்றால், ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இல்லாத வரைக்கும் ஸ்ரீல பிரபுபாதர் தனது இறுதி மாதங்களில் இயக்கத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையுடன் கோரிய எந்த வழிமுறைகளை வழங்கி இருக்கக்கூடாது.
நாம் முன்பே விளக்கியபடி, ரித்விக் அமைப்பு என்பது எவ்விதத்திலும் புதியதல்ல. ஜூலை 9-ஆம் தேதி கடிதத்திற்கு முன்னரே இயக்கத்தில் தீக்ஷை முறையை முக்கியமான பிரதிநிதிகளை கொண்டு பயன்படுத்தியது என்பது அனுபவ ரீதியாக அனைவருக்கும் தெரிந்ததே. ஸ்ரீல பிரபுபாதர் இஸ்கானின் தீக்ஷை குரு ஆவார், மற்றும் பெரும்பாலான தீக்ஷை விழாக்களில் கோயில் தலைவர்கள் அல்லது வேறு சில பிரதிநிதிகள் அல்லது பூஜாரிகள் தீக்ஷையை நடத்திவைத்தனர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.
ஜூலை 9, 1977 க்குப் பிறகு மிகவும் குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், புதிய சீடர்களை ஏற்றுக்கொள்வது என்பது இனி பிரபுபாதரிடம் ஆலோசிக்காமல் பிரதிநிதிகளால் நடத்தப்படும் என்பதுதான். புதியதாக தீக்ஷை பெறுபவர்களுக்கு அனுப்பப்படும் கடிதம் இனி ஸ்ரீல பிரபுபாதரின் கையொப்பம் இன்றி செயல்படும் என்றும், அனைத்து தீக்ஷை பெறும் பக்தர்களின் பெயர்களைத் தேர்ந்தெடுப்பது இனி ரித்விக்குகளாலேயே செய்யப்படும் என்பதுதான். மேலும் இந்த வழிமுறையானது இப்போது பிரபலமடையாத வார்த்தையான “ரித்விக்”--- என்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதுதான்.
பிரதிநிதிகளைப் பயன்படுத்தி ஆச்சாரியருடன் இணைப்பது என்பது ஆயிரக்கணக்கான சீடர்களின் அனுபவத்திற்கு உட்பட்ட பிரபலமான விஷயமாகும். ஜூலை 9-ஆம் தேதி கடிதத்தில் “ரித்விக்” என்ற வார்த்தையின் அர்த்தம் “ஆச்சாரியரின் பிரதிநிதி” என்ற வரையறுக்கப்பட்டுள்ளது. பிரதிநிதிகளை பயன்படுத்துவதன் மூலம் பிரபுபாதரால் தீக்ஷையளிக்கப்பட்ட முறை எவ்விதத்திலும் "புதியது" அல்ல. அது ஏற்கனவே ஸ்ரீல பிரபுபாதரால் தனது இயக்கம் விரைவான வளர்ச்சியின் நிலையை அடைந்தவுடனேயே கற்பித்த மற்றும் நடைமுறையில் வைத்திருந்ததை தொடரும் செயலாக இருந்தது.
நவம்பர் 14, 1977-க்கு பிறகு இந்த வழிமுறை அவ்வாறே தொடரும் என்பது ஒரு பெரிய அதிர்ச்சியாக ஏன் வந்திருக்கவேண்டும்?
பலருக்கு தெரியாமல் இருந்திருந்தாலும் ரித்விக் என்ற வார்த்தையும் புதியதல்ல. இந்த வார்த்தையும் அதன் வரையறையையும் ஸ்ரீல பிரபுபாதர் தனது புத்தகங்களில் ஏற்கனவே 31 முறை வரையறுத்துள்ளார். "புதியது" என்னவென்றால் ஏற்கனவே பல ஆண்டுகளாக தொடர்ந்திருந்த வழிமுறையினை இப்போது எதிர்காலத்திற்கும் பொருந்தவேண்டும் என எழுத்துப்பூர்வமாக வைக்கப்பட்டுள்ளதுதான். ஸ்ரீல பிரபுபாதர் இந்த நேரத்தில் தனது இயக்கத்தின் எதிர்காலம் குறித்த பல ஆவணங்களை எழுத்துப்பூர்வமாக வெளியிட்டு கொண்டிருந்தது ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த ஏற்பாடு உண்மையில் அனைவருக்கும் ஏற்கனவே நிலையான நடைமுறையாக கருதப்பட்ட ஒரு வழிமுறையின் மறு-வலியுறுத்துதல் ஆகும்.
முரண்பாடாக, உண்மையில் "புதியது" என்னவென்றால், ஸ்ரீல பிரபுபாதருக்குப் பிறகு ரித்விக்குகளெல்லாம் உலகாயதமும் ஆன்மீகமும் கலந்த வெறுமனே வாரிசு ஆச்சாரியர்களாகி உருமாற்றம் அடைந்ததுதான். இந்த குறிப்பிட்ட கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்திய பிறகு அது ஒரு அதிர்ச்சியாக இருந்ததால், அதனை அமல்படுத்தப்பட்ட சிறிது காலங்களிலேயே, பல நூற்றுக்கணக்கான சீடர்கள் இயக்கத்தை விட்டு வெளியேறினர். மேலும், ஆயிரக்கணக்கானோர் அவர்களைப் பின்பற்றி வெளியேறினர்.
சுருக்கம்:
ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்கு பிறகு ரித்விக் வழிமுறையினை நிறுத்துவது குறித்த எந்த நேரடி ஆதாரமும் இல்லை என்பதை நாம் இப்போது நிரூபித்து காட்டியுள்ளோம். வெறுமனே ரித்விக்குகளை தீக்ஷா குருக்களாக பிந்தைய காலத்தில் மாற்றுவதற்கான அனுமானங்கள் அ) மற்றும் ஆ)- வை அல்ல. அவற்றை ஆதரிக்க மிக வலுவான மறைமுகச் சான்றுகள் இருந்திருந்தால், இது வழக்கமான முன்னுரிமையை பெறுவதானால், அது உண்மையில் நேரடி ஆதாரங்களை மாற்றியமைக்கக்கூடிய அளவிற்கு உதவக்கூடியதா என்று விவாதத்திற்குரியதாக மாற்றவேண்டும். ஆனால், இப்போது நிரூபித்தபடி, ஸ்ரீல பிரபுபாதரின் மறைவுக்குப் பிறகு ரித்விக் முறையை நிராகரிக்க ஆதரிக்கும்படியான மறைமுக ஆதாரங்கள் கூட இல்லவேயில்லை . எனவே:
1). முழு இயக்கத்தினரும் பின்பற்றப்படவேண்டிய ஒரு கட்டளையானது அனுப்பப்பட்டது - இது நேரடி ஆதாரம்.
2). அக்கட்டளையின் மீதான ஒரு ஆய்வு, மற்றும் அதனை ஆதரிக்கும் பிற துணை மற்றும் அடுத்தடுத்த கட்டளைகள் ரித்விக் அமைப்பின் தொடர்ச்சியை மட்டுமே ஆதரிக்கின்றன - இது நேரடி ஆதாரம்.
3). தனது மறைவிற்குப் பிறகு ரித்விக் வழிமுறையை நிறுத்துமாறு உத்தரவிடும் படியான ஸ்ரீல பிரபுபாதரின் குறிப்பிட்ட நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை.
4). உபதேசம், சாஸ்திரம், மற்ற உபதேசங்கள், சிறப்பான சூழ்நிலைகள், பின்னணி, இயல்பு மற்றும் உபதேசிக்கப்பட்ட சூழ்நிலை அல்லது நம்மால் பார்க்கக் கூடிய வேறு எதாவது என எதுவும் ஸ்ரீல பிரபுபாதரின் மறைவிற்கு பிறகு ரித்விக் அமைப்பை நிறுத்துவதற்கான நியாயமான அடிப்படை ஆதாரத்தைக் கொடுக்கும் படியான மறைமுக ஆதாரங்கள் எதுவும் இல்லை. சுவாரசியம் என்னவெனில், இதன் மற்ற உண்மைகளை நாம் ஆராயும்போது இந்த கட்டளையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த ஆதரிக்கும் மேலும் மேலும் மறைமுக ஆதாரங்களே நமக்குக் கிடைக்கின்றன.
மேற்கண்ட பகுப்பாய்வின் பார்வையில் 1977 நவம்பர் 14-ஆம் தேதி தீக்ஷை தொடர்பான ஸ்ரீல பிரபுபாதரின் இறுதி உபதேஷத்தை ரத்து செய்வது என்பது ஒரு நியாயமற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத செயலாகும் என்பதை தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறோம். அ) மற்றும் ஆ) அனுமானங்களை ஆதரிப்பதற்கான எந்த ஆதாரத்தையும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இந்த அனுமானங்கள்தான் நாம் கூறியதுபோல் இஸ்கானின் தற்போதைய குரு கோட்பாட்டின் அடித்தளமாக அமைகிறது. ஸ்ரீல பிரபுபாதரின் உத்தரவை மீண்டும் பின்பற்றுவதே ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்கள், தொண்டர்கள் மற்றும் சேவகர்களின் ஒரே உபாயம்.
இந்த தொகுப்பாய்விற்கு மேற்கொண்டு துணைசெய்யும் படியான மே 28-ஆம் தேதி உரையாடல் மற்றும் அது தொடர்புடைய பல ஆட்சேபனைகள் குழப்பம் உண்டாக்கியத்தைப் பற்றி நாம் இப்போது பரிசீலனை செய்வோம்.
"நியமன ஒலி நாடா"
GBC தமது GII-இல் தங்கள் உரிமை கோரலுக்காக ஜூலை 9-ஆம் தேதி கட்டளைக்கு எதிராக, மாற்றங்கள் அ) மற்றும் ஆ)-வை நியாயப்படுத்திக் கூறுவதற்கு விருந்தாவனத்தில் மே 28, 1977-ஆம் தேதியில் நடந்த அறை உரையாடலிலிருந்து வருகின்றது. இந்த மாற்றங்கள் பரிசீலனைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மாற்றம் அ): பிரதிநிதிகள் அல்லது ரித்விக்-குகளின் நியமனம் என்பது வெறுமனே
தற்காலிகமானது என்றும், அதிலும் குறிப்பாக ஸ்ரீல பிரபுபாதர்
மறைந்தவுடன் அது நிறுத்தப்பட வேண்டும் என்பதுமாகும்.
மாற்றம் ஆ): அவர்களின் பிரதிநிதித்துவ செயல்பாட்டை நிறுத்திய பின்னர்,
ரித்விக்குகளாக இருந்தவர்கள் தானாக தீக்ஷா குருக்களாக மாறி
நபர்களை தமது சொந்த சீடர்களாக ஆக்கும் வகையில் தீக்ஷை
அளிப்பார்கள் மாறாக, ஸ்ரீல பிரபுபாதருடைய சீடர்களாக அல்ல.
மேலே உள்ள மாற்றங்கள் அ) மற்றும் ஆ) ஆனது இறுதிக் கட்டளையை சட்டபூர்வமாக மாற்றியமைக்கும் அளவுக்கு பயன்படுத்த முடியுமா என்பதை பார்ப்பதற்கு இனிவரும் இந்த குறிப்பிட்ட பகுதி மே-மாதம் 28-ஆம் தேதி உரையாடலின் மிகத் துல்லியமான ஆய்வுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
ஜிபிசி-யின் மொத்த நிலைப்பாடும் இந்த ஒரு ஆதாரத்தை மட்டுமே சார்ந்து இருப்பதால், இதில் வருந்தத்தக்கது என்னவென்றால் அவர்கள் இதே ஆதாரங்களை வைத்து ஏற்கனவே குறைந்தது நான்கு வெவ்வேறு அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்பட்ட பதிப்புகள் அல்லது புத்தகங்களை, ஆதாரங்கள் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். இந்த மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட பிரதிகள் பின்வரும் வெளியீடுகளில் வெளிவந்தன.
1983: ஸ்ரீல பிரபுபாதா லீலாம்ருதா, பாகம்- 6 (சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி , BBT)
1985: என் கட்டளைப் படி (Under My Order) (ரவீந்திர ஸ்வரூப தாஸா)
1990: இஸ்கான் பத்திரிகை(ISKCON Journal )( ஜிபிசி)
1995: இஸ்கான்-இல் குருக்கள் மற்றும் தீக்ஷா (ஜிபிசி)
ஒரே உரையாடலுக்கு நான்கு வெவ்வேறு வார்த்தைத் தொகுப்புகள் வழங்கப்படுவது என்பது பல சந்தேகத்திற்குரிய கேள்விகளை எழுப்புகிறது. எடுத்துக்காட்டாக, இதில் சரியான வார்த்தைத் தொகுப்பு எது? என்று கேட்டாலும் தவறில்லை. “முதலாவதாக ஏன் மாறுபட்ட வார்த்தைத் தொகுப்புகள் உள்ளன?”. அந்த மொழியாக்கம்(Transcript) என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட உரையாடல்களின் கலவையா? ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிபதிவுகளிலிருந்து இவைகள் வெளியிடப்பட்டுள்ளனவா? அப்படியானால், எந்த ஒலிநாடா பதிப்பானது எந்த உண்மையான உரையாடலைச் சார்ந்தது என்று நாம் எப்படி உறுதியாக நம்ப முடியும்? ஆகவே ஏற்கனவே, ஆதாரங்களை ஆராயப்படுவதற்கு முன்பாகவே, ஒலிநாடாவின் மொழியாக்கத்தின்மூலம் செய்யப்பட்ட பகுப்பாய்வின் அடிப்படையில், ஸ்ரீல பிரபுபாதரால் கையொப்பமிடப்பட்ட கடிதத்தையே மாற்றியமைக்க எதிர்பார்க்க வேண்டும் என்ற அபாயகரமான நிலையில் நாம் தள்ளப்படுவது அதன் நம்பகத்தன்மையின் மீதான பல சந்தேகத்திற்குரிய கேள்விகளை எழுப்புகின்றன.
இருப்பினும், ஒலிநாடாவை(Tape) ஆராயும் நோக்கத்துடன் நான்கு வெவ்வேறு மொழியாக்கத்தின்(Transcript) தொகுப்புகளை நாம் இப்போது பயன்படுத்த இருக்கிறோம்.
குறிப்பு : இந்த உரையாடல் பல்வேறு திரிபுகள் ஆங்கில இலக்கணத்துடன் தொடர்பு கொண்டமையாதலால் அவற்றை தமிழ்படுத்தும்போது அர்த்தம் மாற்றி புரிந்துகொள்ள வாய்ப்பு அதிகமாக உள்ளதால் அவற்றை உள்ளது உள்ளபடி கொடுக்கிறோம். இதனால் இதனை படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது இங்கே ஒரு உரையாடலுக்கு வெவ்வேறு பாதிப்புகளை அவர்கள் உருவாக்கியிருப்பதனால் அதனை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கிறது என்பதுதான். இப்போது அந்த உரையாடலையும் அதன் வெவ்வேறு திரிபுகளும் அடைப்புக்குறிகளில் உள்ள மாறுபாடுகளுடன் கீழே கொடுக்கப்படுகிறது. மேலும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும் கொடுத்துள்ளோம்:



உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு
|
1) சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி:
2)
3)
4) ஸ்ரீல பிரபுபாதர்:
5)
6) தமால கிருஷ்ண கோஸ்வாமி:
7) ஸ்ரீல பிரபுபாதர்:
8) சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி:
9) ஸ்ரீல பிரபுபாதர்:
10)சத்ஸ்வரூபதாஸ கோஸ்வாமி:
11) ஸ்ரீல பிரபுபாதர்:
12)
13)
14)சத்ஸ்வரூபதாஸ கோஸ்வாமி:
15) ஸ்ரீல பிரபுபாதர்:
16) தமாலகிருஷ்ண கோஸ்வாமி:
17)
18) ஸ்ரீல பிரபுபாதர்:
19) தமாலகிருஷ்ண கோஸ்வாமி:
20) ஸ்ரீல பிரபுபாதர்:
21)சத்ஸ்வரூபதாஸ கோஸ்வாமி:
22) தமாலகிருஷ்ண கோஸ்வாமி:
23)சத்ஸ்வரூபதாஸ கோஸ்வாமி:
24) தமாலகிருஷ்ண கோஸ்வாமி:
25) ஸ்ரீல பிரபுபாதர்:
26)
|
பிறகு எங்களுடைய அடுத்த கேள்வி எதிர்காலத்தில் தீக்ஷை(கள்) பற்றியது,
அதிலும் குறிப்பாக தாங்கள் எங்களுடன் இனி இருக்க மாட்டீர்கள் என்ற காலத்தில்.
முதல் மற்றும் இரண்டாம் தீக்ஷை(கள்) எவ்வாறு நடத்துவது என்று நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.”
“ஆமாம், நான் உங்களில் சிலரை தேர்ந்தெடுப்பேன். அது முடிவுசெய்த பின்னர்,
உங்களில் சிலரை ஆச்சாரியரின் பிரதிநிதி(களாக)யாக செயல்படுவதற்கு பரிந்துரைப்பேன்”.
ரித்விக் ஆச்சாரியார் என்று அழைக்கப்படுமே அதுவா ?
ரித்விக். ஆமாம், (ஆமாம், ரித்விக்)
(பிறகு) தீக்ஷை கொடுப்பவருக்கும் அந்த நபருக்கும் என்ன உறவு மற்றும் (அந்த )...
அவர் குரு, அவர் குரு (அவரே குரு)
ஆனால் அதை அவர் தங்கள் சார்பில் செய்கிறார்.”
ஆம், அது சடங்கு. ஏனெனில் நான் இருக்கும்போது, ஒருவர் குருவாக ஆகக் கூடாது,
ஆகவே என்னுடைய சார்பாக, என்னுடைய கட்டளையின்படி, ஆமார ஆக்ஞா குரு (ஹாய்), (அவரே) (இருப்பார்)) உண்மையில் குரு.
ஆனால் என்னுடைய கட்டளையின்(பேரில்) படி“
ஆகவே (பிறகு) (அவர்கள்) (அவர்கள் ஆகுவார்கள்) (ஆகலாம்) அவர்களும் தங்கள் சீடர்கள் ஆவார்கள் ?”
“ஆம், அவர்கள் (அவர்களின்) சீடர்கள், (ஆனால்) (ஏன்) யாரை கருதி”
இல்லை. அவர் கேட்பது (கேட்டுக்கொண்டிருப்பது) என்னவெனில், இந்த ரித்விக் ஆச்சாரியர்கள், அவர்கள் பிரதிநிதிப்பவர்கள், தீக்ஷை கொடுக்கிறார்கள்.
(அவர்களின்)... யாருக்கு தீக்ஷை கொடுக்கிறார்களோ, அவர்கள் யாருடைய சீடர்கள்?”
அவர்கள் அவரின் சீடர்கள் (யார் தீக்ஷை கொடுக்கிறாரோ அவரின் சீடர்கள்)”
அவர்கள் அவரின் சீடர்களா?
யார் தீக்ஷை கொடுக்கிறாரோ. (மேலும் அவர்கள் என்னுடைய) (அவருடைய) (அவர்தான்) பேர சீடர்(கள்)...
(ஆமாம்)
(இது தெளிவாகியது)
(மேலும் தொடர்வோம்)
பிறகு அது தொடர்பாக ஒரு கேள்வி இருக்கிறது…
நான் உனக்கு கட்டளையிடும்போது, அவர் (நீ) வழக்கமான குருவாக மாறுவார்.
அவ்வளவுதான். அவர் (மற்றும் அவர்கள்) என்னுடைய சீடர்களின் சீடராக மாறுவார்கள். (அவ்வளவுதான்) (பாருங்கள்). |
நாம் முன்னர் குறிப்பிட்டதுபோல ஜூலை 9ஆம் தேதி உத்தரவோ அல்லது ஸ்ரீல பிரபுபாதரால் கையெழுத்திடப்பட்ட எந்த ஒரு ஆவணங்களோ மேலே கொடுக்கப்பட்ட இந்த உரையாடலை வெளிப்படையாகக் அங்கீகரிக்கவில்லை. இவ்வாறு இருக்கும்போது இதில் மிகவும் விசித்திரமான விஷயம் என்னவென்றால் GII-(Gurus And Initiation In ISKCON)-இன் மையமாக கொண்ட வாதமானது ஜூலை 9-ஆம் தேதி கடிதத்தினை சரியாக புரிந்துகொள்ள இந்த உரையாடல் முற்றிலும் முக்கியமானது என்பதுதான்.
ஸ்ரீல பிரபுபாதர் தனது பரந்த உலகளாவிய அமைப்புக்கு கட்டளையாக வழங்கிய வழக்கமான வழிமுறை இதுவல்ல. அதாவது, பழைய மற்றும் மூலமாக இருக்கக்கூடிய ஒலிநாடா (Tape) உரையாடல்களின் மூலம் மட்டுமே சரியாக புரிந்து கொள்ளக் கூடிய விஷயத்தை, இவர்கள் முழுமையடையாத மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியதை எழுத்துப்பூர்வமான உத்தரவுகளாக மாற்றி வெளியிட்டுவிட்டனர்.
அடுத்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு தொடர வேண்டிய ஒரு சங்கீர்த்தன இயக்கத்தின் மகத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையை ஒருவர் கேள்விக்குறியாக்கும் போது, இதே போன்ற ஒரு விஷயம் கௌடீய மடத்தில் நிகழ்ந்த பொழுது அதனை ஸ்ரீல பிரபுபாதர் எவ்வாறு சமாளித்திருப்பார் என்பது கற்பனைக்கெட்டாத விஷயம் தான். இருப்பினும் தற்போதைய ஜிபிசி நிலைப்பாட்டை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இதே நிலையில்தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜூலை 9-ஆம் தேதி கட்டளையின் மீதான மேற்கூறிய மாற்றங்களை ஆதரிப்பதற்கான GII-(Gurus And Initiation In ISKCON) கூறும் அனைத்து வரிகளுக்கும் குறிப்பாக கவனம் செலுத்தி கலப்படமுள்ள மொழியாக்கத்தின்(Transcript) மூலம் இப்போது நாம் கவனமாக அடுத்த கட்டத்திற்கு நகர்வோம்.
வரிகள் 1-3: இங்கே சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி எதிர்காலத்தில் எவ்வாறு தீக்ஷை வழிமுறை நடைபெறும் என்பது குறித்த ஒரு குறிப்பிட்ட கேள்வியை ஸ்ரீல பிரபுபாதரிடம் கேட்கிறார்- "குறிப்பாக நீங்கள் எங்களுடன் இல்லாத காலத்தில்". ஸ்ரீல பிரபுபாதர் என்ன பதில் அளித்தாலும் அது குறிப்பாக அவர் மறைவுக்குப் பிறகு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஏனென்றால் அந்த காலகட்டத்தைதான் சத்ஸ்வரூபர் தெளிவாக கருத்தில் கொண்டு கேட்கிறார். அதாவது "நீங்கள் எங்களுடன் இல்லாதபோது".
வரிகள் 4-7: இங்கே சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமியின் கேள்விக்கு ஸ்ரீல பிரபுபாதர் பதில் அளிக்கிறார். சீடர்கள் சிலரை "பிரதிநிதிக்கும் ஆச்சாரியராக” அல்லது “ரித்விக்காக” நியமிப்பதாக அவர் கூறுகிறார். இவ்வாறு அந்த கேள்விக்கு தெளிவாக பதிலளித்து ஸ்ரீல பிரபுபாதர் அமைதியாக இருந்துவிடுகிறார்.
இந்த விஷயம் சார்பாக அவர் மேலும் எந்த விளக்கத்தையும் கொடுக்கவும் இல்லை, அவரது பதிலை அவர் மேம்படுத்தியும் கூறவில்லை. மேம்படுத்திக் கூற முயற்சிக்கவும் இல்லை. எனவே இங்கு இதுவே அவருடைய பதில் என்பதைத்தான் நாம் கருத்தில் கொள்ளவேண்டியதாகிறது. இதனை வேறுவிதமான கோணத்தில் பார்க்க ஒரே வழி என்னவென்றால்,
1) ஸ்ரீல பிரபுபாதர் வேண்டுமென்றே அந்த கேள்விக்கு தவறாக அல்லது தவறாக வழிநடத்தும் நோக்கத்தில் பதிலளித்தார்.
அல்லது
2) அவர் கேள்வியை சரிவர செவிகொடுத்து கேட்காமல் அவர் உலகில் இருக்கின்ற வரைக்கும் என்ன செய்ய வேண்டும் என்று சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி கேட்டுக்கொண்டதாக எண்ணி இருக்கலாம்.
ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்களில் யாரும் மேற்கூறிய சாத்தியம் 1) -ஐ கருத்தில் கொள்ளமாட்டார்கள், ஒருவேளை சாத்தியம் 2)-ஐ கருத்தில் கொண்டால் அவர் மறைவிற்குப் பிறகு எதிர்காலத்தில் தீக்ஷை வழங்கும் முறை பற்றி அந்த உரையாடல் எதுவும் கூறியிருக்க முடியாது; ஆகவே எதிர்கால தீக்ஷை வழங்கும் முறை குறித்த அவரது ஒரே அறிக்கையான ஜூலை 9-ஆம் தேதி கொடுத்த கட்டளை மட்டுமே நம்மிடம் எஞ்சியிருக்கிறது.
முழு பதிலும் துண்டுதுண்டாக இருந்தாலும் அதனைத் தொடர்ந்து வரும் உரையாடல் முழுவதும் சரியாகதான் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் சில நேரங்களில் வாதிடுகின்றனர். இந்த முன்மொழிவில் உள்ள சிக்கல் என்னவென்றால், இந்த விதத்தில் அறிவுறுத்தல்களை வெளியிடுவதின்மூலம் பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் மட்டுமே சத்ஸ்வரூப தாச கோஸ்வாமியினால் முன்வைக்கப்பட்ட அந்த கேள்விக்கு ஸ்ரீல பிரபுபாதர் சரியாக பதில் அளித்திருப்பார்.
● அந்த ஒருநபர் மேலும் அதிகமான கேள்விகளை கேட்க வேண்டுமென்பதற்காக அதனை தனக்கென்று எடுத்துக்கொண்டார்.
○
● அது ஏதோவொரு அதிர்ஷ்டவசமாக சத்ஸ்வரூப மஹராஜரின் முதலாவதாக கேட்கப்பட்ட சரியான கேள்விக்கு சரியான பதிலை பெற நிகழ்ந்திருக்கலாம்.
இதுவே ஒரு கேள்விக்கு பதில்கூறும்போது யாராக இருந்தாலும் பின்பற்றும் வழக்கமான வழியாகும், இதில் நேரடியான ஒரு உலகளாவிய அமைப்பின் விஷயத்தில் சொல்லவேண்டியதே இல்லை, மேலும் நிச்சயமாக இது ஸ்ரீல பிரபுபாதரின் பாணியும் அல்ல. ஒருவேளை அது உண்மையாக இருந்திருந்தால், ஜிபிசி முன்மொழியப்பட்டபடி, வெறுமனே நான்கு மாத காலங்களுக்கு மட்டுமே பொருந்தும்படியான தீக்ஷை வழங்குவதற்கான வழிமுறையைக் கொண்ட ஒரு கடிதத்தை, முழு இயக்கத்திற்காகவும் வெளியிட அவர் அனைத்துவித சிரமங்களையும் மேற்கொண்டார் என்பது ஏற்புடையதல்ல. அதுவும் அடுத்த பத்தாயிரம் ஆண்டுகள் வரை நீடித்து இயங்கவிருக்கும் ஒரு இயக்கத்தின் விஷயத்தில் அவர் அத்தகைய தெளிவற்ற முறையில் நிச்சயமாக நடந்துகொண்டிருக்கமாட்டார்.
தெளிவாக நாம் மாற்றங்கள் அ) மற்றும் ஆ)-வை இந்த மொழியாக்கம் முரண்பாடில்லாமல் ஆதரிக்கின்றது என்றால் இதுவரைக்கும் நாம் சரிவர செயல்படவில்லை என்பதாகும். ஸ்ரீல பிரபுபாதரிடம் கேட்கப்பட்டது என்னவென்றால், குறிப்பாக தங்கள் மறைவிற்குப் பிறகு தீக்ஷை வழிமுறையானது என்னவாகும் என்று. அவர், ரித்விக்குகளை நியமிப்பேன் என்று பதிலளித்தார். இது ஜிபிசி-யினால் முன்மொழியப்பட்ட இரண்டு மாற்றங்களுக்கும் முற்றிலும் முரணானது. மேலும், ஜூலை 9ஆம் தேதி உத்தரவில் "இனிமேல்" இப்படித்தான் இயங்கும் என்ற கருத்தையும் வலுப்படுத்துகிறது. இதை நாம் மேலும் படிக்கலாம்:.
வரிகள் 8-9: இங்கே சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி தீக்ஷை கொடுப்பவருக்கும் தீக்ஷை வாங்கியவருக்கும் இடையில் உள்ள உறவு என்ன என்று கேட்கிறார். ஆனால் சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி தனது கேள்வியை முழுமையாக முடிப்பதற்கு முன்பாகவே ஸ்ரீல பிரபுபாதர் உடனடியாக “அவர் குரு” என்று பதிலளிக்கும் போது ரித்விக் என்பவர்கள் வரையறையின்படி தீக்ஷை கொடுப்பவர்கள் அல்ல என்பதால், ஸ்ரீல பிரபுபாதர் தீக்ஷை கொடுப்பதன் காரணமாக அவர் தம்மை மட்டுமே "குரு" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜூலை 9-ஆம் தேதி எழுதிய கடிதத்தில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு தீக்ஷையளிக்கப்பட்டவர்கள் "ஸ்ரீ பிரபுபாதரின் சீடர்கள்" என்று மூன்று முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
"அவர் குரு" என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறும்போது, அவர் உண்மையில் ரித்விக்-குகளாக இருப்பவர்களைப் பற்றி பேசுகிறார் என்று சில சமயங்களில் அதிமேதாவித்தனமான கோட்பாடு முன் வைக்கப்படுகிறது. இது மிகவும் வேடிக்கையானது. ஏனெனில் ஸ்ரீல பிரபுபாதர், ரித்விக் என்ற வார்த்தையினை “ஆச்சாரியரின் பிரதிநிதி" (Officiating Acharya) என்று மட்டுமே வரையறுத்துள்ளார். அதாவது சில வகையான யாகம் அல்லது சடங்கு செயல்பாடுகளைச் செய்யும் ஒரு பூஜாரி என்று அர்த்தம். ஜூலை 9-ஆம் தேதி எழுதிய கடிதத்தில் இந்த பூசாரிகள் எந்தெந்த சடங்கு செயல்பாட்டை செய்வார்கள் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் துல்லியமாக தெளிவுபடுத்துகிறார். அதாவது அவர்கள் புதிதாக தீக்ஷை வாங்குபவர்களுக்கு ஆன்மீக பெயர்களை கொடுக்க வேண்டும். இரண்டாவது தீக்ஷையின்போது காயத்ரி மந்திரங்களை ஜபிக்க வேண்டும். இவை அனைத்தையும் ஸ்ரீல பிரபுபாதரின் சார்பாக செய்யவேண்டும். அவ்வளவுதான்! அவர்களை தீக்ஷா குருக்களாக இருக்குமாறும் அல்லது தீக்ஷை கொடுத்து தங்களுடைய சொந்த சீடர்களாக ஆக்கிக்கொள்ளவோ அல்லது அவர்களுக்கு தாமே ஆன்மீக குருக்களாக இருப்பது பற்றி எதுவும் குறிப்பிடவும் இல்லை. அந்தக்கடிதத்தில் ரித்விக் என்றால் “ஆச்சாரியரின் பிரதிநிதி” என்று சிறப்பாக வரையறுக்கப் பட்டுள்ளது. அவர்கள் ஆச்சாரியரின் சார்பாக செயல்பட வேண்டியவர்கள், மாறாக தனியுரிமை கொண்ட ஆச்சாரியார்களாக அல்ல. இது இவ்வாறு இருக்கும்போது, எதனால் ஸ்ரீல பிரபுபாதர், கடிதத்தில் அவர்களை ரித்விக் குரு என்று அழைத்தார்? அவர்கள் உண்மையிலேயே தீக்ஷா குருக்களாக இருந்திருந்தால், குழப்பத்திலிருந்து விடுவிக்க அவர்களை தீக்ஷா குருக்கள் என்றே அழைத்திருக்கலாமே?
ஸ்ரீல பிரபுபாதர், தத்துவங்களை அல்லது நிர்வாக சிக்கல்களைப் பற்றி விவாதிக்கும்போது ஆச்சாரியர் என்ற தனது நிலையை மூன்றாவது நபரை பற்றி குறிப்பிடுவதுபோல அடிக்கடி பேசுவார். குறிப்பாக, இந்த இடத்தில் சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமியின் கேள்விகள் மூன்றாவது நபரின் சார்பாக முன் வைத்த காரணத்தினால் அவர் இங்கு அவ்வாறுதான் செய்தாக வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
ஆகவே ஸ்ரீல பிரபுபாதர் தனது ரித்விக் பிரதிநிதிகள் மூலம் புது சீடர்களுக்கு தீக்ஷை கொடுக்கும் “குரு” என்று எடுத்துக் கொண்டால் மட்டுமே உரையாடல் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
ஸ்ரீல பிரபுபாதரின் பதில்கள் மிகவும் தெளிவானதாகவும் சீரானதாகவும் இருந்தபோதிலும் இந்த சூழ்நிலையில் கேள்வி கேட்பவரின் மனதில் சில குழப்பங்கள் இருப்பதாக தெரிகிறது. இங்குதான் சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி பத்தாவது வரியில் கேட்கிறார், “ஆனால் அவர் அதை உங்கள் சார்பாக செய்கிறார்”. “அவர்” - என்று சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி குறிப்பிடுவது ரித்விக்கினை. அதேசமயம் ஸ்ரீல பிரபுபாதர் குறிப்பிடும் “அவர்” என்ற சொல் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, தம்மையே அதாவது ஸ்ரீல பிரபுபாதரையே குறிக்கும். ஏனெனில் ரித்விக் அமைப்பினுள் தீக்ஷை கொடுப்பவர் அவர் ஒருவரே. அவரது சீடர்களுக்கு வெளிப்படையான குழப்பம் இருந்த போதிலும், சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமியின் எதிர்கால ரித்விக்குகளின் நிலைப்பாடுகளை குறித்த உண்மையான அக்கறைக்கு பொருந்தும்படி தனது அடுத்த பதிலை தகுந்தவாறு கொடுக்கிறார்.
வரிகள் 11-13: மாற்றம் அ) விற்கு ஆதாரம் இருப்பதாக GII-(Gurus And Initiation In ISKCON)-யினால் கூறப்படுவது இந்த வரிகளில்தான் இருக்கின்றன. இந்த வரிகளில் அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா இல்லையா என்பதை கருத்தில் கொள்வதற்கு முன்பாக 1-7 வரிகளை பகுப்பாய்வு செய்ததை முதலில் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
வரிகள் 11-13 அ)-வின் மாற்றத்தை உறுதிப்படுத்துகின்றது என்றால், ஸ்ரீல பிரபுபாதர் குறிப்பாக தம் மறைவிற்குப் பிறகு “ரித்விக்" நியமிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக பதிலளித்துள்ள 1-7 வரிகளுக்கு முரண்பட்டுதான் சொல்லமுடியும். ஒருவேளை உண்மையில் மாற்றம் அ ) - ஆனது 11-13 வரிகளில் நிரூபிக்கப்படுகின்றது எனும்போது அதிலுள்ள ஒரு சிக்கல் என்னவென்றால் ஸ்ரீல பிரபுபாதர் சற்றுமுன்பு அவர் கூறிய ஒரு அறிக்கைக்கு அவரே முரண்பட்டு இருக்கிறார் என்று அர்த்தமாகும். ஒரே உரையாடலில் இரண்டு முற்றிலும் முரண்பட்ட நிலைகளை சமமாக அங்கீகரிப்பதின் மூலம், எதிர்காலத்தில் தீக்ஷை பற்றி எதையும் தீர்மானிக்க முடியாத பயனற்ற மொழியாக்கத்தை கொடுக்க இருக்கிறார்களா? மீண்டும் எவ்வித மாற்றமும் இல்லாத ஜூலை 9-ஆம் தேதி உத்தரவை ஆலோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.
இது உண்மையில் நடந்ததா என்று நாம் பார்ப்போம். ஸ்ரீல பிரபுபாதர் மறைந்தவுடன் ரித்விக்குகள் தங்கள் கடமைகளை நிறுத்தவேண்டும் என்ற அந்த குறிப்பிட்ட அறிக்கையை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் முன்னிலையில் மட்டுமே செயல்பட முடியும்.
11-13 வரிகளை படிக்கும்போது, ரித்விக்குகள் அவருடைய முன்னிலையில் மட்டுமே செயல்பட முடியும் ஏனெனில் அவர் முன்னிலையில் அவர்கள் குருவாக இருக்க முடியாது என்பதைக் காண்கிறோம். ஆகவே ஸ்ரீல பிரபுபாதர் தனது அவசரபுத்திகொண்ட சீடர்களை கையாளும்போது அவர் எப்போதாவது கூறும் ஒரு கொள்கையை வெறுமனே மீண்டும் குறிப்பிட்டிருகிறார் அதாவது: அவர்தம் முன்னிலையில் ஒருவர், அவர் சார்பாக மட்டுமே செயல்பட வேண்டும். ஆயினும், ஸ்ரீல பிரபுபாதர் கூறாதது என்னவெனில் அவர் இவ்வுலகத்தை விட்டு வெளியேறியதும் "அவர்தம் சார்பாக செயல்படுவதை" நிறுத்தப்படவேண்டும் என்று. மேலும் "அவர்தம் சார்பாக செயல்படுவது" என்பது அவர் இருக்கும்போது மட்டுமே நடைபெறவேண்டும் என்றும் அவர் சொல்லவில்லை. உண்மையில், இதுவரை எங்கும் அவர் தனது நேரடியான உடல்ரீதியான இருப்பை, எந்த வகையிலும் தனது சார்பாக செயல்படும் கருத்துடன் இணைக்கவில்லை, மாறாக தனது சீடர்கள் குருவாக இருப்பதை தடுக்கும் ஒரு காரணம் என்று எளிமையாக குறிப்பிட்டிருக்கிறார். இந்த இடத்தில் "குருவாக இருக்க முடியாது" என்பதை ஒரு ரித்விக்காக செயல்படவேண்டும் என்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த உரையாடலின் போது ஸ்ரீல பிரபுபாதர் உடல்ரீதியாக இருந்த காரணத்தால் அவர்கள் தீக்ஷா குருவாக இருக்க முடியாது என்பதுதான். ஆனால் இது மட்டுமே ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்கள் தீக்ஷா குரு என்ற நிலையை எடுப்பதை தடுக்கும் தடையாக இல்லை என்பதை அடுத்த வரியில் நாம் தெரிந்து கொள்வோம்.
12-வது வரியில், நாம் காண்பது என்னவென்றால் குருவாக இருப்பது என்பது ஸ்ரீல பிரபுபாதர், —"நான் கட்டளை இடும்போது" என்று குறிப்பிட்டுள்ள காரணத்தினால் அவரிடமிருந்து பெறுவதை சார்ந்ததாகும். அவர் இந்த நிபந்தனையை 13-வது வரியில் மீண்டும் “ஆனால் எனது உத்தரவின்படி” என்று திரும்ப வலியுறுத்திக் கூறுகிறார். மீண்டும் அவர் 25 ஆவது வரியில் "நான் கட்டளை இடும்போது" என்று கூறுகிறார். இதிலிருந்தே உரையாடலை முறைப்படியான கட்டளையாக எடுத்துக்கொள்ள முடியாது என்பது மிகத் தெளிவாக உள்ளது. அவ்வாறு இல்லையெனில் ஏன் அவர் "நான் கட்டளை இடும்போது" என்று சொல்லவேண்டும்?
ஜிபிசி பராமரிப்பது போல, அவர் மறைவிற்குப் பிறகு குருவாக மாறுவதற்கான உண்மையான கட்டளை இதுவென்றால், நிச்சயமாக ஸ்ரீல பிரபுபாதர் எப்படி கூறியிருப்பார் என்றால், "நான் இப்போது உங்களுக்கு உத்தரவிடுகிறேன் நான் மறைந்த பிறகு நீங்கள் ரித்விகாக இருப்பதை நிறுத்திவிட்டு தீக்ஷா குருக்களாக மாறுங்கள்" என்று. இதுபோன்று ஏதாவது ஒன்றை கூறியிருந்தால் அத்தகைய அறிக்கை நிச்சயமாக தற்போதைய ஜிபிசி நிலைப்பாடு மற்றும் MAAS-இன் கோட்பாட்டிற்கு பற்றி சில நம்பகத் தன்மையை வழங்கியிருக்கும். ஆனால், இங்கே பார்த்தால், அப்படிப்பட்ட அறிக்கையை ஒத்துபோகும் எதுவும் மே 28ஆம் தேதி நடந்த உரையாடலில் எங்கும் காணப்படவில்லை.
இந்த இடத்தில் "அமார ஆக்ஞாயா" என்ற வாக்கியத்தை பயன்படுத்துவதன் காரணமாக இது தீக்ஷா குருவாக இருப்பதற்கான உத்தரவு ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது என சில விவாதம் செய்கின்றனர். ஏனெனில் பகவான் ஸ்ரீ சைதன்யரின் இந்த கட்டளை வாக்கியத்தை பலமுறை ஸ்ரீல பிரபுபாதர் மீண்டும் மீண்டும் எடுத்துக்கூறியுள்ளார். எனினும் அந்த "அமார ஆக்ஞாயா" என்ற கட்டளை நாம் முன்பே பார்த்தபடி சிக்ஷா குருவினை மட்டுமே குறிக்கிறது. நான் கட்டளையிடும்போது என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறுவதால் தீக்ஷா குருவாக மாறுவதற்கான உத்தரவு இன்னும் வழங்கப்படவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆகையால் இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீல பிரபுபாதர் அத்தகைய வசனத்தை பயன்படுத்துவது, எத்தகைய குரு என்ற நிலைப்பாட்டை எடுப்பதாக இருந்தாலும் அதற்கு முன்பு உத்தரவு கொடுப்பது என்பது அவசியமாகிறது என்பதை தெரிவிக்கத்தான்.
11-13 வரிகளில் சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமியின் முதன்முதலான கேள்விக்கு(வரிகள் 1-7), ஸ்ரீல பிரபுபாதரின் தெளிவான பதிலை எந்த வகையிலும் மாற்றியமைக்கும்படியான விஷயங்கள் நிச்சயமாக எதுவும் இல்லை. இதனால் 1-7 வரிகளை பற்றிய நமது புரிதல் அப்படியே மாறாமல் உள்ளது. ஜூலை 9ஆம் தேதி ஆணை இதுவரை மாறாமல் இருப்பதன் காரணமாக ஸ்ரீல பிரபுபாதர் தன் கருத்துக்கு தானே முரண்பட்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது.
11-13 வரிகள் நிலைநாட்டுவது என்னவென்றால் ஸ்ரீல பிரபுபாதர் இருந்தபோது ரித்விக் அமைப்பு செயல்பட வேண்டும், ஆனால் அவர் இருக்கும்போது மட்டுமே அது செயல்பட முடியும் என்பதல்ல. ஜூலை 9-ஆம் தேதி கடிதத்தில் "இனிமேல்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம் இது தெளிவாகிறது. "இனிமேல்" என்ற சொல் ஸ்ரீல பிரபுபாதரின் உடல்ரீதியான இருப்பு என்று பொருள் கொள்ளாமல், அன்றிலிருந்து என்றைக்கும் அதாவது எல்லா காலத்திற்கும் என்ற அர்த்தத்தை கொண்டதாகும். மேலும் தொடர்ந்து படிப்போம்.
வரிகள் 14-15: சுவாரசியமாக, இந்தக் கட்டத்தில் சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி இரண்டாவது நபரைப் பயன்படுத்தி ஒரு கேள்வியை கேட்கிறார், “அப்படியானால் அவர்களும் உங்கள் சீடர்களாக கருதப்படுவார்களா?” என்று. அதற்கு ஸ்ரீல பிரபுபாதர் பதில் கூறுகிறார், "ஆம் அவர்கள் சீடர்கள்…” இது எதிர்காலத்தில் வரப்போகும் எந்த சீடர்களாக இருந்தாலும் அவர்கள் மீதான ஸ்ரீல பிரபுபாதரின் உரிமையை இவ்வாக்கியம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஸ்ரீல பிரபுபாதர் என்ன சொல்லப் போகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் அவரது ஆரம்பத்தில் கூறிய பதில் மிகவும் திட்டவட்டமானது. அவரிடம் தனது சொந்த நிலைப்பாட்டைப் பற்றி ஒரு நேரடி கேள்வி கேட்கப்படுகிறது அதற்கு அவர் “ஆம்” என்று பதிலளித்திருக்கிறார்.
அ) & ஆ) மாற்றங்களை தக்கவைத்துக் கொள்வதற்கு ஜிபிசிக்கு ஏதேனும் சாத்தியம் இருந்திருந்தால், ஸ்ரீல பிரபுபாதர், "இல்லை, அவர்கள் என் சீடர்கள் அல்ல” என்ற வகையில் இந்த கேள்விக்கு அவர் அந்த வரிகளில் பதில் அளித்திருக்கக் கூடும். ஸ்ரீல பிரபுபாதர் என்ன சொல்லப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாத காரணத்தால் அது பொருத்தமற்றது. நமக்கு தெரிகின்ற ஒரே விஷயம் என்னவென்றால் எதிர்காலத்தில் தீக்ஷை பெறுபவர்கள் அவருடைய சீடர்களாக இருப்பார்களா என்று கேட்டபோது, அதற்கு அவர் மீண்டும் “ஆம்”, என்றே பதிலளித்தார். இது மாற்றங்கள் அ) மற்றும் ஆ)-விற்கு எந்தவிதத்திலும் சாதகமான அறிகுறி அல்ல.
வரிகள் 16-18: தமால கிருஷ்ண கோஸ்வாமி இங்கே சில குழப்பங்களை உணர்ந்து ஸ்ரீல பிரபுபாதரின் பேச்சை இடைநிறுத்தினார். அவர் மேலும் சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமியின் கேள்வியை ஸ்ரீல பிரபுபாதரிடம், ரித்விக்குகள் மூலமாக தீக்ஷை பெறுபவர்கள் எவருடைய சீடர்களாக இருப்பார்கள் என்று கேட்பதன் மூலம் தெளிவுபடுத்துகிறார். மீண்டும் இந்த கேள்வியை பொதுவாக கேட்பதன் காரணமாக, ஸ்ரீல பிரபுபாதரும் மூன்றாவது நபராக இருந்து பதில்கூறுவதுபோல, "அவர்கள் அவருடைய சீடர்கள்" என்று பதிலளித்தார். நாம் ஏற்கனவே விவாதித்தபடி, ரித்விக் என்பதற்கான வரையறை அவர்கள் தங்களுக்கென்று சொந்த சீடர்களை கொண்டிருக்க முடியாது என்பதால் இங்கே அவர் நிச்சயமாக தம்மைத்தாமே குறிப்பிடுகிறார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். மேலும், (எவர் தீக்ஷை கொடுக்கிறாரோ….. அவருடைய சீடர்கள்) என்று அவர் அந்த கேள்விக்கு ஒருமையில் பதிலளிப்பதன் காரணமாக அவர் நிச்சயமாக தம்மைதாமே தான் குறிப்பிடுகிறார் என்பதை நாம் அறிவோம். ஏனெனில் ரித்விக்குகள் என்று இங்கே பன்மையில் கேள்வி எழுப்பப்படுகிறது. ( “இந்த ரித்விக் ஆச்சாரியர்கள்” )
சில நேரங்களில் ஒரு விதமான யோசனை இங்கே முன்வைக்கப்படுவது என்னவென்றால் உரையாடலின் இந்த குறிப்பிட்ட விஷயத்தைப் பொறுத்தவரை தமால கிருஷ்ணர் கோஸ்வாமி, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, குறிப்பிட்டு சொல்லமுடியாத ஒரு கால கட்டத்தில் ரித்விக்குகள் தங்களை தீக்ஷா குருக்களாக எப்படியாவது மாற்றிக்கொள்வார்களோ என்று நினைத்து சில தெளிவற்ற அர்த்தத்தில் இந்த கேள்வியை கேட்கிறார். இந்தக் கருத்துக் படி, தமால கிருஷ்ணர் கோஸ்வாமியின் மனதின் ஓட்டத்தை தனது ஞானத்தால் யூகித்த ஸ்ரீல பிரபுபாதர் எதிர்காலத்தில் தீக்ஷை பெறுபவர்கள் அவருடைய சீடர்கள் என்று பதிலளித்தார். அவ்வாறு பதிலளித்ததன் காரணத்தால், அவர் (தமால கிருஷ்ணர் கோஸ்வாமி) எவ்வாறு அர்த்தம் கொண்டாரென்றால், ரித்விக்குகளுக்கு அவர்கள் (எதிர்காலத்தில் தீக்ஷை பெறுபவர்கள்) சீடராவார்கள் என்றும், இப்போது ரித்விக்குகளாக இருப்பவர்கள் இனி ரித்விக்குகள் இல்லையென்றும், மாறாக தாங்கள் தீக்ஷா குருக்கள் என்றும் அர்த்தம் கொண்டார். இரண்டு வெவ்வேறு மற்றும் அதிகப்படியான மனக்கற்பனையில் ஆழ்ந்த இந்த மனோநிலை சந்திப்புகளின் வாய் ஜாலங்களை ஓரம் ஒதுக்கிவிட்டு, இவர்களின் கற்பனையான கருத்தில் மற்றுமொரு பிரச்சினை இருப்பதை காண்போம்
இந்த கட்டம் வரை ஸ்ரீல பிரபுபாதர், இதன்பிறகு நியமிக்கப்படும் ரித்விக்குகள், ரித்விக்குகளாக இல்லாமல் வேறு நிலையில் சுதந்திரமாக செயல்படலாம் என்று ரித்விக்குகளைப் பற்றி எதுவும் கூறியிருக்கவில்லை. ஆகவே தமால கிருஷ்ண கோஸ்வாமி, அவர்களின் நிலை மாறவேண்டும் என்று ஏன் கற்பனை செய்தார்?
வரிகள் 19-20: தமால கிருஷ்ண கோஸ்வாமி பதிலை திரும்ப திரும்ப சொல்கிறார், பிறகு ஸ்ரீல பிரபுபாதர் அதைத் தொடர்ந்து கூறினார்: “யார் தீக்ஷை கொடுக்கிறாரோ… அவருடைய பேர சிஷ்யன்.” (“who is initiating... his grand-disciple.”) “அவர் பேர சிஷ்யன்”(“he is grand-disciple”) என்ற பதிப்புக்கு பதிலாக “அவருடைய பேர சிஷ்யன்"(his grand-disciple) என்று எழுதப்பட்ட நகலிலிருந்து இதனை தேர்ந்தெடுத்துள்ளோம். ஏனெனில் இது நம்முடைய ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலிநகளுடன் மிக நெருக்கமாக ஒத்திருக்கிறது. மேலும் உரையாடலின் நடையுடன் சிறப்பாக ஓத்திருக்கிறது. ( இல்லையெனில் தீக்ஷை கொடுப்பவரே பேர சிஷ்யனாக ஆவார் அல்லவா? “யார் தீக்ஷை கொடுக்கிறாரோ… அவரே பேர சிஷ்யன்”, “who is initiating... he is grand-disciple.”)
இங்கு மூன்றாவது நபரைப் போல பேசும்போது ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள் தன்னை குறிப்பிடவில்லை, மாறாக ரித்விக்குகளை தான் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் வைக்கும் வாதத்தினை இப்போது அவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப இந்த உரையாடலுக்கு மாற்றியமைத்து, ”அவருடைய”/”யார்”(“his”/”who”) என்பதை “ரித்விக்” என்று மாற்றி வரிகள் 17-20-ல் பொருத்தி சோதித்துப் பார்க்கலாம். (அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்டுள்ளது )
தமால கிருஷ்ண கோஸ்வாமி: "அவர்கள் யாருடைய சீடர்கள்"
ஸ்ரீல பிரபுபாதர்: "அவர்கள் (ரித்விக்-குகளின்) சீடர்கள்".
தமால கிருஷ்ண கோஸ்வாமி: "அவர்கள் (ரித்விக்-குகளின்) சீடர்கள்".
ஸ்ரீல பிரபுபாதர்: “(ரித்விக்) தீக்ஷை கொடுக்கிறார்கள்…
(ரித்விக்)-குகளின் பேர சீடன்…” (The rtvik) is
initiating...(The rtvik’s) grand-disciple...”
ரித்விக்-குகளுக்கு நியமிக்கப்பட்ட பணியை மட்டுமே செய்ய இடம் உண்டு மற்றும் அவர்களின் பங்கு பிரதிநிதிப்பது மட்டுமே ஆகும். ஆகவே இந்த சுயமாக விளக்கும் ஆதாரத்தைக் கருத்தில்கொண்டு, 17-20 வரிகளுக்கான அவர்களுடைய இந்த விளக்கம் முட்டாள்தனமானது என்பது இதைப் படிப்பவர்களுக்கு தெளிவாக தெரியும். ஒரு ரித்விக் தனக்கென்றே சொந்த சீடர்களை வைத்துக் கொள்ள முடியாத போது பேர-சீடர்களை வைத்துக் கொள்ளலாம் என்பது ஒரு முரண்பாடான கருத்தாகும்.
ஸ்ரீல பிரபுபாதர் தன்னைத்தானே மூன்றாவது நபராக வைத்து பேசுவதாகக் கூறுவதன் மூலம் ஸ்ரீல பிரபுபாதரின் வார்த்தைகளை நாம் ஏதோ ஒரு வகையில் திரிக்கிறோம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், எங்கள் விளக்கம் ஸ்ரீல பிரபுபாதர் தனது ரித்விக்குகளுக்கு கொடுக்கப்பட்ட கடமைகளுடன் இசைந்து போவதாக உணர்கிறோம். இந்த உரையாடலைக் கருத்தில் கொள்வதன் மூலம் இரண்டே சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிகிறது. அவை,
1) எதிர்காலத்தில் வரும் புதிய சீடர்கள் வரையறையின்படி தீக்ஷை குருக்களாக இல்லாத ரித்விக்-பூஜாரிகளுக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். ஆனால், பூஜாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் பிரதிகளாக மட்டுமே செயல்பட முடியும்.
1) எதிர்கால புதிய சீடர்கள் தீக்ஷா குருவாகிய ஸ்ரீல பிரபுபாதருக்கு உரியவர்களாகத்தான் இருக்க முடியும்.
மேற்கூறிய முதல் சாத்தியம் என்பது அபத்தமானது. ஆகையால் இரண்டாம் சாத்தியக் கூறானது பகுத்தறிவுடன் ஒத்துப் போவதால் அதனை தேர்வு செய்து, அதனடிப்படையில் இந்த ஒலிநகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளோம்.
வரிகள் 25-26: ஸ்ரீல பிரபுபாதர் கட்டளையிட்டால் மட்டுமே எவரும் குருவாக முடியும் என்ற தெளிவான நிபந்தனையுடன் உரையை முடிக்கிறார். இப்படிப்பட்ட ஒரு சூழலில் புதிதாக தீக்ஷை பெறுபவர் "என் சீடனின் சீடனாக" இருப்பார்.
"பேர-சீடன்"(Grand-Disciple) என்ற சொல்லைப் பயன்படுத்துவதில் ஒரு பெரிய சவால் உள்ளது. ஸ்ரீல பிரபுபாதரின் இந்த வார்த்தைப் பயன்பாடானது பலருக்கு, விவாதப் பொருளாக உள்ளதால், தீக்ஷை குருமார்கள் இருந்தால் மட்டுமே பேர-சீடர்கள் உருவாக முடியும். இது உண்மைதான். துரதிருஷ்டவசமாக "அவரது பேர-சீடன்" என்ற சொல்லுக்குப் பின் வரும் வார்த்தைகள் பொதுவாக புறக்கணிக்கப்படுகின்றன. ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடரை தீக்ஷை குருவாக மாறும்படி கட்டளையிடும் போது மட்டுமே பேர-சீடன் வர முடியும். வேறு விதமாகக் கூறினால், ஸ்ரீல பிரபுபாதர் எளிமையாக கூறுகிறார், ஒரு குருவானர் தனது சீடரை தீக்ஷை குருவாக மாறும்படி கட்டளையிட்டால் மட்டுமே, அவருக்கு பேர சீடர்கள் இருப்பார்கள் என்கிறார். ஏனெனில் புதியதாக தீக்ஷைபெற்ற குரு தனது சுய உரிமையின் அடிப்படையில் தீக்ஷை கொடுக்கும்போது “அவர் என் சீடரின் சீடராகிறார்". இது வார்த்தைகள் நேரடியானதாகத் தெரிந்தாலும், இதில் உள்ள மற்றொரு கருத்தை யாராலும் மறுக்கமுடியாது. அது என்னவெனில் இந்த குருத்துவம் நிகழ வேண்டிய கட்டளை எங்கே இருக்கிறது? நிச்சயமாக 25-26 வரிகளில் இல்லை. அந்த விஷயத்தைப் பற்றி உரையாடலில் வேறு எங்கும்கூட இல்லை.
உண்மையில், மே-28-ல் நிகழ்ந்த உரையாடலில் எந்தவொரு குறிப்பிட்ட நபரையும் எதையும் செய்யும்படி கட்டளையிடவே இல்லை. மாறாக, ஸ்ரீல பிரபுபாதர், வெறுமனே எதிர்காலத்தில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் ரித்விக்குகளை நியமிக்கும் தனது நோக்கத்தை தெரியப்படுத்துகிறார். பிறகு, ரித்விக் அமைப்பில் உள்ள குரு-சிஷ்ய உறவுகள் பற்றிய சற்றே குழப்பமான கேள்விகளுக்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கிறார். அதன்பின்னர், ஒருவர் தீக்ஷை குருவாக மாறுவதற்கு உரிய உத்தரவை வழங்க முடிவு செய்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய அறிக்கையுடன் மட்டுமே அவர் முடிக்கிறார். எப்படியாயினும், குறிப்பிட்ட செயல்பாடுகளைச் செய்ய, குறிப்பிட்ட நபர்களின் பெயர்களைக் குறிப்பிடும், குறிப்பிட்ட உத்தரவு முதலில் ஜூலை 7-ஆம் தேதி எழுதப்பட்டது. (தயவுசெய்து பின் இணைப்புகள், பக்கம்.165-ஐப் பார்க்கவும்), பின்னர் ஜூலை 9-ஆம் தேதி கையெழுத்திட்ட கடிதத்தில் உறுதிப்படுத்தப்பட்டது என்பது தெளிவாகிறது. ஆனால் ஜூலை-9 ஆம் தேதி கையெழுத்திட்ட கடிதத்தைப் படிப்பதன் மூலம் பதினோரு ரித்விக்குகள் எப்போதாவது தீக்ஷை குருவாக மாறுவது பற்றியோ அல்லது ரித்விக் அமைப்பு நிறுத்தப்படுவதைப் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதைப் பார்க்க முடியும்.
மே 28 உரையாடலின் ஆழ்ந்த மற்றும் நீண்ட பகுப்பாய்விற்குப் பிறகு, ஆட்சிக்குழு ஆணையம் (GBC-Governing Body commission) முன்வைப்பது ஒரு பழமையான சுற்றிவளைத்துப் பேசும் வாதம் என்பது தெளிவாகிறது:
தற்போது ISKCON-ல் உள்ள குருக்களின் நிலையை ஆதரிப்பதற்கு மாற்றங்கள் அ) மற்றும் ஆ) - வானது முற்றிலும் இன்றியமையாதவையாகும். ஆகையால், மே 28-ஆம் தேதி உரையாடலின் எழுத்துப் பதிவில், ஸ்ரீல பிரபுபாதரால் தத்துவமாக கூறப்படும் "உத்தரவு" அடிப்படையில் ஜூலை 9-ஆம் தேதி கடிதத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று எங்களிடம் கூறினார்கள். இருப்பினும், ஸ்ரீல பிரபுபாதரின் மொழிபெயர்ப்பை கவனமாகப் படித்த பிறகு, "நான் கட்டளையிடும்போது" மட்டுமே குருவாக இருக்க முடியும் என்று அவர் கூறுவதைக் காண்கிறோம். ஆகவே இந்த "நான் கட்டளையிடும் போது" என்பது ஜூலை 7 மற்றும் 9-ஆம் தேதிகளில் ஸ்ரீல பிரபுபாதரால் இறுதியாக போடப்பட்ட அதே "உத்தரவு" என்று எப்படி நிரூபிக்க முடியும்?. ஏனெனில் இந்த "உத்தரவு" முற்றிலும் ரித்விக்குகளை உருவாக்குவதற்கானதாகும். ஆனால் அதே "உத்தரவு" என்ற வார்த்தையை பயன்படுத்தி ஆட்சிக்குழு ஆணையம் (GBC-Governing Body commission) அவர்களின் முக்கியமான அ) மற்றும் ஆ) மாற்றங்களை எப்படி ஆதரிக்க முடியும்?
துரதிர்ஷ்டவசமாக, இஸ்கானின் குருவும் தீக்ஷையும் (GII-Guru in Iskcon and Initiation)-என்ற புத்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட வாதங்களை பார்க்கும் போது, மேற்கண்ட அபத்தமான விதண்டாவாதத்திற்கு தவிர்க்க முடியாமல் இழுக்கப்படுவதைக் காண்கிறோம்.
மேலே உள்ள தவிர்க்க முடியாத நிலையை புரிந்துகொள்வதற்கான உதவியாக,பக்கம் -141 இல் உள்ள ஆய்வு விளக்கப்படத்தைப் பார்க்கவும்.
இறுதியாக, "மாற்றியமைத்த(modification)" கோட்பாட்டில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், வெளிப்படையான எந்தவொரு தெளிவான ஆதாரமும் இல்லாமல், மக்களுக்கு கிடைக்கவேண்டிய மற்றும் மக்களால் பின்பற்றப்பட வேண்டிய கட்டளைகளைக் கொண்ட ஒரு உபதேசத்தை, சட்டப்படி எப்படி மாற்றியமைக்கவோ அல்லது அவர்களுக்கு கிடைக்கப்பெறாமலோ செய்ய முடியும்.
மே 28 உரையாடலில் மாற்றங்களை ஆதரிக்கும் தெளிவான வழிமுறைகள் அ) மற்றும் ஆ)-வில் இருந்திருந்தால், நிச்சயமாக இறுதி கடிதத்தில் குறைந்தபட்சம் சில குறிப்புகளையாவது உள்ளடக்கியிருக்க வேண்டும். உண்மையில், மே 28 அன்று நடந்த உரையாடலின் முக்கிய நோக்கம், ஸ்ரீல பிரபுபாதர் பூமியை விட்டு வெளியேறிய பிறகு, தீக்ஷைகள் பற்றி என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக உறுதிபடுத்துவதாகும். ஆனால், அவர்கள் கூறுவது என்னவென்றால் ஸ்ரீல பிரபுபாதர் தீக்ஷைக் குறித்த தனது கடைசி எழுத்துப்பூர்வ உத்தரவை வெளியிட்டுவிட்டார் என்று கூறுகின்றனர். மாறாக, அதில், அவர் பூமியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் குறிப்பிட்டிருந்தார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஸ்ரீல பிரபுபாதரிடம், தெளிவான மற்றும் உறுதிப்படுத்துகின்ற எந்தவொரு உத்தரவுகளையும் கேட்கவில்லை. அதேசமயம் மிகவும் முக்கியமான விஷயம், எல்லோரும் தெரிந்து கொள்ள விரும்பிய ஒன்று என்னவென்றால், எதிர்கால தீக்ஷைகளைப்பற்றி அடுத்த பத்தாயிரம் ஆண்டுகள் வரை எழக்கூடிய பிரச்சனைகள் குறித்து. அவர் தனது கடைசி கையெழுத்திட்ட உபதேசத்தில் அந்த விஷயங்களை முற்றிலும் தவிர்த்து விட்டார்.
ஸ்ரீல பிரபுபாதர் தனது சமூகத்தை கீழ்கண்ட முறையில் வழிநடத்தியதற்கான எந்த உதாரணத்தையும் இதற்குமுன் நாம் காண முடியாது.
1) எந்த முக்கிய நோக்கத்திற்காக வெளியிடப்படுகிறதோ, அதை கூட நிவர்த்தி செய்யத் தவறும் உத்தரவுகளை வெளியிடுதல்.
2) புதிய மேலாண்மை முறை தொடர்பான முக்கிய தகவல்களை வேண்டுமென்றே நிறுத்தி வைக்கும்படியானவைகள்.
3) அவரது உபதேசங்களை பெறுபவர்கள் அதிமேதாவிகளாக இருந்தால் மட்டுமே தனது மனதை சரியாகப் புரிந்துகொண்டு பின்பற்ற முடியும் என்று எதிர்பார்க்கும் படியானவைகள்.
ஸ்ரீல பிரபுபாதர் ஒவ்வொருவரும் எப்படி ஒரு தீக்ஷைக் குருவாக வேண்டுமென்று விரும்பி, அவர் ஏற்கனவே தனது புத்தகங்கள் மற்றும் விரிவுரைகளில் தெளிவாக விளக்கியிருப்பதால், இறுதிக் கடிதத்தில் எதிர்காலத் தீக்ஷைகளைப் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்ற பொதுவான வாதம் 7-ஐ ஏற்கனவே முறியடிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது(பக்கம் 35-ல் உள்ள மறுப்பை பார்க்கவும்). மே 28 உரையாடலிலிருந்து சிலவற்றை பிரித்தெடுக்க குருவும் தீக்ஷையும் (GII-Guru in Iskcon and Initiation)- என்ற புத்தகத்தில் மேலும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அ) மற்றும் ஆ) க்கு ஆதரவாக ஸ்ரீல பிரபுபாதர் சுட்டிக்காட்டும் ஸ்லோகத்தை, வரி 12-ல் "ஆமார ஆக்யா குரு ஹனா" என்பதை பயன்படுத்துவதாகும். மே-28 உரையாடலுக்குப் பிறகு ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை மொழிபெயர்க்கும் தருணத்தில் மேற்கண்ட ஸ்லோகம் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இந்தக் கண்ணோட்டத்தின்படி, ரித்விக் உத்தரவானது, ஒரு தீக்ஷை குருவாக இருப்பதற்கான ஆணைக்கு ஒத்ததாக இருக்கிறது. ஸ்ரீல பிரபுபாதர், "அனைவரும் குருவாக வேண்டும்" என்ற பகவான் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் இந்த புகழ்பெற்ற உபதேசத்தை, ரித்விக்குகளைப் பற்றி விவாதிக்கும் அதே உரையாடலில் குறிப்பிடுகிறார். ஆனால் ஸ்ரீல பிரபுபாதர் குறிப்பிடுவது என்னவென்றால் -
"...அதே பரம்பரையை சேர்ந்த தன் குருவின் கட்டளையை, யாரொருவர் புரிந்துகொள்கிறாரோ, அவரே குருவாக முடியும். எனவே உங்களில் சிலரை நான் தேர்ந்தெடுப்பேன்." (மே 28, 1977 உரையாடல்)
இங்கே கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னவெனில்:
1. அவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய "குருவின் கட்டளை" என்ன? - ரித்விக்குகளாக செயல்பட வேண்டும் என்பதே . ("உங்களில் சிலரை ஆச்சாரிய பிரதிநிதிகளாக செயல்பட நான் பரிந்துரைக்கிறேன்.")
2. அவர்கள் இறுதியில் எதைச் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? ரித்விக்குகளாக செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.(தயவுசெய்து ஜூலை 9 கடிதத்தைப் பார்க்கவும், ப.155)
3. மேலும் குருவின் கட்டளையைப் பின்பற்றுவதன் மூலம், அவர்கள் எப்படிப்பட்ட குருவாக மாறுகிறார்கள்? பகவான் சைதன்யரின் "குருவாகுங்கள்" என்ற கட்டளையின் பகுப்பாய்விலிருந்து முன்னர் பார்த்தது போல, இந்த உத்தரவை உண்மையுடன் நிறைவேற்றும் எவரும் தானாகவே தகுதிவாய்ந்த சிக்ஷா குருவாக ஆகிறார்கள்.
ரித்விக்குகளாக ( தீக்ஷை குருவாக அல்லாமல்) மட்டுமே செயல்பட வேண்டும் என்ற குருவின் கட்டளையைப் பின்பற்றும்போது, ஒருவர் தானாகவே தீக்ஷை குருவாகச் செயல்பட வேண்டும் என்ற முரண்பாடான கருத்தை குருவும் தீக்ஷையும் (GII-Guru in Iskcon and Initiation) முன்வைக்கிறது.
இந்த தர்க்கத்தின்படி பார்த்தால், குருவின் எந்த உத்தரவையும் பின்பற்றும் எவரும் எப்படியாவது ஒரு குறிப்பிட்ட உத்தரவைப் பெறுவதால், அவர்களும் தீக்ஷை குருவாக ஆகிவிடுவார்களே! துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆய்வறிக்கையை ஆதரிக்கும் விதமாக, இஸ்கானின் குருவும் தீக்ஷையும் (GII-Guru in Iskcon and Initiation) எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. முன்பு காட்டப்பட்டது போல், "ஆமார ஆக்ஞயா" என்ற ஸ்லோகத்தின் பயன்பாடு வெறுமனே அனைவரும் ஒரு சிக்ஷா குருவாக மட்டுமே இருக்க முடியும் என்பதற்கான ஒரு கட்டளையாகும் ("எனவே எந்த சீடர்களையும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது சிறந்தது.").
முடிவுரை
1. ஜூலை 9, 1977 அன்று ஸ்ரீல பிரபுபாதர், 'இனிமேல்'(henceforward) முதல் மற்றும் இரண்டாவது தீக்ஷையை முன்னெடுத்து செல்ல வேண்டிய 11 ரித்விக்குகளை மட்டுமே நியமித்தார்.
2. ஸ்ரீல பிரபுபாதர் இப்பூமியைவிட்டு வெளியேறியவுடன் ஜூலை 9 ஆம் தேதி உத்தரவை மாற்றி, நியமிக்கப்பட்ட ரித்விக்குகள் தங்கள் கடமைகளை நிறுத்த வேண்டும் என்பதற்கான எந்த ஆதாரமும் மே-28 உரையாடலில் இல்லை.
3. ஸ்ரீல பிரபுபாதர் இப்பூமியைவிட்டு வெளியேறியவுடன் ஜூலை 9 ஆம் தேதி நியமிக்கப்பட்ட ரித்விக்குகள் அந்த உத்தரவை மாற்றி தீக்ஷை குருக்களாக மாறலாம் என்ற வார்த்தைகள் மே 28ம்தேதி உரையாடலில் எதுவும் இல்லை.
4. மே-28 உரையாடலில் தெளிவாக ஸ்தாபிக்கப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால், ஸ்ரீல பிரபுபாதர் வெளியேறிய பிறகு ரித்விக்குகள் செயல்பட வேண்டும் என்பதே.
இதே உரையாடலுக்கு குறைந்தது நான்கு வெவ்வேறு எடுத்து பெயர்ப்புகள்(transcript) மற்றும் மூன்று வெவ்வேறு "அதிகாரப்பூர்வ" விளக்கங்கள் ஆட்சிக்குழு ஆணையத்தில் (GBC-Governing Body commission) உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன்காரணமாகவே உரையாடலை மட்டுமே வைத்து, உறுதியான ஆதாரமாக அந்த உரையாடலைக் கருத முடியாது என்று பல பக்தர்கள் உணர்கிறார்கள். இது வாசகரின் முடிவாக இருக்க வேண்டுமானால், ஜூலை 9 ஆம் தேதிக்கான இறுதி உத்தரவிற்கு மீண்டும் ஒருமுறை திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. ஏனெனில், அது கையெழுத்திட்ட கடிதம். அதில் தெளிவாக எழுதி முழு இயக்கத்திற்கும் அனுப்பப்பட்டது. இது நிச்சயமாக நீதிமன்றத்தின் முடிவாகவும் இருக்கும். கையொப்பமிடப்பட்ட, எழுதப்பட்ட சான்றுகள் எப்போதும் ஒலிநாடா பதிவுகளை விட முன்னுரிமை பெறுகின்றன. மே 28 உரையாடலை நாங்கள் இங்கு மிகவும் கவனமாக ஆய்வு செய்ததற்குக் காரணம், அ) மற்றும் ஆ) மாற்றங்களை ஆதரிக்கும் ஒரே ஆதாரமாக ஆட்சிக்குழு ஆணையம் (GBC-Governing Body commission) அதை முன்வைத்ததால்தான்.
ISKCON-ன் தீக்ஷை குறித்த ஆட்சிக்குழு ஆணையத்தின் (GBC-Governing Body commission)-தற்போதைய நிலைப்பாட்டின் அ) மற்றும் ஆ) மாற்றங்களை முழுமையாக நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏனெனில் அவற்றை ஆதரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதன் விளைவாக, ஜூலை 9 ஆம் தேதி வழங்கப்பட்ட கொள்கை உண்மையில் ஸ்ரீல பிரபுபாதரின் தீக்ஷை குறித்த இறுதி உத்தரவை பின்பற்றப்பட வேண்டிய ஆவண உபதேசங்களாக இருக்கின்றன என்பதேயாகும்.
இது தொடர்பான சில ஆட்சேபனைகளை இங்கே காணலாம். இது உங்களுடைய தகவலுக்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
தொடர்புடைய பிற ஆட்சேபனைகள்
|
1. “ஸ்ரீல பிரபுபாதர் தனது புத்தகங்களில் ரித்விக்குகளை பயன்படுத்துவதைப் பற்றி குறிப்பிடவில்லை." |
1) ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களில் "ரித்விக்" ("பூஜாரி" என்று பொருள்) மற்றும் அதன் விளக்கங்கள் உண்மையில் 31 தனித்தனி இடங்களில் குறிப்புகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. "தீக்ஷை” மற்றும் அதன் விளக்கங்களைவிட சற்று குறைவாகவே உள்ளன. இதைப்பற்றி ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களில் 41 தனித்தனி இடங்களில் குறிப்புகளாக கொண்டுள்ளன. நிச்சயமாக, சடங்குகளில் உதவுவதற்கு ரித்விக் குருமார்களைப் பயன்படுத்துவதை ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட கருத்துகள் பின்வருமாறு:
ரித்விக்: 4.6.1 / 4.7.16 / 5.3.2 / 5.3.3 / 5.4.17 / 7.3.30 / 8.20.22 / 9.1.15
ரித்விஜ: 4.5.7 / 4.5.18 / 4.7.27 / 4.7.45 / 4.13.26 / 4.19.27 / 4.19.29 / 5.3.4 / 5.3.15 /
5.3.18 / 5.7.5 / 8.16.53 / 8.18.21 / 8.18.22 / 9.4.23 / 9.6.35
ரித்விஜம்: 4.6.52 / 4.21.5 / 8.23.13 / 9.13.1
ரித்விக்ப்ய: : 8.16.55
ரித்விக்பி: : 4.7.56 / 9.13.3
(இந்த அனைத்துக் குறிப்புகளும் ஸ்ரீமத் பாகவதத்திருந்து)
2)ஆன்மீகக் கொள்கைகள் ஸ்ரீல பிரபுபாதரால் அவரது புத்தகங்களில் விரிவாகப் பேசப்பட்டிருந்தாலும், அந்தக் கொள்கைகள் குறித்த விவரங்கள் பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை (உதாரணமாக விக்ரஹ வழிபாடு என்ற விஷயத்தில்). இந்த குறிப்பிட்ட விவரங்கள் பொதுவாக கடிதங்கள் மற்றும் நடைமுறை விளக்கம் போன்ற பிற வழிகளில் தெரிவிக்கப்பட்டன. எனவே, ஒருவர் தீக்ஷை அல்லது தீக்ஷை கொள்கைக்கும் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துதலின் விவரங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். ஸ்ரீல பிரபுபாதர் தீக்ஷையை வெறுமனே ஏதோவொரு சடங்கு சம்பிரதாயத்தின் அடிப்படையில் வரையறுக்கவில்லை. மாறாக முக்திக்கு வழிவகுக்கும் தெய்வீக அறிவைப் பெறுவதற்கான முன் அனுமதி என்று வரையறுத்துள்ளார்.
"வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆன்மீக குருவானவர் உறங்கிக்கொண்டிருக்கும் ஆத்மாவை அதன் சுயஉணர்வுக்கு வரவழைக்க எழுப்புகிறார். இவ்விதமாக, அந்த ஆத்மாவால் பகவான் ஸ்ரீவிஷ்ணுவை வழிபட முடியும். இதுவே தீக்ஷை அல்லது தீக்ஷையின் நோக்கம். தீக்ஷை என்றால் ஆன்மீக உணர்வின் பவித்ரமான அறிவை பெறுதல்."
(சைதன்ய சரிதாம்ரும். மத்தியலீலை, 9.61. பொருளுரை )
"தீக்ஷை என்பதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால், திவ்யமான அறிவை சீடனுக்கு அளித்து அதன்மூலம் அவனை அனைத்து உலகாயதமான களங்கங்களிலிருந்தும் விடுவிப்பதாகும்."
(சைதன்ய சரிதாம்ரும். மத்திய லீலை, 4.111. பொருளுரை)
"ஒருவனது தெய்வீக ஞானத்தை விழிப்படையச் செய்யவும், பாவச் செயலால் ஏற்படும் அனைத்து எதிர்வினைகளையும் அழிக்கும் செயல்முறையே தீக்ஷையாகும். சாஸ்திரங்களை படிப்பதில் கைதேர்ந்த நிபுணர் இந்த செயல்முறையை தீக்ஷை என்று அறிவார்."
(சைதன்ய சரிதாம்ரும்.மத்திய லீலை, 15.108. பொருளுரை)
தீக்ஷை என்பது சாமான்யமாக ஒரு சடங்கைக் கொண்டுள்ளது. ஆனால் அதுவே முற்றிலும் அவசியமில்லை. வெறுமனே அது ஒரு சடங்குமுறையாகும்.
"எப்படியிருந்தாலும், 1922 முதல் 1933 வரை நடைமுறையில் நான் தீக்ஷைப் பெறவில்லை. ஆனால் நான் பகவான் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் பிரச்சார இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டேன். பின்னர் அதை பற்றி நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது, எனது குரு மஹாராஜரால் தீக்ஷையளிக்கப்பட்டேன்."
(ஸ்ரீல பிரபுபாதர் உபன்யாசம் , 10/12/1976, ஹைதராபாத்)
"தீக்ஷை என்பது ஒரு சடங்காகும். நீங்கள் சிரத்தையாக இருந்தால், அதுவே உண்மையான தீக்ஷையாகும். [...] எனது தொடுதல் வெறுமனே ஒரு சடங்காகும். இது உங்களுடைய வைராக்கியம். அதுதான் தீக்ஷை."
("தெய்வீகத்திற்கான தேடல்", மீண்டும் கடவுளுக்கு #49)
"...குரு சீடப் பரம்பரை என்பது எப்பொழுதும் ஒருவர் சடங்குரீதியாக தீக்ஷியளிக்கப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. குரு சீடப் பரம்பரை என்பது பரம்பரையின் முடிவை ஏற்றுக்கொள்வதாகும்."
( ஸ்ரீல பிரபுபாதர், தினேஷருக்கு எழுதிய கடிதம், 31/10/1969)
"ஹரே கிருஷ்ணாவை உச்சரிப்பதுதான் நமது முக்கிய வேலை. அதுதான் உண்மையான தீக்ஷை. மேலும் நீங்கள் அனைவரும் எனது உபதேசத்தைப் பின்பற்றுவதால், அந்த விஷயத்தில், ஏற்கனவே தீக்ஷை இருக்கிறது."
(ஸ்ரீல பிரபுபாதர், தமால கிருஷ்ணருக்கு எழுதிய கடிதம், 8/19/1968)
"நல்லது, தீக்ஷை கிடைக்கிறதோ இல்லையோ, முதல் விஷயம் அறிவு... அறிவு. தீக்ஷை என்பது சடங்கு. நீங்கள் அறிவிற்காக ஒரு பள்ளிக்குச் சென்று சேர்கிறீர்கள், அப்படியென்றால் சேர்க்கை என்பது ஒரு சடங்கு. அது ஒன்றும் மிகவும் முக்கியமான விஷயம் அல்ல."
(ஸ்ரீல பிரபுபாதர் நேர்காணல், 16/10/1976, சண்டிகர்)
ஸ்ரீல பிரபுபாதர்: "எனது சீடர் யார்? முதலில் அவர் ஒழுக்க விதிகளை
கண்டிப்பாக பின்பற்றட்டும்."
சீடர்: "ஒருவர் பின்தொடரும் வரை, அவர்...
ஸ்ரீல பிரபுபாதர்: "பின்னர் அதுவே போதுமானது."
(ஸ்ரீல பிரபுபாதரின் காலை நடைபயிற்சி, 13/6/1976, டெட்ராய்ட்)
"...ஒழுக்கம் இல்லாவிட்டால், சீடன் என்ற பேச்சுக்கே இடமில்லை. சீடர் என்றால் ஒழுக்கத்தைப் பின்பற்றுபவர் என்று பொருள்."
(ஸ்ரீல பிரபுபாதர் காலை நடைப்பயிற்சி, 8/3/1976, மாயாபூர்)
"ஒருவன் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், அவன் சீடன் இல்லை."
(ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீமத் பாகவதம். உபன்யாசம், 21/1/1974)
இவ்விதமாக, தீக்ஷை சடங்குவிழா என்பது ஒரு வழக்கத்திற்காக நடத்தப்பட்டு சீடரின் மனதை திடப்படுத்தி, தீக்ஷை என்ற வழிமுறைக்கு அவரை அர்ப்பணிக்க செய்யப்படும் ஒரு சடங்குமுறையாகும். அத்தகைய அர்ப்பணிப்புகள் பின்வருமாறு:
● எல்லா களங்கங்களிலிருந்தும் ஒருவரைத் தூய்மைப்படுத்துவதற்கு தெய்வீக அறிவைப் பெறுதல்.
● தீக்ஷை குருவின் கட்டளையை எப்போதும் பின்பற்ற வேண்டும் என்ற உறுதியை காத்தல்.
● ஆன்மீக குருவின் கட்டளைகளை உற்சாகத்துடன் செயல்படுத்தத் தொடங்குவது.
தீக்ஷை விழா சடங்கு என்பது ஒரு சாதாரண சடங்கு மட்டுமே அவ்வளவுதான், ஆனால் அதுவே சாராம்சமில்லை என்று ஸ்ரீல பிரபுபாதர் தெளிவாகக் கூறியுள்ளார். மேலும், இந்த சடங்குமுறையான தீக்ஷைகூட விழாவாக செயல்படுத்தும்போது பல அம்சங்களை உள்ளடக்கியது:
1. மடத்தின் நிர்வாகத்தில் இருக்கும் நபர் ஒருவரிடமிருந்து பரிந்துரைக்கப் படவேண்டும். பொதுவாக கோயில் தர்மகர்தாவாக அவர் இருப்பார்.
2. ரித்விக்குகளாக செயல்படுபவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
3. அக்னி ஹோம யாகத்தில் பங்கேற்பது.
4. ஒரு ஆன்மீகப் பெயரை ஏற்றுக்கொள்ளுதல்.
மேற்கண்ட வரிசை எண்களில் 2 மற்றும் 4-ல் மட்டுமே ஒரு ரித்விக் பூஜாரியை ஈடுபடுத்த முடியும், 1 மற்றும் 3 ஆகியவை பொதுவாக கோயில் தலைவரால் மேற்கொள்ளப்பட்டது.
முன்பு கூறியது போல், தெய்வீக ஞானம், பாவ வினைகளை அழித்தல், அக்னி ஹோம யாகச்சடங்கு மற்றும் ஆன்மீக நாமம் பெறுதல் போன்ற எந்தவொரு அம்சத்தையும் சீடன் பெறுவதற்கு குருவும் சீடனும் ஒரே நேரத்தில் இப்பூமியில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை. மறுபுறம், தீக்ஷையின் ஒவ்வொரு கூறுகளும் (ஆன்மீக அறிவை வழங்குதல், யாகம் போன்றவை) குருவின் உடல்ரீதியிலான இருப்பு இல்லாமல்கூட மிக எளிதாக வழங்கப்படலாம். எவ்வாறெனில் அவர் தனது சீடர்கள் மற்றும் புத்தகங்கள் போன்றவற்றின் மூலம் தீக்ஷையின் அனைத்து கூறுகளையும் வழங்கியதின் மூலம் ஸ்ரீலபிரபுபாதரால் அவைகள் நடைமுறையில் நிரூபிக்கப்பட்டது. எனவே, ரித்விக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் எந்த ஆன்மீகக் கொள்கைகளும் மாற்றப்படுவதில்லை. விவரத்தில் மட்டுமே ஒரு மாற்றம் இருக்கிறது.
எனவே, ரித்விக்குகளை பயன்படுத்தும் கண்ணோட்டத்தை பொறுத்தவரைக்கும், நாம் ஒரு சடங்குமுறையான விழாவின் விவரங்களை கையாளுகிறோம் என்பது காட்டப்பட்டுள்ளது. இந்த விழாவானது அதில் ஒரு கூறு மட்டுமேயாகும், ஆனால் அது தீக்ஷை என்ற தெய்வீக செயல்முறையில் ஒரு முக்கியமற்ற கூறு என்பதை கீழ்க்கண்ட அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது (தயவுசெய்து பக்கம்.139 இல் "தீக்ஷை" வரைபடத்தை பார்க்கவும்).
ஸ்ரீல பிரபுபாதர் இந்த அனைத்து கூறுகளையும் அவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப எவ்வாறு சரிசமமாக கையாண்டார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்:
|
அம்சம் |
புத்தகங்களில் விளக்கப்பட்டுள்ளதா ? |
பாரம்பரியத்தை பின்பற்றுகிறதா? |
பாரம்பரியத்திலிருந்து மாபெரும் மாற்றங்களா? |
பாரம்பரியத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் புத்தகங் களிலும் விளக்கப் பட்டுள்ளதா? |
|
தீக்ஷை |
ஆம் |
இல்லை |
ஞானம் முதன்மையாக வாணி மூலமாக வழங்கப்படுகிறது. ஆனால் உடல் ரீதியிலான தொடர்பினால் அல்ல
தனிப்பட்ட பரீட்சை கொஞ்சம் பயன்படுத்தப்படுகிறது
புதிய தீக்ஷை நெறிமுறையை பின்பற்றுகிறது |
சில இடங்களில் |
|
தீக்ஷை விழா |
இல்லை |
இல்லை |
தீக்ஷை மணிகளை வைத்து நாமம் உச்சரிக்க பிரதிநிதிகளை பயன்படுத்துதல்
ஒலி நாடா மூலம் காயத்ரி மந்திரத்தை வழங்குதல் |
இல்லை |
|
நாமம் வழங்கும் முறை |
இல்லை |
இல்லை |
ஹரி நாம தீக்ஷை வழங்கும் நேரத்தில் நாமத்தை வழங்குதல்
பிரதிநிதிகளை பயன்படுத்தி நாமம் வழங்குதல் |
இல்லை |
எனவே, ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களில், வரலாற்று ரீதியாகவோ அல்லது சமகாலமாகவோ ரித்விக்குகளைப் பயன்படுத்துவது குறித்தான குறிப்பிட்ட குறிப்பு இல்லாதது, தீக்ஷை நடைமுறை விஷயங்களில் ஸ்ரீல பிரபுபாதரின் கொள்கைமாறாத அணுகுமுறையுடன் ஒத்துப்போகிறது. குறிப்பாக, அவரது புத்தகங்களில் எவ்வாறு புதுமைகளை நடைமுறைப்படுத்தினாரோ அவ்வாறே இதிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
|
2. "தீக்ஷையின் இன்றியமையாத அங்கமான பரீட்சை (அதாவது, சீடருக்கும் குருவிற்கும் இடையிலான பரஸ்பர சோதனை) உடல்ரீதியிலான தொடர்பு இல்லாமல் எவ்வாறு அடைய முடியும்?" |
ஒரு சீடர் ஒரு குருவை "அணுக வேண்டும்", "அவரிடம் பணிவான கேள்விகளை கேட்க வேண்டும்" மற்றும் "சேவை செய்ய வேண்டும்" (பகவத்கீதை. 4.34), மற்றும் குரு சீடரை "கண்காணிக்க" வேண்டும் (ஸ்ரீசைதன்ய சரிதாம்ரும். மத்யலீலை, 24.330) என்று குறிப்பிடப்பட்ட நிபந்தனையிலிருந்து இந்தக் கேள்வி எழுகிறது. இந்த ஸ்லோகங்களை நாம் கவனமாக ஆராய்ந்தால் பின்வரும் கேள்விகளுக்கு விடைகள் புலப்படும்.
● இந்த "விசாரித்தல்", "சேவை செய்தல்" மற்றும் "கவனித்தல்" ஆகியவற்றுக்கு நேரடியான தொடர்பு தேவை என்று குறிப்பிடப்படவில்லை.
● பகவத்கீதை.4.34-ல் இந்தச் செயல்பாடுகள் ஒரு சீடருக்கு இன்றியமையாதவை என்று கூறுகிறது. அப்படியென்றால், இந்த செயல்களுக்கு குருவும் சீடரும் ஒரே நேரத்தில் இந்த பூமியில்தான் இருக்க வேண்டியது அவசியம் என்றால், நவம்பர் 14, 1977-க்குப் பிறகு யாரும் ஸ்ரீல பிரபுபாதரின் சீடராக இருக்கமுடியாதே!
● இந்த “விசாரணை” நடந்ததன் காரணமாக "ஆன்மீக குருவானவர்” “ஞானத்தை வழங்க" முடியும். இருப்பினும், "ஞானம் வழங்குவது" என்பது சிக்ஷா என்பதின் வரையறையாகும். மேலும் சிக்ஷா வழங்குவதற்கு அல்லது சிக்ஷா தொடர்பான விசாரணைகளை ஏற்றுக்கொள்வதற்கு, குரு பூமியில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது ("குரு உடல் ரீதியாக இருக்க வேண்டுமா?" தயவுசெய்து பக்கம்.143-ஐப் பார்க்கவும்.) மேலும், மேலே விளக்கப்பட்டுள்ள, இந்த முன்மொழிவின் தர்க்கத்தின்படி, நவம்பர் 14, 1977-முதல் யாருக்கும் "ஞானம்" வழங்கப்படவில்லை.
● "கவனித்தல்" (Observing) என்பது, முன்னேற விரும்பும் சீடரால் ஒழுங்குமுறைப்படுத்தும் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கும், குருவின் பிரதிநிதிகளால் கண்காணிக்கப்படுவதற்குமான ஒப்பந்தமாகும்.
"நமது கிருஷ்ண பக்தி இயக்கத்தின் அவசியம் என்னவென்றால், பாவ வாழ்வின் நான்கு தூண்களை கண்டிப்பாக கைவிடுவதற்கு ஒருவர் தயாராக இருக்க வேண்டும் என்பதேயாகும் [...] குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், ஒரு ஆற்றல்மிகுந்த சீடர் ஒழுங்குமுறைக் கொள்கைகளைப் பின்பற்றத் தயாராக உள்ளாரா என்பதை நாங்கள் முதலில் கண்காணிக்கிறோம்." (ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம். மத்திய-லீலை, 24.330, பொருளுரை, உறுதிப்படுத்தும் விதமாக சேர்க்கப்பட்டது)
பிரதிநிதிகளைப் பயன்படுத்துவதற்கான இந்த வசதி சில வரிகளுக்குப் பிறகு, முன்னேற விரும்பும் இரண்டாம் தீக்ஷை விண்ணப்பதாரர்களுக்கு தேவையான கவனிப்பைப் பற்றி விவாதிக்கும் போது மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது:
"இந்த வழியில் சீடர் குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆன்மீக குரு அல்லது அவரது பிரதிநிதிகளின் வழிகாட்டுதலின் கீழ் பக்தி சேவை செய்கிறார்." (ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம். மத்தியலீலை, 24.330, பொருளுரை, உறுதிப்படுத்தும் விதமாக சேர்க்கப்பட்டது)
சில வரிகளுக்குப் பிறகு, பிரதிநிதிகளின் பயன்பாடு உண்மையில் எவ்வளவு முக்கியமானது என்பதைப் பார்ப்போம்:
"ஆன்மீக குருவானவர் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்காவது சீடருடைய கேள்விஞானத்தை பரிசீலிக்க வேண்டும்."
(ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம். மத்திய-லீலை, 24.330, பொருளுரை)
● ஸ்ரீல பிரபுபாதர் சங்கத்தை அமைத்த மார்க்கத்தை மனதில் கொண்டு, மேற்கண்ட நிபந்தனையைப் பின்பற்றுவது சாத்தியமில்லை. அவர் தனது ஆயிரக்கணக்கான சீடர்கள் ஒவ்வொருவரையும் முழுமையாக 6 மாதங்கள் வரை கவனித்துக்கொண்டிருக்க முடியவில்லை. ஸ்ரீல பிரபுபாதரால் மேற்கண்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்பட முடியாததால்தான் பிரதிநிதிகளைப் பயன்படுத்துவது வெறுமனே தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒரு விஷயம் மட்டுமல்ல, மாறாக தவிர்க்கப்பட முடியாத விஷயமாகும். குருவால்தான் நேரடியாக பரீட்சிக்கப்பட வேண்டுமென்றால் (அவர் உடல்ரீதியாக ஈடுபடுவது போல) ஏன் ஸ்ரீல பிரபுபாதர் வேண்டுமென்றே ஒரு பிரச்சாரப் அமைப்பை ஏற்படுத்தி (உலகம் முழுவதிலும் உள்ள சீடர்களை ஏற்றல் மற்றும் மையங்களை அமைத்தல்) அந்த நேரடியான பரீட்சையை சாத்தியமற்றதாக மாற்றினார்? அதன் மூலமாக ஒன்று, ஸ்ரீல பிரபுபாதர் சாஸ்திரத்தை மீறியதன் மூலம் மட்டுமே தனது பிரச்சார வெற்றியை அடைந்தார் என்று வாதிடுவது பொதுவாக, இந்தியாவில் உள்ள மற்ற கௌடிய வைஷ்ணவ குழுக்களால் இந்தவிதமான வாதம்தான் பயன்படுத்தப்படுகிறது.
● மேலே உள்ள அனைத்துக் குறிப்புகளும் ஆச்சாரியராலேயே பலமான சாத்தியமான விரிவான ஆதாரங்களுடன் நடைமுறை உதாரணங்களின் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றன. ஸ்ரீல பிரபுபாதர் தனது பெரும்பான்மையான சீடர்களை தனது நேரடி பரீட்சை இல்லாமல்தான் தீக்ஷை அளித்தார். மேலும், ஸ்ரீல பிரபுபாதர் ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் தீக்ஷைக்காக அவரது பிரதிநிதிகளை அணுகுவது அவரை நேரடியாக அணுகுவதற்கு சமம் என்று நிரூபித்திருக்கிறார். குரு இன்னும் பூமியில்தான் இருக்கிறார் என்பதால் தனிப்பட்ட பரீட்சையை நீக்குவது நியாயமானது என்று வாதிடலாம். இவ்வாறாக குறைந்தபட்சம் தனிப்பட்ட பரீட்சையானது கோட்பாட்டளவிலாவது ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும், இந்த வாதத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை. ஏனெனில்:
i) எந்த வேதத்திலும் தனிப்பட்ட பரீட்சைக்கான இந்த சிறப்பு வெளியேறும் விதி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அது வெறுமனே உண்மையின் அடிப்படையில் பிந்தைய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறான கண்டுபிடிப்பாகத்தான் இருக்கும்.
ii) தனிப்பட்ட பரீட்சையில் பிரதிநிதிகளைப் பயன்படுத்துவதை விவரிக்கும் போது, ஸ்ரீல பிரபுபாதர், தான் பூமியில் இருக்கும்வரை மட்டுமே அவர்கள் இருக்க முடியும் என்று ஒருபோதும் கூறவில்லை. இதுவரை குறிப்பிடப்படாத எந்த சாஸ்திரக் கொள்கையானது, பிரதிநிதிகளை பணியமர்த்தும் விஷயத்தில், உடல் ரீதியாக நேரடியாக தொடர்பு கொள்ளமுடியாத நபரின், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அவர்களைப் பயன்படுத்துவதன் மீதான வரம்பை கட்டுப்படுத்தியிருக்கிறது?
iii) நிரூபிக்கப்பட்டபடி, தனிப்பட்ட நேரடியான பரீட்சையின் அவசியம் என்பது சாஸ்திரத்தின் தேவை அல்ல. ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர்கள் போன்ற பிரதிநிதிகள் மற்றும் அவரின் புத்தகங்களை தனிப்பட்ட பரீட்சைக்கு மாற்றாக பயன்படுத்துவதை ஆதரிக்கிறார். எனவே தனிப்பட்ட பரீட்சை எப்போதும் அகற்றப்படலாம் அல்லது அகற்றப்படாமலும் போகலாம் என்ற கேள்வியே எழக்கூடாது.
iv) தீக்ஷையானது உடல் ரீதியிலான தொடர்பு இல்லாமலேயே வழங்கப்பட்டது என்பது தனிப்பட்ட பரீட்சை இல்லாமல் நடத்த முடியும் என்பதற்கான சான்றாகும்.
v) தனிப்பட்ட பரீட்சையானது சாத்தியமாக இருந்தபோதும் கூட, அது எப்பொழுதும் மேற்கொள்ளப்பட்டதில்லை. அது தீக்ஷையின் வழிமுறைக்கு அவசியமான ஒன்றல்ல என்பதை நிரூபிக்கிறது.
ஸ்ரீல பிரபுபாதர் ஒரு சீடரிடம் என்ன தகுதியை எதிர்பார்க்கிறார் என்பதை மிகத் தெளிவாகக் கூறினார். கோயில் தலைவர்கள் மற்றும் ரித்விக்குகள் தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும். ஸ்ரீல பிரபுபாதர் இருந்தபோது அவரால் நிலைநாட்டப்பட்ட வழிமுறைதான் இன்றைய நாட்களிலும் தீக்ஷைக்கான தரநிலைகளும் ஒரே மாதிரியாக உள்ளன. எனவே அவர் இவ்வுலகில் இருக்கும்போதே அவருடன் கலந்தாலோசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டபோது, இப்போது அவர் அவசரமாகத் தலையிட விரும்புவார் என்று நம்மை நினைக்க வைப்பது எப்படி? நம்மைப் பொறுத்தவரை ஒரே அக்கறை என்னவெனில் தரநிலைகள் மாற்றாமலும் அல்லது ஊகங்களோ இல்லாமல் திடமாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதேயாகும்.
|
3. "நாம் ஸ்ரீல பிரபுபாதரை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அவர் உடல் ரீதியாக இல்லாததால் நம்மை அவர் ஏற்றுக்கொண்டாரா என்பது நமக்கு எப்படித் தெரியும்?" |
ஜூலை 7-ஆம் தேதி, ரித்விக் அமைப்பை அமைத்துக் கொண்டிருந்தபோது, ஸ்ரீல பிரபுபாதர், தன்னைக் கலந்தாலோசிக்காமல் ரித்விக்குகள் பக்தர்களை தனது சீடர்களாக ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறுகிறார். எனவே, ஸ்ரீல பிரபுபாதர் சீடர்களை கண்காணிப்பதிலோ அல்லது அங்கீகரிக்கும் செயலிலோ அவர் ஈடுபடவில்லை. ரித்விக்குகளுக்கு முழு அதிகாரம் மற்றும் சுயவிருப்பமும் இருந்தது. ஸ்ரீல பிரபுபாதரின் உடல்ரீதியிலான ஈடுபாடு தேவைப்படவில்லை:
ஸ்ரீல பிரபுபாதர்: "ஆகவே எனக்காக காத்திருக்காமல், நீங்கள்
எங்கெங்கெல்லாம் சரி என்று நினைக்கிறீர்களோ…
அது விருப்ப உரிமையை பொறுத்தது."
தமால கிருஷ்ண கோஸ்வாமி: "விருப்ப உரிமை பேரில்."
ஸ்ரீல பிரபுபாதர்: "ஆம்."
(அறை உரையாடல், 7/7/1977, விருந்தாவனம்)
மேலும், ரித்விக்குகளால் கொடுக்கப்பட்ட பெயர்களை தமால கிருஷ்ண கோஸ்வாமி "தீக்ஷை சீடர்கள்" புத்தகத்தில் பதிவிடுவார். அவ்வாறெனில், ஸ்ரீல பிரபுபாதர் குறைந்தபட்சம் வெளிபடையாக சீடரின் இருப்பை அறிந்திருக்க மாட்டார். இதன் விளைவாக, ரித்விக்கிற்கு முழு அதிகாரம் இருப்பதால், இப்போது இருக்கும் செயல்முறையானது அன்று இருந்ததைப் போலவே இருக்கும்.
|
4. "குரு பூமியை விட்டு வெளியேறும் முன் தீக்ஷை பெறப்பட்டிருந்தால் மட்டுமே, அவர் உடல் இல்லாத நிலையிலும் அணுகுதல், விசாரித்தல், சேவை செய்தல் போன்றவை சாத்தியமாகும்." |
மேலே கூறப்பட்ட கூற்று, குறைந்த பட்சம் உடல் ரீதியாக இல்லாத ஆன்மீக குருவை அணுகவும், விசாரிக்கவும் மற்றும் சேவை செய்யவும் முடியும் என்பதை ஓரளவு ஒப்புக்கொள்கிறது. "குரு பூமியை விட்டு வெளியேறும் முன் தீக்ஷை இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தால்" மட்டுமே இது சாத்தியமாகும் என்ற அப்பட்டமான கண்டுபிடிப்பு ஆகும். இந்த விதிமுறையைப் பற்றி, ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களில் எந்த குறிப்பும் இல்லாதனால் இதனை புறக்கணிக்கலாம். தீக்ஷையை செயல்படுத்த சடங்குமுறையிலான தீக்ஷை விழாகூட தேவையில்லை. இது குருவிடமிருந்து தெய்வீக ஞானத்தை பெற தயாராக இருக்கும் சீடருக்கு பரிமாற்றம் செய்வதாகும் (கூடவே பாவ வினைகளையும் அழிப்பதாகும்):
"...குருசீட பரம்பரை என்பது எப்போதுமே ஒருவர் சடங்குரீதியாக தீக்ஷையளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. குருசீட பரம்பரையின் முடிவை ஏற்றுக்கொள்ளுதலே குருசீடப் பரம்பரையாகும்" (தினேஷ்-க்கு ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 31/10/1969)
"சரி, தீக்ஷை இருந்தாலும் தீக்ஷை இல்லாவிட்டாலும், முதல் விஷயம் ஞானம்... ஞானம். தீக்ஷை என்பது சடங்கு. எவ்வாறு நீங்கள் ஒரு பள்ளிக்குச் செல்வது அறிவுக்காகத்தான், அங்கு சேர்க்கை என்பது ஒரு சடங்காகும். அது மிக முக்கியமான விஷயமே அல்ல." (ஸ்ரீல பிரபுபாதரின் நேர்காணல், 16/10/1976, சண்டிகர்)
குறிப்பாக அத்தியாவசியமற்ற அக்னி யாகத்தின் போது குரு உடல் ரீதியாக இல்லையென்றால், தீக்ஷையின் தெய்வீக வழிமுறை சரியாக இயங்காது என்று வலியுறுத்துவது பகுத்தறிவிற்கு ஒவ்வாதது. குறிப்பாக என்னவென்றால்,
● தீக்ஷை விழாவின் போது ஸ்ரீல பிரபுபாதர் பெரும்பாலும் உடல் ரீதியாக இருக்கவில்லை. அவருடைய பிரதிநிதிகள், அதாவது, கோவில் தலைவர்கள், மூத்த சன்னியாசிகள் மற்றும் ரித்விக்குகளால் அவை அடிக்கடி மேற்கொள்ளப்பட்டன.
● ஸ்ரீல பிரபுபாதரின் பல ஆயிரக்கணக்கான சீடர்கள் அவர்களின் குரு கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக(20 வருடங்கள் ) உடல்ரீதியாக இல்லாத போதிலும், இன்னும் தீக்ஷை செயல்பாட்டின் மூலம் பயனடைகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த தீக்ஷைகளில் ஸ்ரீல பிரபுபாதர் இல்லையென்றாலும், தீக்ஷைவிழா நடந்த நேரத்தில் அவர் உடல் ரீதியாக பூமியில் இருந்தார் என்று வாதிடலாம். அப்படியானால் தீக்ஷையின் போது குருவின் உடல்ரீதியிலான இருப்பு பூமியில் இருக்க வேண்டியது அவசியமா? இந்த வாதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு, ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களிலிருந்து நாம் கீழ்கண்டவாறான உபதேசம் ஏதாவது இருக்கின்றதா எனக் காண வேண்டும்:
“சடங்கு ரீதியிலான தீக்ஷை விழாவின் போது குருவும் அவர்தம் சீடரும் பூமியின் விட்டத்திற்கு உட்பட்ட தூரத்தில் இருந்தால் மட்டுமே தீக்ஷை என்பது சாத்தியமாகும்."
இன்றுவரை, அத்தகைய உத்தரவை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக, கீழே மேற்கோள்காட்டியது போல், நமது தத்துவத்தில் (பகவத்கீதை. 4.1) தீக்ஷையின் நன்கு அறியப்பட்ட உதாரணத்திலிருந்து உண்மையில் மேலே கூறப்பட்ட கருத்துக்கு முரண்பட்டு இருக்கிறது:
"எனவே மனுவின் மகனான இஷ்வாகு அல்லது மனுவுடன் தொடர்புகொள்வதில் எந்த சிரமம் இல்லை. தகவல் தொடர்பு இருந்தது, அல்லது வானொலி அமைப்பு மிகவும் நன்றாக இருந்தது, ஒரு கிரகத்தில் இருந்து மற்றொரு கிரகத்திற்கு தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்."
(ஸ்ரீல பிரபுபாதர் பகவத்கீதை உபன்யாசம், 24/8/1968, உறுதிப்படுத்தும் விதமாக சேர்க்கப்பட்டது)
குருக்களுக்கும் சீடர்களுக்கும் இடையே உள்ள உடல் இடைவெளியால் தீக்ஷைப் பாதிக்கவில்லை என்று தோன்றும்
|
5. "நீங்கள் முன்மொழிவது கிறிஸ்தவம் போல் இருப்பதாக சந்தேகப்பட வைக்கிறது!" |
1) ரித்விக் முறையை நாங்கள் முன்வைக்கவில்லை, அது ஸ்ரீல பிரபுபாதரால் ஜூலை 9, 1977-இல் இறுதி கட்டளையாக கொடுக்கப்பட்டது. ஆகவே அது கிறிஸ்தவத்தைப் போல இருந்தாலும், இது குருவின் கட்டளை என்பதால் நாம் அதை பின்பற்றிதான் ஆகவேண்டும்,
2) மறைந்த இயேசு கிறிஸ்துவை தொடர்ந்து தங்கள் குருவாக பின்பற்ற வேண்டும் என்ற கிறிஸ்தவர்களின் யோசனையை ஸ்ரீல பிரபுபாதர் தெளிவாக அங்கீகரித்தார். கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றும் எவரும் அவரின் சீடர் என்றும், இயேசு கிறிஸ்துவால் வழங்கப்பட்ட மோட்சத்தின் நிலையை அவர்கள் அடைவார்கள் என்றும் அவர் கற்பித்தார்:
மதுத்விசர்: "ஒரு கிறிஸ்தவர், ஆன்மீக குருவின் உதவியின்றி, இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நம்புவதன் மூலமும், அவருடைய போதனைகளைப் பின்பற்றுவதன் மூலமும் ஆன்மீக வானத்தை அடைய ஏதாவது வழி இருக்கிறதா?"
ஸ்ரீல பிரபுபாதர்: "நான் பின்பற்றவில்லை."
தமால கிருஷ்ணர்: "இந்த யுகத்தில் ஒரு கிறிஸ்தவர், ஒரு ஆன்மீக குரு இல்லாமல், ஆனால் பைபிளைப் படிப்பதன் மூலமும், இயேசுவின் வார்த்தைகளைப் பின்பற்றுவதன் மூலமும், அவர் அடைய முடியுமா...."
ஸ்ரீல பிரபுபாதர்: "நீங்கள் பைபிளைப் படிக்கும்போது, ஆன்மீக குருவைப் பின்பற்றுகிறீர்கள். இல்லாமல் என்று நீ எப்படி சொல்ல முடியும்? நீ பைபிளைப் படித்தவுடன், இயேசு கிறிஸ்துவின் அறிவுறுத்தலைப் பின்பற்றுகிறீர்கள் என்று அர்த்தம், அதாவது நீங்கள் ஆன்மீக குருவைப் பின்பற்றுகிறீர்கள். எனவே ஆன்மீக குரு இல்லாமல் இருக்கும் வாய்ப்பு எங்கே இருக்கிறது?"
மதுத்விசர்: "நான் வாழும் ஆன்மீக குருவைக் குறிப்பிடுகிறேன்."
ஸ்ரீல பிரபுபாதர்: "ஆன்மீக குரு என்பது..பேச்சுக்கே இடமில்லை. ஆன்மீக குரு என்பவர் நித்தியமானர். ஆன்மீக குரு என்பவர் நித்தியமானர். எனவே உங்கள் கேள்வி ஆன்மீக குரு இல்லாமல் என்பதாகும். ஆன்மீக குரு இல்லாமல் உங்கள் வாழ்க்கையின் எந்த நிலையிலும் உங்களால் இருக்க முடியாது. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். இந்த ஆன்மீக குரு அல்லது அந்த ஆன்மீக குரு என யாரையோ நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம், அது வேறு விஷயம், ஆனால் நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் சொல்வது போல், "பைபிளைப் படிப்பதன் மூலம்". நீங்கள் இயேசு கிறிஸ்துவின் வழிவந்த பிரதிநிதியான ஒரு பாதிரியார் அல்லது சில மததலைவர்களையோ பின்பற்றுகிறீர்கள்.." (ஸ்ரீல பிரபுபாதர் உபன்யாசம், 2/10/68, சியாட்டில், வலியுறுத்துகிறது)
"இயேசு கிறிஸ்துவின் பக்தர்களின் முடிவைப் பொறுத்தவரை, அவர்கள் தேவலோகம் செல்லலாம், அவ்வளவுதான். அது ஒரு கிரகம் ஆகும். இயேசு கிறிஸ்துவின் பக்தர்கள் என்றால், பத்து கட்டளைகளை கண்டிப்பாக பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். [...] எனவே முடிவானது இயேசு கிறிஸ்துவின் பக்தர்கள் இந்த ஜட பிரபஞ்சத்திலுள்ள தேவலோக கிரகங்களுக்கு உயர்த்தப்படுகிறார்கள்."
(ஸ்ரீல பிரபுபாதர் பகவானுக்கு எழுதிய கடிதம், 2/3/1970)
"உண்மையில், இயேசு கிறிஸ்துவால் வழிநடத்தப்படுபவர் நிச்சயமாக விடுதலை பெறுவார்."
(பக்குவமான கேள்விகளும் பக்குவமான பதில்களும், அத்தியாயம் 9)
"...அல்லது கிறிஸ்தவர்கள் மஹாத்மாவான கிறிஸ்துவைப் பின்பற்றுகிறார்கள், மஹாஜனோ யேனா கத ஸ பந்தாஹ். நீங்கள் சில மகாஜனங்களைப் பின்பற்றுகிறீர்கள், [...] நீங்கள் கிறிஸ்துவைப் போல, ஒரு ஆச்சாரியரைப் பின்பற்றுகிறீர்கள், அவர்கள் போல கிறிஸ்துவை ஆச்சாரியராக பின்பற்றுகிறார்கள். முகமதியர்கள் முகமதுவைப் போன்ற ஆச்சாரியரைப், பின்பற்றுகிறார்கள், அது நல்லதுதான். நீங்கள் கண்டிப்பாக சில ஆச்சாரியர்களைப் பின்பற்றத்தான் வேண்டும்[...] ஏவம் பரம்பரா-ப்ராப்தம்." (ஸ்ரீல பிரபுபாதர் அறை உரையாடல், 5/20/1975, மெல்போர்ன்)
3)"கிறிஸ்தவர்கள்" என்று இருக்கும் விஷயத்தில் இந்த ஆட்சேபனை சற்றே முரண்பாடானது. ஏனெனில் இஸ்கானில் உள்ள தற்போதைய குரு அமைப்பு சில கிறிஸ்தவ நடைமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆட்சி குழு ஆணையர்களின் (GBC- Governing Body Commissioners) குருவை வாக்களித்து தேர்ந்தெடுக்கும் இறையியல் வழிமுறையானது கார்டினல் கல்லூரியில் கத்தோலிக்க திருச்சபைகளில் போப்புகளை வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறையைப் போன்றது:
"வாக்களிக்கும் வழிமுறைகள் [...] குருவிற்கான விண்ணப்பதாரர்கள்[...] வாக்களிக்கும் உறுப்பினர்களின் முழு விவாதத்திற்குப் பிறகு முடிவுக்கு வருவார்கள். [...] ஒரு வேட்பாளர் 2/3 பங்கு வாக்குகளைப் பெற வேண்டும் [...] தீக்ஷை குருவாக அனைத்து ஆட்சி குழு ஆணையர்கள் (GBC-Governing Body Commissioners) உறுப்பினர்களும் [sic] நியமனத்திற்கான விண்ணப்பதாரர்கள்." (GBC தீர்மானங்கள்)
இதேபோல், GBC தன்னை "இஸ்கானை வழிநடத்தும் திருச்சபையின் உன்னத பதவியை வகிக்கும் அமைப்பு(ecclesiastical body)" என்று அழைக்கிறது. (மீண்டும் கடவுளிடம், 1990-1991); மீண்டும் இது ஒரு , "கிறிஸ்தவ" கலைச்சொல்லாகும் .
இந்த குறிப்பிட்ட "கிறிஸ்தவ" நடைமுறைகள் இயேசுவால் ஒருபோதும் கற்பிக்கப்படவில்லை. மேலும் ஸ்ரீல பிரபுபாதரால் முற்றிலும் கண்டிக்கப்பட்டது:
"ஒரு வைஷ்ணவ ஆச்சாரியாரைத் தேர்ந்தெடுப்பதற்கு உலகாயத ஓட்டுகளுக்கு அதிகாரம் இல்லை. ஒரு வைஷ்ணவ ஆச்சாரியார் சுய ஞானஒளி கொண்டவர், மேலும் எந்த நீதிமன்ற தீர்ப்பும், அதற்கான அவசியமும் தேவையில்லை."
(ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரும் மத்திய-லீலை, 1.220, பொருளுரை)
"வாரிசாக வருவதனாலோ, சமூக வழக்கம் என்பதனாலோ, மற்றும் கோயில் தர்மகர்த்தா என்பதனாலோ அதன் அடிப்படையில் ஒரு ஆன்மீக குருவை ஏற்கக் கூடாது என்று ஸ்ரீ ஜீவ கோஸ்வாமி அறிவுறுத்துகிறார்."
(ஸ்ரீசைதன்ய சரிதாம்ரும், ஆதி லீலை, 1.35 பொருளுரை)
|
6. "ரித்விக்குகளும் ஒரு வகையான தீக்ஷை கொடுக்கிறார்கள். ஸ்ரீல பிரபுபாதர் நமது சிக்ஷாகுரு மட்டுமே." |
1) ரித்விக்கின் செயல்பாடு தீக்ஷை குருவின் செயல்பாடுகளிலிருந்து வேறுபட்டது. அவரது ஒரே நோக்கம் சீடர்களுக்கு தீக்ஷை அளிப்பதில் தீக்ஷா குருவுக்கு உதவுவதே தவிர, அவர்களை தனக்காக எடுத்துக் கொள்வதற்கு அல்ல.
2) ரித்விக்குகள் தீக்ஷை நடைமுறையை மேற்பார்வையிடுதல், ஆன்மீக நாமம் கொடுத்தல் போன்றவற்றை மட்டுமே செய்கிறார். ஆனால் அவர் அக்னியாகம் கூட செய்ய வேண்டிய அவசியமில்லை. பொதுவாக கோவில் தலைவரே இதைச் செய்துவிட்டாலும், அவரை தீக்ஷை குரு என்று யாரும் சொல்வதில்லை.
3) ஸ்ரீல பிரபுபாதர் எப்படி இருக்க விரும்புகிறாரோ அப்படியே இருக்க ஏன் அனுமதிக்கக்கூடாது? அவர் நிச்சயமாக நமது சிக்ஷா குருவாக இருக்கிறார். ஆனால் ஜூலை 9 அன்று அவர் தெளிவாகக் குறிப்பிட்டதுபோல், அவர்தான் நம்முடைய தீக்ஷை குருவாக இருக்க வேண்டும்.
4) ஸ்ரீல பிரபுபாதர் நம்முடைய முதன்மையான சிக்ஷா குருவாக இருப்பதால், எப்படியோ அவரே நம்முடைய உண்மையான தீக்ஷை குருவாகவும் இருக்கிறார், ஏனெனில்:
● அவர் தீக்ஷையின் வரையறையான திவ்ய ஞானம் அல்லது தெய்வீக ஞானத்தினை வழங்குகிறார்.
● தீக்ஷையின் வரையறையான பக்தி-லதா-பீஜ (பக்தி என்ற கொடியின் விதை) என்ற விதையை அவர் விதைக்கிறார்.
பக்தர்கள் மேற்கூறிய இரண்டு செயல்களிலும் அவருக்கு உதவ முடியும் (பிரச்சாரம், புத்தக விநியோகம் போன்றவை), ஆனால் அவர்கள் வர்த்ம-ப்ரதர்ஷக குருக்கள். தீக்ஷை குருக்கள் அல்ல. இருப்பினும் அத்தகைய சேவையின் மூலமாகவே அவர்களும் முக்தி பெற்ற ஆத்மாக்களாக மாறலாம்.
5) முதன்மையான சிக்ஷா குரு ஏதாவதொரு வழியில் வழக்கமாக தீக்ஷை குருவாக மாறுகிறார்
"ஸ்ரீல பிரபுபாதர் அனைத்து இஸ்கான் பக்தர்களுக்கும் அடிப்படையான சிக்ஷா குரு ஆவார் [...] ஸ்ரீல பிரபுபாதரின் உபதேசங்கள் ஒவ்வொரு இஸ்கான் பக்தருக்கும் இன்றியமையாத போதனைகள்."
(GBC தீர்மானங்கள், எண். 35, 1994)
"பொதுவாக ஒரு ஆன்மீக குருவானவர் ஒரு சீடருக்கு ஆன்மீக விஞ்ஞானத்தை தொடர்ந்து உபதேசம் செய்வதால், பிற்காலத்தில் அவருக்கு தீக்ஷை அளிக்கும் ஆன்மீக குருவாக மாறுகிறார்."
(ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரும். ஆதி லீலை, 1.35, பொருளுரை)
"சரியான வழியில் சீடருக்கு உபதேசிக்க வேண்டியது சிக்ஷா குரு அல்லது தீக்ஷை குருவின் கடமை. அந்த வழிமுறையை செயல்படுத்துவது என்பது சீடனைப் பொறுத்தது. சாஸ்திர விதிகளின்படி, சிக்ஷா குரு மற்றும் தீக்ஷை குருவிற்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை. பொதுவாக, சிக்ஷா குரு பின்னர் தீக்ஷை குருவாக மாறுகிறார்." (ஸ்ரீமத் பாகவதம்., 4.12.32, பொருளுரை)
|
7."ஸ்ரீல பிரபுபாதர் அனைவருக்கும் சிக்ஷா குரு என்றால், அவர் எப்படி தீக்ஷை குருவாக இருக்க முடியும்?" |
தீக்ஷை குரு மற்றும் சிக்ஷா குருக்களுக்கு இடையேயான இந்தக் குழப்பம் ஏன் ஏற்படுகின்றதென்றால், அவர்களின் பொறுப்புகளின் பட்டங்களை அவர்களின் செயல்பாடுகளுடன் குழப்பிக் கொள்வதனால்தான். இவ்வாறாக சில சமயங்களில் சிக்ஷா குருவால் சிக்ஷா மட்டுமே கொடுக்க முடியும் என்றும் தீக்ஷை குருவால் அல்ல என்று கற்பனை செய்து கொள்ளப்படுகிறது. இருப்பினும், மேற்கோள்காட்டப்பட்ட கடைசி வாக்கியம் விளக்குவது போல, தீக்ஷை குருவும் உபதேசிக்கிறார். இது வெளிப்படையானது, இல்லையெனில், அவர் திவ்ய-ஞானத்தை எப்படி வழங்குவார்?
|
ப்ரத்யும்னர்:
ஸ்ரீல பிரபுபாதர்:
ப்ரத்யும்னர்:
ஸ்ரீல பிரபுபாதர்: |
"குரு-பாதாஷ்ரயா. 'முதலில் ஒருவர் ஆன்மீக குருவின் தாமரை பாதங்களில் அடைக்கலம் பெற வேண்டும். தஸ்மாத் க்ருஷ்ண-தீக்ஷாதி-ஷிக்ஷணம். தஸ்மாத், ‘அவரிடமிருந்து', க்ருஷ்ண-தீக்ஷாதிஷிக்ஷணம், ‘ஒருவர் க்ருஷ்ண-தீக்ஷா மற்றும் சிக்ஷா எடுக்க வேண்டும் "
"தீக்ஷை என்றால் திவ்ய ஞானம் க்ஷபயதி இதி திக்ஷா. இது திவ்ய-ஞானத்தை விளக்குகிறது. அதுதான் தீக்ஷை. தீ - திவ்ய, தீக்ஷாணம். தீக்ஷா. எனவே திவ்ய-ஞானம் என்பது தெய்வீக ஞானம்... ஆன்மீக குருவை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் எப்படி நீங்கள் தெய்வீக ஞானத்தைப் பெறுவீர்கள்... நீங்கள் அங்கொன்றும் இங்கொன்றும், இங்கொன்றும் அங்கொன்றுமாக உபதேசிக்கப்படுவதனால், நேரம்தான் வீணாகிவிடும். ஆசிரியருக்கான நேரம் மற்றும் உங்களுடைய மதிப்புமிக்க நேரத்தை வீணடிப்பீர்கள். எனவே நீங்கள் ஒரு நிபுணத்துவம் பெற்ற ஆன்மீக குருவால் வழிநடத்தப்பட வேண்டும். இதைப் படிக்கவும்."
" க்ருஷ்ண-தீக்ஷாதி ஷிக்ஷணம்"
"ஷிக்ஷணம். நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் கற்கவில்லை என்றால், நீங்கள் எப்படி முன்னேறுவீர்கள்? பிறகு?" |
(அறை உரையாடல், 27/1/1977, புவனேஸ்வர்)
அந்த தெய்வீக சிக்ஷா என்பது தீக்ஷையின் சாராம்சம் அதுவே குரு-சிஷ்யன் உறவு பற்றி பிரபலமான ஸ்லோகத்திலிருந்தும் நன்றாக தெளிவாகிறது (பகவத்கீதை. 4.34). இந்த ஸ்லோகத்தில், "உபதேக்ஷ்யந்தி" என்ற வார்த்தை, வார்த்தைக்கு வார்த்தை அர்த்தத்தில், "தீக்ஷை" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான மொழிபெயர்ப்பில் "தீக்ஷை" என்ற வார்த்தையானது "ஞானத்தை அளிப்பது" என்று மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறாக, ஞானத்தை வழங்குதல் என்ற வார்த்தையைப் போல் அதேபோன்ற அர்த்தத்தைக் தரக்கூடிய தீக்ஷைக்கான வழிமுறையானது இங்கே விளக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, "பிரபுபாதர் என்பது சிக்ஷா அல்ல தீக்ஷா" என்று வாதிடுவது அவர்கள் தாங்களாகவே உருவாக்கிய தர்க்கரீதியிலான வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். ஸ்ரீல பிரபுபாதர் பூமியில் இல்லாதபோதும் "ஞானத்தை அளிக்கும்" திறன் கொண்டவராக இருக்கிறார் என்றால் வரையறையின்படி திவ்ய ஞானத்தை வழங்குபவராகவும் இருக்கவேண்டுமல்லவா. இவ்வாறு, ஸ்ரீல பிரபுபாதர் உடல் ரீதியிலான தொடர்பு இல்லாமலும் ஒரு சிக்ஷா குருவாக இருக்க முடியும் என்றால், உடல் ரீதியிலான தொடர்பு இல்லாமல் ஏன் தீக்ஷை வழங்கமுடியாது? ஸ்ரீல பிரபுபாதர் பூமியில் இல்லாபோது ஒரு சிக்ஷா குருவாக செயல்பட்டு சிக்ஷா கொடுக்க முடியும், ஆனால் நாம் அவருடைய பொறுப்பின் பெயரை மாற்றினால், அவரால் சிக்ஷா கொடுக்க முடியாது என்று வாதிடுவது நகைப்புக்குரியது. அவர் இவ்வுலகில் இல்லாதபோதும் ஒரு சிக்ஷா குருவாக இருக்க முடியுமென்றால், அதுவேதான் அவரால் அதேநேரத்தில் தீக்ஷையும் கொடுக்க முடியும் என்பதற்கான சான்றாகும்.
சில நபர்கள் ஸ்ரீல பிரபுபாதரால் உடல் ரீதியாக இல்லாமல் தெய்வீக சிக்ஷா கூட கொடுக்க முடியாது என்று வாதிட்டு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளனர். இப்படி இருந்தால், ஸ்ரீல பிரபுபாதர் ஏன் இவ்வளவு முயற்சி எடுத்து, அடுத்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு தேவையான இத்தனை நூல்களை எழுதி, அதனை பரப்பும் ஒரே நோக்கத்துடன் ஒரு அறக்கட்டளையை நிறுவினார்? ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களிலிருந்து தெய்வீக போதனைகளைப் பெறுவது இனி சாத்தியமில்லை என்றால், நாம் ஏன் அவற்றை விநியோகிக்கிறோம்? மக்கள் ஏன் இன்னும் அவற்றின் ஆற்றலை நம்பி சரணடைகிறார்கள்?
|
8. "ஸ்ரீல பிரபுபாதர் எந்த சுத்த பக்தர்களையும் உருவாக்கவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்களா?" |
இல்லை, நாங்கள் கூறுவது என்னவென்றால் ஸ்ரீல பிரபுபாதர் தீக்ஷையைத் தொடர அனுமதிப்பதற்காக ரித்விக் அமைப்பை அமைத்தார் என்பதே. ஸ்ரீல பிரபுபாதர் சுத்த பக்தர்களை உருவாக்கினாரா இல்லையா என்பது அவரது தெளிவான மற்றும் சந்தேகத்திற்கு இடமில்லாத இறுதி உத்தரவுக்கு பொருத்தமானதல்ல. சீடர்களாகிய நமது கடமை வெறுமனே குருவின் அறிவுரைகளைப் பின்பற்றுவதுதான். குருவின் உபதேசத்தைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக இப்போது எத்தனை சுத்த பக்தர்கள் இருக்கிறார்கள் அல்லது எதிர்காலத்தில் இருப்பார்கள் என்று ஊகிப்பது பொருத்தமற்ற வாதமாகும்.
தற்சமயம் சுத்த பக்தர்கள் இல்லை என்ற மிக மோசமான சூழ்நிலையை எடுத்துக் கொண்டாலும், ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி மறைந்த பிறகு இருந்த நிலையை கருத்தில்கொள்ள வேண்டும். ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீல பிரபுபாதர், கௌடிய மடத்தில் இருந்து ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட தீக்ஷையளிக்கும் ஆச்சாரியார் இருப்பதாகக் குறிப்பிட்டார்:
"உண்மையில் எனது ஆன்மீக சகோதரர்களில் யாரும் ஆச்சாரியராக ஆவதற்குத் தகுதி இல்லை*. [...] நமது மாணவர்களையும் சீடர்களையும் ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக அவர்கள் சில சமயங்களில் அவர்கள் மனதை கெடுக்கலாம். [...] நமது இயற்கையான முன்னேற்றத்திற்கு தீங்கு விளைவிக்க அவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள்."
(ஸ்ரீல பிரபுபாதர் ரூபனுகாவிற்கு எழுதிய கடிதம், 4/28/1974)
*(ஸ்ரீல பிரபுபாதர் "ஆச்சாரியர்" மற்றும் "குரு" என்ற சொற்களை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தினார்):
"நான் சில குருவைத் தேர்ந்தெடுப்பேன். 'இப்போது நீ ஆச்சாரியனாக மாறுவாய்' என்று கூறுவேன். [...] நீங்கள் ஏமாற்றலாம், ஆனால் அது பயனுள்ளதாக இருக்காது. நம்ம கௌடிய மடத்தை பார்த்தாலே போதும். ஒவ்வொருவரும் ஒரு சிறிய கோயிலின் குருவாக விரும்பினர். 'குரு.' எப்படிப்பட்ட குரு?"
(ஸ்ரீல பிரபுபாதர் காலை நடைப்பயிற்சி, 22/4/1977)
இது ஸ்ரீல பக்திசித்தாந்தரின் பிரச்சாரப் பணியின் மீதான கண்டனத்திற்குரிய குற்றச்சாட்டாகக் கருதப்படலாம். இருப்பினும், ஸ்ரீல பக்திசித்தாந்தர் "தோல்வியடைந்தார்" என்று வாதிடுவது மிகவும் முற்றிலும் விவேகமற்றது. ஸ்ரீல பக்திசித்தாந்தர் தனது பணியினால் ஒரே ஒரு சுத்த பக்தரை மட்டுமே உருவாக்கினாலும் அதை வெற்றியாகக் கருவேன் என்று கூறுவதற்கு பெயர்பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
எவ்வாறாயினும், ஒரு ரித்விக் முறையை நடைமுறைப்படுத்து என்பது, எக்காரணத்தைக் கொண்டும் சுத்த பக்தர்களின் இருப்பை நிராகரிக்கவில்லை. ரித்விக்குகள் மற்றும் சுத்த பக்தர்கள் இருவருக்கும் இடையில் எளிதில் இடமளிக்கக்கூடிய பல்வேறு காட்சிகள் உள்ளன, எ.கா.
ஸ்ரீல பிரபுபாதர் தீக்ஷை குருவாக மாற விருப்பமற்ற பல சுத்த பக்தர்களை உருவாக்கியிருக்கலாம். இஸ்கானில் உள்ள மிகவும் முன்னேறிய பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்தலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நபர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வெறுமனே இந்த சுத்த பக்தர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் பணிக்கு பணிவுடன் உதவ விரும்பலாம். ஒரு சுத்த பக்தன் தீக்ஷை குருவாக மாற வேண்டியது கட்டாயம் என்று எங்கும் கூறப்படவில்லை. அது அவர்களின் குருவின் கட்டளையாக இருந்திருந்தால், ரித்விக் அமைப்பில் பணிபுரிவதில் அப்படிப்பட்ட நபர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.
ஸ்ரீல பிரபுபாதரின் விருப்பம் அதிக எண்ணிக்கையிலான உபதேசம் செய்யும் சிக்ஷா குருக்கள் இருக்க வேண்டும். ஆனால் அதற்காக அதிக தீக்ஷை குருக்கள் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ஒவ்வொருவரும் சிக்ஷா குருவாக வேண்டும் என்று முன்னரே மேற்கோள்காட்டப்பட்ட அறிவுறுத்தலுக்கும், சீடர்களை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்ற ஸ்ரீல பிரபுபாதரின் எச்சரிக்கைக்கும் இது ஒத்துப்போகும். ஸ்ரீல பிரபுபாதர் தனது பணியின் வெற்றியை ஏற்கனவே தனியொருவராக முன்வைத்துள்ளார் என்பதற்கும் இது ஒத்துப்போகும்:
|
விருந்தினர்(2):
ஸ்ரீல பிரபுபாதர்:
விருந்தினர்(2):
ஸ்ரீல பிரபுபாதர்:
விருந்தினர்:
ஸ்ரீல பிரபுபாதர்:
ஹனுமான்:
ஸ்ரீல பிரபுபாதர்: |
"நீங்கள் திட்டமிடுகிறீர்களா…”
“எனது இயக்கம் நேர்மையானது.”
“...ஒரு வாரிசை தேர்வு செய்ய"
"இது ஏற்கனவே வெற்றிகரமாக [...] தங்கம் தங்கம்தான்[...]"
"ஆனால், விஷயத்தை கையாளுவதற்கு உங்களுக்குத் தெரிந்த நபர்கள் யாரேனும் தேவையல்லவா"
"ஆம், நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். கையாளக்கூடிய இந்த பக்தர்களை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்."
"இந்த மென்மையான மனிதர், ஒரு விஷயம் சொல்கிறார், மற்றும் நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் வாரிசு பெயர் அல்லது உங்கள் வாரிசு செய்வாரா..."
"என்னுடைய வெற்றி எப்போதும் உள்ளது." |
(அறை உரையாடல், 12/2/1975, மெக்சிகோ)
“ஆகவே புதிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நான் பேச என்ன இருக்கிறதோ அது என்னுடைய புத்தகங்களில் பேசப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். மற்றும் இந்த முயற்சிகளை நீங்கள் தொடருங்கள். நான் இருக்கிறேனா இல்லையா என்பது முக்கியமில்லை."
(ஸ்ரீல பிரபுபாதர் வருகை உரையாடல், 17/5/1977, விருந்தாவனம்)
|
நிருபர்:
ஸ்ரீல பிரபுபாதர்:
பக்தர்கள்:
ஸ்ரீல பிரபுபாதர்: |
"நீங்கள் இறந்தவுடன் அமெரிக்காவில் உள்ள இயக்கத்திற்கு என்ன நடக்கும்?"
"நான் ஒருபோதும் இறக்க மாட்டேன்."
"ஜெய! ஹரிபோல்!" (சிரிப்பு.)
"நான் என் புத்தகங்களில் வாழ்வேன், நீங்கள் பயன்படுத்துவீர்கள்." |
(ஸ்ரீல பிரபுபாதர் செய்தியாளர் சந்திப்பு, 16/7/1975, சான் பிரான்சிஸ்கோ)
|
நிருபர்:
ஸ்ரீல பிரபுபாதர்: |
"நீங்கள் உங்களுக்கு பிறகு தலைமையேற்க யாருக்காவது பயிற்சி அளிக்கிறீர்களா?"
"ஆம், என் குரு மஹாராஜர் இருக்கிறார்." |
(ஸ்ரீல பிரபுபாதர் செய்தியாளர் சந்திப்பு, 16/7/1975, சன் பிரான்சிஸ்கோ)
"பகவான் சைதன்யரால் மட்டுமே என் இடத்தை ஏற்க முடியும். அவர் என் இயக்கத்தை கவனித்துக் கொள்வார்."
(ஸ்ரீல பிரபுபாதர் அறை உரையாடல், இந்தியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது, 2/11/1977)
|
பேட்டியாளர்:
ராமேஸ்வரர்:
ஸ்ரீல பிரபுபாதர்:
பேட்டியாளர்:
ஸ்ரீல பிரபுபாதர்: |
"தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தங்களுக்கு அடுத்த தலைமைபொறுப்பை தேர்வு செய்வதற்கான அவசியம் வரும்போது என்ன நடக்கும்?"
"அவர் எதிர்காலத்தைப் பற்றி கேட்கிறார், எதிர்காலத்தில் இயக்கத்தை யார் வழிநடத்துவார்கள்."
"அவர்கள் வழிநடத்துவார்கள். நான் அவர்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறேன்."
"எப்படியாயினும் ஒரு ஆன்மீக தலைவர் இருப்பாரா?"
"இல்லை, நான் உலகம் முழுவதும் உள்ள 18 ஜிபிசிக்கு பயிற்சி அளிக்கிறேன்." |
(ஸ்ரீல பிரபுபாதர் நேர்காணல், 6/10/1976, லாஸ் ஏஞ்சல்ஸ்)
|
நிருபர்:
ஸ்ரீல பிரபுபாதர்:
|
"உங்களுக்கு பிறகு ஒருவரை தலைமைப்பொறுப்பை ஏற்கும் யாரேனும் ஒரு நபரின் பெயரை எதிர்பார்த்து கூற முடியுமா அல்லது உங்களிடம் ஏற்கனவே இருக்கிறார்களா?"
அதை "நான் இப்போது சிந்திக்கவில்லை. ஆனால் ஒரு நபர் வேண்டுமென்ற தேவை இல்லை." |
(அறை உரையாடல், 4/6/1976, லாஸ் ஏஞ்சல்ஸ்)
|
பேட்டியாளர்:
ஸ்ரீல பிரபுபாதர்:
பேட்டியாளர்:
ஸ்ரீல பிரபுபாதர்: |
"அவருக்கு ஒரு தலைமை பொறுப்பாளர் இருக்கிறாரா என்று நான் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தேன் ... நீங்கள் இறக்கும் போது உங்கள் இடத்தைப் நிரப்ப உங்களுக்கு ஒரு தலைமை பொறுப்பாளர் இருக்கிறாரா?"
"இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. இன்னும் முடிவுசெய்யப்படவில்லை."
"அப்படியானால் ஹரே கிருஷ்ணர்கள் எந்தவிதமான வழிமுறையை கடைபிடிப்பார்கள்...?"
"எங்களுக்கு செயலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிர்வகிக்கிறார்கள்." |
(ஸ்ரீல பிரபுபாதர் நேர்காணல், 7/14/1976, நியூயார்க்)
ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர்கள் எவரையும் தீக்ஷை குருவாக செயல்பட அதிகாரம் அளிக்கவில்லை என்பதனால் அவர்களில் எவரும் சுத்த பக்தர்களாக இருக்கவில்லை என்று அர்த்தமல்ல. ஒரு சிக்ஷா குரு ஒரு முக்தி பெற்ற ஆன்மாவாகவும் இருக்கலாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அவர்கள் அத்தகைய பதவியை ஏற்க வேண்டிய அவசியமில்லை என்றிருக்கலாம். இருந்தபோதிலும், ஸ்ரீல பிரபுபாதர் இவ்வுலகில் இருந்தபோது அவரைப் பின்பற்றுபவர்கள் எந்த முக்கிய பொறுப்புகளை வகித்தார்களோ, அதையே கடைபிடிக்கும் முக்கிய பணியை ஆற்ற வேண்டியவர்கள். அதாவது அவரது உதவியாளர்களாக செயல்பட வேண்டும், வாரிசு ஆச்சாரியர்களாக அல்ல:
"ஜிபிசியில் உள்ள அனைவரும் சிக்ஷா குருக்களாக இருக்க வேண்டும். நான் தீக்ஷை குருவாக இருக்கிறேன், நான் கற்பிப்பதைக் கற்பிப்பதன் மூலமும், நான் செய்வதைச் செய்வதன் மூலமும் நீங்கள் சிக்ஷா குருவாக இருக்க வேண்டும்."
(ஸ்ரீல பிரபுபாதர் மதுத்விஷருக்கு எழுதிய கடிதம், 4/8/1975)
"சில சமயங்களில் ஒரு தீக்ஷை குரு எப்போதும் இருப்பதில்லை. எனவே ஒரு மேம்பட்ட பக்தரிடமிருந்து ஒருவர் கற்றல், உபதேசித்தல் ஆகியவற்றைப் பெறலாம். அதுவே சிக்ஷா குரு என்று அழைக்கப்படுகிறது."
(ஸ்ரீல பிரபுபாதர் பகவத்கீதை. உபன்யாசம், 4/7/1974, ஹொனலுலு)
எனவே, ஸ்ரீல பிரபுபாதர் சுத்த பக்தர்களை உருவாக்கினாரா என்பது பிரச்சினை அல்ல, மாறாக அவர் ரித்விக் அமைப்பை அமைத்தாரா என்பதுதான். இந்த நேரத்தில் தீக்ஷை குரு உடல் ரீதியாக இல்லை என்றாலும், அதற்காக அவர் தீக்ஷை குரு இல்லை என்று அர்த்தமல்ல. அவர் இல்லாத பட்சத்தில் அங்கீகரிக்கப்பட்ட சிக்ஷா குருக்களிடமிருந்து உபதேசத்தைப் பெறவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்விதமாக காலப்போக்கில் கோடிக்கணக்கானவர்கள் இருக்கலாம்.
|
9."ஒரு குரு கண்டிப்பாகப் பின்பற்றும் வரை, அவர் எவ்வளவு முன்னேறியிருக்கிறார் என்பது விஷயமல்ல, அவர் காலப்போக்கில் தகுதி பெற்று, தனது சீடர்களை மீண்டும் பகவானிடம் அழைத்துச் செல்வார்." |
முன்பு விவாதித்தபடி, ஒரு தீக்ஷை குருவாகச் செயல்பட, ஒருவர் முதலில் பக்தி சேவையின் மிக உயர்ந்த தளமான மஹா-பாகவதர் என்ற தளத்தை அடைந்திருக்க வேண்டும். பின்னர் அவர்தம் முந்தைய ஆச்சாரியர்களால் தீக்ஷை வழங்க அதிகாரம் பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய பிந்தைய தேதியிட்ட வரைவோலை குரு தத்துவம் (post-dated Cheque guru philosophy) பின்வரும் மேற்கோள் விளக்குவது போல் ஒரு குற்றம் நிறைந்த ஊகமாகும்:
"பிருது மஹாராஜர் உண்மையில் பரம புருஷ பகவானின் அவதாரமாக இருந்தபோதிலும், அவர் அந்தப் புகழுரைகளை நிராகரித்தார். ஏனென்றால் பரம புருஷரின் குணங்கள் அவரிடம் இன்னும் வெளிப்படவில்லை. உண்மையில் இந்தக் குணங்கள் இல்லாதவர் முயற்சி செய்யக்கூடாது என்பதை வலியுறுத்த விரும்பினார். இந்த குணங்கள் வருங்காலத்தில் வெளிப்படும் என்றாலும், தன்னைப் பின்பற்றுபவர்களையும், பக்தர்களையும் தமக்கு புகழாரம் சூட்டுவதில் ஈடுபடுத்தவில்லை. ஒரு சிறந்த நபரின் பண்புகளை உண்மையாகக் கொண்டிருக்காத ஒரு மனிதன், அத்தகைய பண்புகள் எதிர்காலத்தில் உருவாகும் என்று எதிர்பார்த்து அவரைப் புகழ்வதில் தன்னைப் பின்பற்றுபவர்களை ஈடுபடுத்தினால், அத்தகைய புகழ்ச்சி உண்மையில் ஒரு அவமானம் ஆகும்" (ஸ்ரீமத் பாகவதம், 4.15.23, பொருளுரை)
பார்வையற்ற ஒருவரை "தாமரை கண் உடையவர்" என்று அழைப்பது எப்படி அவமானமாக இருக்குமோ, அதே போல பாதியளவு கட்டுண்ட ஆன்மாக்களை "கடவுளைப் போன்றவர்" என்று (GII-Gurus And Initiation In ISKCON, வரிசை 8, பக்கம் 15) கூறுவது அபராதமான செயலாகும். அது பொய்யாகப் புகழ்ந்து பேசப்படும் அந்த நபருக்கு மட்டுமல்ல. மேலும் பவித்ரமான குருசீட பரம்பரை தொடங்கி பரம புருஷ பகவான் வரை அனைவருக்கும் அபராதமாகும்.
"கண்டிப்பாகப் பின்பற்றுவது" என்பது ஒரு சீடர் முன்னேறும் வழிமுறையாகும், அது ஒரு தகுதி அல்ல. பக்தர்கள் பெரும்பாலும் இந்த வழிமுறையையும் தகுதியையும் குழப்பிக்கொள்கிறார்கள். சில சமயங்களில் அவைகள் ஒன்றே என்று பிரச்சாரம் செய்கிறார்கள். யாரோ ஒருவர் கண்டிப்பாகப் பின்பற்றுகிறார் என்பதற்காக அவர் ஒரு மஹா-பாகவதர் என்று அர்த்தம் இல்லை, அல்லது அவருடைய சொந்த ஆன்மீக குருவால் தீக்ஷை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதனாலும், மேலும் ஒரு சீடன் சரியான தகுதி மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கு முன்பே தீக்ஷை வழங்கத் தொடங்கினால், அவர் நிச்சயமாக "கண்டிப்பாகப் பின்பற்றுபவர்" இல்லை.
சில சமயங்களில், "புதிய வைஷ்ணவரோ அல்லது இடைப்பட்ட நிலையில் உள்ள வைஷ்ணவரோ சீடர்களை ஏற்றுக்கொள்ளலாம்..." என்பதை நிரூபிப்பதற்காக, உபதேஷாம்ருதம் (the nectar of instruction)(பொருளுரை) 5-வது ஸ்லோகத்தில் பக்தர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள். ஏதோ சில காரணங்களால் அந்தப் பொருளுரையில் மீதமுள்ள வாக்கியத்தில் அத்தகைய குருக்களின் சீடர்களை எச்சரிப்பதை கண்டுகொள்வதில்லை. அஃதாவது: "அவரது குறைபாடுள்ள வழிகாட்டுதலின் கீழ் வாழ்க்கையின் இறுதி இலக்கை நோக்கி அவர்களால் நன்றாக முன்னேற முடியாது." மேலும், அதில் கூறப்பட்டுள்ளதாவது:
"எனவே ஒரு சீடர் கவனமாக இருந்து ஒரு உத்தம அதிகாரியை ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்."
தகுதியற்ற குருக்களும் எச்சரிக்கப்படுகிறார்கள்:
"உத்தம-அதிகாரி என்ற தளத்தை அடையாதவரை ஒருவர் ஆன்மீக குருவாக ஆகக்கூடாது"
(உபதேஷாம்ருதம் (the nectar of instruction, ஸ்லோகம் 5, பொருளுரை)
ஒரு குரு "பக்குவமற்ற வழிகாட்டுதலை" மட்டுமே வழங்குகிறார் என்றால், அவர் ஒரு தீக்ஷை குருவாக இருக்க முடியாது, ஏனெனில் இதற்கு முழு திவ்ய-ஞானம் பரிமாற்றம் தேவைப்படுகிறது. "பக்குவமற்ற" என்றால் போதாது. ஒருவேளை "நன்றாக முன்னேற" உதவ முடியாத தீக்ஷை குருக்களை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது சுயமாகத் தெரிகிறது.
|
10."ரித்விக் அமைப்பு என்றால் குருசீட பரமபரையின் முடிவு என்று பொருள்படும்." |
குருசீட பரம்பரை அல்லது குரு
பரம்பரை என்பது நித்தியமானது; அது நிறுத்தப்படும் என்ற கேள்விக்கு இடமில்லை. ஸ்ரீல
பிரபுபாதரின் கூற்றுப்படி, சங்கீர்த்தன இயக்கம், (அதாவது இஸ்கான்), அடுத்த 9,500 ஆண்டுகளுக்கு
மட்டுமே இருக்கும். நித்தியத்துடன் ஒப்பிடும்போது, 9,500 ஆண்டுகள் என்பது ஒன்றும்
இல்லை; பிரபஞ்ச நேரத்தில் வெறும் கண்சிமிட்டும் நேரம் மட்டுமே. இஸ்கானுக்குள் ஸ்ரீல
பிரபுபாதர் "தற்போதைய இணைப்பாக" இருக்கும் காலகட்டமாக இது அமைகிறது. ஸ்ரீல
பிரபுபாதரின் ஜூலை 9 ஆம் தேதி உத்தரவை அவரோ அல்லது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரோ மாற்றியமைக்கும்போதோ
அல்லது பிரளயம் போன்ற சில வெளிப்புற சூழ்நிலைகள் நிர்பந்திக்கும்போது மட்டும்தான்
உத்தரவை பின்பற்ற முடியாது.
முந்தைய ஆச்சாரியர்கள் (ஸ்ரீல வியாசதேவர் போன்ற) நீண்ட காலமாக அதாவது ஆயிரக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான ஆண்டுகள் அதேநிலையில் உள்ளனர்; (கீழே உள்ள மேற்கோளைப் பார்க்கவும்). ஸ்ரீல பிரபுபாதரின் ஆட்சிக் காலம் "தற்போதைய இணைப்பாக" அது சங்கீர்த்தன இயக்கத்தின் இறுதி வரை நீண்டிருந்தாலும் கூட, எந்தவொரு குறிப்பிட்ட சிக்கலையும் ஏற்படுத்துவதாக தெரியவில்லை. அவ்வாறு இருப்பதற்கான காரணத்தை நாம் காணவில்லை.
"பரம்பரை அமைப்பு பொறுத்தவரை: பெரிய இடைவெளியை கருதி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை[...] சில கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கீதை சூரியபகவானுக்கு உபதேசிக்கப்பட்டுள்ளதை பகவத் கீதையில் நாம் காண்கிறோம். ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த பரம்பரை அமைப்பில் மூன்று பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அந்த பெயர்கள், விவஸ்வான், மனு மற்றும் இஷ்வாகு; எனவே இந்த இடைவெளிகள் பரம்பரை அமைப்பைப் புரிந்து கொள்வதற்கு தடையாக இருக்காது. நாம் சமீபத்திய பிரதான ஆச்சாரியர்களைத் தேர்ந்தெடுத்து, அவரைப் பின்பற்ற வேண்டும்.[...] நாம் எந்த சம்பிரதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அதன் ஆச்சாரியரின் அங்கீகாரத்திலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்."
(ஸ்ரீல பிரபுபாதர் தயானந்தருக்கு கடிதம், 12/4/1968)
ஜூலை 9-ஆம் தேதி உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் ஸ்ரீல பிரபுபாதர் குறைந்தபட்சம் இயக்கம் இருக்கும் வரை இஸ்கான் உறுப்பினர்களுக்கு பிரதானமான ஆச்சாரியராக இருப்பார். ஸ்ரீல பிரபுபாதர் அல்லது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடித் தலையீட்டினால் மட்டுமே இறுதி உத்தரவை திரும்ப பெற முடியும் (அத்தகைய தலையீடு குறைந்தபட்சம் தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் இருக்க வேண்டும் மேலும் கையொப்பமிடப்பட்ட உத்தரவை முழு சங்கத்திற்கும் அனுப்பப்பட வேண்டும்). இவ்வாறு, சில எதிர் அறிவுரைகள் வழங்கப்படும் வரை, பக்தித் தொண்டின் விஞ்ஞானம் ஸ்ரீல பிரபுபாதரினால் அவரது அடுத்தடுத்த தலைமுறையினருக்கு நேரடியாக வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும். இது நமது குருசீட பரம்பரையின் ஒரு பொதுவான நிகழ்வு என்பதால், அச்சப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. பக்தி விஞ்ஞான சேவை இழக்கப்பட்டால் மட்டுமே தலைமைபொறுப்பு "முடிந்தது" என்று கருத முடியும். இதுபோன்ற சமயங்களில், பொதுவாக மதக் கொள்கைகளை மீண்டும் நிலைநிறுத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணரே அவதாரம் எடுக்கிறார். ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் புழக்கத்தில் இருக்கும் வரை இந்த "விஞ்ஞானம்" சேதமடையாமல் வீரியமாக அப்படியே, முழுமையாக அணுகக்கூடியதாக இருக்கும்.
|
11. "ரித்வித் அமைப்பு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரியமாக இருந்து வரும் குரு-சிஷ்ய உறவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும்." |
ரித்விக் அமைப்பு என்பது, ஆற்றல்மிகுந்த வரம்பற்ற எண்ணிக்கையிலான சிரத்தையான சீடர்களை, பூமியை ஆசீர்வதித்த மிகப் பெரிய ஆச்சாரியரான அதாவது ஸ்ரீல பிரபுபாதருடன் இணைப்பதில் ஈடுபடுவதாகும். இந்த சீடர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களைப் படிப்பதன் மூலமும், அவருடைய சங்கத்தில் அவருக்குச் சேவை செய்வதன் மூலமும் அவருடன் உறவைப் பேணுவார்கள். இதில் வரம்பற்ற சிக்ஷாகுரு - சிஷ்ய உறவுகள் இருப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இது எப்படி குரு-சிஷ்ய உறவுகளின் மரபை முடிவுக்குக் கொண்டுவரும்?
தீக்ஷைகுரு - சிஷ்ய உறவுகள் எப்படி முறையாகப் பிணைக்கப்படுகின்றன என்பது பற்றிய விவரங்கள் ஒரு ஆச்சாரியரால், நேரம், இடம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படலாம், ஆனால் கொள்கை அப்படியேதான் உள்ளது:
“ராமானுஜ சம்பிரதாயத்தின் சிஷ்ய பரம்பரையில் ஒரு ஆச்சாரியரான ஸ்ரீமான் வீரராகவாச்சாரியார் தனது வர்ணனையில், சூத்திர குடும்பங்களை விட தாழ்ந்த குடும்பங்களில் பிறந்த சண்டாளர்கள் அல்லது நிபந்தனைக்குட்பட்ட ஆன்மாக்களுக்கும் கூட சூழ்நிலைக்கு ஏற்ப தீக்ஷை அளிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இங்கே முறைமைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக மாற்றி வைணவர்களாக ஆக்கலாம்" (ஸ்ரீமத் பாகவதம், 4.8.54, பொருளுரை)
அதுபோலவே ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவிடமிருந்து தீக்ஷை பெறும் இந்த கோட்பாடு ரித்விக் அமைப்பால் எந்த வகையிலும் குறையவோ அல்லது சமரசம் செய்து கொள்ளவோ இல்லை.
இந்தியாவில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பாரம்பரிய குருக்களை சிலர் இஸ்கானுக்கு முன்மாதிரியாக சுட்டிக்காட்டுகின்றனர். ஒவ்வொரு குருவிற்கும் சில சீடர்கள் உள்ளனர். அந்த சீடர்களுக்கு அவர் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கிறார். இது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், அதற்கும் உலகளாவிய அளவில் பகவான் சைதன்யரால் எப்போதோ முன்னறிவிக்கப்பட்டு, ஸ்ரீல பிரபுபாதர் நிறுவியதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த முன்னறிவிக்கப்பட்ட பணிக்கு ஸ்ரீல பிரபுபாதர் ஆயிரக்கணக்கான மற்றும் லட்சக்கணக்கான சக்திமிகுந்த சீடர்களைக் கொண்ட உலக ஆச்சாரியராக உள்ளார். ஸ்ரீல பிரபுபாதரால் அமைத்த இந்த ஒரு உலக இயக்கத்தின் மூலம் ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் அவரை "அணுகலாம்", "சேவை செய்யலாம்" மற்றும் "விசாரிக்கலாம்". ஶ்ரீல பிரபுபாதர் கட்டளையிடாத அல்லது அவரால் அமைத்து தராத, கிராம குரு முறையை இஸ்கானில் அறிமுகப்படுத்த ஏன் விரும்ப வேண்டும்?
ஒவ்வொருவரும் நூற்றுக்கணக்கான பல்வேறு கருத்துக்களைக் கொண்ட பல்வேறு குருக்களை தியானித்துக் கொண்டிருந்தார்கள் என்றால், கருத்துக்கள் மற்றும் தன்னுணர்வு நிலைகளில் எப்படி ஒற்றுமை இருக்க முடியும்? ஆன்மீக வாழ்க்கைக்கு குலுக்கல் தன்மைகொண்ட அணுகுமுறையை விட, நாம் நிரூபித்துள்ளபடி, ஸ்ரீல பிரபுபாதர் தன்னிடமே நேரடியாக சரணடைவதற்கு வசதியளிக்கும் ஒரு முயற்சித்து பரிசோதிக்கப்பட்ட அமைப்பு முறையைத் தந்து, அவர் நூறு சதவீதம் உத்தரவாதம் அளிக்கிறார். அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பது நமக்குத் தெரியும், இந்த வழியில் இஸ்கான் என்பது பெயரில் மட்டுமல்ல, உணர்விலும் ஒற்றுமையாக இருக்கும்.
சில பக்தர்கள், பரம்பரை வழியிலான உடல்ரீதியாக வாழும் தீக்ஷைக் குருக்களாக இல்லாவிட்டால், பக்தித் தொண்டின் விஞ்ஞானம் அழிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், இந்தக் கொள்கை ஸ்ரீல பிரபுபாதரால் ஒருபோதும் கூறப்படவில்லை ஆகவே, அது நம்முடைய தத்துவமாக இருக்க முடியாது. ரித்விக் அமைப்பு நடைமுறையில் இருக்கும் வரை (நிச்சயமாக அது மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டதும்), வாழும் சிக்ஷா குருக்கள், உடல் ரீதியாக இல்லாத மஹா-பாகவதரின் சார்பாக செயல்படுவார்கள். இந்த சிக்ஷா குருமார்கள் எதையும் மாற்றாத வரை, தத்துவத்தை உருவாக்காத வரை, முக்கிய கட்டளைகளை மீறாதவரை, அங்கீகாரமின்றி தங்களை தீக்ஷை குருக்களாக காட்டிக் கொள்ளாத வரை, பக்தித் தொண்டின் விஞ்ஞானம் முற்றிலும் மாறாமல் இருக்கும். அத்தகைய தவறான நடத்தை பக்தி எனும் அழியாத விஞ்ஞானத்திற்கு தடையாக இருந்தால், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நிச்சயமாக ஏதாவது ஒரு வழியில் தலையிட்டு மீண்டும் ஒரு கோலோக வாசியை அனுப்பி புதிய அங்கீகாரமுள்ள சமூகத்தை நிறுவலாம். இந்த தேவையில்லாத விஷயம் நடைபெறாமல் இருக்க நாம் ஒன்றாக வேலை செய்வோம்.
|
12. "ரித்விக் என்பது குருசீட பரம்பரையை நடத்துவதற்கான வழக்கமான வழி அல்ல. அதைச் செய்வதற்கான சரியான வழி, குருவானவர், உடல் ரீதியாக இருக்கும்போதே, பகவான்ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி அவர் தெரிந்து கொண்ட அனைத்தையும் சிஷ்யருக்குக் கற்பிப்பதாகும். குரு பூலோகத்தை விட்டு வெளியேறியதும் அவருடைய கட்டுப்பாடான அனைத்து சீடர்களின் கடமையும், உடனடியாகத் தங்கள் சொந்த சீடர்களுக்கு தீக்ஷை கொடுப்பதுதான் குருசீட பரம்பரையை தொடர்வதற்கான சரியான வழி. அதுவே காரியங்களைச் செய்வதற்கான "வழக்கமான" வழி." |
தீக்ஷை வழங்கும் எவருக்கும் இரண்டு முக்கியமான முன் நிபந்தனைகளை(அஃதாவது, அங்கீகாரம் மற்றும் தகுதி) என்பதை ஒதுக்கி விட்டு, நமது பரம்பரையில் உள்ள தீக்ஷையின் செயல்பாடுகள் பல்வேறுவகையில் வேறுபட்டவைகள் என்பது தெளிவாகிறது. பெயரளவிலான "வழக்கமான" அமைப்பை மீறுதல் என்பது ஐந்து அடிப்படை வகைகளின் கீழ் வருவதை நாங்கள் கவனித்தோம். இருப்பினும் இன்னும் பல இருக்கக்கூடும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை:
அ) இடைவெளிகள்
பரம்பரையில் உள்ள ஒரு ஆச்சாரியர் வெளியேறும்போது, உடனடியாக அடுத்த தீக்ஷை கொடுக்கும் தொடரும் நபர்கள் இல்லாததை பல சம்பவங்களில் காணலாம். அல்லது அடுத்த இணைப்பாக மாறப்போகும் நபர், தனது ஆன்மிக குருவிடம் இருந்து அவர் உடல்ரீதியாக வாழும்போதோ அல்லது இவ்வுலகை விட்டு வெளியேறும் போதோ, உடனடியாக தீக்ஷை வழங்கும் அதிகாரத்தைப் பெறுவதில்லை. எடுத்துக்காட்டாக, ஸ்ரீல பக்திசித்தாந்தரின் மறைவிற்கும் நமது சம்பிரதாயத்தில் அடுத்த அங்கீகரிக்கப்பட்ட தீக்ஷைக்கும் இடையே சுமார் இருபது ஆண்டுகள் இடைவெளி இருந்தது. குருசீட பரம்பரைகளுக்கு இடையே நூறு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிகள் கூட அசாதாரணமானது அல்ல.
ஆ) தலைகீழ் இடைவெளிகள்
பல சந்தர்ப்பங்களில் ஒரு ஆச்சாரியர் தனது உடலை விட்டு வெளியேறாத போதும் அவர்தம் சீடர்கள் தீக்ஷை அளிக்க தொடங்கியதை காணலாம். எடுத்துக்காட்டாக, பிரம்மதேவர், இன்னும் தனது உடலை விட்டு வெளியேறவில்லை என்றாலும் அவர் வழிவந்த குருமார்கள் இன்னும் பல தலைமுறை தலைமுறையாக லட்சக்கணக்கான சீடர்களுக்கு தீக்ஷை அளித்துள்ளனர். ஸ்ரீல பக்திசித்தாந்தருக்கு தீக்ஷை கொடுக்கப்பட்ட போது, ஸ்ரீல பக்திவினோத தாகூரர் மற்றும் ஸ்ரீல கௌர கிஷோரர் இருவரும் உடல் ரீதியாக இருந்தனர். GII-Gurus And Initiation In ISKCON) பக்கம் 23) படி இது நமது சம்பிரதாயத்தில் ஒரு பொதுவான நிகழ்வு.
இ) சிக்ஷா / தீக்ஷை இணைப்பு
ஒரு ஆச்சாரியர் பூலோகத்தை விட்டு வெளியேறிய பிறகு ஒரு சீடர் அவரை தனது முதன்மை ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்ட நிகழ்வுகள் உள்ளன. இறந்த ஆச்சாரியர் அந்த சீடருக்கு சிக்ஷா குருவா அல்லது தீக்ஷை குருவா என்பதை பகுத்தறிவது பெரும்பாலும் கடினம். இந்த ஆன்மீக தொடர்புகளின் துல்லியமான தன்மையை ஸ்ரீல பிரபுபாதர் பொதுவாகக் குறிப்பிடவில்லை. எடுத்துக்காட்டாக, நூறு ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்த ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூரர் மற்றும் நரோத்தம தாஸ தாகூரர் ஆகியோருக்கு இடையேயான உறவின் சரியான தன்மையை ஸ்ரீல பிரபுபாதர் விவரிக்கவில்லை. நாம் அதை ஒரு சிக்ஷா உறவு என்று அழைக்க விரும்பலாம். ஆனால் அது ஊகம் மட்டுமே, ஏனெனில் ஸ்ரீல பிரபுபாதர் எளிமையாக கூறுகிறார்:
"ஸ்ரீல நரோத்தம தாஸ தாகூரர், ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தியை தனது சேவகராக ஏற்றுக்கொண்டார்."
(ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம். ஆதி லீலை, 1)
"...விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூரர் அவர்கள் நரோத்தம தாஸ தாகூரரை தனது குருவாக ஏற்றுக்கொண்டார்."
(ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீமத் பாகவதம். உபன்யாசம், 17/4/1976, பம்பாய்)
பொதுவாக உடல் ரீதியாக இருக்கும் ஒரு ஆச்சாரியர் ஒரு சீடருக்கு தீக்ஷை குருவாக இருந்து ஒருவித சடங்குகளைச் செய்து தீக்ஷை கொடுக்கிறார் என்றாலும், அவர் மறைந்த பிறகும் அவர் தீக்ஷை குருவாக இருப்பதை தடுக்க முடியாது. ரித்விக் சடங்கு என்றால் ரித்விக் அல்லது கோயில் தலைவர்கள் தீக்ஷை குருவாக ஆகிவிட்டார்கள் என்று அர்த்தமல்ல. மேலும் அத்தகைய சீடர்கள் பொதுவாக நேரில் இருகின்ற அதிகாரியின் மூலமாக, அப்போது வீற்றிருக்காத ஒரு சத்குருவிடமிருந்து தீக்ஷை ஏற்கிறார்கள் என்றே அர்த்தம். இதேபோல் ரித்விக் அமைப்பு மீண்டும் நிறுவப்படும்போது, ஸ்ரீல பிரபுபாதரின் புதிய சீடர்கள் முதலில் கோயிலின் தலைவர்கள் மற்றும் ரித்விக்குகளின் அங்கீகாரத்தையும் பெறுவார்கள்.
ஈ) தீக்ஷை முறை
வழக்கத்திற்கு மாறான தீக்ஷை வழங்கும் முறைகள் தனித்துவமானதாகவும் அல்லது சிந்தனைக்கு அப்பாற்பட்ட முறையிலும் நிகழ்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிரம்மதேவருக்கு தீக்ஷை கொடுத்தல்; அல்லது பகவான் சைதன்யர் புத்த துறவிகளின் காதில் ரகசியமாக உபதேசித்தது போன்றவை. மாற்று கிரகங்களுக்கிடையேயான தீக்ஷைகள் கூட நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக மனு, இக்ஷ்வாகு-விற்கு தீக்ஷையை வழங்கினார். இங்கு வேறு கிரகத்தில் வசிக்கும் ஒரு சீடருக்கு தீக்ஷையை வழங்கியுள்ளார்கள். இது ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது(4.1)
உ) வாரிசு அமைப்புகள்
இது நமது சம்பிரதாயத்தில் உள்ள மாறுபட்ட வாரிசு ஆச்சாரிய அமைப்புகளைக் குறிக்கிறது. உதாரணமாக, ஸ்ரீல பக்திவினோதர் ஒரு "சக்திவாய்ந்த வைஷ்ணவ மகனை" வாரிசாக அமைத்தார். ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி அவர்கள் ஒரு சுய “பிரகாசம் கொண்ட ஆச்சாரிய” அமைப்பை கண்டார். ஸ்ரீல பிரபுபாதர் நமக்கு விட்டுச்சென்றது "தீக்ஷைகளை செய்துகொடுக்கும் நோக்கத்திற்காக ஆச்சாரியரின் பிரதிநிதி எனப்படும் ரித்விக்," அமைப்பாகும். இதன் மூலம் "புதிதாக தீக்ஷைப் பெற்ற பக்தர்கள் அனைவரும் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் சீடர்கள்." GBC-யினால் பரிந்துரைக்கப்படும் தற்போதைய அமைப்பு "பன்முறை ஆச்சாரிய வாரிசு அமைப்பு"(multiple äcärya successor system).
ஒவ்வொரு ஆச்சாரியரின் அணுகுமுறையும் மிகவும் தனித்துவமானது என்பது தெளிவாகிறது, எனவே பரம்பரையைத் தொடர்வதற்கான "வழக்கமான" அமைப்பு என்று பேசுவது நடைமுறையில் அர்த்தமற்றது.
|
13. "ரித்விக் முறையை நாம் ஏற்றுக்கொண்டால், ஸ்ரீல பக்திசித்தாந்தர் போன்ற முந்தைய ஆசார்யர்களிடம் இருந்து தீக்ஷை எடுப்பதை எது தடுக்கும்?" |
இரண்டு விஷயங்கள் இதை ஒரு உண்மையான அங்கீகாரமாக இருப்பதைத் தடுக்கின்றன:
அ) ஸ்ரீல பக்திசித்தாந்தர் மற்றும் பிற முந்தைய ஆச்சாரியர்கள், "இனிமேல்" என்று கூறி ஒரு ரித்விக் அமைப்பு இயங்க அங்கீகரிக்கவில்லை.
ஆ) நாம் தற்போதைய இணைப்பைத் தான் அணுக வேண்டும்:
"...ஸ்ரீமத் பாகவதத்தின் உண்மையான செய்தியைப் பெறுவதற்கு ஒருவர் தற்போதைய இணைப்பை அல்லது குருசீட பரம்பரையின் சங்கிலியில் உள்ள ஆன்மீக குருவை அணுக வேண்டும்." (ஸ்ரீமத் பாகவதம், 2.9.7, பொருளுரை)
ஸ்ரீல பக்திசித்தாந்தருக்குப் பிறகு வந்த சம்பிரதாய ஆச்சாரியர் ஸ்ரீல பிரபுபாதர் என்பது சுய ஆதாரமாகும். எனவே ஸ்ரீல பிரபுபாதரே தற்போதைய இணைப்பு மற்றும் தீக்ஷைக்கு அணுக சரியான நபர்.
|
14. "தற்போதைய இணைப்பாக இருக்க, நீங்கள் உடல் ரீதியாக இருக்க வேண்டும்." |
ஸ்ரீல பிரபுபாதர் மேற்கண்ட கட்டளையை ஒருபோதும் கூறவில்லை.
ஒரு ஆன்மீக குருவானவர் உடல் ரீதியாக இல்லையெனில் அவர் "தற்போதைய"(current) இருக்க முடியுமா? என்பதை நாம் கருத்தில் கொள்வோம்.
அ) "தற்போதைய இணைப்பு"(current link ) என்ற சொல் ஸ்ரீல பிரபுபாதரின் மொத்த புத்தகங்களிலும் ஒரு பத்தியில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உடல் ரீதியிலான இருப்பு( physical presence) என்ற வார்த்தையை ஆதரிக்கும் எந்த குறிப்பும் இல்லை. உடல் ரீதியிலான இருப்பு இன்றியமையாததாக இருந்திருந்தால், அது நிச்சயமாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆ) "நடப்பு"(current) என்ற வார்த்தையின் அகராதி வரையறைகள் உடல் ரீதியிலான இருப்பு என்பதை குறிக்கவில்லை.
இ) "நடப்பு"(current) என்ற வார்த்தையின் அகராதி வரையறைகளை உடல் ரீதியாக இல்லாத ஆன்மீக குரு மற்றும் அவரது புத்தகங்களுக்கு உடனடியாகப் பயன்படுத்தலாம்: "மிக சமீபத்திய". "பொதுவாக அறியப்பட்ட, நடைமுறைப்படுத்தப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட", "பரவலான", "சுழற்சி மற்றும் தற்போது செல்லுபடியாகும்" என்பது புழக்கத்தில் உள்ளது.(காலின்ஸ் ஆங்கில அகராதி).“most recent”, “commonly known, practised or accepted”, “widespread”, “circulating and valid at present” (Collins English Dictionary).
மேலே உள்ள அனைத்து வரையறைகளையும் நாம் பார்த்தவரையில், ஸ்ரீல பிரபுபாதருக்கும் அவருடைய புத்தகங்களுக்கும் பொருந்தும்.
ஈ) ஸ்ரீல பிரபுபாதரின் நூல்களைப் படிப்பதன் மூலமாகவே "தற்போதைய இணைப்பை" அணுகுவதன் நோக்கமானது முழுமையாகத் திருப்தியடையப் படுகிறது:
"...ஸ்ரீமத் பாகவதத்தின் உண்மையான செய்தியைப் பெறுவதற்கு ஒருவர் தற்போதைய இணைப்பை அல்லது குருசீடர் பரம்பரையின் சங்கிலியில் உள்ள ஆன்மீக குருவை அணுக வேண்டும்." (ஸ்ரீமத் பாகவதம். 2.9.7, பொருளுரை)
உ) ஸ்ரீல பிரபுபாதரும் "சமீபத்திய ஆசார்யர்"(immediate äcärya) என்ற சொல்லை "தற்போதைய இணைப்பு“(current link)" என்பதற்கு இணையாக பயன்படுத்துகிறார். "சமீபத்திய" என்ற வார்த்தையின் அர்த்தம்:
"தலையிடும் ஊடகம் இல்லாமல்",(Without intervening medium) "நெருங்கிய அல்லது நடைமுறையில் நேரடியான அல்லது உறவுமுறையிலான" (காலின்ஸ் ஆங்கில அகராதி).(closest or most direct in effect or relationship)
இந்த வரையறைகள் ஸ்ரீல பிரபுபாதரின் உடனான நேரடி உறவுக்கு இடைப்பட்டவர்களின் தேவை இல்லாமல், மீண்டும் உடல் இருப்பு அல்லது இல்லாமையைப் பொருட்படுத்தாமல் செல்லுபடியாகும்.
ஊ) குரு பூமியில் இருக்கும்போதே அவரின் சீடர்கள் தீக்ஷை கொடுத்ததற்கான எடுத்துக்காட்டுகள் இருப்பதால், தற்போதைய இணைப்புநிலை மற்றும் உடல் ரீதியிலான இருப்பு/இல்லாமை ஆகியவற்றுக்கு இடையே நேரடி உறவு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் சொந்த குரு உடல் ரீதியாக இருக்கும்போது கூட அடுத்த தற்போதைய இணைப்பு இருப்பது சாத்தியம் என்றால், ஏன் மறைந்த ஆச்சாரியர் தற்போதைய இணைப்பாக இருக்க முடியாது?
முடிவாக, நடப்பிலுள்ள உடல் இணைப்பு அல்லது உடல் சாராத பரிசீலனைகள் தோன்றியதற்கான எந்த அடிப்படையான ஆதாரத்தையும் நாங்கள் காணவில்லை.
|
15. "ஸ்ரீல பக்திசித்தாந்தர் மறைந்த பிறகு ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீக சகோதரர்கள் அனைவரும் தீக்ஷை வழங்கும் ஆச்சாரியர்களாக ஆனார்கள் எனும்போது ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்களும் அவ்வாறே செய்வதனால் என்ன தவறு?" |
தீக்ஷை ஆச்சாரியர்களாக தங்களைக் காட்டிக் கொள்வதில், ஸ்ரீல பக்திசித்தாந்தரின் சீடர்கள் தங்கள் ஆன்மீக குருவின் இறுதிக் கட்டளையை (ஜிபிசியை உருவாக்குதல் மற்றும் ஒரு சுய-பிரகாசமான ஆச்சாரியருக்காக காத்திருத்தல்) நேரடியாக மீறிச் செயல்பட்டனர். ஸ்ரீல பிரபுபாதர் தனது ஆன்மீக சகோதரர்களின் கீழ்ப்படியாமையை மிகவும் கடுமையாகக் கண்டித்தார். அவர்கள் பிரச்சாரம் செய்வதற்கு பயனற்றவர்கள் என்று கூறும்போது தீக்ஷை பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது.
"...என் ஆன்மீக சகோதரர்களில் யாரும் ஆச்சாரியராக தகுதியற்றவர்கள்." (ஸ்ரீல பிரபுபாதர் ரூபானுகருக்கு எழுதிய கடிதம், 28/4/1974)
"ஒட்டுமொத்தமாக, அவர் (பான் மஹாராஜர்) ஒரு முக்தி பெற்ற மனிதர் அல்ல என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம், எனவே, கிருஷ்ண உணர்வு பாதையில் அவரால் எந்த ஒரு நபருக்கும் தீக்ஷை அளிக்க முடியாது. அதற்கு உயர் அதிகாரிகளிடமிருந்து சிறப்பு ஆன்மீக வரம் தேவைப்படுகிறது."
(ஸ்ரீல பிரபுபாதர் ஜனார்தனருக்கு எழுதிய கடிதம், 26/4/1968)
"ஒவ்வொருவரும் தீக்ஷை வழங்கினால், வெறுமனே முரண்பாடான முடிவுதான் இருக்கும். அது தொடரும் வரை தோல்வி மட்டும்தான் இருக்கும்."
(ஸ்ரீல பிரபுபாதர் பால்குன கிருஷ்ண பஞ்சமி, ஸ்லோகம் 23, 1961)
ஸ்ரீல பிரபுபாதரின் இயக்கத்திற்கு இந்த நபர்களில் ஒருவரால் மட்டும் எத்தகைய அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை சமீபத்திய அனுபவத்திலிருந்து நாம் பார்க்கலாம். முடிந்தவரை மரியாதையை அதிக தூரத்திலிருந்து கொடுக்க நாம் பரிந்துரைக்கிறோம். ஒரு சீடர் தங்கள் ஆன்மீக குருவின் பணியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு நிச்சயமாக அவர்களை முன்மாதிரியாகப் பயன்படுத்த முடியாது. அவர்கள் தங்கள் ஆன்மீக குருவின் இயக்கத்தை அழித்துவிட்டதால், மேலும் நாம் அவர்களை அனுமதித்தால் இஸ்கானுக்கும் அதையே செய்யும் திறன் அதிகம் உள்ளது.
கௌடிய மடத்தின் குரு அமைப்பைப் பொறுத்தவரையில், இதுவே வரலாற்று முன் மாதிரியாக M.A.S.S. - ஆனது ஸ்தாபக-ஆச்சாரியரின் தெளிவான உத்தரவுகளை நேரடியாக மீறி அமைக்கப்பட்டது என்று குற்றம் சாட்டலாம்
|
16. "ஸ்ரீல பிரபுபாதர், ஆச்சாரியர்களாக அவர்கள் இருக்கக் கூடாது என்று கூறியபோது, அவர் பெரிய 'A'-வை ஆச்சாரியரைக் குறிக்கிறார். அதாவது, ஒரு நிறுவனத்திற்குத் தலைமை தாங்கும் ஆச்சாரியரை." |
ஸ்ரீல பிரபுபாதர் பெரிய 'A' மற்றும் சிறிய 'a' தீக்ஷை ஆச்சாரியர்களை எங்கு வேறுபடுத்துகிறார்? நிறுவனங்களைத் தலைமை தாங்கக்கூடிய தீக்ஷை வழங்கும் ஒரு குறிப்பிட்ட ஆச்சாரியரை பற்றி எங்கே பேசுகிறார்? மேலும் சில இயலாமையில் அதைச் செய்ய முடியாத ஒரு தாழ்ந்த இனம் இருப்பதை எங்கு குறிப்பிட்டிருக்கிறார் ?
|
17. "ஆச்சாரியர்களில் மூன்று வகை உள்ளனர் என்பது பொதுவான அறிவு. இஸ்கானில் உள்ள அனைவரும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்." |
ஆனால் இந்த யோசனை ஒருபோதும் ஸ்ரீல பிரபுபாதரால் கற்பிக்கப்படவில்லை, இதை 7/8/1978-தேதியிட்ட சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமிக்கு பிரத்யும்ன தாஸரால் எழுதிய கடிதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கடிதம் பின்னர் என்னுடைய கட்டளையின் கீழ்(Under My Order) என்ற தலைப்பில் (ரவீந்திர-ஸ்வரூப தாஸா, 1985) காகிதத்தில் மீண்டும் அச்சிடப்பட்டது, மேலும் இஸ்கானுக்குள் உள்ள குரு அமைப்பு எவ்வாறு சீர்திருத்தப்பட வேண்டும் என்பது குறித்த அந்த ஆய்வறிக்கையின் அடிதளங்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டது. இதையொட்டி, என் கட்டளையில் புரிந்தது (On My Order Understood GBC-Governing Body Commissioners), 1995) என்ற கட்டுரை தான் தீக்ஷை குறித்த GII-(Gurus And Initiation In ISKCON) யின் கோட்பாட்டின் அடிப்படையை உருவாக்குகிறது. (அறிமுகம், பக்கம்.13-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி). இக்கட்டுரையானது மண்டல ஆச்சாரிய முறையை இன்றைய M.A.S.S. ஆக மாற்ற வழிவகுத்தது.
"ஆச்சாரியரின் இந்த வரையறையை ஆகஸ்ட் 7, 1978 இல் பிரத்யும்னர், சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமிக்கு எழுதிய கடிதத்தில் இருந்து எடுத்துள்ளேன். வாசகர்கள் இப்போது (நான் இணைத்துள்ள) இந்தக் கடிதத்தை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்." (என்னுடைய கட்டளையின் கீழ் (Under My Order), ரவீந்திர-ஸ்வரூப தாஸர், ஆகஸ்ட் 1985)
பிரத்யும்னர் தனது கடிதத்தில், ஆச்சாரியர் என்ற வார்த்தையை மூன்று அர்த்தங்களில் எடுத்துக் கொள்ளலாம் என்று விளக்குகிறார்.
1. தான் உபதேசிப்பதை பயிற்சி செய்பவர்.
2. சீடருக்கு தீக்ஷை வழங்குபவர்.
3. தனது வாரிசாக முந்தைய ஆச்சாரியரால் குறிப்பாக அறிவிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் ஆன்மீகத் தலைவர்.
வரையறை 1-ஐ ஏற்றுக்கொள்கிறோம், ஏனெனில் இது ஸ்ரீல பிரபுபாதரால் பயன்படுத்தப்பட்டது. சிக்ஷா அல்லது தீக்ஷை குருவாக இருந்தாலும், எந்தவொரு திறமையான போதகருக்கும் இந்த வரையறை தானாகவே பொருந்தும்.
வரையறை 2-க்கு செல்லும்போது, பிரத்யும்னர் இந்த வகையான ஆச்சாரியர் சீடர்களுக்கு தீக்ஷை அளிக்கலாம் மற்றும் அவரது சீடர்களால் மட்டுமே ஆச்சாரியதேவர் என்று குறிப்பிடலாம்.
"தீக்ஷை வழங்குபவர் அல்லது குருவாக இருப்பவர் "ஆச்சாரியதேவர்" என்று அழைக்கப்படலாம். ஆனால் அவரது சீடர்களால் மட்டுமே! அவரை குருவாக ஏற்றுக்கொள்ளும் எவரும் அவருக்கு எல்லா வகையிலும் எல்லா மரியாதைகளையும் கொடுக்க வேண்டும். ஆனால் அவருடைய சீடர்கள் அல்லாதவர்களுக்கு இது பொருந்தாது.
(பிரத்யும்ன தாஸர், 7/8/1978)
இது ஒரு மனயூகம். ஸ்ரீல பிரபுபாதர் எந்த இடத்திலும் ஒரு தீக்ஷைகுருவின் முழுமையான இயல்பு அவரது சீடர்களால் மட்டுமே அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் உலகளாவிய அளவிலோ அல்லது அதே வரிசையில் உள்ள மற்ற வைஷ்ணவர்களால் கூட அங்கீகரிக்கப்படாதவர்கள் என்று எங்கும் குறிப்பிடவில்லை. "ஆச்சாரியதேவர்" என்ற வார்த்தையை ஸ்ரீல பிரபுபாதர் எவ்வாறு வரையறுக்கிறார் என்பதைப் பார்ப்போம். ஸ்ரீல பிரபுபாதரின் தன்னையறியும் விஞ்ஞானம் புத்தகத்தில் (The Science of Self Realization- “SSR"), அத்தியாயம் 2 இல் அச்சிடப்பட்ட ஸ்ரீல பிரபுபாதரின் வியாச-பூஜா புகழுரையிலிருந்து சில பகுதிகள் உள்ளன. அங்கு அவர் தனது சொந்த ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்தருடன் தொடர்புடைய வார்த்தையைப் பயன்படுத்துகிறார்:
"குரு, அல்லது ஆச்சாரியதேவர் என்பவர் ஆன்மீக உலகின் செய்தியை வழங்குபவர் என்பதை நாம் அதிகார பூர்வமான வேதங்களிலிருந்து கற்றுக்கொள்கிறோம் ..."
"...குருதேவர் அல்லது ஆசார்யதேவரின் அடிப்படைக் கொள்கையைப் பற்றி நாம் பேசும்போது, அது உலகளாவிய அளவில் பயன்பாட்டிற்குரிய ஒன்றைப் பற்றி பேசுகிறோம்."
"இந்த இரவில் நாம் மரியாதை செலுத்த ஒன்று கூடியிருப்பது ஆச்சாரியதேவர் என்பவர் ஏதோ ஒருசார்புடைய அமைப்பின் குரு அல்லது பல வேறுபட்ட உண்மைகளை வெளிப்படுத்துபவர்களில் ஒருவரல்ல. மாறாக, அவர் ஜகத்-குரு, அல்லது நம் அனைவருக்கும் குரு..."
(SSR, அத்தியாயம் 2)
ஸ்ரீல பிரபுபாதரால் பயன்படுத்தப்பட்ட ஆச்சாரியதேவர் என்ற வார்த்தையின் வரையறை பிரத்யும்னரின் வார்த்தைகளுக்கு நேருக்குநேர் எதிரானது. பிரத்யும்னர் சொல்வதில் மறைமுகமாக, ஆச்சாரியதேவர் என்ற சொல் உண்மையில் அந்த உயர்ந்த தளத்தில் இல்லாத நபர்களுக்குப் பொய்யாகப் பயன்படுத்தப்படலாம். இவ்வாறாக, அவர் தீக்ஷை குருவின் முழுமையான நிலையை சிறுமைப்படுத்தி ஒப்பிட்டுப் பார்க்கிறார்
"ஆச்சாரியதேவர்" என்ற சொல் உண்மையில் "நம் அனைவருக்கும் குருவாக" இருக்கும் ஒருவருக்கு மட்டுமே பொருந்தும்; உலகம் முழுவதும் வழிபட வேண்டிய ஒருவர்:
"...அவர் பகவானின் நேரடி வெளிப்பாடாகவும், ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் உண்மையான பிரதிநிதியாகவும் அறியப்படுகிறார். அத்தகைய ஆன்மீக குரு ஆச்சாரியதேவர் என்று அறியப்படுகிறார்." (ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம். ஆதி-லீலை, 1.46, பொருளுரை)
பிரத்யும்னர் வரையறை 3-இல், ஆச்சாரியர் என்ற வார்த்தை ஒரு நிறுவனத்தின் தலைவரைக் குறிக்கிறது என்று விளக்கியிருக்கிறார், இந்த அர்த்தம் மிகவும் குறிபிட்ட ஒருவருக்கு பொருந்தும் என்றும் விளக்குகிறார்:
"இது யாரோ ஒருவரைக் மட்டும் குறிப்பிடவில்லை. அதாவது முந்தைய ஆச்சாரியரால் அவர் தலைமை வகிக்கும் ஆன்மீக நிறுவனத்தின் இருக்கைக்கு மற்ற அனைவரையும் விட தனது வாரிசாக அறிவிக்கப்பட்ட ஒருவரை மட்டுமே இது குறிக்கிறது. [...] கௌடிய சம்பிரதாயங்கள் அனைத்திலும் இதுதான் கண்டிப்பான வழக்கம்.."
(பிரத்யும்னர் சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமிக்கு எழுதிய கடிதம், 7/8/1978)
ஒருவர் தீக்ஷை வழங்குவதற்கு முதலில் அவருக்கு முந்தைய ஆச்சாரியரால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாங்கள் நிச்சயமாக ஒப்புக்கொள்கிறோம். (வரையறை 2-இன் விரிவாக்கத்தில் கூட குறிப்பிடப்படாத ஒரு விஷயம்):
“ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட குருசீடப்பரம்பரை வரிசையில் இருந்து வந்த, தனது முந்தைய ஆன்மீக குருவால் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவிடமிருந்து தீக்ஷை எடுக்கவேண்டும்.
(ஸ்ரீமத் பாகவதம், 4.8.54, பொருளுரை)
இருப்பினும், மேற்குறிப்பிட்ட இந்த செய்தியுடன் ஒப்பிடுகையில், "ஆன்மீக நிறுவனத்தின் இருக்கையை" எடுத்துக்கொள்ளும் விஷயமானது வெறுமனே பிதற்றுவதாக தெரிகிறது. ஏனெனில் ஆச்சாரியர் ஸ்ரீல பிரபுபாதர் என்பவர் அவரது குரு மஹாராஜரின் இயக்கத்திலிருந்து முற்றிலும் தனியான ஒரு இயக்கத்தின் ஆச்சாரியர் ஆவார். பிரத்யும்னரின் தத்துவத்தின்படி, ஸ்ரீல பிரபுபாதர் வரையறை 2-ன் படியான ஆச்சாரியர் வகையில் மட்டுமே வரலாம். பிரத்யும்னர் குறிப்பிடும் "கண்டிப்பான வழக்கம்" எதுவாக இருந்தாலும், அது நிச்சயமாக ஸ்ரீல பிரபுபாதரால் குறிப்பிடப்படவில்லை, எனவே நாம் அதை பாதுகாப்பாக நிராகரிக்க முடியும். பிரத்யும்னரிடம் இருக்கும் நயவஞ்சகமான கருத்துக்கள் எங்கிருந்து தோன்றின என்பதை பக்கத்தின் கீழே, நாம் சரியாகப் பார்க்கிறோம்:
"உண்மையில், வெவ்வேறு கௌடீய மடங்களில், ஒரு ஆன்மீகச் சகோதரர் ஆச்சாரிய நிலையில் இருந்தாலும், அவர் வழக்கமாக, பணிவுடன், மெல்லிய துணியை மட்டுமே ஆசனத்திற்காக எடுப்பார், அதைவிட உயர்ந்த எதையுமில்லை."
(பிரத்யும்னர் சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமிக்கு எழுதிய கடிதம், 7/8/1978)
ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீகச் சகோதரர்கள் யாரும் அங்கீகரிக்கப்பட்ட ஆச்சாரியர்கள் அல்ல. உண்மையான பணிவு என்பதனை மொழிபெயர்க்க வேண்டுமெனில், ஒருவர் தனது அங்கீகரிக்கப்படாத செயலை கைவிடுதல் என்று மாற்ற வேண்டும். எது எப்படி இருந்தாலும், ஸ்ரீல பிரபுபாதரின் முதன்மையான நிலையை அடையாளம் கண்ட பின்னர் உண்மையான ஜகத்-குருவிடம் சரணடைய வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, கௌடீய மடத்தைச் சேர்ந்த சிலரே இதைச் செய்திருக்கிறார்கள். பிரத்யும்னர் இந்த நபர்களை அங்கீகரிக்கப்பட்ட உதாரணங்களாகக் குறிப்பிடுவது உண்மையான ஆச்சாரியதேவரின் நிலையை மீண்டும் ஒருமுறை இழிவுபடுத்துகிறது.
"பக்தி புரி, தீர்த்த மஹாராஜர் பொறுத்தவரையில், அவர்கள் எனது ஆன்மீகச் சகோதரர்கள் மற்றும் அவர்களுக்கு மரியாதை காட்டப்பட வேண்டும். ஆனால் அவர்கள் எனது குரு மஹராஜரின் கட்டளைக்கு எதிராகச் சென்றதால் அவர்களுடன் நீங்கள் எந்தவிதமான நெருக்கமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது."
(பிரத்யும்னருக்கு ஸ்ரீல பிரபுபாதர் கடிதம், 17/2/1968)
தனது குரு மஹாராஜரின் இந்த நேரடியான உபதேசத்தை புறக்கணித்தது வெட்கக்கேடானது, மேலும் அவரது மாறுபட்ட கருத்துக்கள் இஸ்கானின் தற்போதைய குரு "சித்தாந்தத்தை" வடிவமைக்க அனுமதிக்கப்பட்டது மிகவும் குறிப்பிடத்தக்கது.
எனவே, ஸ்ரீல பிரபுபாதர் தனது ஆன்மீக சகோதரர்கள் யாரும் ஆச்சாரியராக ஆவதற்குத் தகுதியற்றவர்கள் என்று கூறியபோது, பிரத்யும்னரின் ஆச்சாரியருக்கான வரையறைகளான 1 அல்லது 3-ஐ பொருத்தமற்றதாக ஆக்கினார். அவர்கள் வரையறை 1-க்கு தகுதியற்றவர்கள் என்றால், அவர்கள் உதாரணத்தின் மூலம் கற்பிக்கவில்லை என்று அர்த்தம். இது அவர்களை 3-வது வரையறையிலிருந்தும் முற்றிலுமாக தானாகவே தீக்ஷை வழங்க தகுதியற்றவர்களாக செய்கிறது. மேலும் அவை வரையறை 3-இன் படி அவர்கள் தகுதி பெறவில்லை என்பதால், அவர்கள் அங்கீகாரம் இல்லாதவர்களாகி மீண்டும் அவர்களால் தீக்ஷை வழங்க முடியாது.
முடிவாக
அ) அனைத்து பிரச்சாரகர்களும் வரையறை-1-ன் படியான ஆச்சாரியர் அல்லது சிக்ஷா குருவாக மாற விரும்ப வேண்டும்.
ஆ) பிரத்யும்ன தாஸரின் வரையறை 2-இன் விளக்கம் முற்றிலும் போலியானது. சீடராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அங்கீகரிக்கப்பட்ட குரு அல்லது ஆச்சாரியதேவரை சாதாரண மனிதராகக் கருதுவது எவருக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது. அவர் உண்மையில் ஒரு சாதாரண மனிதராக இருந்தால், அவர் யாருக்கும் தீக்ஷை கொடுக்க முடியாது. மேலும் அவரை ஆச்சாரியதேவர் என்று குறிப்பிட முடியாது. மேலும், “குருசீடப் பரம்பரை வாயிலாக முந்தைய ஆச்சாரியரிடமிருந்து குறிப்பிட்ட தீக்ஷை அங்கீகாரம் இல்லாமல், யாரும் தீக்ஷை வழங்க முடியாது” என்பதையும் குறிப்பிடவில்லை.
இ) வரையறை 3 என்பது தீக்ஷை கொடுக்கக்கூடிய ஒரே வகை ஆச்சாரியர்; அதாவது தனது சொந்த சம்பிரதாய ஆச்சாரியர் அல்லது ஆன்மீக குருவால் அங்கீகரிக்கப்பட்டவர். அவ்வாறு அதிகாரம் பெற்ற அவர் ஒரு நிறுவனத்திற்கு தலைமை தாங்கலாம் அல்லது தலைமை தாங்காமலும் போகலாம், அது பொருத்தமற்றது.
இஸ்கானில் உள்ள அனைத்து பக்தர்களுக்கும் வரையறை-1 ஆச்சாரியர்களாக மாற, உபதேசிக்கப்படுகிறார்கள். அதாவது தனது சுய உதாரணத்தின் மூலம் அல்லது சிக்ஷா குருக்கள் மூலம் கற்பித்தல். ஆனால் இந்த வகையான ஆச்சாரியராக மாறுவது பாதையின் ஒரு நல்ல தொடக்கமாக இருந்தாலும் ஆன்மீக குருவின் கட்டளையை கண்டிப்பாக பின்பற்ற தொடங்க வேண்டும்.
|
18. "இது ஒரு சிறிய விஷயமாகத் தெரிகிறது, ஆச்சாரியர்களைப் பற்றிய இந்தக் கருத்துக்கள் எப்படி இஸ்கான் மீது குறிப்பிடத்தக்க பாதகமான விளைவுகளை ஏற்படுத்த முடியும்?" |
உண்மையில், தீக்ஷை குருவின் தொடர்பானது இஸ்கானுக்குள் எல்லாவிதமான குழப்பங்களுக்கும் வழிவகுத்தது. சில இஸ்கான் குருக்கள், ஸ்தாபகர்-ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரின் தற்போதைய இணைப்புகளாகச்(current links) செயல்படுவதன் மூலம் தங்கள் சீடர்களை மீண்டும் பகவானிடம் அழைத்துச் செல்வதாக கூறுகிறார்கள்; மேலும் சில குருக்கள் ஸ்ரீல பிரபுபாதரிடம் சீடர்களை அறிமுகப்படுத்துவதாகவும் அவர்களை மீண்டும் பகவானிடம் (கிட்டத்தட்ட ரித்விக் தத்துவம்) அழைத்துச் செல்லும் உண்மையான தற்போதைய இணைப்பு(current links) ஸ்ரீல பிரபுபாதர்தான் என்றும் கூறுகிறார்கள். சில குருக்கள் இன்னும் ஸ்ரீல பிரபுபாதர்தான் தற்போதைய ஆச்சாரியர் என்று கூறுகிறார்கள், மற்றவர்கள் அவர் இல்லை என்று கூறுகிறார்கள்; மேலும் ஒரு தம்பதியினர் தங்களை ஸ்ரீல பிரபுபாதரின் ஒரே வாரிசு ஆச்சாரியர் என்று கூறிக்கொண்டனர். சில இஸ்கான் குருக்கள் இன்னும் ஸ்ரீல பிரபுபாதர் 11 வாரிசு ஆச்சாரியர்களை நியமித்தார் என்று நம்புகிறார்கள்.(ஆனால் இந்த கட்டுக்கதை சமீபத்தில் LA டைம்ஸில் (LA Times) உண்மை என அறிவிக்கப்பட்டது); மற்றவர் அவர் 11 ரித்விக்குகளை நியமித்தார், அவர் மறைந்த உடனேயே சிறிய “a” ஆச்சாரியர்களாக மாற வேண்டும் என்றும்; மற்றவர்களோ, ஸ்ரீல பிரபுபாதர் மறையும்போது 11 பேர் மட்டும் அல்ல, ஸ்ரீல பிரபுபாதரின் அனைத்து சீடர்கள் (பெண்களைத் தவிர) சிறிய “a” ஆச்சாரியர்களாக மாற வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
GII-(Gurus And Initiation In ISKCON)-க்கு மீண்டும் ஒருமுறை திரும்பினால், அது சில குருக்களுக்கு "அதிகாரம்" அளிப்பதால், GBC-(Governing Body Commissioners) மேற்கண்டவற்றிலிருந்து மிகவும் முரண்படுவதைக் காணலாம்.
இவ்வாறு சம்பிரதாய ஆச்சாரியர்கள் என்று ரப்பர் ஸ்டாம்பிங் (Rubber Stamping) செய்வது போலியானது (GII-Gurus And Initiation In ISKCON, பிரிவு 6, பக்கம் 15) என்பதை அவர்களே ஒப்புக்கொண்டாலும், அவர்களே (GBC-(Governing Body Commissioners)), ஒவ்வொரு ஆண்டும் மாயாப்பூரில் கௌர பூர்ணிமா விழாவில் தவறாமல் அதை செய்து விடுகின்றனர். இப்போது நம்மிடம் கிட்டத்தட்ட நூறு தீக்ஷைக் குருக்கள் உள்ளனர், அனைவரும் "ஆட்சேபனை இல்லை(no objection)" என்ற சம்மத முத்திரைகளால் ஒப்பனை செய்யப்பட்டுள்ளனர். இந்த குருக்கள் அனைவரும் "சாக்ஷாத்-ஹரி" ("பகவானை போன்றவர்கள்") என GBC-(Governing Body Commissioners)-யின் சிஷ்யர்களுக்கான வழிகாட்டுதல்களில் கொடுத்து உத்தரவுகளின்படி வழிபட வைக்கின்றனர்
(GII-Gurus And Initiation In ISKCON, பிரிவு 8, பக்கம்.15).
இந்த தீக்ஷை ஆச்சாரியர்கள், பரம புருஷ பகவானிடமிருந்து பல்லாயிரம் ஆண்டுகளாக தொடரும் மஹாபாகவதர்களின் குரு சீட பரம்பரையின் "தற்போதைய இணைப்புகள்"(current links) என்று காண்பித்து முன்னோக்கிச் செல்கின்றனர்:
"குருசீட பரம்பரையின் தற்போதைய இணைப்பாக இருக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் பிரதிநிதிகளிடம் பக்தர்கள் தஞ்சம் அடைய வேண்டும்." (GII-Gurus And Initiation In ISKCON, பக்கம் 34)
இருப்பினும், அதே நேரத்தில், ஆர்வத்துடன் சீடராக வர விரும்புபவருக்கு, இஸ்கான் ஒப்புதல் "...இருப்பினும் அது அங்கீகரிக்கப்பட்ட குருவின் இறை-உணர்வு பட்டம் பற்றிய அறிக்கையாக தானாகவே எடுத்துக்கொள்ளப்படாது" என்று கடுமையாக எச்சரிக்கப்படுகிறார். (GII-Gurus And Initiation In ISKCON, பிரிவு 2.2, பக்கம்.9)
வேறொரு இடத்தில் நாம் மேலும் எச்சரிக்கப்படுகிறோம்:
"புதிய சீடர்களுக்கு தீக்ஷை அளித்து குருசீடப் பரம்பரையை விரிவுபடுத்துவதற்கான ஸ்ரீல பிரபுபாதரின் "ஆணையை" நிறைவேற்ற ஒரு பக்தர் அனுமதிக்கப்படும்போது, அது அவர் "உத்தம அதிகாரி", "பவித்ரமான பக்தர்" என்பதற்கான சான்றிதழாகவோ அல்லது ஒப்புதலாகவோ அல்லது ஏதேனும் குறிப்பிட்ட உணர்தல் நிலையை அடைந்திருபவர் என்றோ எடுத்துக்கொள்ளக்கூடாது. " (GII-Gurus And Initiation In ISKCON, பக்கம்.15)
கோவிலில் உள்ள அனைவரும் இந்தக் குருக்களை வழிபடாமல், தனி இடத்தில் வைத்து தங்கள் சீடர்களால் மட்டுமே வழிபட வேண்டும். (GII-Gurus And Initiation In ISKCON, பக்கம் 7) - இது பிரத்யும்னரின் ஆச்சாரியதேவ வரையறை.
தீக்ஷை குருவின் ஒரே வகை அங்கீகரிக்கப்பட்ட மஹா-பாகவதர் மட்டுமே என்பதை நாம் காண்பித்துள்ளோம். (உண்மையான "ஆணை" ரித்விக்குகள் மற்றும் சிக்ஷா குருக்களுக்கானது என்பதையும் நாங்கள் காட்டியுள்ளோம்). எனவே, வெறுமனே யாரை வேண்டுமானாலும் "தற்போதைய இணைப்பு" (current link) அல்லது "தீக்ஷை குரு" என்று வர்ணிப்பது, அவர் ஒரு பெரிய "A" அல்லது வரையறை 3 ஆச்சாரியர் போன்றவர்களை ஒரு "உத்தம-அதிகாரி" அல்லது "சுத்த பக்தர்" என்று கூறுவதற்கு ஒத்ததாகும்.
தீக்ஷை குருக்களை உருவாக்குவது, அங்கீகரிப்பது அல்லது "ஆட்சேபிக்காமல் இருப்பது" போன்றவையும், அதே நேரத்தில் அவர்கள் வழிதவறி விலகிச் செல்லும்போது பொறுப்பேற்காமலும், எந்தப் குற்றச்சாட்டும் செய்யாமலும் ஒரேடியாக நிராகரிப்பது போன்றவற்றை தவறானது என்று சுட்டிக்காட்ட நாங்கள் துணிவோம். இதைத்தான் நவீன காலகட்டத்தில் உள்ள உளவியல் பேச்சு வழக்கில் "மறுப்பில் வாழ்தல்" என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீல பிரபுபாதர் இஸ்கானை இவ்விதமாக, ஒருவரின் ஆன்மீக வாழ்க்கையை பந்தயம் வைத்து விளையாடும் ஒரு வகை லாட்டரி குலுக்கல் முறைப்படியான வகையில் அவர் நோக்கவில்லை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அநேகமாக, ஜிபிசி-யானது இனிமேல் நபர்களை அங்கீகரிப்பதற்கு முன், நூறு சதவீதம் அவர்கள் பின் நின்று கண்காணித்து ரப்பர் ஸ்டாம்பிங் கொடுப்பதை இனிமேலும் தவிர்க்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் ஒவ்வொருவரும் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவான ஸ்ரீல பிரபுபாதருக்குப் பின்னால் நிற்கிறோம். எனவே தனிமனித தகுதியை ஒருசார்பான கருத்துடன் அங்கீகரிக்கப்பது சாத்தியமானது அல்ல.
ஜிபிசி-யின் குரு தொடர்பான இருமனப்போக்கு, அண்மையில் ஜெய அத்வைத ஸ்வாமியால் மிகவும் சுருக்கமாக தொகுக்கப்பட்டது:
"நியமிக்கப்பட்டவர்" என்ற வார்த்தை ஒருபோதும் பயன்படுத்தப் படுவதில்லை. ஆனால் "தீக்ஷை குரு விண்ணப்பதாரர்கள்" உள்ளனர், வாக்குகள் எடுக்கப்படுகின்றன, மேலும் அந்த வழிமுறைகளின் மூலம் அவ்வாறு உருவாகுபவர்கள் "இஸ்கானால் அங்கீகரிக்கப்பட்ட" அல்லது "இஸ்கானின் அதிகாரம் பெற்ற" குருக்களாக மாறுகிறார்கள். உங்கள் நம்பிக்கையை அதிகரிக்க: ஒருபுறம், GBC-(Governing Body Commissioners) உங்களை ஒரு அங்கீகரிக்கப்பட்ட இஸ்கான் குருவால், அங்கீகரிக்கப்பட்ட தீக்ஷை பெறவும், அவரை பகவானைப் போல வழிபடும்படி ஊக்குவிக்கிறது. மறுபுறம், உங்கள் இஸ்கான் அங்கீகரிக்கப்பட்ட குரு கீழே விழும்போது, அவ்வப்போது செயல்படும் விரிவான சட்ட அமைப்புக் கொண்டுள்ளது. என்னதான் சட்டங்கள் மற்றும் தீர்மானங்கள் இருந்தாலும் குருவின் பங்கு இன்னும் GBC-(Governing Body Commissioners)-க்கு கூட குழப்பமாகவே இருக்கிறது என்று நினைக்கவைப்பதை மன்னிக்கத்தான் வேண்டும்."
(ரித்விக் மக்கள் சரியானவர்களே, ஜெயாத்வைத சுவாமி, 1996)
இஸ்கானில் உள்ள குருக்களின் திகைப்பூட்டும் சாதனைப் பதிவைப் பார்க்கும்போது, அவநம்பிக்கையைக் கொடுப்பது ஆச்சரியமாக இல்லை. ஜெய அத்வைத சுவாமியின் அறிக்கையிலிருந்து மீண்டும் ஒருமுறை மேற்கோள் காட்டுகிறேன்.
|
"உண்மை:
உண்மை:
உண்மை:
உண்மை: |
இஸ்கானின் குருக்கள், பல உண்மையுள்ள ஆன்மீக சகோதரர்கள் மற்றும் ஆன்மீக சகோதரிகளை எதிர்த்தனர், ஒடுக்கினர், விரட்டியடித்தனர். இஸ்கான் குருக்கள் பணத்தை அபகரித்து, தவறாகப் பயன்படுத்தியுள்ளனர், மேலும் இஸ்கான் வளங்களை தங்களின் சொந்த புலன் திருப்திக்காகவும், சொந்த கௌரவத்திற்காகவும் திருப்பிவிட்டனர்.
இஸ்கான் குருக்கள் பெண்கள், ஆண்கள் இருவருடனும், சிலவேளைகளில் குழந்தைகளுடனும் சட்டவிரோத உடலுறவு கொண்டுள்ளனர்.
(...மேலும் பல , மேலும் பல...) |
(ரித்விக் மக்கள் மக்கள் சரியானவர்களே, ஜெயாத்வைத சுவாமி, 1996)
இஸ்கானுக்கு புதியதாக வருபவர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் மற்றும் உபதேசங்களின் அடிப்படையில் இஸ்கானின் குருக்களை கவனமாக ஆராய்ந்து, அவர்கள் தீக்ஷை கொடுக்க தகுதியானவர்களா என்பதை அவர்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவர்களின் பொறுப்பு என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், வருங்கால சீடர், "அத்தகையோர் உடல் ரீதியாக யாரும் இல்லை" என்று முடிவுக்கு வந்தால், அதற்குப் பதிலாக ஸ்ரீல பிரபுபாதரை தனது தீக்ஷைக் குருவாகக் கொண்டு தனது நம்பிக்கையை நிலைநிறுத்த விரும்பினால், அவர் சமூகத்தில் இரக்கமின்றி வேட்டையாடப்படுகிறார். இது உண்மையில் நியாயமா? எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் GBC-(Governing Body Commissioners) சொன்னதை மட்டுமே அவர் செய்கிறார். "சரியான" முடிவுக்கு வராததற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டுமா? அதுவும் குறிப்பாக ஸ்ரீல பிரபுபாதரை நேரடியாக தேர்வு செய்வது அவர் விரும்பிய விஷயமாகவும் துல்லியமானதாகவும் தெளிவான சான்றுகளுடனும் இருக்கும்போது?
தற்போதைய ISKCON குரு மீது யாரேனும் தளராத நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா?, GBC-(Governing Body Commissioners) -யானது அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கான அவசியத்தை அவரே உணர்ந்திருப்பதைக் காணும் போது இந்த கடுமையான தண்டனை முறையா? அவர்களின் புத்தகங்கள் மற்றும் உபதேசங்களிலேயே ஒருபோதும் குறிப்பிடப்படாத வருங்கால சீடர் தனது முடிவை எடுக்க அவகாசம் கொடுக்காத தண்டனை முறையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். சுய குறிப்பு கொண்ட தெளிவான வழக்கின் ஒத்திசைவற்ற தன்மையைக் கண்டுபிடிப்பது கடினம்.
ஸ்ரீல பிரபுபாதரின் தெளிவான உத்தரவை நாம் பின்பற்றி இஸ்கானுக்குள் அவரை மட்டுமே தீக்ஷை கொடுப்பவராக வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும். அதனை யார் ஆட்சேபிக்க முடியும்?
|
19."ISKCON பத்திரிக்கை 1990-ன்படி, ஸ்ரீல பிரபுபாதரின் சில ஆன்மீகச் சகோதரர்கள் உண்மையில் ஆச்சாரியர்கள்." |
இதை யார் சொன்னது?
ஸ்ரீமத்-பாகவதம் மற்றும் ஸ்ரீல பிரபுபாதரால் தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்ட ஜூலை 9-ம்தேதி கடிதத்தில் இந்த வார்த்தையானது மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளபோதிலும் வைஷ்ணவ அகராதியில் (ISKCON பத்திரிக்கை 1990, பக்கம் 23) ரித்விக் என்ற வார்த்தையே இல்லை என்று சொன்ன அதே நபர் இதை சொன்னார்.
குறிப்பாக ஸ்ரீல பிரபுபாதருக்கு தீக்ஷை கொடுக்க அதிகாரம் இல்லை என்று சுட்டிக்காட்டிய அதே நபர்:
"ஸ்வாமிஜி (ஸ்ரீல பிரபுபாதர்) குருவாக இருப்பார் என்று பக்திசித்தாந்த சரஸ்வதி கூறவில்லை அல்லது எந்த ஆவணத்தையும் கொடுக்கவில்லை." (இஸ்கான் பத்திரிக்கை 1990, பக்கம் 23)
ஸ்ரீல பிரபுபாதர் யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள் அல்ல என்று சொன்னாரோ, அதே தீர்த்தர், மாதவர் மற்றும் ஸ்ரீதர மஹாராஜர் ஆகியோரை அங்கீகரிக்கப்பட்ட ஆச்சாரியர்கள் என்று கூறிய அதே நபர்:
"ஆனால் எங்கள் சம்பிரதாயத்தில் ஒரு அமைப்பு இருக்கிறது. அதனால் தீர்த்த மஹாராஜர், மாதவ மஹாராஜர், எங்கள் குருதேவரான ஸ்ரீதர மஹாராஜர், ஸ்வாமாஜி—ஸ்வாமிஜி பக்திவேதாந்த ஸ்வாமி—அவர்கள் அனைவரும் ஆச்சாரியார்கள் ஆனார்கள்."
(இஸ்கான் பத்திரிக்கை 1990, பக்கம் 23)
இந்த "ஆச்சாரியர்களில்" ஒருவரைப் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் என்ன நினைத்தார் என்பதை மேற்கூறியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
"பக்தி விலாஸ தீர்த்தர் நம் சமூகத்திற்கு மிகவும் விரோதமானவர், அவருக்கு பக்தி சேவை பற்றிய தெளிவான கருத்து இல்லை. அவர் களங்கப்பட்டவர்." (சுகதேவருக்கு ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 14/11/1973)
…மற்றவற்றைப் பற்றி அவர் கூறியவற்றுடன்:
"...எனது ஆன்மீக சகோதரர்களில் யாரும் ஆச்சாரியராக தகுதியற்றவர்கள்." (ஸ்ரீல பிரபுபாதர் ரூபானுகருக்கு எழுதிய கடிதம், 28/4/1974)
ஸ்ரீல பிரபுபாதர் எல்லாவற்றையும் கொடுக்கவில்லை என்றும், உயர்ந்த அறிவைப் பெற ஒரு ரசிக குருவை அணுகுவது அவசியம் என்றும் சமீபத்தில் கூறிய அதே நபர்.
|
20. "ஸ்ரீல பிரபுபாதர் சில சமயங்களில் அவருடைய ஆன்மீக சகோதரர்களைப் பற்றி நல்லவிதமாகப் பேசினார்." |
சில சமயங்களில், பிரபுபாதர் தனது ஆன்மீக சகோதரர்களுடன் பழகும்போது ஸ்ரீதர மஹாராஜரை தனது சிக்ஷா குரு என்று குறிப்பிட்டார் என்பது உண்மைதான். ஸ்ரீல பிரபுபாதர் கனிவான குணம் கொண்டவராதலால் தனது ஆன்மீக சகோதரர்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டு அவர்களையும் தனது சங்கீர்தன இயக்கத்தில் ஈடுபடுத்த எப்போதும் முயற்சித்துக் கொண்டிருந்தார். ஆயினும், இவர்கள் உண்மையான ஆச்சாரியதேவர்களாக இருந்திருந்தால், ஸ்ரீல பிரபுபாதர் அவர்களை ஒருமுறை கூட தவறாகப் பேசியிருக்க மாட்டார் என்பதை நாம் உணர வேண்டும். நேர்மையான தீக்ஷைக் குருக்களை "கீழ்ப்படியாதவர்கள்", "பொறாமை கொண்ட பாம்புகள்", "நாய்கள்", "பன்றிகள்", "குளவிகள்" என்று பேசுவது ஒரு கடுமையான அபராதமாக இருந்திருக்கும். எனவே ஸ்ரீல பிரபுபாதர் அதைச் செய்திருக்க மாட்டார். ஸ்ரீல பிரபுபாதர் தனது ஆன்மீக சகோதரர்களைப் பார்த்த விதத்தை விளக்குவதற்கு, தீர்த்த மஹாராஜரின் மடத்தின் மூலம் வெளியிடப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரத்தை பவானந்தர் வாசிக்கும் அறை உரையாடலில் இருந்து சில பகுதிகளை கீழே வழங்குகிறோம்:
பவானந்தர்: "ஆச்சாரியதேவர் திரிதண்டி ஸ்வாமி ஸ்ரீல பக்திவிலாச தீர்த்த மஹாராஜர் என்று பெரிய எழுத்தில் தொடங்குகிறது. இந்தியாவின் இருண்ட காலத்தில் இந்து மதம் பெரும் ஆபத்தில் இருந்ததை அனைத்து கற்றறிந்த மனிதர்களும் அறிவார்கள்...."
ஸ்ரீல பிரபுபாதர்: (சிரிக்கிறார்.) "இது முட்டாள்தனம்."
ஸ்ரீல பிரபுபாதர் கருதப்பட்ட, அதே தீர்த்த மஹாராஜர் (1990-ல் ISKCON பத்திரிக்கையில் முன்பு குறிப்பிடப்பட்ட ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆச்சாரியராகப் போற்றப்படும் அதே தீர்த்தர்) இப்போது எந்த வகையான "ஆச்சாரியதேவர்", என்பது வெளிப்படையாக தெரிகிறது. பின்னர் அந்தத் துண்டுப் பிரசுரத்தில், ஸ்ரீல பக்திசித்தாந்தரின் பணியைத் தொடரும் ஒரு அற்புதமான நபரான அதிர்ஷ்டசாலி என்று விவரிக்கிறது.
பவானந்தர்: "...சரியான நேரத்தில், அவர் (ஸ்ரீல பக்திசித்தாந்தர்) ஒரு சிறந்த நபரைப் பெற்றார், அவர் உடனடியாக தோள் கொடுத்தார்..."
ஸ்ரீல பிரபுபாதர்: "இப்போது பார். "அவர் ஒரு சிறந்த நபரைப் பெற்றார்". அவர்தான் அந்த நபர். அதையும் அவரே நிரூபிப்பார். [...] யாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை [...] அவரது மகத்துவம் எங்கே? யாருக்கு அவரை தெரியும்? பாருங்கள். எனவே அவர் தன்னை ஒரு சிறந்த நபர் என்று அறிவிக்க ஒரு திட்டம் தீட்டுகிறார். [...] அவர் (தீர்த்த மஹாராஜர்) நம் மீது மிகவும் பொறாமைப்படுகிறார். [...] இந்த அயோக்கியர்கள் சில பிரச்சனைகளை உருவாக்கலாம்."
(அறை உரையாடல், 19/1/1976, மாயாபூர்)
அங்கீகரிக்கப்பட்ட ஆச்சாரியர்களை ஒருபோதும் பொறாமை கொண்ட பிரச்சனையை ஏற்படுத்தும் அயோக்கியர்கள் என்று விவரிக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக, இன்றும் கூட, கௌடீய மடத்தைச் சேர்ந்த சிலர் இன்னும் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். தூரத்திலிருந்து மரியாதை கொடுப்பதே பாதுகாப்பான கொள்கையாக இருக்க வேண்டும்.
|
21. "அங்கீகரிக்கப்பட்ட ஆச்சாரியர்கள் சில சமயங்களில் கீழே விழுவதால் அவர்கள் மிகவும் முன்னேறியவர்களாக இருக்க வேண்டியதில்லை என்பதை நாங்கள் அறிவோம்." |
ஸ்ரீல பிரபுபாதர் இதற்கு நேர்மாறாக கூறுகிறார்:
"அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவானவர் நித்திய காலத்திலிருந்து தொடரும் குருசீடப் பரம்பரையில் இருக்கிறார், மேலும் அவர் பரமபுருஷ பகவானின் உபதேசங்களிலிருந்து சிறிதும் விலகுவதில்லை"
(பகவத் கீதை 4.42, பொருளுரை)
|
22. "ஆனால் முந்தைய ஆச்சாரியர்கள் ஒருவரின் ஆன்மீக குரு வழிதவறும் போது ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூட விவரித்துள்ளனரே. |
வரையறையின்படி, வழிதவறிய அந்த குருக்கள், குரு சீடப்பரம்பரையின் உறுப்பினர்களாக இருக்க முடியாது. மாறாக, அவர்கள் முக்திபெறாத, தங்களை தீக்ஷை கொடுக்கும் ஆச்சாரியர்களாக காட்டிக்கொள்ளும், தாமே அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்ட குடும்பப் பூசாரிகள். குருசீடப்பரம்பரையின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒருபோதும் வழிதவற மாட்டார்கள்:
"பகவான் எப்போதும் பகவான், குரு எப்போதும் குருவே."
(தன்னையறியும் விஞ்ஞானம், அத்தியாயம் 2)
"சரி, அவர் கெட்டவராக இருந்தால், அவர் எப்படி குருவாக முடியும்?"
(தன்னை உணர்தல் அறிவியல், அத்தியாயம் 2)
"பவித்ரமான பக்தர் எப்பொழுதும் மாயை பிடியிலிருந்தும் மற்றும் அதனுடைய செல்வாக்கிலிருந்தும் விடுபட்டிருக்கிறார்."
(ஸ்ரீமத் பாகவதம்., 5.3.14)
"முதல்தர பக்தர் கீழே விழுவதற்கு வாய்ப்பே இல்லை"
(ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம். மத்திய லீலை, 22.71)
"ஒரு ஆன்மீக குரு எப்போதும் முக்தியடைந்தவராவார்."
(தமால கிருஷ்ணருக்கு ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 21/6/1970)
ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களில் முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட தீக்ஷை குரு, நமது குருசீடப் பரம்பரையின், பக்தித் தொண்டின் பாதையிலிருந்து விலகிச் செல்வது பற்றிய எந்த ஒரு உதாரணமும் இல்லை, சுக்ராச்சாரியரின் நிராகரிப்பு, சில சமயங்களில் ஆச்சாரியர்கள் கீழே விழுவார்கள் அல்லது நிராகரிக்கப்படலாம் என்ற கருத்தை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இந்த உதாரணம் மிகவும் தவறாக வழிநடத்துகிறது, ஏனெனில் அவர் நம்முடைய குருசீடப்பரம்பரையின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினராக இல்லை. பிரம்மதேவர் தன் மகளுடனான லீலையை சில சமயங்களில் குறிப்பிடப்படுகின்றன. ஆனால், இந்தச் சம்பவங்கள் பிரம்மதேவர் நமது சம்பிரதாயத்தின் தலைவராவதற்கு முன்பே நடந்தவை என்று ஸ்ரீமத் பாகவதத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. உண்மையில், தனது சீடரான நிதாய் இந்த லீலையை ஆச்சாரியர் கீழே விழுந்ததற்கு ஒரு உதாரணம் என்று குறிப்பிட்டபோது, ஸ்ரீல பிரபுபாதர் மிகவும் அதிருப்தி அடைந்தார்:
அக்ஷயானந்தர்: "ஆச்சாரியர் பவித்ரமான பக்தராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று சமீபத்தில் ஒரு பக்தர் என்னிடம் கூறினார். [...]"
ஸ்ரீல பிரபுபாதர்: "யார் அந்த அயோக்கியன்? [...]"
அக்ஷயானந்தர்: "அவர் சொன்னார். நிதாய் சொன்னார். இந்தச் சூழலில் அவர் இவ்வாறு கூறினார். பிரம்மதேவர் பிரம்ம சம்பிரதாயத்தில் ஆச்சாரியராக இருக்கிறார் என்று சொன்னார், ஆனாலும் சில சமயங்களில் அவர் மோகத்தால் பீடிக்கப்படுகிறார். அதனால் ஆச்சாரியர் பவித்ரமான பக்தராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது என்று கூறுகிறார்.. அதனால் அது சரியாகத் தெரியவில்லை."
ஸ்ரீல பிரபுபாதர்: "அவன் தனது சுயயோசனையை உருவாக்கியுள்ளான். அதனால் அவர் ஒரு அயோக்கியன். அதனால் அவன் ஒரு அயோக்கியன். நிதாய் அதிகாரியாகிவிட்டானா? [...] அவன் ஏதோ அயோக்கியத்தனமாக நினைக்கிறான், அதை அவன் வெளிப்படுத்துகிறான். அதனால் அவன் பெரிய அயோக்கியன். இந்த விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன."
(காலை நடைப்பயிற்சி, 10/12/1975, விருந்தாவனம்)
ஸ்ரீல பிரபுபாதரின் கூற்றுப்படி, அங்கீகரிக்கப்படாத குருக்களை மட்டுமே செல்வம் மற்றும் பெண்கள் திசைதிருப்பி தூக்கிச் செல்ல முடியும்.
ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களில், அங்கீகரிக்கப்பட்ட குருக்கள் வழித்தவறுதல் என்ற பேச்சே முற்றிலும் இல்லாத போதிலும், GBC-(Governing Body Commissioners)-யின் GII (Guru and Initiations in ISKCON) புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்ட குரு வழிதவறினால், ஒரு சீடர் என்ன செய்யவேண்டும் என்பது குறித்த ஒரு முழு பகுதியை கொண்டுள்ளதே! முந்தைய ஆச்சாரியாரிடம் தாவி குதிக்காமல் தற்போதைய இணைப்பை அணுகுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதன் மூலம் அந்த அத்தியாயம் தொடங்குகிறது, (GII-Guru and Initiations in ISKCON) பக்கம் 27). எவ்வாறாயினும், ஸ்ரீல பிரபுபாதரால் கற்பிக்கப்படாத கொள்கைகளை நிறுவும் முயற்சியில் ஆசிரியர்கள் பல முந்தைய ஆச்சாரியர்களை மேற்கோள்காட்டி இதைத் துல்லியமாகச் செய்கிறார்கள். அதில் காட்டப்படும் முந்தைய ஆச்சாரியர்கள் என்று விவரிக்கப்பட்ட குருக்கள் ஒருபோதும் நமது பரம்பரையின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களாக இல்லவேயில்லை:
"நாரத முனிவர், ஹரிதாஸ தாகூரர் மற்றும் அவர்களைப் போன்ற ஆச்சாரியர்கள் பகவானின் மகிமைகளை எடுத்துரைக்க சிறப்பாக சக்திபெற்றுள்ளதனால் அவர்களை பௌதீக தளத்திற்கு கீழிறக்க முடியாது."
(ஸ்ரீமத் பாகவதம், 7.7.14, பொருளுரை)
GII-(Guru and Initiations in ISKCON)-இல் நடைமுறையில் உள்ள "மறு தீக்ஷை(re-initiation)" முறையில் "குதிக்கும்" ஆபத்து (ஸ்ரீல பிரபுபாதர் அல்லது முந்தைய ஆச்சாரியார் ஒரு போதும் பயன்படுத்தாத வார்த்தை) அவர்களின் அத்தியாயத்தில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி மற்றும் பதில் பகுதியில் (GII-Guru and Initiations in ISKCON), கேள்வி 4, பக்கம்.35) ஒரு குருவை நிராகரித்து "மறு-தீக்ஷை(re-initiation)" எடுக்கக்கூடிய நிபந்தனைகள் விவரிக்கப்பட்டுள்ளன. "விளக்கம்" பின்வருமாறு:
"அதிர்ஷ்டவசமாக, ஸ்ரீல பக்திவினோத தாகூரரின் ஜைவ தர்மத்திலும், ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி அவர்களின் பக்தி சந்தர்பத்திலும் இந்த பிரச்சினையின் முக்கிய அம்சம் நமக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது."
(GII-Guru and Initiations in ISKCON, பக்கம் 35)
"அதிர்ஷ்டவசமாக" என்ற வார்த்தை, துரதிஷ்டவசமாக கூறுவது என்னவெனில் "ஒரு குரு விலகும்போது என்ன செய்ய வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் நமக்குச் சொல்லாமல் புறக்கணித்ததால், நாம் அவரைத் தாண்டி இந்த முந்தைய ஆச்சாரியர்கள் அனைவரிடமும் செல்ல முடியும்" என்பதைக் குறிக்கிறது. ஆனால் ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் அவருடைய புத்தகங்களில் இருப்பதாக ஸ்ரீல பிரபுபாதரே நம்மிடம் கூறியுள்ளார். நமது ஆச்சாரியரால் குறிப்பிடாத முறைகளை நாம் ஏன் அறிமுகப்படுத்துகிறோம்?
|
23."ஆனால், முந்தைய ஆச்சாரியர்களை கலந்தாலோசிப்பதில் என்ன தவறு?" |
நம்முடைய சொந்த ஆச்சாரியரால் குறிப்பிடப்படாத கொள்கையின் மூலம் புதிய சீடர்களை சேர்க்க அவற்றைப் பயன்படுத்த முயற்சிக்காத வரை ஒன்றுமில்லை. ஒரு அங்கீகரிக்கப்பட்ட குருவானவர் வழித்தவறுவார் என்ற கருத்து ஸ்ரீல பிரபுபாதரால் எங்கும் கற்பிக்கப்படாத விஷயமாதலால் அதைக் கூறுதல் முற்றிலும் அந்நியமானது. இதையடுத்து ஏற்பட்ட "ஜீவனின் ஆதி(Origin of the jiva )" குறித்த பிரச்சனைகள் அனைத்தும் ஆச்சாரியரை கடந்து தாவுதல் என்ற போக்கிலிருந்து உருவாகின்றன:
"...முந்தைய ஆச்சாரியர்களை நாம் பிரபுபாதர் மூலம்தான் பார்க்க வேண்டும். நாம் பிரபுபாதரை மீறிச் சென்றுவிட்டு, முந்தைய ஆச்சாரியர்களின் கண்களால் அவரைத் திரும்பிப் பார்க்க முடியாது."
(எங்கள் ஆதி நிலை(Our Original Position), ஜிபிசி பத்திரிக்கை, பக்கம். 163)
ஸ்ரீல பிரபுபாதர் எப்போதும் குறிப்பிடாத முற்றிலும் புதிய தத்துவக் கொள்கையான "முந்தைய ஆச்சாரியர்களை ஸ்ரீலபிரபுபாதர் மூலம் பார்ப்பது" என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது ?
இந்த முந்தைய ஆச்சாரியர்களின் எழுத்துக்களுக்கு GII-(Guru and Initiations in ISKCON)-ல் GBC அளித்த விளக்கம் சரியாக இருந்தாலும், ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளை மாற்றவோ அல்லது சேர்க்கவோ அவற்றைப் பயன்படுத்த முடியாது. ஸ்ரீல நரஹரி சர்காரின் ஸ்ரீ கிருஷ்ண பஜனாமிர்தத்தில் இரண்டு ஸ்லோகங்களில் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. GII-(Guru and Initiations in ISKCON) இந்த ஸ்லோகங்கள் எச்சரிக்கை உணர்வின் பொருட்டு குறிப்பிட்டிருக்க வேண்டும், ஏனெனில் அதே புத்தகத்தின் மற்ற ஸ்லோகங்களுடன் தனது ஆய்வறிக்கைகளை அது ஆதரிக்கின்றது.
ஸ்லோகம் 48:
"ஒரு சீடர் மற்றொரு மேம்பட்ட வைஷ்ணவரிடமிருந்து சில உபதேசங்களை கேட்கலாம், ஆனால் அந்த நல்ல போதனையைப் பெற்ற பிறகு, அவர் அதைக் கொண்டு வந்து தனது சொந்த ஆன்மீக குருவிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை வழங்கிய பிறகு, அந்த சீடர் அதே போதனைகளை மீண்டும் தனது ஆன்மீக குருவிடமிருந்து தகுந்த வழிமுறைகளுடன் கேட்க வேண்டும். "
ஸ்லோகம் 49:
"...மற்ற வைஷ்ணவர்களின் வார்த்தைகளைக் கேட்டு, அவர்களின் உபதேசங்கள் சரியானதாகவும் உண்மையாகவும் இருந்தாலும், அந்த போதனைகளை தனது சொந்த ஆன்மீக குருவிடம் மீண்டும் உறுதிப்படுத்தாமல், நேரடியாக அந்த உபதேசங்களை ஏற்றுக்கொள்பவர் மோசமான மற்றும் ஒரு பாவி சீடராகக் கருதப்படுகிறார்."
GBC சீராக இருக்கவும், இஸ்கானின் அனைத்து உறுப்பினர்களின் ஆன்மீக வாழ்வின் நலன் கருதியும், GII-(Guru and Initiations in ISKCON)-ன் புத்தகம் மேலே உள்ள உத்தரவுக்கு ஒத்துப்போகும் வகையில் திருத்தப்பட வேண்டும் என்று நாங்கள் பணிவுடன் பரிந்துரைக்கிறோம்.
|
24. "குரு வழிதவறினால் என்ன செய்ய வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் ஏன் விளக்கவில்லை?" |
ஸ்ரீல பிரபுபாதரின் இறுதிக் கட்டளையின்படி, அவர் எதிர்காலத்தில் நீண்ட காலத்திற்கு தீக்ஷை கொடுப்பவராக இருந்து, குருசீடப்பரம்பரையின் அங்கீகரிக்கப்பட்ட இணைப்பாகவும் அவரே இருப்பார் எனும்போது, ஒரே ஒரு வினாடிகூட புனிதமான பக்தி சேவையின் பாதையிலிருந்து அவர் விலகிச்செல்வார் என்ற கேள்விக்கே இடமில்லை:
"அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவானவர் எப்பொழுதும் பரம புருஷ பகவானுக்கு கலப்படமில்லாத பக்தி சேவையில் ஈடுபடுகிறார்."
(ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம். ஆதி-லீலை, 1.46, பொருளுரை)
ஒரு குரு தீக்ஷை வழங்க முறையாக அங்கீகரிக்கப்படாவிட்டால் மட்டுமே அவர் கீழே விழுவார் என்று ஸ்ரீல பிரபுபாதர் கற்பித்தார்:
"...சில சமயங்களில், ஒரு ஆன்மீக குரு முறையாக அங்கீகரிக்கப்படாமல், அவருடைய சொந்த முயற்சியால் மட்டுமே ஆன்மீக குருவாக மாறினால், அவரிடம் சேரும் செல்வத்தினாலும் ஏராளமான சீடர்களாலும் வழிமாறிச் செல்லலாம்." (பக்தி ரசாம்ருத சிந்து, பக்கம் 116)
ஒரு குரு கீழே விழுந்தால், அது அவருக்கு முந்தைய ஆச்சாரியாரால் ஒரு போதும் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதற்கான உறுதியான சான்றாகும். இஸ்கான் குரு யாரும் கீழே விழுந்திருக்கவில்லை என்றாலும், அவருக்கு தீக்ஷை வழங்குதற்கான அங்கீகாரம் எங்கிருந்து வந்தது என்று ஒருவர் நியாயமான கேள்வியைக் கேட்கலாம்.
மேலே உள்ள மேற்கோள்களின் வலிமையான உண்மையை ஏற்றுக்கொள்வதில், பல்வேறு விரும்பத்தகாத பாதிப்புகள் அவர்களுக்கு முன்னால் அச்சுறுத்தும் வகையில் தோன்றுவதுதான் GBC-யின் பிரச்சனை. ISKCON-இன் அனைத்து குருக்களும் அதே தொகுப்பின் அதே பகுதியாக அதே அளவில் அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறுவதால் (ஸ்ரீல பிரபுபாதரிடமிருந்து பெறப்படும் "கட்டளையானது" அவர்கள் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும்), அவர்களில் பலர் கீழே விழுந்தார்கள் என்ற உண்மையால் "ஆணை" தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்பதற்கு அதுவே சான்றாகும். உண்மையில் அவர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் யாரும் கீழே விழுந்தார்கள் பேச்சுக்கே இடமிருக்காது. உண்மையில், அவர்கள் அனைவரும் மஹா-பாகவதர்களாக இருந்திருப்பார்கள்:
"ஒரு ஆன்மீக குரு எப்போதும் முக்தியடைந்தவராக இருக்கிறார்."
(ஸ்ரீல பிரபுபாதர் கடிதம் 21/6/1970)
|
25. "ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்களில் ஒருவர் பரிபூரணத்தை அடைந்தவுடன், ரித்விக் அமைப்பு தேவையற்றதாகிவிடும்." |
சில சமயங்களில் "மென்மையான ரித்விக்" என்று குறிப்பிடப்படும், மேலே உள்ள உத்தரவு, ஸ்ரீல பிரபுபாதரின் மறைவுக்கு முந்தைய காலகட்டத்தில் தகுதியான சீடர்கள் இல்லை என்பதால், ரித்விக் அமைப்பு மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.
இருப்பினும், இந்த வாக்கியங்கள் வெறும் ஊகம் மட்டுமே ஏனெனில் ஸ்ரீல பிரபுபாதர் ஒருபோதும் இவ்வாறு கூறவில்லை. தகுதியான நபர்களின் பற்றாக்குறையின் விளைவால் மட்டுமே இந்த ரித்விக் அமைப்பு அமைக்கப்பட்டது என்றும், மேலும் தகுதியான ஒருவர் இருக்கிறார் என்பதனால் நாம் அதை பின்பற்றுவதை நிறுத்த வேண்டும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சரியான திட்டமாக இருக்கும் போது, துரதிர்ஷ்டவசமான பக்கவிளைவுகளை இந்த கருத்து ரித்விக் அமைப்பின் மீது ஏற்படுத்தி, அதனை இரண்டாவது சிறந்த வாய்ப்பாக கூறுவது உண்மையில் தற்காலிகமான சூழ்ச்சியாகத் தோன்றுகிறது. சில நேர்மையற்ற கவர்ச்சிகரமான நபர்களின் சில பொய்யான பக்தி பகட்டாக காண்பிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இயக்கத்தை நிறுத்துவதையும் இது சாத்தியமாக்குகிறது.
கோட்பாட்டளவில், தகுதியான உத்தம-அதிகாரி சீடர்கள் தற்போது இருந்தாலும், அவர்கள் இஸ்கானில் தொடர்ந்து இருக்க விரும்பினால், அவர்கள் இன்னும் ரித்விக் முறையைத்தான் பின்பற்ற வேண்டும். நாம் ஏற்கனவே கூறியுள்ளபடி, ஸ்ரீல பிரபுபாதரின் கட்டளையைப் பின்பற்றுவதன் மூலம் தகுதியான நபர் ஏன் மகிழ்ச்சியடையவில்லை என்பதற்கான எந்த காரணமும் இல்லை.
ஸ்ரீல பக்திசித்தாந்தர் கௌடீய மடத்திற்கு விட்டுச்சென்ற உபதேசங்கள் இந்த தவறான கருத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஸ்ரீல பிரபுபாதர் நம்மிடம் கூறுகையில், அவருடைய குரு மஹாராஜர், ஒரு ஜிபிசி இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், மேலும் சரியான நேரத்தில் ஒரு சுய-ஞானஒளி கொண்ட ஆச்சாரியர் வெளிப்படுவார் என்றும் கூறினார். கௌடீய மடம் இதைப் பின்பற்றவில்லை என்பதனால் அதற்கு பேரழிவே விளைவாக ஏற்பட்டிருக்கின்றது என்பது நமக்குத் தெரியும். சில பக்தர்கள் நாமும் தன்னம்பிக்கை மிக்க ஒரு சுய-ஞானஒளி கொண்ட ஆச்சாரியரை எதிர்பார்த்து இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள்; மேலும் அவர் எந்த நேரத்திலும் வரலாம் என்பதால், ரித்விக் அமைப்பு ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே.
இந்தக் கோட்பாட்டின் சிக்கல் என்னவெனில், ஸ்ரீல பக்திசித்தாந்தர் தனது சீடர்களுக்கு விட்டுச் சென்ற உபதேசங்களும் ஸ்ரீல பிரபுபாதர் நமக்கு விட்டுச் சென்றதும் வெவ்வேறானவை. ஸ்ரீல பிரபுபாதர் நிச்சயமாக GBC தனது இயக்கத்தை தொடர்ந்து நிர்வகிக்க வேண்டும் என்று உபதேசித்தார். ஆனால் அவர் இஸ்கானுக்கான எதிர்கால சுய-ஞான ஒளிகொண்ட ஆச்சாரியரின் தோற்றம் பற்றி எங்கும் எதுவும் கூறவில்லை. அதற்கு பதிலாக அவர் ஒரு ரித்விக் அமைப்பை நிறுவி, அதன் மூலம் அவரே "இனிமேல்" ஆச்சாரியராக தொடர்ந்து இருப்பதாக கூறியுள்ளார். வெளிப்படையாக, சீடர்களாகிய நாம் ஸ்ரீல பிரபுபாதரைத் தாண்டி ஸ்ரீல பக்திசித்தாந்தரை பின்பற்றத் தொடங்க முடியாது.
ஸ்ரீல பிரபுபாதருக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடமிருந்து அவருடைய இயக்கமானது விரைவில் ஒரு புதிய ஆச்சாரியரால் தலைமை தாங்கப்போகும், என்ற சில கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தால், ஸ்ரீல பிரபுபாதர் அதனை தனது இறுதி உபதேசங்களில் இதற்கான சில குறிப்புகளை கொடுத்திருப்பார். மாறாக, அவருடைய புத்தகங்கள் மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும் என்றும், அடுத்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு அவையே சட்டமாக இருக்கும் என்றும் அவர் உத்தரவிட்டார். அதனால் இங்கு எதிர்கால ஆச்சாரியர் செய்வதற்கு என்ன இருக்கிறது? சங்கீர்த்தன இயக்கத்தின் எஞ்சிய காலத்திற்கு நமது குருசீட பரம்பரையின் ஒவ்வொரு கட்டளைகளையும் விளக்கங்களையும் நிறைவேற்றும் விதமாக இந்த இயக்கத்தை ஸ்ரீல பிரபுபாதர் ஏற்கனவே அமைத்துள்ளார்.
இஸ்கானுக்குள் தீக்ஷை கொடுக்க அனுமதியுள்ள ஒரே நபர் ஸ்ரீல பிரபுபாதராக இருக்கும்போது, ஒரு புதிய சுய-பிரகாசமான தீக்ஷா குரு எப்படி உருவாக முடியும்?
ஆச்சாரியர்களுக்கு விஷயங்களை மாற்றும் அதிகாரம் இருப்பதாகவும், அவ்வாறான புதிய ஒருவர் இஸ்கானுக்குள் இருக்கும் ரித்விக் அமைப்பை மாற்றியமைக்க முடியும் என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால், ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆச்சாரியர் எப்போதாவது தனது சீடர்களுக்கு முந்தைய ஆச்சாரியரால் விடப்பட்ட நேரடி உத்தரவுகளுக்கு முரணாக இருப்பாரா? அப்படிச் செய்வது, முந்தைய ஆச்சாரியரின் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும். யாருடைய உத்தரவைப் பின்பற்றுவது என்று தேர்வு செய்வதில் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் தொண்டர்களுக்கு இது நிச்சயமாக குழப்பத்தையும் திகைப்பையும் ஏற்படுத்தும்.
இறுதி உத்தரவைப் படித்தவுடன் இதுபோன்ற கவலைகள் அனைத்தும் கரைந்துவிடும். "மென்மையான" ரித்விக் உத்தரவு பற்றி எந்த குறிப்பும் இல்லை. அந்தக் கடிதத்தில் "இனிமேல்" என்றுதான் எழுதப்பட்டுள்ளது. எனவே, ஒரு புதிய ஆச்சாரியார் அல்லது பரிபூரணமான சீடரின் தோற்றத்துடன் அது முடிவடையும் என்று கூறுவது, ஒரு முழுமையான தெளிவான கோரிக்கையின் மீது ஒருவரின் சொந்த ஊகத்தை திணித்து மிகைப்படுத்துவதாகும். அந்தக் கடிதம் "உறுதியாக" ரித்விக் புரிதலை மட்டுமே ஆதரிக்கிறது, அதாவது.
இயக்கம் இருக்கும் வரை ஸ்ரீல பிரபுபாதரே இஸ்கானுக்குள் தீக்ஷையளிப்பவராக இருப்பார்.
இந்த புரிதல் ஸ்ரீல பிரபுபாதர் ஏற்கனவே தனியொரு ஆளாக இருந்து தனது இயக்கத்தின் வெற்றியை நிலைநாட்டினார் என்ற கருத்துடன் ஒத்துப்போகிறது. (தயவுசெய்து தொடர்புடைய ஆட்சேபனை 8 ஐப் பார்க்கவும்: "ஸ்ரீல பிரபுபாதர் சுத்த பக்தர்களை உருவாக்கவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா?").
ஜூலை 9-ஆம் தேதி கடிதம் உண்மையில் நியமிக்கப்பட்ட 11 ரித்விக்குகளை மட்டுமே அங்கீகரிக்கிறது என்பதால், பரிந்துரைக்கப்பட்ட 11 பேர் இறந்தாலோ அல்லது விலகிச் சென்றாலோ இந்த அமைப்பு நிறுத்தப்பட வேண்டும் என்று சில நேரங்களில் கூறப்பட்டது.
இது ஒரு தீவிரமான விதண்டா வாதம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஜூலை 9-ம் தேதி கடிதத்தில் ஸ்ரீல பிரபுபாதரால் மட்டுமே ரித்விக்குளைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றோ அல்லது ரித்விக்குகளாக செயல்படுபட வருபவரை பட்டியலில் ஒருபோதும் சேர்க்க முடியாது என்றோ குறிப்பிடவில்லை. ஸ்ரீல பிரபுபாதரால் ஏற்படுத்தப்பட்ட GBC போன்ற பிற நிர்வாக அமைப்புகளும் உள்ளன, அங்கு புதிய உறுப்பினர்கள் தேவை என உணரும் போதெல்லாம் சுதந்திரமாக சேர்க்கப்படுகின்றனர் அல்லது விலக்கப்படுகின்றனர். ஒரு மேலாண்மை அமைப்பைத் தனியாகப் பிரித்து, அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்த மற்ற விஷயங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் நடத்துவது நியாயமற்றது. ஸ்ரீல பிரபுபாதர், ரித்விக் முறையைப் பராமரிப்பதற்கான அணுகுமுறையானது அவர் தனிப்பட்ட முறையில் ஏற்படுத்திய மற்ற அமைப்புகளின் பராமரிப்பிலிருந்து எந்த வகையிலும் வேறுபட வேண்டும் என்று ஒருபோதும் சுட்டிக்காட்டவில்லை.
இந்த வாதம் சில காரணங்களால் பிரபலமாகிவிட்டது, எனவே பின்வரும் விஷயங்களை கருத்தில் கொள்ள வாசகரை அழைக்கிறோம்:
1)டோபங்கா கேன்யன் மொழியாக்கத்தில்(Topanga Canyon Transcript), தேர்ந்தெடுக்கப்பட்ட ரித்விக்குகளின் பட்டியலை தட்டச்சு செய்யத் தயாராகும் போது, தமால கிருஷ்ண கோஸ்வாமி அவர்கள் கேட்ட கேள்வி பின்வருமாறு:
|
தமால கிருஷ்ணர்:
ஸ்ரீல பிரபுபாதர்: |
"ஸ்ரீல பிரபுபாதா, இவ்வளவுதானா அல்லது நீங்கள் மேலும் சேர்க்க விரும்புகிறீர்களா?"
"தேவைப்பட்டால், மற்றவர்களைச் சேர்க்கலாம்." |
(பிரமிட் ஹவுஸ் கன்ஃபெஷன்ஸ், டோபாங்கா கேன்யன், 3/12/1980)
நிச்சயமாக சில அல்லது அனைத்து ரித்விக்களும் இறந்துவிட்டாலோ அல்லது தீவிரமாக விலகிச் சென்றாலோ, அது மேலும் ரித்விக்குகளை "சேர்க்கப்படுவதற்கான" ஒரு "அவசியமான" சூழ்நிலை என்று கருதப்படலாம்.
2) ஜூலை 9 ஆம் தேதி கடிதம் ரித்விக்கை "ஆச்சாரியரின் பிரதிநிதி" என்று வரையறுக்கிறது. ஸ்ரீல பிரபுபாதரை பிரதிநிதித்துவப்படுத்த அவர்கள் சந்நியாசிகளாக இருந்தாலும், கோயில் தலைவர்களாக இருந்தாலும் அல்லது உண்மையில் ஜிபிசி உறுப்பினர்களாக இருந்தாலும் சரி யாரையும் தேர்ந்தெடுப்பது அல்லது நீக்குவது என்பது ஜிபிசியின் அதிகாரத்திற்கு முற்றிலும் உட்பட்டது. தற்போது அவர்கள் முழுமுதற் கடவுளின் நேரடி பிரதிநிதிகளாகக் கருதப்படும் தீக்ஷை குருக்களை அங்கீகரிக்கின்றனர். எனவே ஸ்ரீல பிரபுபாதரின் சார்பாக பொறுப்புடன் செயல்படுவதற்கு பெயர் கொடுக்கும் சில பூசாரிகளைத் தேர்ந்தெடுப்பது அவர்களின் சக்திக்கு உட்பட்டதாகத்தானே இருக்க வேண்டும்.
3) ஜூலை 9-ஆம் தேதி கடிதமானது ஸ்ரீல பிரபுபாதரின் நோக்கமான "இனிமேல்" ரித்விக் அமைப்பை நடத்துவது என்பதைக் காட்டுகிறது. ஸ்ரீல பிரபுபாதர் ஜிபிசியை இறுதி நிர்வாக அதிகாரியாக ஆக்கினார். அதன்மூலம் அவர் ஏற்படுத்திய அனைத்து அமைப்புகளையும் அவர்கள் பராமரிக்கவும் ஒழுங்குபடுத்தவும் முடியும். ரித்விக் அமைப்பு என்பது தீக்ஷையை நிர்வகிப்பதற்கான அமைப்பாகும். ஜிபிசியின் வேலை, மற்ற எல்லாப் பகுதிகளிலும் அவர்கள் செய்யக்கூடியதைப் போலவே தலைமை தாங்கும் பணியாளர்களை சேர்ப்பது அல்லது நீக்குவது போன்றவற்றைச் செய்து அதனைப் பராமரிப்பதாகும்.
4) ஜூலை 9, 11 மற்றும் 21 ஆம் தேதிகளில் வெளியிடப்பட்ட கடிதங்கள் அனைத்தும், "இதுவரை(thus far)", "இதுவரை(so far)", "ஆரம்பப் பட்டியல்(initial list)" போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தி, பட்டியலைச் சேர்க்கலாம் என்பதைத்தான் குறிக்கிறது. எனவே, இன்னும் ரித்விக் சேர்ப்பதற்கான ஒரு வழிமுறை இன்னும் பயன்படுத்தப்படவில்லையென்றாலும், அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
5) ஒரு உபதேசத்ததைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, அதன் பின்னணியில் உள்ள நோக்கத்தை ஒருவர் இயல்பாகவே கருத்தில் கொள்வார். ஸ்ரீல பிரபுபாதர் "தனது மூத்த சீடர்களில் சிலரை "ரித்விக்" ஆக - ஆச்சாரியரின் பிரதிநிதியாக செயல்பட்டு தீக்ஷை சடங்கை செய்ய நியமித்தார் என்று கடிதம் கூறுகிறது (இந்த விஷயம் வலியுறுத்தி சேர்க்கப்பட்டுள்ளது). அந்த நேரத்தில் ஸ்ரீல பிரபாபாதர் "இதுவரை" பதினொரு பெயர்களை வழங்கியிருந்தார். கீழ்ப்படிதலுள்ள சீடரின் நோக்கம் அமைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு அதைத் திருப்திப்படுத்துவதாகும். இறுதி கட்டளையின் நோக்கம் தெளிவாக கூறுவது என்னவெனில் எதிர்காலத்தில் தீக்ஷை பெரும் நபர்களை ஒரு குறிப்பிட்ட, இறுதியில் இறந்துபோகும் தனிநபர்களுடன் பிணைத்து ("சிலர் [...] இதுவரை")(“some [...] so far”) . மாறாக அப்போதிலிருந்து தீக்ஷை நடைமுறையில் தொடரலாம் என்பதை உறுதி செய்வதே நோக்கமாக இருந்தது. எனவே, தீக்ஷை தேவைப்படும் வரை இந்த அமைப்பு நீடிக்க வேண்டும். இவ்வாறாக அவர்கள் தேவைப்படும்போது, "மூத்த சீடர்களை" சேர்த்து அவர்களை "ஆச்சாரியர்களின் பிரதிநிதிகளாக" செயல்பட செய்வது, இயக்கத்தின் நோக்கம் தொடர்ந்து திருப்தி அடைவதை உறுதி செய்யும்.
6)ஸ்ரீல பிரபுபாதரின் உயிலுடன் சேர்த்து (இந்தியாவில் நிரந்தர சொத்துக்களுக்கான அனைத்து எதிர்கால இயக்குநர்களையும் அவரால் "தீக்ஷை வழங்கப்பட்ட சீடர்களில்" இருந்து மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதைக் குறிக்கிறது), காலவரையின்றி GBC-யே முழு விஷயத்தையும் வெறுமனே நிர்வகிக்க வேண்டும் என்பதும் ஸ்ரீல பிரபுபாதரின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இதைச் சொன்ன பிறகு, ஸ்ரீல பிரபுபாதர் விரும்பினால், அந்த உத்தரவைத் திரும்பப்பெறுவது என்பது எப்போது வேண்டுமானாலும் சாத்தியமாகும். முன்பு கூறியது போல், எதிர் உபதேசங்கள் குறைந்தபட்சம் தனிப்பட்ட முறையில் கையொப்பமிடப்பட்ட கடிதத்தைப் போல தெளிவாகவும், சந்தேகத்திற்கு இடமில்லாததாகவும் இருக்க வேண்டும். எப்படி ரித்விக் அமைப்பிற்கு இருந்ததோ அதேபோல இருக்கவேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அவரது சுத்த பக்தர்களால் எதுவும் சாத்தியம்:
|
நியூஸ்டே நிருபர்:
ஸ்ரீல பிரபுபாதர்: |
"...இப்போது நீங்கள் தலைவர் மற்றும் ஆன்மீக குரு. உங்கள் இடத்தை யார் பிடிப்பார்கள்?"
"என் இடத்தை யார் எடுப்பது என்று அந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கட்டளையிடுவார்." |
(நேர்காணல், 14/7/1976, நியூயார்க்)
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் வரலாம் அல்லது வராமல் இருக்கலாம் என்று ஊகிப்பதைக் காட்டிலும், அல்லது இன்னும் மோசமானவற்றைக் கண்டுபிடிப்பதை காட்டிலும் நம்முடைய ஆச்சாரியரிடமிருந்து நாம் பெற்ற உத்தரவுகளைப் பின்பற்றுவது பாதுகாப்பானது என்று நாம் உணர்கிறோம்.
|
26. "ரித்விக் ஆதரவாளர்கள் ஒரு குருவிடம் சரணடைய விரும்பவில்லை." |
ஒரு ஆன்மீக குருவிடம் சரணடைவதற்கு அவர் உடல் ரீதியாக இருக்க வேண்டும் என்ற தவறான கருத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டு அமைந்துள்ளது. அப்படியானால், ஸ்ரீல பிரபுபாதரின் முதல் சீடர்கள் தற்போது அவரிடம் சரணடைந்திருக்க முடியாதே. ஆன்மீக குருவிடம் சரணடைவது என்பது அவரது உபதேசங்களைப் பின்பற்றுவதாகும், மேலும் அவர் உடல் ரீதியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதைச் செய்யலாம். எண்ணற்ற சிக்ஷா உறவுகள் மூலம் எதிர்காலத்தில் வருவோர் அனைவருக்கும் சரியான வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் வழங்குவதே இஸ்கானின் நோக்கமாகும். தற்போதைய GBC ஸ்ரீல பிரபுபாதரின் கட்டளைக்கு சரணடைந்தவுடன், இந்த அமைப்பு இயற்கையாகவே மற்றவர்களிடமிருந்து மேலும் மேலும் சரணடைவதற்கு ஊக்கமளிக்கும். இறுதியில் அதைச் செய்ய தீவிர ரித்விக் ஆர்வலர்களையும் ஈர்க்கும்.
அனைத்து ரித்விக் ஆதரவாளர்களும் உண்மையில் பிடிவாதமாக ஒரு குருவிடம் சரணடைய விரும்பவில்லை என்றாலும், அது இன்னும் ஜூலை 9-வது உத்தரவை செல்லாததாக மாற்றாது. உண்மையில், சிறந்த ரித்விக்குகள் அவ்வாறு உறுதியாக சரணடையவில்லை என்று கூறினாலும், அது ஸ்ரீல பிரபுபாதரின் இறுதி கட்டளையை பின்பற்ற, GBC-க்கு ஊக்கமளிப்பதாகத்தான் இருக்கும். முரண்பட்டிருக்கின்ற விஷயத்தை நிரூபிக்க வேறெந்த காரணம் இருக்க முடியாது.
|
27."ஆனால், தீக்ஷை குருக்கள் இல்லாவிட்டால், பக்தர்களுக்கு யார் வழிகாட்டுவது மற்றும் சேவை கொடுப்பது?" |
ஒரே ஒரு தீக்ஷை குரு இருப்பார்: ஸ்ரீல பிரபுபாதர் உடல்ரீதியாக இருந்தபோது அவருடைய புத்தகங்களைப் படிப்பதன் மூலமும், மற்ற பக்தர்களுடன் சிக்ஷா குரு உறவுகள் மூலமும் எப்படி இருந்ததோ, அதே வழியில் வழிகாட்டுதலும் சேவையும் வழங்கப்படும். 1977-க்கு முன், யாராவது கோவிலில் சேர்ந்தால், அவர்களுக்கு பக்த தலைவர், சங்கீர்த்தன தலைவர், வருகை தரும் சன்னியாசிகள், சமையல்காரர், பூஜாரி, கோவில் தலைவர் போன்றவர்களால் உபதேசிக்கப்படுவார்கள். ஸ்ரீல பிரபுபாதரிடமிருந்து நேரடியாக தனிப்பட்ட வழிகாட்டுதல் வழங்கப்படுவது மிகவும் அரிதானதாக இருந்தது. சொல்லப்போனால் அவர் தனது எழுத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அத்தகைய நேரடி தொடர்புகளை தொடர்ந்து ஊக்கப்படுத்தவில்லை. ஸ்ரீல பிரபுபாதர் அமைத்ததைப் போலவே விஷயங்களையும் தொடர வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
|
28. "மூன்று சந்தர்ப்பங்களில் ஸ்ரீல பிரபுபாதர் உங்களுக்கு ஒரு உடல்ரீதியாக வீற்றிருக்கும் குரு தேவை என்று கூறுகிறார், ஆனால் உங்கள் முழு நிலைப்பாடும் நீங்கள் அவ்வாறு இல்லை என்ற எண்ணத்தில் தங்கியுள்ளது." |
"எனவே, நாம் பகவான் கிருஷ்ணரின் மீது சிறிது நாட்டம் கொண்டவுடன், அவர் நம் இதயத்தில் இருந்து நமக்கு சாதகமான உபதேசங்களை வழங்குகிறார், அதனால் நாம் படிப்படியாக முன்னேற முடியும். பகவான் ஸ்ரீகிருஷ்ணரே முதல் ஆன்மீக குரு. மேலும் நாம் அதிக ஆர்வம் காட்டும்போது, நாம் உடல்ரீதியாக உள்ள ஆன்மீக குருவிடம் செல்ல வேண்டும்." (ஸ்ரீல பிரபுபாதர் பகவத் கீதை உபன்யாசம், 14/8/1966, நியூயார்க்)
"ஏனென்றால் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அனைவரின் இதயத்திலும் இருக்கிறார். உண்மையில், அவரே ஆன்மீக குரு அதாவது சைத்ய-குரு. எனவே நமக்கு உதவுவதற்காக, உடல் ரீதியிலான ஆன்மீக குருவாக அவர் வெளியே வருகிறார்."
(ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீமத் பாகவதம். உபன்யாசம், 28/5/1974, ரோம்)
"எனவே கடவுள் சைத்ய-குரு என்று அழைக்கப்படுகிறார், ஆன்மீக குருவின் இதயத்தில் இருக்கிறார். மேலும் உடல் ரீதியிலான ஆன்மீக குரு பகவானின் கருணை [...] அவர் உங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து, ஆன்மீக குருவின் பௌதீக வடிவத்தில் வெளியிலிருந்தும், இதயத்தின் உள்ளே இருந்தும் ஆன்மீக குருவாக உங்களுக்கு உதவுவார்.."
(ஸ்ரீல பிரபுபாதர் அறை உரையாடல், 23/5/1974)
பந்தப்பட்ட நிலையில் சைத்ய-குரு அல்லது பரமாத்மாவை வழிகாட்டுதலுக்காக முழுமையாக நம்ப முடியாது என்பதை விளக்கும் போது "உடல்ரீதியிலான குரு" என்ற வார்த்தையை ஸ்ரீல பிரபுபாதர் பயன்படுத்தினார். பரமாத்மாவின் வெளிப்புற தோற்றத்திற்கு நாம் சரணடைய வேண்டியது தவிர்க்க முடியாதது. இவர்தான் தீக்ஷை குரு. அத்தகைய ஆன்மீக குரு, ஆன்மீக லோக வாசியாகவும், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நெருங்கிய சகாவாகவும் கருதப்படுகிறார். அத்தகைய ஆன்மீக குரு, விழுந்துபோன நிபந்தனைக்குட்பட்ட ஆன்மாக்களை வழிநடத்துவதற்காகவே தன்னை உடல் ரீதியாக வெளிப்படுத்துகிறார். பெரும்பாலும் அத்தகைய ஆன்மீக குரு ஸ்பரிசம் செய்யக்கூடிய புத்தகங்களை எழுதுவார்; அவர் பௌதீக காதுகளால் கேட்கக்கூடிய உபன்யாசத்தை வழங்குவார் மற்றும் பௌதீக ஒலிநாடா இயந்திரங்களில் பதிவு செய்வார்; அவர் உடல் ரீதியாகப் பிரிந்தவுடன் எல்லாவற்றையும் நிர்வகிப்பதற்காக அவர் உடல் மூர்த்திகள் மற்றும் உடல்ரீதியிலான ஜிபிசியை கூட விட்டுச் செல்லலாம்.
இருப்பினும், ஸ்ரீல பிரபுபாதர், இந்த உடல் குருவும்(physical guru), குருவாக செயல்பட உடல் ரீதியாக இருக்க வேண்டும் என்று ஒருபோதும் கற்பிக்கவில்லை. நாம் சுட்டிக் காட்டியது போல், அப்படி இருந்தால், தற்போது யாரும் அவருடைய சீடராகக் கருத முடியாது. தெய்வீக அறிவு வழங்கப்படுவதற்கு குரு எப்போதும் உடல் ரீதியாக இருக்க வேண்டும் என்றால், ஸ்ரீல பிரபுபாதர் பூமியை விட்டு வெளியேறியவுடன் அவரது சீடர்கள் அனைவரும் "மறு-தீக்ஷை" எடுத்திருக்க வேண்டும். மேலும், ஆயிரக்கணக்கான ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் உடலுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் தீக்ஷைப் பெற்றனர். ஆயினும்கூட, அவர்கள் உடல்ரீதியிலான ஆன்மீக குருவை அணுகி, விசாரித்து, சரணடைந்தார்கள், சேவை செய்தார்கள் மற்றும் தீக்ஷை பெற்றார்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேற்கூறிய மூன்று மேற்கோள்களின் அடிப்படையில் அவர்களின் தீக்ஷையில் பூஜ்யமாகவும் வெற்றிடமாகவும் இருந்தார்கள் என்று யாரும் வாதிடவில்லை.
|
29. "தீக்ஷை குரு ஒரு பந்தப்பட்ட ஆத்மாவாக இருக்க முடியாதா?" |
நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகள் அனைத்திலும் ஒரு தீக்ஷை குருவின் தகுதி சிறப்பாக குறிப்பிடப்பட்ட ஒரே ஒரு இடத்தில் மட்டுமே உள்ளது (அஃது, ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம். மத்ய லீலை, 24.330). அது சைதன்ய சரிதம்ருதத்தில் குறிப்பாக தீக்ஷை பற்றி குறிப்பிடும்போது கூறுகிறது. தீக்ஷை குரு என்பவர் கட்டாயமாக மஹா-பாகவதராக மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதை மேற்கண்ட மேற்கோள் தெளிவாக காட்டுகிறது. "கட்டாயம்" மற்றும் "மட்டும்" என்ற சொற்களை ஸ்ரீல பிரபுபாதர் பயன்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. இதைவிட அழுத்தமாக சொல்ல முடியாது. தீக்ஷை குரு ஒரு பந்தப்பட்ட ஆத்மாவாக இருக்க முடியும் என்று எந்த மேற்கோள்களும் இல்லை. இதைக்கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அப்படி இல்லையெனில், ஸ்ரீல பிரபுபாதர் குரு-தத்துவத்தை முரண்பட்டு போதிப்பவர் ஆவாரல்லவா. முக்தியடையாத குரு என்ற கருத்தை ஆதரிக்கிறார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் மேற்கோள்கள் உள்ளன. ஆனால் அவை பொதுவாக இரண்டு வகைகளாகும்:
1) சிக்ஷா குருவின் தகுதியைப் பற்றிய மேற்கோள்கள்: இந்த மேற்கோள்கள் குருவாகச் செயல்படுவது எவ்வளவு எளிது, குழந்தைகளால் கூட அதைச் செய்வது எப்படி என்பதை வலியுறுத்தும். மேலும் இது பொதுவாக பகவான் ஸ்ரீசைதன்யரின் ஆமார ஆக்ஞாய ஸ்லோகத்துடன் தொடர்புடையது.
2) குருவின் தன்மையை அடைவதற்கான வழிமுறையை விவரிக்கும் மேற்கோள்கள்: இந்த மேற்கோள்கள் பொதுவாக "ஆக(become)" என்ற வார்த்தையை கொண்டுள்ளன. ஏனென்றால், கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள வழிமுறையை "கண்டிப்பாகப் பின்பற்றுவதன் மூலம்" ஒருவர் முன்னேறி, குருவின் தன்மைக்கு தகுதி பெறுவார். இந்த வழியில் ஒருவர் "குருவாக" மாறுவார். இதன் விளைவாக வரும் குருவின் தகுதி மஹா-பாகவதரை விட குறைவாக இருக்கும் என்று மேற்கோள்கள் ஒருபோதும் கூறாது. அவைகள் பொதுவான வழிமுறையை விவரிக்கின்றன.
இது மற்றொரு கட்டுரையாக எழுதப்பட வேண்டிய ஒரு பாடமாக இருப்பதால் இதை சுருக்கமாக வைத்துள்ளோம்; மிக முக்கியமாக, ஸ்ரீல பிரபுபாதர் உண்மையில் என்ன கட்டளையிட்டார் என்று நேரடியாகப் பொருந்தாத ஒரு தலைப்பு. தீக்ஷை குரு கட்டாயமாக ஒரு மஹா-பாகவதராக மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக நமக்கு ஒரு ரித்விக் அமைப்பு இருக்க வேண்டும் அல்லது ஸ்ரீல பிரபுபாதர் அத்தகைய அமைப்பை அமைத்தார் என்று அர்த்தம் இல்லை. மாறாக, ஒரு தீக்ஷை குருவின் தகுதி மிகக் குறைவாக இருப்பதால், ஸ்ரீல பிரபுபாதர் ஒரு ரித்விக் முறையைக் கட்டளையிடவில்லை என்று அர்த்தமல்ல. ஸ்ரீல பிரபுபாதர் என்ன செய்தார் என்பதை நாம் வெறுமனே ஆராய்ந்து அதைப் பின்பற்ற வேண்டும்; ஸ்ரீல பிரபுபாதர் என்ன செய்திருக்க வேண்டும் அல்லது என்ன செய்திருக்கக் கூடாது என ஆராயக்கூடாது. இந்த அறிக்கை ஸ்ரீல பிரபுபாதரின் உண்மையான இறுதி உபதேசங்களை பிரத்தியேகமாக கையாள்கிறது.
|
30. "ஸ்ரீல பிரபுபாதர் எல்லாவற்றையும் நிர்வகிக்க இயக்கத்தின் தலைவராக ஜிபிசியை நியமித்தார். அவர்கள் தீக்ஷை நடத்த தேர்ந்தெடுத்த வழி இதுதான்." |
ஸ்ரீல பிரபுபாதர் தனிப்பட்ட முறையில் ஏற்படுத்திய நிர்வாக அமைப்புகளில் எதையும் மாற்றுவதற்கு GBC-க்கு ஒருபோதும் அங்கீகாரம் அளிக்கவில்லை:
தீர்க்கப்பட்டது: GBC (ஆட்சி குழு ஆணையம்)- ஆனது தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால் நிறுவப்பட்டது. அவர் ஸ்தாபக-ஆச்சாரியர் மற்றும் உச்ச அதிகாரம் கொண்ட அகில உலக கிருஷ்ண பக்கி இயக்கத்தை நிர்வகிப்பதற்கான பொறுப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கடமை ஜிபிசி-யினுடையது. ஜிபிசி தனது வாழ்க்கை மற்றும் ஆன்மாவாக பிரபுபாதரின் வழிமுறைகளை ஏற்றுக்கொண்டு எல்லா வகையான அங்கீகாரத்திற்கும் எல்லா வகையிலும் அவருடைய கருணையை முழுமையாகச் சார்ந்துள்ளது. ஸ்ரீல பிரபுபாதரால் மிகவும் அன்பாக வழங்கப்பட்ட உபதேசங்களை செயல்படுத்துதல் மற்றும் அவருடைய போதனைகளை அவற்றின் புனிதமான வடிவத்தில் பாதுகாத்து உலகிற்கு பரப்புவதைத் தவிர GBC-க்கு வேறு எந்த செயல்பாடும் அல்லது நோக்கமும் இல்லை."
(ஜிபிசியின் வரையறை, தீர்மானம் 1, ஜிபிசி நிமிடங்கள் 1975)
"நிர்வாக அமைப்பு இப்போது உள்ளது போல் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும்."
(ஸ்ரீல பிரபுபாதரின் உயில் பிரகடனம், ஜூன் 4, 1977)
ரித்விக் அமைப்பு என்பது இஸ்கானுக்குள் தீக்ஷையை நிர்வகிப்பதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழியாகும். ஜிபிசியின் வேலை என்னவென்றால், அது சீராக இயங்குவதை உறுதி செய்வதாகும், அதை கலைத்துவிட்டு தங்கள் சொந்த அமைப்பைத் தொடங்காமலும், செயல்பாட்டில் தங்கள் சொந்த தத்துவத்தை வளர்த்துக் கொள்ளாமலும் இருக்க வேண்டும்:
"நான் ஏற்கனவே உங்களுக்கு வழங்கிய தரநிலைகளை, இப்போது அவற்றை எல்லா காலங்களிலும் நிலையான நடைமுறையின் கீழ் பராமரிக்க முயற்சியுங்கள். புதிதாக எதையும் செய்ய முயற்சிக்க வேண்டாம். எதையும் உருவாக்க வேண்டாம் அல்லது எதையும் தயாரிக்க வேண்டாம். அது எல்லாவற்றையும் அழித்துவிடும்."
(பலி மர்தானர் மற்றும் புஷ்ட கிருஷ்ணருக்கு ஸ்ரீல பிரபுபாதர் கடிதம், 18/9/1972)
"இப்போது நான் நமது கிருஷ்ண பக்தி இயக்கத்தின் தரத்தை பராமரிப்பதற்காக ஜிபிசியை முதலீடு செய்துள்ளேன். எனவே ஜிபிசியை மிகவும் விழிப்புடன் வைத்திருங்கள். எனது புத்தகங்களில் உங்களுக்கு முழு வழிகாட்டுதல்களையும் ஏற்கனவே அளித்துள்ளேன்."
(ஸ்ரீல பிரபுபாதர் சத்வரூபருக்கு எழுதிய கடிதம், 13/9/1970)
"நான் முதலில் 12 ஜிபிசி உறுப்பினர்களை நியமித்துள்ளேன் மேலும் அவர்கள் நிர்வகிக்கவும் மற்றும் மேலாண்மை செய்வதற்கும் நான் அவர்களுக்கு 12 மண்டலங்களைக் கொடுத்துள்ளேன். ஆனால் ஒப்பந்தத்தின் மூலம் நீங்கள் எல்லாவற்றையும் மாற்றிவிட்டீர்கள், இது என்னவென்று எனக்குத் தெரியவில்லையே."
(ஸ்ரீல பிரபுபாதர் ரூபனுகருக்கு எழுதிய கடிதம், 4/4/1972)
"நான் இங்கு இல்லாத போது என்ன நடக்கும், எல்லாம் GBC-யால் கெட்டுப் போய்விடுமா?"
(ஸ்ரீல பிரபுபாதர் ஹன்சதுத்தருக்கு எழுதிய கடிதம், 11/4/1972)
GBC அமைப்பு ஸ்ரீல பிரபுபாதரால் அமைக்கப்பட்ட அளவுக்குள் மட்டுமே செயல்பட வேண்டும். ஸ்ரீல பிரபுபாதரின் பிரதிநிதி அமைப்பு எல்லா வகையிலும் சமரசம் செய்து கொள்ளப்படுவதைக் கண்டு நாம் வேதனை அடைகிறோம். ஏனெனில் அவரின் வழிகாட்டுதலின் கீழ் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாகும்.
ஸ்ரீல பிரபுபாதரின் இறுதி உத்தரவின் கீழ் நாம் அனைவரும் ஒத்துழைப்போம்.
முடிவுரை
ISKCON-க்குள் தீக்ஷையின் எதிர்காலம் குறித்த ஸ்ரீல பிரபுபாதரின் முக்கியமான இறுதி உத்தரவுக்கு வாசகராகிய தாங்கள் இப்போது ஆழ்ந்த பாராட்டை அளித்துள்ளீர்கள் என்று நம்புகிறோம். நாங்கள் வழங்கிய எந்தப் பகுதியும் யாரையும் புண்படுத்தியிருந்தால் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்; புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல, எனவே எங்கள் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும்.
ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால், அவை வேண்டுமென்றே செய்யப்பட்டவை அல்ல, எனவே யாரையும் குற்றம் சாட்டி தேவையற்ற சக்தியை வீணடிக்க அவசியமில்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்பதை வலியுறுத்தி இந்தக் கட்டுரையைத் தொடங்கினோம். ஆச்சாரியர் வெளியேறியதும் தானாகவே சில குழப்பங்கள் ஏற்படுவது நிதர்சனம். இந்த இயக்கம் குறைந்தது இன்னும் 9,500 ஆண்டுகள் வரை இயங்கும் என்று ஒருவர் கருதும் போது, பத்தொன்பது ஆண்டுகளிலேயே குழப்பம் ஏற்படுவது என்பது உண்மையில் மிகக் குறைவு. தவறு நடந்ததை ஜீரணித்து, நமது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, கடந்த காலத்தை பின்னுக்குத் தள்ளி, சிறந்த இஸ்கானை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.
ரித்விக் அமைப்பை மெதுவாக, படிப்படியாக எளிதாக்குவது அவசியமாகக் கருதப்படலாம். தேவையற்ற பதற்றத்தையும் தொந்தரவையும் உருவாக்காமல் இருப்பதற்காக, முன்னரே ஒரு குறுகிய, குறிப்பிடப்பட்ட காலத்திற்கு அது M.A.S.S-உடன் ஒரே நேரத்தில் இயங்கலாம். இப்படிப்பட்ட குறிப்புகளை கவனமாக பரிசீலித்து கலந்தாலோசிப்பது அவசியமாகும். ஸ்ரீல பிரபுபாதரின் இறுதி உத்தரவை மீண்டும் நிறுவுவதே நமது குறிக்கோளாக இருக்கும் வரை, அதற்குள் அனைவரின் உணர்வுகளையும் மென்மையாக கையாள்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும். பக்தர்களை அனுசரித்துச் செல்வதற்கு நேரத்தை அனுமதித்து, அக்கறையுடனும் நடத்த வேண்டும். குரு மற்றும் தீக்ஷை பற்றிய ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகள் மற்றும் உபதேசங்கள் முறையாக முன்வைக்கப்படும் ஒரு விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்தினால், முழு விஷயங்களும் மிக விரைவாகவும், குறைந்தபட்ச இடையூறு மற்றும் குறைந்தபட்ச பாதிப்பு உணர்வுடன் மாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ரித்விக் அமைப்பு முன்னோக்கி செல்வதற்கான வழியமைத்து ஒப்புக் கொள்ளப்பட்டவுடன், பிரச்சினையின் இருபுறமும் கட்டியெழுப்பப்பட்ட பகைமையை சிதறடிக்க அனுமதிக்கக்கூடிய ஒரு குளிர்விக்கும் காலம் அவசியமாகும். இரு தரப்பினரும் ஒன்றுசேர்ந்து நண்பர்களாக மாறும் வகையில் மறுபரிசீலனைகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, சில ரித்விக் ஆதரவாளர்களிடமிருந்தும்கூட தற்போது கணிசமான பக்குவமற்ற தன்மை உள்ளது. நிச்சயமாக, நம்மைப் பொறுத்தவரை, ஸ்ரீல பிரபுபாதரின் மறைவின் போது நாம் மூத்த சீடர்களாக இருந்திருந்தால், நாம் வேறுவிதமாகவோ அல்லது சிறப்பாகவோ செயல்பட்டிருப்போம் என்று நாங்கள் நம்பவில்லை. அநேகமாக நாம் நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கலாம்.
நம் அனுபவத்தில் ISKCON-இல் உள்ள பல பக்தர்கள், நன்கு மூத்தவர்கள், ரித்விக் பிரச்சினையை பற்றி விரிவாக ஆராயும் வாய்ப்பு உண்மையில் கிடைக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, சில ரித்விக் ஆதரவு புத்தகங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் மிகக் குறைந்த தத்துவத்தால் நிரப்பப்பட்ட யாரையும் தள்ளி வைக்க போதுமானதாகத்தான் இருக்கிறது. நாம் பார்க்க முடிந்தவரை இதற்கான சிறந்த தீர்வு, இந்த சிக்கலை GBC தானே தீர்க்க வேண்டும். அவர்களுக்கு முன் சரியான தகவலுடன், சரியான நேரத்தில் அணுகினால் அனைத்தையும் சரிசெய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இது ஸ்ரீல பிரபுபாதரின் இறுதிக் கட்டளைக்கு முற்றிலும் இணங்காத, அதிருப்தி மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான பக்தர்களால் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுவதை விட இது மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும்.
நிச்சயமாக, நாம் பந்தப்பட்ட ஆத்மாவின் நான்கு குறைபாடுகளுக்கு உட்பட்டுள்ளோம், எனவே எந்தவொரு கருத்துகளையும் விமர்சனங்களையும் நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். இந்த புத்தகத்தை எழுதுவதில் எங்களின் முக்கிய நம்பிக்கை என்னவென்றால், ஸ்ரீல பிரபுபாதர் மறைந்ததிலிருந்து இஸ்கான் எதிர்கொண்ட மிக நீண்ட மற்றும் கடினமான சர்ச்சைகளில் ஒன்றைத் தீர்க்க ஊக்கமூட்டக்கூடிய விவாதமாக சில வழிகளில் செல்லக்கூடும். தயவுசெய்து எங்கள் குற்றங்களை மன்னிக்கவும். எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதருக்கே.
ஸ்ரீல பிரபுபாதர்
மட்டுமே நம்மை ஒன்றிணைக்க முடியும்.
ரித்விக் என்றால் என்ன?
ரித்விக் பெரும்பாலும் இரண்டு தவறான வழிகளில் ஒன்றாக வரையறுக்கப்படுகிறது:
1) முக்கியமற்ற பூசாரிகள், வெறும் நிர்வாகிகள், ஆன்மீகப் பெயர்களை ரோபோ(இயந்திர மனிதன்) போன்ற முறையில் வெளிப்படுத்துபவர்கள்.
2) தீக்ஷை குருக்களாக மாற பயிற்சி பெறுபவர்கள், அவர்கள் முழு தகுதி பெறும் வரை மட்டுமே ரித்விக்குகளாக செயல்படுவார்கள், பின்னொரு காலகட்டத்தில் அவர்கள் தங்கள் சார்பாக தீக்ஷை அளிப்பார்கள்.
இந்த வரையறைகளை ஸ்ரீல பிரபுபாதர் கூறும் ரித்விக் பாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
வரையறை 1-ஐ முதலில் பார்க்கவும். ரித்விக் பதவி மிகவும் பொறுப்பான பதவி. ஸ்ரீல பிரபுபாதர் குறிப்பாக 11 பக்தர்களைத் தேர்ந்தெடுத்ததால், தெளிவாக தெரிகின்ற விஷயம், அவர்கள் ஏற்கனவே தனது பணிக்குள் மூத்த பொறுப்பை ஏற்று சாதனை படைத்துள்ளனர் என்று. அவர் வெறுமனே ஒரு தலைப்பாகையில் இருந்து பெயர்களை வெளியே இழுக்கவில்லை. இவ்வாறாக, பெரும்பாலான பகுதிகளில் அவர்களின் செயல்பாடுகள் மிகவும் வழக்கமானதாக இருந்தாலும், தீக்ஷைக்குத் தேவையான கண்டிப்பான தரநிலைகளிலிருந்து விலகல்களைக் கண்டறிவதில் அவர்களே முதன்மையானவர்கள். எவ்வாறெனில், பெரும்பாலான குடிமக்கள் சட்டத்தை மதிக்கிறார்கள் என்பதால் ஒரு போலீஸ்காரரின் வேலை பெரும்பாலும் வழக்கமானதாக இருப்பதைப் போலவே தோன்றும், ஆனால் சில தவறான நடத்தைகள் எப்போதாவது நிகழ்கின்றன என்றால் அதனை கண்டறியும் முதல் நபராக அவர்தான் இருப்பார். ஒரு சீடன் ஒரு நாளைக்கு 16 சுற்றுகள் ஜபம் செய்ய முடிகிறதா, நான்கு ஒழுங்குமுறை கொள்கைகளைப் பின்பற்ற முடிகிறதா, அவரது புத்தகங்களைப் அன்றாடம் படிக்க முடிகிறதா என்பதை குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு நிரூபித்தால் மட்டுமே தீக்ஷை நடைபெற வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் அடிக்கடி தனது அக்கறையைத் தெரிவிப்பார். இந்த அத்தியாவசிய பகுதிகளில் ஒன்றில் தோல்வியுறும் சீடர்களுக்கு ஒரு கோயில் தலைவர் பரிந்துரைத்து அனுப்பத் தொடங்கினால், ரித்விக்கிற்கு தீக்ஷையை மறுக்கும் அதிகாரம் இருக்கும். இந்த வழியில், ஸ்ரீல பிரபுபாதர் பூமியை விட்டு வெளியேறிய நாளில் இஸ்கானுக்குள் உள்ள தரநிலைகள் ஒரே மாதிரியாக இருப்பதை ரித்விக் உறுதி செய்யும்.
நிச்சயமாக ஒரு ரித்விக் தன்னை கண்டிப்பாக ஒரு தகுதிவாய்ந்த சிக்ஷா குருவாக இருக்க கொள்கைகளை சிரத்தையாக பின்பற்ற வேண்டும். ரித்விக்கிற்கு தீக்ஷை பெறுபவர்களுடன் சிக்ஷா என்ற உறவு இருக்கிறதா என்பது தனிப்பட்ட விஷயம். அவர் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். இந்த பதவியை ஏற்கும் ஒரு பக்தருக்கு, அவருடைய ரித்விக் புதவோலைகள்(portfolio), மற்றும் அவரது சிக்ஷா குரு புதவோலையிலிருந்து(portfolio) தனித்தனியாகவும் வேறுபட்டதாகவும் இருக்கும். இருப்பினும் இரண்டும் சில நேரங்களில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் இருக்கலாம். ஸ்ரீல பிரபுபாதர் இருந்தபோதே, புதியதாக தீக்ஷை பெறுபவர்கள் அவரது மண்டலத்துக்கென்று(area) செயல்படும் ரித்விக்கைக்கூட சந்திக்க வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலும் தீக்ஷை சடங்கு கோயில் தலைவரால் மேற்கொள்ளப்படும். தீக்ஷை பெறுபவரின் பெயர் அவர் நியமிக்கப்பட்ட ரித்விக்கிலிருந்து தபால் மூலம் வந்து சேரும். அதே நேரத்தில், உள்ளூர் கோயில் அளவில் அத்தகைய ஏற்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஒரு ரித்விக் புதியதாக தீக்ஷைபெற்றவரை சந்திக்காமலும் சடங்குகளைச் செய்யாமலும் ஏன் இருக்கிறார் என்பதற்கான காரணத்தைக் கூட நாம் காண முடியாது.
நாம் இப்போது வரையறையை 2)- ஐ ஆராய்வோம். நாம் பலமுறை குறிப்பிட்டது போல, சீடர்களை ஏற்றுக்கொள்ள ஒருவர் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட மஹா-பாகவதராக இருக்க வேண்டும். எனவே, இஸ்கானில் இவ்வுலகிலிருந்து வெளியேறும் முன் எந்த நேரத்திலும், ஸ்ரீல பிரபுபாதரைத் தவிர வேறு யாருக்கும் தங்கள் சார்பாக தீக்ஷை கொடுக்க எந்த அதிகாரமும் இல்லை. அவ்வாறே இஸ்கானில் எதிர்காலத்திலும்கூட மற்றவர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதரைத் தவிர யாருக்கும் தீக்ஷை அளிக்கும் அதிகாரம் இல்லை. எனவே, இந்த விஷயத்தில் ஒரு ரித்விக் அல்லது வேறு யாரேனும், மஹா-பாகவதர் நிலையை அடைந்திருந்தாலும், அவர் இஸ்கானுக்குள் இருக்க விரும்பினால், அவர் ரித்விக் முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது ஜூலை 9, 1977-அன்று நமக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ரித்விக்கள் எப்பொழுதும் தீக்ஷை குருவாக மாறுவது பற்றி எதுவும் கூறவில்லை.
அவர்கள் என்ன செய்கிறார்கள் மற்றும் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்:
அ) ஸ்ரீல பிரபுபாதரின் சார்பாக ரித்விக் சீடரை ஏற்றுக்கொள்கிறார், புதியதாக தீக்ஷை பெறுபவர்களுக்கு ஆன்மீகப் பெயரை வழங்குகிறார், ஜெப மணிகள் மீது மந்திரங்களை உச்சரிக்கிறார். இரண்டாவது தீக்ஷைக்கு காயத்ரி மந்திரத்தை வழங்குகிறார் (தயவுசெய்து ஜூலை 9-ஆம் தேதி பக்கம் 109 கடிதத்தைப் பார்க்கவும்). இஸ்கானுக்குள் தீக்ஷை நடைமுறைகள் மற்றும் தரநிலைகளை மேற்பார்வையிடும் பொறுப்புள்ள பக்தர்களைக் கொண்டிருப்பதற்கு ஸ்ரீல பிரபுபாதர் தேர்ந்தெடுத்த முறை இதுவாகும். தகுதிபெறும் சீடர்கள் பக்தி பயிற்சியின் தேவையான தரத்தை பூர்த்தி செய்திருப்பதை உறுதி செய்வதற்காக கோவில் தலைவர்கள் அனுப்பிய அனைத்து பரிந்துரைகளையும் ரித்விக் ஆய்வு செய்வார்.
ஆ) ரித்விக் ஒரு பூசாரி என்பதனால் அவர் ஒரு தகுதி வாய்ந்த பிராமணராக இருக்க வேண்டும். ரித்விக்குகளைத் தேர்ந்தெடுக்கும்போது, ஸ்ரீல பிரபுபாதர் முதலில் "மூத்த சன்னியாசிகளை" பரிந்துரைத்தார், இருப்பினும் அவர் சன்னியாசியாக இல்லாதவர்களையும் தேர்ந்தெடுத்தார் (தயவுசெய்து ஜூலை 7 உரையாடலை பின் இணைப்புகள், பக்கம் 181-இல் பார்க்கவும்). ரித்விக்குகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்தவர்கள், தீக்ஷை செயல்முறை உலகம் முழுவதும் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய பொறுப்புள்ள நபர்கள்.
இ) எதிர்கால ரித்விக்குகளை GBC தேர்வு செய்யலாம். ரித்விக்குகள் தேர்ந்தெடுக்கப்படும், கண்டிக்கப்படும் அல்லது பணிநீக்கம் செய்யப்படும் விதம் நடைமுறையில் தற்போது இஸ்கானில் உள்ள ஜிபிசியால் தீக்ஷா குருக்களை நிர்வகிக்கப்படும் விதத்தைப் போலவே இருக்கும். இது நிச்சயமாக அதிகாரங்களின் எல்லைக்குள் உள்ளது. சந்நியாசிகள், அறங்காவலர்கள், மண்டல செயலாளர்கள் போன்ற மூத்த பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து மறுஆய்வு செய்யும் அதிகாரம் ஸ்ரீல பிரபுபாதருக்கு இருந்ததால், அவர் ஜிபிசிக்கு வழங்கினார். 1980-இல் "டோபாங்கா கேன்யன்" பேச்சுவார்த்தைகளில் ஜிபிசியால் மேலும் ரித்விக்குகள் சேர்க்கப்படலாம் என்று தமால கிருஷ்ண கோஸ்வாமியும் அதை ஒப்புக் கொண்டார்
(தயவுசெய்து பின் இணைப்புகள், பக்கம் 133-ஐப் பார்க்கவும்).
எனவே சுருக்கமாக, ஸ்ரீல பிரபுபாதர் இவ்வுலகில் இருந்தபோது வரைக்கும் எவ்விதமாக இருந்ததோ அதேபோன்று அமைப்பு சரியாக வேலை செய்யும். மனநிலை, அணுகுமுறை, பல்வேறு தரப்பினருக்கு இடையேயான உறவு போன்றவை, ஸ்ரீல பிரபுபாதர் தனது உயிலின் இரண்டாவது பத்தியில் அழுத்தம் திருத்தமாக கூறியது போல் 1977-ல் ஒரு குறுகிய நான்கு மாத காலத்திற்கு இருந்த விதத்தில் இருந்து மாறாமல் தொடர வேண்டும்:
மேலாண்மை அமைப்பு இப்போது உள்ளது போல் தொடரும் மற்றும் எந்த மாற்றமும் தேவையில்லை."
தீக்ஷை
"தீக்ஷை என்பது ஒருவனது தெய்வீக ஞானத்தை எழுப்பி, பாவச் செயல்களால் ஏற்படும் அனைத்து எதிர்விளைவுகளையும் அழிக்கும் வழிமுறையாகும். வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப் படிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு நபர் இந்த செயல்முறையை தீக்ஷை என்று அறிவார்."
(ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம். மத்யா லீலை, 15:108)




குரு என்பவர் உடல்ரீதியாக இருக்க வேண்டுமா?
"உடல்ரீதியிலான இருப்பு முக்கியமற்றது; ஆன்மீக குருவிடமிருந்து பெறப்படும் தெய்வீக ஒலியானது வாழ்வின் வழிகாட்டுதலாக இருக்க வேண்டும். அதுவே நமது ஆன்மீக வாழ்க்கையை வெற்றியடையச் செய்யும். நான் இல்லாததை நீங்கள் மிகவும் கடினமாக உணர்ந்தால், நான் அமர்ந்திருக்கும் இடங்களில் எனது படங்களை நீங்கள் வைக்கலாம். அது உங்களுக்கு உத்வேகம் அளிக்கும்." (பிரம்மானந்தர் மற்றும் பிற சீடர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 19/1/1967)
"ஆனால் நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதும் என்னைப் பற்றி நினைப்பது போல் நானும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். உடல் ரீதியாக நாம் ஒன்றாக இல்லாவிட்டாலும், ஆன்மீக ரீதியில் நாம் பிரிக்கப்படவில்லை. எனவே இந்த ஆன்மீக இணைப்பில் மட்டுமே நாம் அக்கறை கொள்ள வேண்டும். "
(ஸ்ரீல பிரபுபாதர் கௌரசுந்தரருக்கு எழுதிய கடிதம், 13/11/1969)
"எனவே நாம் தெய்வீக அதிர்வுகளால் இணைக்கப்பட வேண்டும், உடல் இருப்பால் அல்ல. அதுதான் உண்மையான சகவாசம்."
(ஸ்ரீல பிரபுபாதர் உபன்யாசம், ஸ்ரீமத் பாகவதம்., 18/08/1968)
"இருப்பு பற்றி இரண்டு கோட்பாடுகள் உள்ளன - உடல்ரீதியிலான கோட்பாடு மற்றும் தெய்வீக அதிர்வலைகள் என்ற கோட்பாடு. உடல்ரீதியிலான கோட்பாடு என்பது தற்காலிகமானது, அதேசமயம் தெய்வீக அதிர்வலைகள் என்ற கோட்பாடு நித்தியமானது. [...] பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அல்லது ஆன்மீக குருவிடமிருந்து நாம் பிரிந்திருப்பதை உணரும்போது, அவர்களின் அறிவுரைகளின் வார்த்தைகளை நினைவில் கொள்ள முயற்சிக்க வேண்டும், அப்படியென்றால், அவர்களின் பிரிவை நாம் இனி உணர மாட்டோம். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ஆன்மீக குருவுடன் இத்தகைய தொடர்பு என்பது தெய்வீக அதிர்வுகள் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும், உடல் இருப்பால் அல்ல. அதுவே உண்மையான சகவாசம்."
(கிருஷ்ண உணர்வுக்கு உயர்தல், அத்தியாயம் 4)
"பௌதிகத்தின் பார்வையின்படி தெய்வத்திரு ஸ்ரீல பக்திசிதாந்த ஸரஸ்வதி தாகூர பிரபுபாதர் 1936-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசி நாளில் இந்த பௌதீக உலகை விட்டுப் பிரிந்து மறைந்தாலும், அந்த தெய்வத்திரு அவரது வாணியாலும், வார்த்தைகளாலும் எப்போதும் என்னுடன் இருப்பதாகவே நான் கருதுகிறேன் என்றார். இயக்கத்தில் இணைவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. வாணி மற்றும் வபு மூலம். வாணி என்றால் சொற்கள் மற்றும் வபு என்றால் உடல் இருப்பு. உடல் இருப்பு சில நேரங்களில் பாராட்டத்தக்கது, சில நேரங்களில் இல்லை. ஆனால் வாணி என்றென்றும் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆகையால் நாம் வாணியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, உடல் ரீதியை அல்ல."
(ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம், அந்திய லீலை, இறுதி வார்த்தைகள்)
"எனவே நாம் வாணியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், உடல் இருப்பை அல்ல". (ஸ்ரீல பிரபுபாதர் சுசி தேவி தாசிக்கு 04/11/1975 அன்று எழுதிய கடிதம்)
"எனது குரு மகாராஜரிடமிருந்து தனிப்பட்ட வழிகாட்டுதலைப் பெறுவதால், நான் உடல் ரீதியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் உங்கள் தனிப்பட்ட வழிகாட்டியாக இருப்பேன்."
(ஸ்ரீல பிரபுபாதர் அறை உரையாடல், விருந்தாவனம், 14/7/1977)
"பக்தித் தொண்டில் ஈடுபடும் நபர்களுடன் பழக நேர்ந்தால் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க முடியாது என்பது சில சமயங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த வாதத்திற்கு பதிலளிக்க, ஒருவர் நேரடியாகவோ, உடல் ரீதியாகவோ அல்லாமல், தத்துவம் மற்றும் தத்துவரீதியிலான் தர்க்கத்தின் மூலம், வாழ்க்கையின் சிக்கல்களைப் புரிந்துகொள்வதன் மூலம் விடுதலை பெற்ற நபர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று இங்கே விவரிக்கப்பட்டுள்ளது." (ஸ்ரீமத் பாகவதம். 3.31.48. பொருளுரை)
"நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன், நான் உடல் ரீதியாக இல்லை என்பதை மனதில் எடுத்துக் கொள்ளவே வேண்டாம்"
(ஜெயானந்தாவுக்கு ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 16/9/1967)
|
பரமானந்தர்:
ஸ்ரீல பிரபுபாதர்: |
"ஸ்ரீல பிரபுபாதரே! வெறுமனே உங்கள் போதனைகள் மற்றும் உங்கள் உபதேசங்கள் மூலமாக நாங்கள் எப்போதும் உங்கள் இருப்பை மிகவும் வலுவாக உணர்கிறோம். [...] நாங்கள் எப்போதும் உங்கள் உபதேசங்களை தியானிக்கிறோம்.”
"நன்றி. அதுவே உண்மையான இருப்பு. உடல்ரீதியான இருப்பு முக்கியமில்லை." |
(அறை உரையாடல், 6/10/1977, விருந்தாவனம்)
"எனது சகவாசத்தை மீண்டும் பெற விரும்புவதாக நீங்கள் எழுதுகிறீர்கள், ஆனால் நீங்கள் எப்போதும் என்னுடன் சகவாசத்தில் இருப்பதை ஏன் மறந்துவிட்டீர்கள்? நீங்கள் எனது இயக்க பணி நடவடிக்கைகளுக்கு உதவும்போது நான் எப்போதும் உங்களைப் பற்றியே நினைப்பேன். நீங்கள் எப்போதும் என்னைப் பற்றி நினைக்கிறீர்கள். எனது குரு மஹாராஜரை ஒவ்வொரு கணமும் நினைப்பது போல், அவர் உடல் ரீதியாக இல்லாவிட்டாலும், என்னால் முடிந்த அளவுக்கு அவருக்கு சேவை செய்ய முயற்சிப்பதாலும், அவருடைய ஆன்மீக ஆசீர்வாதத்தால் அவர் எனக்கு உதவுகிறார் என்று நான் நம்புகிறேன். இரண்டு வகையான சகவாசங்கள் இருக்கின்றன. அவைகள் உடல்ரீதியானவை மற்றும் வாக்கு ரீதியிலானவை. உடல்ரீதியான சகவாசம் என்பது வாக்கு ரீதியிலான சகவாசத்தைப் போல முக்கியமல்ல."
(ஸ்ரீல பிரபுபாதர் கோவிந்த தாசிக்கு எழுதிய கடிதம், 17/8/1969)
"என்னுடைய ஆசீர்வாதத்தைப் பொறுத்த வரையில், என்னுடைய உடல் ரீதியிலான இருப்பு என்பது அவசியமல்ல. நீங்கள் ஹரே கிருஷ்ணா ஜபம் செய்து, என்னுடைய அறிவுரைகளைப் பின்பற்றி, புத்தகங்களைப் படித்து, கிருஷ்ண பிரசாதம் மட்டும் எடுத்துக்கொண்டால், அங்கு பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவின் ஆசீர்வாதத்தை பெறவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் பகவான் ஸ்ரீசைதன்யரின் பணியை தாழ்மையுடன் முன்னெடுத்து செல்ல முயற்சிக்கிறேன்."
(பால கிருஷ்ணருக்கு ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 30/6/1974)
“பகவான் சைதன்யரின் மீதும், ஆன்மீக குரு மீதும் தளராத நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட எவரும், வெளிப்படுத்தப்பட்ட வேத அறிவானது அவருக்கு விளங்குவதை காண முடியும். எனவே உங்கள் தற்போதைய விருப்பத்தைத் தொடருங்கள் இவ்விதமாக உங்கள் ஆன்மீக முன்னேற்றத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நான் உறுதியாக நம்புவது என்னவென்றால், உடல் ரீதியாக உங்கள் முன் நான் இல்லாவிட்டாலும். நீங்கள் மேற்கண்ட கொள்கைகளைப் பின்பற்றினால், கிருஷ்ண உணர்வின் விஷயத்தில் அனைத்து ஆன்மீகக் கடமைகளையும் நீங்கள் நிறைவேற்ற முடியும்"
(ஸ்ரீல பிரபுபாதர் சுபலாவுக்கு எழுதிய கடிதம், 29/9/1967)
"எனவே பௌதீக உடல் இல்லாவிட்டாலும், தெய்வீக அதிர்வு இருப்பதை உணர்ந்து அதை ஆன்மீக குருவின் இருப்பாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆன்மீக குருவிடமிருந்து நாம் என்ன கேட்கிறோமோ, அதுதான் வாழ்கிறது."
(ஸ்ரீல பிரபுபாதர், உபன்யாசம், 1/13/1969, லாஸ் ஏஞ்சல்ஸ்)
|
ரேவதி-நந்தனர்:
ஸ்ரீல பிரபுபாதர்:
|
"...எனவே சில சமயங்களில் ஆன்மீக குரு வெகு தொலைவில் இருக்கிறார், அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கலாம். யாரோ ஒருவர் ஹாம்பர்க் கோவிலுக்கு வருகிறார். 'ஆன்மீக குரு எப்படி மகிழ்ச்சி அடைவார்?” என்று அவர் நினைக்கிறார்.
"அவரது கட்டளையைப் பின்பற்றுங்கள். ஆன்மீக குரு அவருடைய வார்த்தைகளால் உங்களுடன் இருக்கிறார். எவ்வாறு என்னுடைய ஆன்மீக குரு உடல் ரீதியாக இல்லையென்றாலும் அவருடைய வார்த்தைகளால் நான் அவருடன் தொடர்பு கொள்கிறேனோ அதுபோல. |
(ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசம், 18/8/1971)
"எவ்வாறெனில் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன், ஆகவே என் குரு மகாராஜரான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரரும் இங்கே இருக்கிறார். அவர் உடல் ரீதியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு செயலிலும் அவர் இருக்கிறார்."
(ஸ்ரீல பிரபுபாதர் அறை உரையாடல், 27/5/1977, விருந்தாவனம்)
"எனவே அந்த உடல் ரீதியானதை பிரகட என்று அழைக்கப்படுகிறது. மேலும் அப்ரகட என்று அழைக்கப்படும் மற்றொரு தளம் உள்ளது. அது உடல் ரீதியானது அல்ல. ஆனால் அதற்காக பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இறந்துவிட்டார் அல்லது பகவான் இறந்துவிட்டார் என்று அர்த்தமல்ல. ஆகவே, பிரகட அல்லது அப்ரகட, அதாவது உடல் ரீதியாக இருக்கிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல."
(ஸ்ரீல பிரபுபாதர் உபன்யாசம், 11/12/1973, லாஸ் ஏஞ்சல்ஸ்)
எனவே, ஆன்மீக ரீதியில் பிரிவு என்ற பேச்சுக்கே இடமில்லை, உடல் ரீதியாக கூட நாம் வெகுதொலைவில் இருக்கலாம்."
(ஸ்ரீல பிரபுபாதர் ஷியாமதாசிக்கு எழுதிய கடிதம், 30/08/1968)
"கிருஷ்ண உணர்வின் இந்த தகவலைப் பரப்புவதற்காக நான் உங்கள் நாட்டிற்குச் சென்றேன் மற்றும் நீங்கள் என் பணியில் எனக்கு உதவுகிறீர்கள். நான் அங்கு உடல் ரீதியாக இல்லாவிட்டாலும் ஆன்மீக ரீதியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்."
(நந்தராணி, கிருஷ்ணா தேவி, சுபலா & உத்தவர் ஆகியோருக்கு ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 3/19/1967)
"நாம் உண்மையில் பிரிந்திருக்கவில்லை. வாணி அல்லது வபு என்ற இரண்டு விஷயங்கள் உள்ளன. எனவே வபு என்பது உடல்ரீதியிலான இருப்பு மற்றும் வாணி என்பது ஒலி அதிர்வு ரூபமாக இருப்பது, ஆனால் அவை அனைத்தும் ஒன்றே."
(ஸ்ரீல பிரபுபாதர் ஹம்சதுத்தருக்கு எழுதிய கடிதம், 22/6/1970)
"எனவே ஆன்மீக குருவின் உடல்ரீதியிலான இருப்பு இல்லாத நிலையில் வாணிசேவை மிகவும் முக்கியமானது. எனது ஆன்மீக குரு, சரஸ்வதி கோஸ்வாமி தாகூரர் ஆகியோர் உடல் ரீதியாக இல்லை என்று தோன்றலாம். ஆனால் அவருடைய உபதேசத்திற்கு நான் சேவை செய்ய முயற்சிப்பதால் நான் ஒருபோதும் அவரிடமிருந்து பிரிந்ததாக உணரவில்லை."
(ஸ்ரீல பிரபுபாதர் கரந்தரருக்கு எழுதிய கடிதம், 22/8/1970)
"எனக்கும் எனது குரு மஹராஜரைப் பிரிந்ததாக உணரவில்லை. நான் அவருடைய சேவையில் ஈடுபட்டிருக்கும்போது அவருடைய படங்கள் எனக்கு போதுமான பலத்தைத் தருகின்றன. அவருக்கு உடல் ரீதியாக சேவை செய்வதை விட ஆன்மீக குருவின் வார்த்தைக்கு சேவை செய்வதே முக்கியம்."
(ஸ்ரீல
பிரபுபாதர் ஷியாமசுந்தரருக்கு எழுதிய கடிதம், 19/7/1970)
உபதேசத்தைப் பின்பற்றுங்கள், உடலை அல்ல
“இதுவரை குருவுடனான தனிப்பட்ட தொடர்பைப் பொறுத்தவரை, நான் எனது குரு மஹராஜருடன் நான்கைந்து முறை மட்டுமே இருந்திருக்கிறேன், ஆனால் நான் ஒரு கணம் கூட அவரது சகவாசத்தை விட்டு விலகியதே இல்லை. நான் அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றுவதால், நான் ஒருபோதும் பிரிவை உணரவில்லை. குரு மஹாராஜருடன் தொடர்ந்து தனிப்பட்ட தொடர்பைக் கொண்டிருந்தேன், ஆனால் அவருடைய கட்டளைகளைப் புறக்கணிக்கும் எனது ஆன்மீக சகோதரர்கள் சிலர் இங்கே பாரதத்தில் உள்ளனர். இவர்கள் மன்னரின் மடியில் அமர்ந்திருக்கும் மூட்டைப் பூச்சியைப் போன்றவர்கள். அவர்கள் தனது நிலையை எண்ணி மிகவும் இறுமாப்பு கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் மன்னரைக் கடிப்பது மட்டும்தான். சேவையின் மூலம் இணைவதை விட தனிப்பட்ட சங்கம் அவ்வளவு முக்கியமல்ல.
(ஸ்ரீல பிரபுபாதர் ஷததன்யருக்கு எழுதிய கடிதம் 20/2/1972)
"ஆக ஆன்மீகத்தில், தோற்றம் மற்றும் மறைவு ஆகியவற்றில் எந்த வித்தியாசமும் இல்லை...ஆன்மீகத்தில், தோற்றம் அல்லது மறைவு போன்ற எந்த வித்தியாசமும் இல்லை. எனவே இது ஓம் விஷ்ணுபாத ஸ்ரீஸ்ரீமத் பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரர் அவர்களின் மறைந்த நாள் என்றாலும், வருந்துவதற்கு ஒன்றுமில்லை. நாம் பிரிவதை உணர்ந்தாலும்..."
(ஸ்ரீல பிரபுபாத உபன்யாசம், லாஸ் ஏஞ்சல்ஸ், 13/12/1973)
"எனவே எனது குரு மஹாராஜர் உங்கள் மீது மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் [...] அவர் இறந்து போய்விட்டார் என்பது அல்ல. அது ஆன்மீக புரிதலும் அல்ல [...] அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். தனியாக இருப்பதாக நான் ஒருபோதும் உணரவில்லை." (ஸ்ரீல பிரபுபாதர் உபன்யாசம், 2/3/1975, அட்லாண்டா)
"வபுவை விட வாணி தான் முக்கியம்."
(ஸ்ரீல பிரபுபாதர் துஸ்ட கிருஷ்ண தாஸருக்கு எழுதிய கடிதம், 14/12/1972)
"ஆமாம், உங்கள் மையம் மிகவும் சிறப்பாக செயல்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அனைத்து பக்தர்களும் இப்போது உங்களின் ஆன்மீக குருவின் வீற்றிருப்பை அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றி அவர் உடல் ரீதியாக இல்லை என்றாலும் பின்பற்றுகிறீர்கள், இதுவே சரியான உணர்வு." (ஸ்ரீல பிரபுபாதர் கரந்தரருக்கு எழுதிய கடிதம், 13/9/1970)
"ஆன்மீக குருவானவர் தனது வார்த்தைகளால் துன்பப்படுபவர்களின் இதயத்தில் ஊடுருவி, தெய்வீக ஞானத்தை புகுத்த முடியும், அதுவே ஜட வாழ்வின் நெருப்பை அணைக்க முடியும்.
(ஸ்ரீமத் பாகவதம்., 1.7.22, பொருளுரை)
"வாணி மற்றும் வபு என்ற இரண்டு வார்த்தைகள் உள்ளன. வாணி என்றால் வார்த்தைகள், வபுக் என்றால் இந்த ஜட உடல் [...] அதுவே உலகாயதமான உடல். வபு- விற்கு முடிவு உண்டு.. இது முடிவடையும். அதுதான் இயற்கை. ஆனால் நாம் ஆன்மீக குருவின் வார்த்தைகளான வாணியை கடைப்பிடித்தால், நாம் மிகவும் நிலையாக இருக்க முடியும். [...]மேலதிகாரிகளின் வார்த்தைகளுக்கும் உபதேசங்களுக்கு ஏற்ப நீங்கள் எப்பொழுதும் சிதையாமல் இருந்தால், நீங்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். இதுவே ஆன்மீக புரிதல்."
(ஸ்ரீல பிரபுபாதர் உபன்யாசம், 2/3/1975, அட்லாண்டா)
"எனவே பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அல்லது ஆன்மீக குருவின் ஒலி அதிர்வுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
(ஸ்ரீல பிரபுபாதர் உபன்யாசம், 18/8/1968, மாண்ட்ரீல்)
"நான் உன்னை விட்டு விலகி இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே. உடல் இருப்பு சாராம்சமில்லை; செய்தி (அல்லது கேட்டல்) மூலம் இருப்பது உண்மையான தொடுதல்."
(ஸ்ரீல பிரபுபாதர் சீடர்களுக்கு எழுதிய கடிதம், 2/8/1967)
"ஆன்மீக அறிவைப் பெறுவது எந்தவொரு உலகாயதமான நிலையினாலும் ஒருபோதும் தடுக்கப்படுவதில்லை
(ஸ்ரீமத் பாகவதம், 7.7.1. பொருளுரை)
ஒலியை ஏற்படுத்துபவர் வெளிப்படையாக இல்லாததால், தெய்வீக ஒலியின் ஆற்றல் ஒருபோதும் குறைந்த மதிப்பை பெறுவதில்லை.
(ஸ்ரீமத் பாகவதம். 2.9.8. பொருளுரை)
“சீடனும் ஆன்மீக குருவும் எப்போதும் பிரிக்கப்படுவதில்லை ஏனென்றால் சீடர் ஆன்மீக குருவின் வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றும் வரை ஆன்மீக குரு எப்போதும் சீடருடன் ஒன்றாக இருப்பார். இதுவே வாணி (வார்த்தைகள்) சகவாசம் என்று அழைக்கப்படுகிறது. உடல் இருப்பு வபு: என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீக குரு உடல் ரீதியாக இருக்கும் வரை, சீடர் ஆன்மீக குருவின் உடலுக்கு சேவை செய்ய வேண்டும், மேலும் ஆன்மீக குரு உடல் ரீதியாக இல்லாதபோது, சீடர் ஆன்மீக குருவின் உபதேசங்களுக்கு சேவை செய்ய வேண்டும்."
(ஸ்ரீமத் பாகவதம். 4.28.47, பொருளுரை)
"ஆன்மீக குருவுக்கு நேரடியாக சேவை செய்ய வாய்ப்பில்லை என்றால், ஒரு பக்தன் அவரது உபதேசங்களை நினைவில் வைத்து அவருக்கு சேவை செய்ய வேண்டும். ஆன்மீக குருவின் உபதேசங்களுக்கும் ஆன்மீக குருவிற்கும் வித்தியாசம் இல்லை. அவர் இல்லாத நிலையில், அவர் வார்த்தைகள் மூலம் வழிநடத்துவதை எண்ணி சீடன் பெருமை கொள்ளவேண்டும்."
(சைதன்ய சரிதாம்ருதம். ஆதி-லீலை 1.35, பொருளுரை)
"அவர் தனது தெய்வீக உபதேசங்களால் என்றென்றும் வாழ்கிறார், பின்பற்றுபவர் அவருடன் வாழ்கிறார்."
(ஸ்ரீமத் பாகவதம், முன்னுரை)
"நீங்கள் இன்னும் சப்தரீதியாக வாழும் போது, வைஷ்ணவர்கள் இறக்கிறார்கள் என்று கூறுபவர்களுக்கு தீமையே வந்து சேரும்"
(பக்திவினோத தாகூரர், வைஷ்ணவ ஆச்சாரியர்களின் பாடல்கள், 1972 பதிப்பு)
"ஆமாம், ஆன்மீக குருவின் பிரிவாற்றாமை பரவசம், அவரைச் சந்திப்பதை விடப் பெரிய பரவசமாகும்."
(ஜாதுராணிக்கு ஸ்ரீல பிரபுபாதர் கடிதம், 13/1/1968)
"பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் அவருடைய பிரதிநிதியும் ஒருவரே. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எவ்வாறு லட்சக்கணக்கான இடங்களில் ஒரே நேரத்தில் இருக்கின்றாரோ, அதேபோல், ஆன்மீக குருவும் சீடர் விரும்பும் இடத்திலெல்லாம் இருக்க முடியும். ஆன்மீக குரு என்பது தத்துவம், உடல் அல்ல. ஒளி பரப்புதல் மூலம் ஆயிரக்கணக்கான இடங்களில் தொலைக்காட்சியில் பார்க்க முடிவதைப் போல."
(ஸ்ரீல பிரபுபாதர் மாலதிக்கு எழுதிய கடிதம், 28/5/1968)
"பிரிவாற்றாமை உணர்வுடன் கிருஷ்ணருக்கும் ஆன்மீக குருவிற்கும் சேவை செய்வது சிறந்தது, சில நேரங்களில் நேரடி சேவை விஷயத்தில் ஆபத்து உள்ளது."
(ஸ்ரீல பிரபுபாதர் மதுசூதனருக்கு எழுதிய கடிதம், 30/12/1967)
புத்தகங்களே போதுமானது
|
பக்தர்:
ஸ்ரீல பிரபுபாதர்: |
"ஸ்ரீல பிரபுபாதரே, நீங்கள் எங்களுடன் இல்லாதபோது, உபதேசங்களைப் பெறுவது எப்படி எடுத்துக்காட்டாக, கேள்விகள் எழும்போது?"
"நல்லது, கேள்விகள்... பதில்கள் எனது புத்தகங்களில் உள்ளன" |
(காலை நடைப்பயிற்சி, 13/5/1973, லாஸ் ஏஞ்சல்ஸ்)
"எனவே உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை எனது புத்தகங்களை முழுமையாகப் படிக்க பயன்படுத்துங்கள். உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்."
(ஸ்ரீல பிரபுபாதர் உபேந்திரருக்கு எழுதிய கடிதம், 7/1/1976)
"கோயிலுக்குச் செல்ல முடிந்தால், கோயிலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவரால் பரமபுருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நேரடியாக பக்தி சேவை செய்ய வாய்ப்பளிக்கும் இடமே கோயில். இதனுடன் நீங்கள் செய்ய வேண்டியது எப்பொழுதும் எனது புத்தகங்களை தினமும் படியுங்கள். அவ்வாறாக, உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். மேலும் கிருஷ்ண உணர்வின் உறுதியான அடித்தளத்தை நீங்கள் பெறுவீர்கள். இந்த வழியில் உங்கள் வாழ்க்கை சரியானதாக இருக்கும்."
(ஹூகோ சேலமனுக்கு கடிதம், நவம்பர் 22, 1974)
"நீங்கள் ஒவ்வொருவரும் எனது புத்தகங்களை குறைந்தது இரண்டு முறையாவது காலையிலும் மாலையிலும் தவறாமல் படிக்க வேண்டும், இவ்விதமாக, எல்லா கேள்விகளுக்கும் தானாகவே பதிலளிக்கப்படும்."
(ஸ்ரீல பிரபுபாதர் ரந்தீருக்கு எழுதிய கடிதம், 24/01/1970)
"எனது புத்தகங்களில் கிருஷ்ண உணர்வின் தத்துவம் முழுமையாக விளக்கப்பட்டுள்ளது, எனவே உங்களுக்குப் புரியாதது ஏதேனும் இருந்தால், நீங்கள் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். தினமும் படிப்பதன் மூலம் அறிவு உங்களுக்கு வெளிப்படும், இந்த செயல்முறையின் மூலம் உங்கள் ஆன்மீக வாழ்க்கை விருத்தியடையும்."
(ஸ்ரீல பிரபுபாதர் பஹுரூப தாசாவுக்கு எழுதிய கடிதம், 22/11/1974)
|
ஸ்ரீல பிரபுபாதர்:
ரேவதிநந்தனர்:
ஸ்ரீல பிரபுபாதர்:
ரேவதிநந்தனர்:
ஸ்ரீல பிரபுபாதர்: |
"ஒரு தூய பக்தருடன் ஒரு கணம் கூடுவது கூட எல்லாவிதத்திலும் வெற்றியே! [...]
"ஒரு தூய பக்தரின் வார்த்தைகளைப் படிப்பதும்கூட அதற்குப் பொருந்துமா?"
"ஆமாம்."
"உங்கள் புத்தகங்களோடு ஒரு சிறிய தொடர்பு கூட அதே விளைவை ஏற்படுத்துமா?"
"விளைவு, நிச்சயமாக, அதற்கு இரண்டும் தேவை. ஒருவர் அதை எடுக்க மிகவும் ஆர்வமாகவும் இருக்க வேண்டும்." |
(அறை உரையாடல், 13/12/1970)
|
பரமஹம்சர்:
ஸ்ரீல பிரபுபாதர்:
|
"எனது கேள்வி என்னவென்றால், ஒரு தூய பக்தன், பகவத் கீதையைப் பற்றிக் கூறும்போது, அவரை உடல் ரீதியாகப் பார்க்காத ஒருவர், ஆனால் அவர்தனது பொருளுரை, விளக்கத்துடன் தொடர்பு கொள்கிறார். இதுவும் ஒன்றா?”
"ஆம், நீங்கள் பகவத் கீதையைப் படிப்பதன் மூலம் கிருஷ்ணருடன் பழகலாம். மேலும் இந்த சாதுக்கள், அவர்கள் தங்கள் விளக்கங்களையும் கருத்துக்களையும் அளித்துள்ளனர். அதனால் சிரமம் எங்கே?" |
(காலை உலா, 11/6/1974, பாரிஸ்)
"அதனால் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. நான் பேச வேண்டியதை என் புத்தகங்களில் பேசிவிட்டேன். இப்போது நீங்கள் அதைப் புரிந்து கொண்டு உங்கள் முயற்சியைத் தொடர்ந்து செய்யுங்கள். நான் இருக்கிறேனா இல்லையா என்பது முக்கியமில்லை."
(ஸ்ரீல பிரபுபாதர் வருகை உரையாடல், 17/5/1977, விருந்தாவனம்)
ஸ்ரீல பிரபுபாதர் நமது நித்திய குரு
|
நிருபர்:
ஸ்ரீல பிரபுபாதர்:
பக்தர்கள்:
ஸ்ரீல பிரபுபாதர்: |
"நீங்கள் இறந்தவுடன் அமெரிக்காவிலுள்ள இயக்கத்திற்கு என்ன நடக்கும்?"
"நான் ஒருபோதும் இறக்க மாட்டேன்"
"ஜெய ஹரிபோல்!" (சிரிப்பொலி )
"நான் எனது புத்தகங்களில் வாழ்வேன், நீங்கள் பயன்படுத்துவீர்கள்." |
(ஸ்ரீல பிரபுபாதர் செய்தியாளர் சந்திப்பு, 16/7/75, சான் பிரான்சிஸ்கோ, வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது)
|
இந்தியப் பெண்மணி:
ஸ்ரீல பிரபுபாதர்: |
“...ஆன்மீக குரு என்பவர் இறந்த பிறகும் வழிகாட்டுகிறாரா?”
"ஆம், ஆம். கிருஷ்ணர் நம்மை எப்படி வழிநடத்துகிறாரோ, அதுபோலவே, ஆன்மீக குருவும் வழிகாட்டுவார்." |
(ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசம், 3/9/1971, லண்டன்)
"சீடருக்கும் ஆன்மீக குருவிற்கும் இடையிலான நித்திய பந்தம் அவர் கேட்ட முதல் நாளிலிருந்து தொடங்குகிறது."
(ஜதுராணிக்கு ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 4/9/1972)
"ஒரு தூய பக்தனின் செல்வாக்கு எப்படிப்பட்டது என்றால், யாரேனும் ஒருவர், சிறிதளவு நம்பிக்கையுடன் சகவாசம் கொண்டால் கூட, அவர் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் போன்ற அதிகாரப்பூர்வ நூல்களிலிருந்து பகவானைப் பற்றி கேட்கும் வாய்ப்பைப் பெறுகிறார். [...] இதுவே தூய பக்தர்களுடன் இணைவதற்கான முதல் நிலை"
(பக்தி ரஸாம்ருத சிந்து, அத்தியாயம் 19. [1977 க்கு முந்தைய பதிப்பு.])
"இவை சாதாரண புத்தகங்கள் அல்ல. இது ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஜபம். யாரேனும் அதனைப் படித்தாரென்றால், அவர் கேட்கிறார் என்று அர்த்தம்"
(ரூபானுக தாசாவுக்கு எழுதிய கடிதம், 19/10/1974)
"பரம்பரை அமைப்பைப் பொறுத்தவரை: பெரிய இடைவெளிகளால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. [...] நாம் சமீபத்திய ஆச்சாரியரைத் தேர்ந்தெடுத்து, அவரைப் பின்பற்ற வேண்டும்."
(தயானந்தாவுக்குக் கடிதம், 12/4/1968)
|
நாராயணர்:
ஸ்ரீல பிரபுபாதர்:
நாராயணர்:
ஸ்ரீல பிரபுபாதர்:
சுதாமா:
ஸ்ரீல பிரபுபாதர்:
ஜயாத்வைதா:
ஸ்ரீல பிரபுபாதர்:
சுதாமா:
ஸ்ரீல பிரபுபாதர்:
சுதாமா:
ஸ்ரீல பிரபுபாதர்: |
"எனவே, உங்களைப் பார்க்கவோ, உங்களுடன் பேசவோ வாய்ப்பில்லாத சீடர்கள்…
"அதுதான் அவர் வாணி மற்றும் வபு மூலம் பேசிக் கொண்டிருந்தாரே, நீங்கள் அவரது உடலைப் பார்க்காவிட்டாலும், அவரது வார்த்தையான வாணியை எடுத்துக் கொள்ளுங்கள்."
"ஆனால் அவர்கள் உங்களைப் மகிழ்விக்கிறார்கள் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும், ஸ்ரீல பிரபுபாதா?"
"நீங்கள் உண்மையில் குருவின் வார்த்தைகளைப் பின்பற்றினால், அவர் மகிழ்ச்சியடைகிறார் என்று அர்த்தம். நீங்கள் பின்பற்றவில்லை என்றால், அவர் எப்படி மகிழ்ச்சியடைவார்?"
"அதுமட்டுமின்றி, உமது கருணை எங்கும் பரவி உள்ளது, நாங்கள் அதை பயன்படுத்திக்கொண்டால், ஒரு முறை தாங்கள் சொன்னதுபோல, அதன் பலனை நாங்கள் உணர்வோம்.
"ஆம்"
"மேலும் குரு சொல்வதில் நமக்கு நம்பிக்கை இருந்தால், தாமாகவே நாம் அதை செய்வோம்."
"ஆமாம்! என் குரு மஹாராஜா 1936ல் மறைந்தார், அதன் பிறகு முப்பது வருடங்கள் கழித்து 1965ல் இந்த இயக்கத்தைத் தொடங்கினேன்? எனக்கு குருவின் கருணை கிடைக்கிறது. இதுவே வாணி. வாணியைப் பின்பற்றினால் குரு கூட உடல் ரீதியாக இல்லையென்றாலும் நீங்கள் உதவியைப் பெறுகிறீர்கள்"
"எனவே சீடன் குருவின் அறிவுறுத்தலைப் பின்பற்றும் வரை பிரிவு என்ற கேள்விக்கே இடமில்லை."
"இல்லை. சக்ஷு தான் திலோ ஜெய். அது என்ன, அடுத்தது?"
"சக்ஷு தான் திலோ ஜெய், ஜன்மே ஜன்மே பிரபு சே."
"ஜன்மே ஜன்மே பிரபு ஸேய். அப்படியென்றால் எங்கே பிரிவு? யார் உங்கள் கண்களைத் திறந்தாரோ, அவரே ஒவ்வொரு பிறவியிலும் உங்கள் பிரபு ஆவார்" |
(காலை நடை, 21/7/1975, சான் பிரான்சிஸ்கோ)
|
மதுத்விசர்:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ணர்:
ஸ்ரீல பிரபுபாதர்:
மதுத்விசர் :
ஸ்ரீல பிரபுபாதர்: |
"ஒரு கிறிஸ்தவர், ஆன்மீக குருவின் உதவியின்றி, இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நம்பி, அவருடைய போதனைகளைப் பின்பற்ற முயற்சிப்பதன் மூலம் ஆன்மீக வானத்தை அடைய ஏதாவது வழி இருக்கிறதா?"
"எனக்கு சரியாக கேட்கவில்லை
"இந்த காலத்தில் ஒரு கிறிஸ்தவர், ஆன்மீக குரு இல்லாமல், பைபிளைப் படிப்பதன் மூலம் மட்டுமே, இயேசுவின் வார்த்தைகளைப் பின்பற்றுவதன் மூலமும், இந்த …அடைய முடியுமா?"
"நீங்கள் பைபிளைப் படிக்கும்போது, ஆன்மீக குருவைப் பின்பற்றுகிறீர்கள். இல்லாமல் என்று எப்படிச் சொல்ல முடியும்? பைபிளைப் படிக்கும்போதே, நீங்கள் இயேசு கிறிஸ்துவின் அறிவுறுத்தலைப் பின்பற்றுகிறீர்கள் என்று அர்த்தம், அதாவது நீங்கள் ஆன்மீக குருவைப் பின்பற்றுகிறீர்கள், எனவே ஆன்மீக குரு இல்லாமல் போகிறார் என்ற வாய்ப்பு எங்கே?"
"நான் வாழும் ஆன்மீக குருவைக் குறிப்பிடுகிறேன்.”
"ஆன்மிக குருவானவர் வாழவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆன்மீக குரு நித்தியமானர். எனவே உங்கள் கேள்வி ஆன்மீக குரு இல்லாமல் என்பதாகும். ஆன்மீக குரு இல்லாமல் உங்களால், உங்கள் வாழ்க்கையின் எந்த நிலையிலும் இருக்க முடியாது. நீங்கள் இந்த ஆன்மீக குரு அல்லது அந்த ஆன்மீக குருவை என ஏற்றுக்கொள்ளலாம். அது வேறு விஷயம், ஆனால் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். நீங்கள் பைபிளைப் படிக்கும்போது, சில பாதிரியார் அல்லது சில இயேசு கிறிஸ்துவின் வரிசையில் உள்ள பிரதிநிதித்துவப்படுத்தும் ஆன்மீக குருவைப் பின்பற்றுகிறீர்கள் என்று அர்த்தம். " |
(ஸ்ரீல பிரபுபாதர் உபன்யாசம், 2/10/1968, சியாட்டில், வலியுறுத்துகிறது)
"அவரது சீடர்கள் அனைவரும் ஆன்மீக உலகிற்கு ஏற்றப்படும் வரை ஆன்மீக குருவானவர் ஜடப் பிரபஞ்சத்தில்தான் இருப்பார் என்பது உண்மையா என்று நீங்கள் கேட்டீர்கள். அதற்கான பதில் ஆம், இதுதான் விதி."
(ஸ்ரீல பிரபுபாதர் ஜெயபதாகருக்கு எழுதிய கடிதம், 11/7/1969)
பிற்சேர்க்கைகள்


இக்கடிதத்திலுள்ள உண்மையான விஷயம்
இஸ்கான்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்
ஸ்தாபக ஆச்சாரியர்
: தெய்வத்திரு அ . ச . பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர்
ஜூலை 9, 1977
அனைத்து
G.B.C மற்றும் கோயில் நிர்வாகிகளுக்கு
பிரிய மஹாராஜர்கள் மற்றும் பிரபுக்களுக்கு,
தங்கள் பாதங்களில் தயவுசெய்து என்னுடைய பணிவான வந்தனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். சமீபத்தில் அனைத்து ஜி.பி.சி உறுப்பினர்களும் விருந்தாவனத்தில் தெய்வீக திருவுடன் இருந்தபோது, ஸ்ரீல பிரபுபாதர், முதல் தீக்ஷை மற்றும் இரண்டாவது தீக்ஷை ஆகிய இரண்டு தீக்ஷைகளையும் நிகழ்த்தும் நோக்கத்திற்காக விரைவில் அவர் தனது மூத்த சீடர்கள் சிலரை "ரித்விக்"- அதாவது ஆச்சாரியரின் பிரதிநிதியாக செயல்பட நியமிப்பார் என்று குறிப்பிட்டிருந்தார். தெய்வீக திருவானவர் இதுவரை அந்தத் தகுதியில் செயல்படும் பதினொரு சீடர்களின் பட்டியலை கொடுத்துள்ளார்:
அருள்திரு கீர்த்தனானந்த ஸ்வாமி
அருள்திரு சத்ஸ்வரூப தாஸ் கோஸ்வாமி
அருள்திரு ஜெயபதக ஸ்வாமி
அருள்திரு தமால் கிருஷ்ண கோஸ்வாமி
அருள்திரு ஹ்ருதயானந்த கோஸ்வாமி
அருள்திரு பாவானந்த கோஸ்வாமி
அருள்திரு ஹம்சதுத்த ஸ்வாமி
அருள்திரு ராமேஸ்வர ஸ்வாமி
அருள்திரு ஹரிகேஷ ஸ்வாமி
திருவாளர் பகவான் தாஸ் அதிகாரி
திருவாளர் ஜெயதீர்த்த தாஸ் அதிகாரி
முன்பு கோயில் நிர்வாகிகள்,
குறிப்பிட்ட பக்தர்களின் தீக்ஷையை பரிந்துரைத்து ஸ்ரீல பிரபுபாதருக்கு கடிதம் எழுதியிருந்தார்கள்.
இப்போது ஸ்ரீல பிரபுபாதரால் குறிப்பிடப்பட்ட இந்த பிரதிநிதிகளும் கோயில் நிர்வாகிகளிடம்,
இதன்பிறகு முதல் மற்றும் இரண்டாம் தீக்ஷைக்கான பரிந்துரைகளை அவரவர்கள் அருகில் அமைந்துள்ள
கோயில்களில் இருக்கும் இந்த பதினொன்று பிரதிநிதிகளிடம் அனுப்பலாம். அந்தப் பரிந்துரைகளை
கருத்திற்கொண்டு, இந்த பிரதிநிதிகள், ஆன்மீக பெயர்களைக் கொடுத்தல், காயத்ரி நூலில்
ஜெபம் செய்தல் என எவ்வாறு ஸ்ரீல பிரபுபாதர் செய்தாரோ, அதேபோல செய்து ஸ்ரீல பிரபுபாதருடைய
தீக்ஷை சீடர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். இவ்விதம் புதிதாக தீக்ஷை பெறும் பக்தர்கள்
தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதரின் சீடர்களாவார்கள். மேற்கண்ட பதினோறு
மூத்த பக்தர்களும் அவருடைய பிரதிநிதிகளாக செயல்படுவார்கள். இந்த பிரதிநிதிகளிடமிருந்து
ஆன்மீக பெயர்களையோ அல்லது பூணூலோ கடிதத்தின் வாயிலாக கோயில் நிர்வாகிகள் பெற்றபிறகு,
முன்புபோலவே கோயிலில் யாகத்தை செய்யலாம். இவ்விதம் புதிதாக தீக்ஷை பெற்ற சீடர்களின்
பெயர்கள், அவரது பிரதிநிதிகளால் ஸ்ரீல பிரபுபாதரின் சார்பாக அவன் அல்லது அவளை ஏற்றுக்கொண்டு,
தெய்வத்திருவின் தீக்ஷை பெற்ற சீடர்களின் புத்தகப் பட்டியலில் சேர்க்கப் படுவார்கள்.
இது தங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம்.
தங்கள் சேவகன்,
(கையொப்பம் மூல ஆவணத்தில் உள்ளது)
தமால் கிருஷ்ண கோஸ்வாமி
ஸ்ரீல பிரபுபாதரின் செயலாளர்
ஒப்புதல் அளிக்கப்பட்டது

(ஸ்ரீல பிரபுபாதரின் மூல கையொப்பத்திலிருந்து )

இக்கடிதத்தின் உண்மையான விஷயம்
இஸ்கான்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்
ஸ்தாபக ஆச்சாரியர்
: தெய்வத்திரு அ . ச . பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர்
ஜூலை 10, 1977
என் பிரிய ஹம்ஸதுத்த மஹாராஜருக்கு,
தங்கள் பாதங்களில் எனது பணிவான வணக்கங்களை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள். 1977 ஜூலை 4 மற்றும் ஜூலை 5-ஆம் தேதியிட்ட தங்கள் கடிதத்தை ஸ்ரீல பிரபுபாதர் பெற்றுவிட்டார். மேலும் அதற்கு பதிலளிக்கும்படி எனக்கு உபதேசித்தார்.
தாங்கள் சிலோனில் ஒருங்கிணைத்த அனைத்தையும் கேட்டு ஸ்ரீல பிரபுபாதர் மிக்க மகிழ்ச்சியடைந்தார். தங்கள் பிரச்சாரத்தின் தாக்கத்தினால் மக்கள் பலர் ஆர்வத்துடன் எடுத்துக் கொள்வதே தங்கள் பிரச்சாரத்தின் தாக்கத்திற்கான நிரூபணமாகும். தெய்வத்திரு கூறியதாவது, “நீங்கள் ஒரு தகுந்த நபர் ஆதலால் யார்யாரெல்லாம் தீக்ஷைக்கு தயாராக இருக்கிறார்களோ நீங்கள் அவர்களுக்கு தீக்ஷை கொடுங்கள். நான் உங்களை பதினோரு ரித்விக் அல்லது ஆச்சாரியரின் பிரதிநிதிகளில் ஒருவராக, என் சார்பில் முதல் மற்றும் இரண்டாம் தீக்ஷையை கொடுக்க தேர்ந்தெடுத்துள்ளேன் ” (ஒரு செய்திக் கடிதமானது எல்லா கோயில் தலைவர்கள் மற்றும் GBC-க்கு தெய்வத்திருவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பதினோரு பிரதிநிதிகளின் பெயர்களைக் கொண்ட பட்டியலை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யார்யாரெல்லாம் தீக்ஷை பெறுகிறார்களோ அவர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்கள். யாராவது இவ்விதமாக தீக்ஷைக்கு தகுதியுள்ளவர்கள் என்று நீங்கள் கருதினால் அவர்களுடைய பெயர்களை ஸ்ரீல பிரபுபாதரின் சிஷ்யர்கள் பட்டியல் புத்தகத்தில் சேர்க்க அனுப்பி வைக்க வேண்டும். இவ்விதமாக கோயில் தலைவர்கள் தீக்ஷைக்கான பரிந்துரைகளை அவர்களுக்கு அருகிலுள்ள பிரதிநிதிகளுக்கு அனுப்பி வைத்து, பின்பு அவர்கள் ஆன்மீக பெயர்களை கொடுத்தல் மற்றும் காயத்ரி பூணூலில் ஜெபம் செய்தல் போன்றவற்றை எப்படி பிரபுபாதர் செய்தாரோ அவ்விதமாக செய்வார்கள்.)
தாங்கள் உள்ளூர் மக்களை ஒன்றிணைத்து நடத்திய வெற்றிகரமாக நிகழ்ச்சியில் 2000 மக்கள் கலந்து கொண்டதை கேள்விப்பட்ட ஸ்ரீல பிரபுபாதர் மிகவும் புன்னகைத்தார். நீங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் அறிமுகப்படுத்திய முழு விருந்து நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட அவர் கூறியதாவது, “நீங்கள் ஒரு சிறந்த சமையல்காரர், ஆகவே இப்போது எப்படி சமைப்பது என்பதை நான் எப்படி உனக்கு கற்றுக்கொடுத்தேனோ அவ்வாறே மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பாயாக.”
புத்தக அச்சிடுதல் மெதுவாக செல்வது தொடர்பாக, தெய்வத்திரு கூறியதாவது, “கவலைப்பட வேண்டாம். செல்வது நிச்சயமாக செல்லட்டும். மெதுவாக செல்வது விஷயமல்ல”. நீங்கள் குறிப்பிட்ட சிங்கள மொழிபெயர்ப்பு பற்றி பிரதியும்ன பிரபுவிடம் நான் விசாரித்தேன். அவர் கூறியதாவது, “ஹரே கிருஷ்ணா மஹாமந்திரம் ஜெபம் செய்வது” பற்றி சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அது பம்பாயில் உள்ள அவருடைய பெட்டியில் உள்ளதாம். அது தங்களை சீக்கிரம் வந்தடைய முயற்சிக்கிறோம். கோபால கிருஷ்ணர் ஏதேனும் தமிழ் மொழிபெயர்ப்பை வைத்துள்ளாரா என்பது தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு வைத்திருந்தால் அவரை அடுத்த பத்து நாட்களுக்குள் சந்திக்கிறேன். மேலும் உங்களிடம் அனுப்பிவைக்குமாறு கூறுகிறேன். நீங்களும் அவருக்கு நேரடியாக எழுதலாம். ப்ரத்யும்னர் கூறியது என்னவென்றால் புதிய மொழிபெயர்ப்பானது ஒரே ஒரு பக்கம் மட்டும் கொண்டிருப்பதனால் சீக்கிரமாகவே முடிந்துவிடும் என்று.
நீங்கள் சில சிலோன் பக்தர்களை மாயாப்பூருக்கு கொண்டுவர முயற்சிக்கிறீர்கள் என்பதை அறிந்த ஸ்ரீல பிரபுபாதர் மிகவும் மகிழ்ச்சியடைந்து கூறியதாவது, “ஓ! அது மிகவும் நன்று”. பக்திசித்தாந்தருடைய சீடர்கள், ஒரு நபர் ஒரு எலியை சாப்பிட்டதை கண்டது உண்மையா இல்லையா என்ற கதையானது அவருக்கு தெரியாது. ஸ்ரீலங்காவை பொறுத்தவரை இதுதான் நிலை என்று சில மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தை இந்த நேரத்தில் பொதுப்படையாக உரையாட வேண்டாமென்று ஸ்ரீல பிரபுபாதர் தெரிவித்துள்ளார். ஹரி சௌரியிடமிருந்து நெய்யை வாங்கிக்கொள்ளுமாறு ஸ்ரீல பிரபுபாதர் பரிந்துரைத்திருக்கிறார். ஹரி சௌரி இந்தியாவிற்கு அனுப்பப்படும் நெய்யில் ஐந்தில் ஒரு பங்கை தாங்கள் எடுத்துக்கொள்ளுமாறு அவர் கூறினார். நீங்கள் ஸ்வாமி அல்லது கோஸ்வாமி என்ற பெயரை பயன்படுத்துவதை பொறுத்தவரை, ஸ்ரீல பிரபுபாதர் கூறியதாவது , ஏதேனும் ஒன்றை பிடித்துக் கொள்ளவும். அதில் ஸ்வாமி என்பது சிறந்தது.
தங்கள் சேவகன்
தமால் கிருஷ்ண கோஸ்வாமி
(கையொப்பம் மூல ஆவணத்தில் உள்ளது)
ஸ்ரீல பிரபுபாதரின் செயலாளர்
அருள்திரு ஹம்ஸதுத்த சுவாமி
இஸ்கான் கொழும்பு


இக்கடிதத்தின் உண்மையான விஷயம்
இஸ்கான்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்
ஸ்தாபக ஆச்சாரியர்
: தெய்வத்திரு அ . ச . பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர்
ஜூலை 11, 1977
பிரிய கீர்த்தனானந்த மஹாராஜருக்கு,
தங்கள் பாதங்களில் எனது பணிவான வணக்கங்களை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள். தெய்வத்திரு
ஸ்ரீல பிரபுபாதர் அவர்கள் சமீபத்திய இதழான வ்ரஜவாசி உணர்வு பாகம் IV, எண் 4.(
Brijabasi Spirit, Vol.IV, No.4) அதனைப் பெற்று மிக்க மகிழ்ச்சியடைந்தார். காலாத்ரி
அவர்கள் யாகம் செய்யும்படியான அட்டைப் படத்தை பார்த்து அவர் கூறியதாவது, “அவருடைய முகத்தைப்
பாருங்கள், எப்படிப்பட்ட பக்தனாக இருக்கிறார், எல்லாவற்றிலும் நிபுணராக இருக்கிறார்”.
ஸ்ரீல பிரபுபாதர் முதல் பக்கத்தை திறந்தபோது, அவருடைய கண்கள் ராதா விருந்தாவன சந்திரரின்
படத்தின் மீதே இருந்தது. “விருந்தாவன பிஹாரி எவ்வளவு அழகாக இருக்கிறார்”, என்று கூறினார்.
எங்கெங்கெல்லாம் விருந்தாவன சந்திரர் இருக்கின்றாரோ அங்கு பயமே கிடையாது. அந்த இதழின்(magazine)
மொத்த பகுதியையும் கண்டு மகிழ்ந்த பின் அவர் கூறியதாவது, “அது அவர்களுடைய பிரசுரத்திலேயே
அச்சிடப்பட்டது. அது ஒரு சிறந்த பிரசுரம்”. இளம் பக்த சிறுவனால் எழுதப்பட்ட “நான் எவ்வாறு
மாற்றமடைந்துள்ளேன்” என்ற கட்டுரையை தெய்வத்திரு அவர்கள் நன்கு பாராட்டினார். அவனுடைய
கதையைக் கேட்டபிறகு ஸ்ரீல பிரபுபாதர் மிகவும் பரிதாபம் கொண்டு கூறியதாவது, “இந்த சிறுவனைப்
போல ஒரு மனிதன் திருந்துவானெனில் இந்த இயக்க வெற்றியடைந்தது”. அங்கே நல்ல முன்னேற்றமும்
நல்ல நம்பிக்கையும் இருக்கிறது. நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த இயக்கத்தை மேலும்
முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள். இப்போது இது மேலும் தொடரும் என்று நான் உறுதிப்படுத்துகிறேன்.
அந்த இதழை (Magazine) படித்து கொண்டிருக்கையில், ஸ்ரீல பிரபுபாதர் இஷ்ட கோஷ்டி என்ற
பக்கத்தில் உங்களுடைய படத்தைப் பார்த்தார். நீங்கள் இந்த கிருஷ்ண உணர்வை எந்த அளவிற்கு
புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை நீண்ட நேரம் பிரியமாகப் பார்த்து ஸ்ரீல பிரபுபாதர்
தன்னுடைய ஆழ்ந்த பாராட்டுதலைத் தெரிவித்தார்.
எல்லா கோயில் தலைவர்களுக்கும் GBC-க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தீக்ஷை வழிமுறையை விளக்கும் கடிதமானது உங்களுக்கும் விரைவில் கிடைக்கும். ஸ்ரீல பிரபுபாதர் தனது சார்பாக புதிய பக்தர்களுக்கு தீக்ஷை அளிக்கும் பதினோரு பிரதிநிதிகளை நியமித்துள்ளார். நீங்கள் அந்த கடிதத்திற்கு காத்திருங்கள் (அந்த மூலமான கடிதமானது ராமேஸ்வர மஹாராஜருக்கு பிரதியிடுவற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது), அதன்பின்னர் நீங்கள் உங்களின் முந்தைய கடிதத்தில் பரிந்துரைத்த நபர்கள் அனைவரும் தீக்ஷை அளிக்கப்படுவார்கள்.
தெய்வத்திரு அவர்கள் தனது ஆரோக்கியத்தை சரியாக பராமரிக்கிறார். மேலும் ஆச்சரியப்படும் வகையில், அவருடைய புத்தக விநியோகம் இரட்டிப்பான காரணத்தால், அவருடைய மொழிபெயர்ப்பு பணிகளை இரட்டிப்பாக்கியுள்ளார். இது தங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
தங்கள் சேவகன்
(கையொப்பம் மூல ஆவணத்தில் உள்ளது)
தமால் கிருஷ்ண கோஸ்வாமி
ஸ்ரீல பிரபுபாதரின் செயலாளர்
அருள்திரு கீர்த்தனானந்த சுவாமி
இஸ்கான் புதிய விருந்தாவனம்

BBT
THE BHAKTIVEDANTA BOOK TRUST ( பக்தி வேதாந்த புத்தக அறக்கட்டளை )
ஸ்தாபக ஆச்சாரியர் : தெய்வத்திரு அ . ச . பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர்
ஜூலை 21, 1977
எல்லா புகழும் ஸ்ரீ குரு மற்றும் கௌரங்கருக்கே!
பிரிய GBC ஆன்மீக சகோதர பிரபுக்களுக்கு,
தங்கள் பாத தூளிகளில் எனது மிக பணிவான வணக்கங்களை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதருக்கே! நான் தமால் கிருஷ்ணா மஹாராஜரிடமிருந்து சில கடிதங்களை இப்போதுதான் பெற்றேன். மேலும் இதனுடன் இரண்டு ஆவணங்களையும் இணைத்துள்ளேன் . 1) ஸ்ரீல பிரபுபாதரின் கடைசி உயிலின் கடைசி பதிப்பு மற்றும் 2) தெய்வத்திருவிற்காக தீக்ஷையை நடத்தும் ஸ்ரீல பிரபுபாதரின் முதல் கட்ட சீடர்களின் பட்டியல். இந்தப் பட்டியல் அனைத்து மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமாலின் கடிதத்திலிருந்து, உடல்நலக்குறைவு இருந்தாலும் பிரபுபாதர் உற்சாகமாக, முழு வேகத்துடனும் மொழிபெயர்ப்பு காரியங்களில் ஈடுபடுகிறார் எனத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக பல்வேறு GBC நபர்கள் மற்றும் கோயில்களிலிருந்து அவர்களின் பிரச்சார பலன்களின் அறிக்கைகள் வரும்போதும், பொதுவான நற்செய்திகள் போன்றவை. மேலும் தமால் அழுத்தமாக கூறுவதுபடி நாம் அனைவரும் அத்தகைய அறிக்கைகளை ஸ்ரீல பிரபுபாதர் அடிக்கடி கேட்பதனால், “என்ன செய்தி” அனுப்ப வேண்டும். சிலோனிலிருந்து ஹம்ஸதுத்த ஸ்வாமியின் ஊக்கப்படுத்தும் பிரச்சார அறிக்கையை கண்டபின் ஸ்ரீல பிரபுபாதரின் தன்னிகரற்ற மனோபாவனைக்கு உதாரணமாக காட்டப்பட்டுள்ளது. ஸ்ரீல பிரபுபாதர் கூறினார், நான் சிலோனுக்கு செல்லவேண்டும், என்னால் போக முடியும். நான் எனது இருக்கையில் இருந்துகொண்டே என்னால் போக முடியும். கடினம் என்பது கற்பனை மட்டுமே. வீக்கம் என்பது தோலுக்கு மட்டுமே, ஆத்மாவிற்கு அல்ல.
எல்லாவற்றையும் விட, அவருடைய அந்தரங்க சேவையை செய்வதற்காக GBC உறுப்பினர்கள் மாதத்திற்கொருமுறை வரவேண்டும் என்ற நியாயமான அவசியத்தை தமால் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீல பிரபுபாதர் சமீபத்தில் கூறியபடி, இனி வழக்கமாக அவரை சந்திக்க வருவது மிக முக்கியமானது, எல்லா GBC உறுப்பினர்களும் இதனைச் செய்ய ஆர்வப்பட வேண்டும். அது முக்கியமான வேலைக்காக மட்டுமல்ல, அது ஸ்ரீல பிரபுபாதர் நிர்வாக விஷயங்களிலிருந்து ஓய்வுபெறுவதற்கும், அதோடு ஸ்ரீல பிரபுபாதரை தனிப்பட்ட முறையில் சேவை செய்வதையும் ஈடுபடுத்துவதோடு, அவரிடம் செய்திகளை வழங்குவதற்கும் மற்றும் அமிர்தமான சேவைகளை செய்வதற்கும், அவருடைய தனிப்பட்ட சகவாசத்தை வழக்கத்தை விட அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். 23 GBC உறுப்பினர்களுக்கும் மேலாக இருப்பதனால், ஒருமாதம் கூட இடைவிடாமல் இருக்கவேண்டும்.
ஒரு கடைசி செய்தி அறிக்கை என்னவெனில் ஸ்ரீல பிரபுபாதர் வட இந்தியாவிற்கு(டெல்லி உட்பட ஆனால் விருந்தாவனம் அல்ல) அருள்திரு பக்தி சைதன்ய ஸ்வாமி அவர்களை புதிய GBC அங்கத்தினராக நியமித்துள்ளார். தமால் கிருஷ்ண மஹாராஜர் கூறியது என்னவெனில் அவர் பஞ்சாபில் தன்னிகரற்ற பிரச்சார சேவையில் ஈடுபட்டிருப்பதன் காரணமாக அவரை ஊக்கப் படுத்தும் வகையில் அவரை நியமித்துள்ளார் என்று.
ஜெய், இது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் என நம்புகிறேன். மேலும் முழுமையாக பிரச்சாரத்தில் மூழ்கி ஸ்ரீல பிரபுபாதரை முழுமையாக திருப்திபடுத்துவோமாக.
தங்களின் மிக தாழ்ந்த சேவகன்
ராமேஸ்வர தாஸ ஸ்வாமி


இக்கடிதத்தின் உண்மையான விஷயம்
(ஸ்ரீல பிரபுபாதரின் சார்பாக தமால கிருஷ்ண கோஸ்வாமியிடமிருந்து ஹம்ஸதுத்தாவிற்கு வந்த கடிதம் )
இஸ்கான்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்
ஸ்தாபக ஆச்சாரியர்
: தெய்வத்திரு அ . ச . பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர்
ஜூலை 31, 1977
என் பிரிய ஹம்ஸதுத்த மஹாராஜருக்கு,
தங்கள் பாதங்களில் எனது பணிவான வணக்கங்களை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள். 1977, ஜூலை 25-ஆம் தேதியிட்ட தங்கள் கடிதத்திற்கு நன்றி கூறும்படி ஸ்ரீல பிரபுபாதரால் நான் அறிவுறுத்தப்பட்டேன்.
அவருடைய கருணைக்கு பாத்திரமாகும்படியாக தங்களை ஏன் அவர் தேர்ந்தெடுத்தார் என்று தங்களுக்கு தெரியவில்லை என்று ஸ்ரீல பிரபுபாதருக்கு தாங்கள் கடிதம் எழுதியிருந்தீர்கள். தெய்வத்திரு உடனடியாக பதில்கூறியதாவது, “நீ என்னுடைய சிரத்தையாக சேவகன் என்பதுதான். நீ உன்னுடைய அழகான மற்றும் தகுதியான மனைவியின் மீது கொண்ட பற்றுதலை கைவிட்டிருப்பது சிறந்த வரமாகும். நீ ஒரு உண்மையான பிரச்சாரி. எனவே உன்னை எனக்குப் பிடிக்கும். (பிறகு புன்னகைத்தார்) சிலநேரங்களில் நீங்கள் பிடிவாதமுள்ளவராக இருக்கிறீர்கள். ஆயினும் அதுவே எந்த ஒரு அறிவாளிக்கும் பொருத்தமான உண்மை. இப்போது நீங்கள் ஒரு மிகச்சிறந்த களத்தில் இருக்கிறீர்கள். இப்போது அதை ஒருங்கிணையுங்கள். அதனால் அது சிறந்த நன்மையளிக்கும். யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். உங்களுக்கான களத்தை உருவாக்கி ரித்விக்காக தொடர்ந்து என் சார்பாக செயல்படுவீர்களாக.”
நான் செய்தித்தாளில் வெளிவந்த கட்டுரையை படிக்கையில் ஸ்ரீல பிரபுபாதர் மிகுந்த உற்சாகத்துடன் அதனைக் கேட்டார். தெய்வத்திரு அவர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்து, “இக்கட்டுரை உன் கௌரவத்தை மேலும் அதிகரிக்கக் கூடியது. அது ஒரு மிக நல்ல கட்டுரை. எனவேதான் அந்த செய்தித்தாள் அதை அச்சிட அதிகம் இடம் கொடுத்துள்ளது. அது மிக நல்லது. அது கண்டிப்பாக பகவானிடம் திரும்பு (Back to Godhead ) இதழில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். இப்போது பகவானிடம் திரும்பு (Back to Godhead )-வில் பிரபுபாதர் பேசுகிறார் என்ற ஒரு பகுதி உள்ளது. உன்னுடைய கட்டுரையை பிரபுபாதரின் சிஷ்யர் பேசுகிறார் என்ற தலைப்பின்கீழ் கொண்டுவரலாம். ஆம். நிச்சயமாக இந்த கட்டுரையை நாம் வெளியிடுவோம். அந்த அயோக்கியன் மக்கள் முன்னிலையில் முட்டாளாக்கப்பட வேண்டும். இந்த கட்டுரையை படிக்கையில் நான் மிக்க மகிழ்ந்தேன். என்னுடைய சீடர்களும் பேசவேண்டும் என நான் விரும்புகிறேன்… முழுமையான பகுத்தறிவு வாதத்தினை ஆதரவாகக் கொண்டு. ‘ப்ரஹ்ம சூத்ர ஸுநிஸ்சித’ அதுவே பிரச்சாரம். ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். என்னுடைய எல்லா சீடர்களும் முன்னோக்கி செல்ல வேண்டும். உன்னிடம் இந்த சவால் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களால் பதில் கூற முடியாது. டாக்டர் ஸ்வரூப தாமோதரரின் “உயிரிலிருந்து உயிர் தோன்றியது” நிகழ்ச்சிக்கு அந்த டாக்டர் கோவூர் அழைக்கப்பட வேண்டும்…” இந்த அறிவியில் மாநாட்டின் அவர் சில விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.”
ஆம். உனக்கு நிச்சயமாக இஸ்கான் உணவு தணிப்பு (ISKCON Food Relief ) பணம் கிடைக்கும். அமெரிக்க பணம் வசூலிக்கப்பட்டு உணவை விநியோகிக்க அனுப்பப்படுகிறது. இதுவே என்னுடைய நோக்கம். 300 பேர் வருகிறார்கள் என்பது வேடிக்கையான விஷயமல்ல. நீங்கள் பல நல்ல பதார்த்தங்களை குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை சாப்பிட நான் விரும்பினாலும் என்னால் முடியாது. வெறுமனே அவர்களின் பெயர்களை கேட்பதே திருப்தியாக இருக்கின்றது. இன்று காலையில்தான் உம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது நீங்களே எனக்கு கடிதம் எழுதிவிட்டீர்கள்.
தங்கள் சேவகன்
தமால் கிருஷ்ண கோஸ்வாமி
ஸ்ரீல பிரபுபாதரின் செயலாளர்



த்ரிதண்டி கோஸ்வாமி
அ .ச .பக்திவேதாந்த ஸ்வாமி
ஸ்தாபக ஆச்சாரியர்:
அகில உலக கிருஷ்ண உணர்வு இயக்கம்
|
மையம்:
தேதி: |
கிருஷ்ண-பலராம் மந்திர், பக்தி வேதாந்த ஸ்வாமி மார்க்கம், ரமண் ரேதி, விருந்தாவனம், உ.பி.
ஜூன், 1977 |
உயில் பிரகடனம்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரும், பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையை அமைத்தவரும், ஓம் விஷ்ணுபாத 108(அஷ்டோத்ர) ஸ்ரீ ஸ்ரீமத் பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி மஹராஜ் பிரபுபாதரின் சீடருமாகிய அ .ச .பக்திவேதாந்த ஸ்வாமி ஆகிய நான், தற்போது விருந்தாவனத்திலுள்ள கிருஷ்ண பலராம் கோயிலில் இருந்து எழுதுகின்ற என்னுடைய கடைசி உயில்:
|
1.
2.
3. |
ஆட்சி குழு ஆணையம் (ஜிபிசி)-ஆனது மொத்த அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் உச்சகட்ட நிர்வாக அதிகாரியாக இருக்கும்.
ஒவ்வொரு கோயிலும் இஸ்கானுடைய சொத்தாக இருக்கும் மேலும் அவைகள் மூன்று நிர்வாக இயக்குனர்களால் பராமரிக்கப்படும். நிர்வாக அமைப்பு இப்போது எவ்வாறு இருக்கின்றதோ அவ்வாறே தொடரும் மேலும் எந்தவித மாற்றத்திற்கும் அவசியமில்லை.
இந்தியாவில் உள்ள சொத்துக்கள் கீழ்கண்ட நிர்வாக இயக்குனர்களால் பராமரிக்கப்படும். |
|
அ)
ஆ)
இ)
ஈ)
உ) ) |
மாயாபூர் தாம், பாணிஹாட்டி, ஹரிதாஸ்பூர், கல்கட்டாவில் உள்ள சொத்துக்கள்: குரு கிருபா சுவாமி, ஜெயபதகா சுவாமி, பாவானந்த சுவாமி மற்றும் கோபாலகிருஷ்ணதாஸ் அதிகாரி.
பிருந்தாவனத்தில் உள்ள சொத்துக்கள்: குரு கிருபா ஸ்வாமி, அக்ஷோயானந்தா ஸ்வாமி, மற்றும் கோபால கிருஷ்ணதாஸ் அதிகாரி.
மும்பையில் உள்ள சொத்துக்கள்: தமால கிருஷ்ண கோஸ்வாமி, கிரிராஜ் தாஸ் பிரம்மச்சாரி மற்றும் கோபாலகிருஷ்ணதாஸ் அதிகாரி
புவனேஸ்வரில் உள்ள சொத்துக்கள்: கௌர கோவிந்த ஸ்வாமி , ஜெயபதக ஸ்வாமி மற்றும் பகவத் தாஸ் பிரம்மச்சாரி.
ஹைதராபாத்தில் உள்ள சொத்துக்கள்: மஹாம்ஸ ஸ்வாமி, ஸ்ரீதர ஸ்வாமி, கோபால கிருஷ்ணதாஸ் அதிகாரி மற்றும் பலி மர்தன் தாஸ் அதிகாரி. |
இங்கே நியமிக்கப்பட்டுள்ள நிர்வாக இயக்குனர்கள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவ்வாறே இருப்பார்கள். இப்போது கூறப்பட்ட இயக்குனர்கள் அவர்களின் மரணத்தின் சம்பவத்தினாலோ அல்லது செயல்பட முடியாதபோதோ, அடுத்து வரும் செயலாளர் அல்லது மீதம் இருக்கும் செயலாளர்களால் நியமிக்கப்படும் செயலாளர்கள், எந்த ஒரு நிபந்தனையின் கீழ் என்றால், அவ்வாறு நியமிக்கப்படும் புதிய இயக்குனர் என்னால் தீக்ஷை அளிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் அவர் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் என்னுடைய புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ள எல்லா விதிமுறைகளையும் நெறிமுறைகளையும் பின்பற்றுபவராக இருக்க வேண்டும். மேலும் மூன்று பேருக்கு குறையாமலும் ஐந்து பேருக்கு மிகாமலும் நிர்வாக இயக்குனர்கள் இருக்கும்போது அவர்கள் ஒரே நேரத்தில் செயல்படக்கூடாது.
|
4.
5.
6. |
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினை நான் உருவாக்கி மேம்படுத்தி ஒன்றிணைத்ததன் காரணமாக, நான் இங்கு கூறுவது என்னவெனில் இந்தியாவில் உள்ள இஸ்கான் என்ற பெயரில் உள்ள அசைக்க முடியாத சொத்துக்கள் எதையும் அடமானம் வைக்கவோ, கடன் வாங்கவோ, விற்கவோ, மாற்றப்படவோ அல்லது எந்த வகையிலும் சுமக்கப்படவோ, அகற்றப்படவோ அல்லது அந்நியப்படுத்தப்படவோ கூடாது. இந்த கட்டளை மாற்ற முடியாதது.
அடிப்படையில் இந்தியாவிற்கு வெளியிலிருக்கும் சொத்துக்களை அடமானம் வைக்கவோ, கடன் வாங்கவோ, விற்கவோ, மாற்றப்படவோ அல்லது எந்த வகையிலும் சுமக்கப்படவோ, அகற்றப்படவோ அல்லது அந்நியப்படுத்தப்படவோ கூடாது. ஆனால் தேவை ஏற்படுமாயின், அவைகளை அடமானம் வைப்பது, கடன்வாங்குவது, விற்பது போன்றவற்றை அந்த குறிப்பிட்ட சொத்துடன் தொடர்புடைய GBC குழு உறுப்பினர்களின் சம்பந்தத்துடன் செய்யலாம்.
இந்தியாவிற்கு வெளியிலிருக்கும் சொத்துக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய GBC குழு உறுப்பினர்கள் பின்வருமாறு: |
|
a)
b)
c)
d)
e)
f)
g)
h)
i)
j)
k)
l)
m)
n)
o) |
சிகாகோ, டெட்ராய்ட் மற்றும் அன் அர்பர்-ல் உள்ள சொத்துக்கள்: ஜெயதீர்த்த தாஸ் அதிகாரி.
ஹவாய், டோக்கியோ, ஹாங் காங் - ல் உள்ள சொத்துக்கள்: குரு க்ருபா ஸ்வாமி, ராமேஸ்வர ஸ்வாமி மற்றும் தமால கிருஷ்ணா கோஸ்வாமி.
மேல்போர்ன், சிட்னி, ஆஸ்திரேலிய பண்ணையில் உள்ள சொத்துக்கள்: குரு க்ருபா ஸ்வாமி, ஹரி சௌரி மற்றும் ஆத்ரேய ரிஷி
இங்கிலாந்து (London Redlett), பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்விட்ஸ்ர்லாண்ட் மற்றும் சுவீடனில் உள்ள சொத்துக்கள்: ஜெயதீர்த்த தாஸ் அதிகாரி, பகவான் தாஸ் அதிகாரி, ஹரிகேஷ ஸ்வாமி.
கென்யா, மொரீசியஸ், தென் ஆப்ரிக்காவில் உள்ள சொத்துக்கள்: ஜெயதீர்த்த தாஸ் அதிகாரி, ப்ரஹ்மாநந்த ஸ்வாமி மற்றும் ஆத்ரேய ரிஷி.
மெக்ஸிகோ, வெனிஸுலா, பிரேசில், கோஸ்டா ரிக்கா, பெரு, ஈகுவேடர், கொலம்பியா, சிலி ,- ல் உள்ள சொத்துக்கள்: ஹ்ருதயானந்த ஸ்வாமி, பஞ்ச திராவிட ஸ்வாமி, . மற்றும் ப்ரஹ்மாநந்த ஸ்வாமி
ஜார்ஜ்டௌன், குயானா , சான்டோ டாமிங்கோ , st. அகஸ்டின் - ல் உள்ள சொத்துக்கள் : ஆதிகேசவ ஸ்வாமி, ஹ்ருதயானந்த ஸ்வாமி, பஞ்ச திராவிட ஸ்வாமி.
வென்காவர்,. சியாட்டில், பெர்க்லே, தலாஸ், - ல் உள்ள சொத்துக்கள்: சத்ஸ்வரூப கோஸ்வாமி, ஜெகதீஷ தாஸ் அதிகாரி, ஜெயதீர்த்த தாஸ் அதிகாரி.
லாஸ் ஏஞ்சல்ஸ், டென்வர் , சான் டியாகோ, லாகுனா பீச் - ல் உள்ள சொத்துக்கள் : ராமேஸ்வர ஸ்வாமி , சத்ஸ்வரூப ஸ்வாமி , ஆதிகேசவ ஸ்வாமி
நியூயார்க், பாஸ்டன், பியூர்டோ
ரிக்கோ, போர்ட் ராயல் st .லூயிஸ், St. லூயிஸ் பண்ணை -யில் உள்ள சொத்துக்கள் : தமால்
கிருஷ்ண கோஸ்வாமி, ஆதி கேசவ ஸ்வாமி, ராமேஸ்வர ஸ்வாமி. ஈரான்-இல் உள்ள சொத்துக்கள் : ஆத்ரேய ரிஷி, பகவான் தாஸ் அதிகாரி, ப்ரஹ்மானந்த ஸ்வாமி .
வாஷிங்டன் D.C., பால்டிமோர், பிளேடெல்பியா, மாண்ட்ரீல், மற்றும் ஒட்டாவா - வில் உள்ள சொத்துக்கள் : ரூபானுக தாஸ் அதிகாரி, கோபால் கிருஷ்ணா தாஸ் அதிகாரி, ஜெகதீஷ தாஸ் அதிகாரி
பிட்ஸ்பர்க், நியூ விருந்தாவன், டொரோண்டோ, கிலீவ்லேண்ட், பபெல்லோ - வில் உள்ள சொத்துக்கள் : கீர்த்தனானந்த ஸ்வாமி, ஆத்ரேய ஸ்வாமி, பலவந்த தாஸ் அதிகாரி.
அட்லான்டா, டென்னீசீ பண்ணை, கைனீஸ்வில்லே, மியாமி, நியூ ஆர்லியன்ஸ், மிஸ்ஸிஸ்ப்பி பண்ணை, ஹாஸ்டோன் -யில் உள்ள பண்ணை : பலவந்த தாஸ் அதிகாரி, ஆதிகேசவ ஸ்வாமி, ரூபானுக தாஸ் அதிகாரி.
பிஜி - யில் உள்ள சொத்துக்கள் : ஹரி சௌரி, ஆத்ரேய ரிஷி, வாசுதேவ். |
|
7.
8.
9. |
நான் பிரகடனப்படுத்தி கூறி உறுதிப்படுத்துவது என்னவெனில், என்னுடைய பெயரில் உள்ள அசையக்கூடிய மற்றும் அசையாத சொத்துக்கள், பல்வேறு வங்கிகளிலுள்ள நடப்புக்கணக்கு, சேமிப்புக் கணக்கு, நிலையான வைப்பு கணக்கு என அனைத்தும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சொத்துக்கள் மற்றும் சம்பத்துகளாகும். என்னுடைய முந்தைய வாழ்க்கை வாரிசுகள் மற்றும் வழிவந்தவர்கள் அல்லது அவர்கள் மூலமாக யாரேனும் உரிமைகோருபவர்கள் என எவருக்கும் எந்த உரிமையும், உரிமை-கோரலும் இந்த சொத்துக்களின் மீது எந்த விதத்திலும் சேமிக்கவோ கூறப்பட்டபடி உரிமை கிடையாது.
பல்வேறு வங்கிகளில் என்னுடைய பெயரில் உள்ள பணமானது இஸ்கானுக்கும் இஸ்கான் சார்ந்தவைகளுக்கும் செலவிட்ட போதிலும், சில வைப்பு கணக்குகளை தனிப்பட்ட முறையில் ஒதுக்கி எனது முந்தைய குடும்ப உறுப்பினர்களுக்கு (இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் மற்றும் மனைவி) மாத உதவித்தொகையாக ரூ 1000/- குறிப்பிட்டு ஒதுக்கியுள்ளேன். எனது முந்தைய குடும்ப உறுப்பினர்களின் மரணத்திற்குப் பிறகு, இந்த குறிப்பிட்ட வைப்பு நிதியானது (அடிப்படை தொகை, வட்டி, சேமிப்புகள்) இஸ்கான் அறக்கட்டளையின் அடிப்படை தொகைக்குள் வந்து சேரும். எனது முந்தைய குடும்ப சந்ததியினரோ அல்லது அவர்கள் மூலமாக வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மேற்கொண்டு எந்த உதவித்தொகையும் கொடுக்க அனுமதிக்கக் கூடாது.
நான் இந்த உயிலின் செயலாளர்களாக குரு கிருபா ஸ்வாமி, ஹ்ருதயானந்த கோஸ்வாமி, தமால கிருஷ்ண கோஸ்வாமி, ராமேஸ்வர ஸ்வாமி, கோபால கிருஷ்ண தாஸ் அதிகாரி, ஜெயதீர்த்த தாஸ் அதிகாரி, கிரிராஜ் தாஸ் ப்ரஹ்மச்சாரி ஆகியோரை இப்போது நியமிக்கிறேன். இந்த உயிலை நான் ஜூன் 4-ஆம் தேதி 1977-ல் என் முழு புலன்கள், ஸ்திரமான மனம், யாராலும் எந்தவிதமான தூண்டுதலும் வற்புறுத்தலும் இல்லாமல் உருவாக்கியுள்ளேன்.
|
சாட்சியம்:
அ.ச.பக்திவேதாந்த ஸ்வாமி
மேற்கண்ட இந்த உயிலானது ஸ்ரீல பிரபுபாதரால் கையெழுத்திடப்பட்டு, முத்திரை பதிக்கப்பட்டு மற்றும் கீழ்கண்டவர்களால் சாட்சியம் அளிக்கப்பட்டது.(கையெழுத்து மூலப் பத்திரத்தில் உள்ளது ).
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சரியரும், பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையை அமைத்தவரும், ஓம் விஷ்ணுபாத 108 ஸ்ரீ ஸ்ரீமத் பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி மஹராஜ் பிரபுபாதரின் சீடருமாகிய அ.ச.பக்திவேதாந்த ஸ்வாமி ஆகிய நான், தற்போது விருந்தாவனத்திலுள்ள கிருஷ்ண பலராம் கோயிலில் இருந்து எழுதுகின்ற கடைசி உயில் மற்றும் என்னுடைய விருப்பத்தை தெரிவிக்கும் பத்திரம் மற்றும் என் முந்தைய ஜூன் 4, 1977- தேதியிட்ட உயிலில் தெளிவற்ற விஷயங்களை விளக்க முன்வந்து தெளிவுபடுத்தும் விளக்கம் பின்வருமாறு :
1977, ஜூன் 4-ல் நான் உருவாக்கிய உயிலில், குறிப்பிட்ட சொத்துக்களைப் பற்றி நான் கூறியிருக்கிறேன். அதில் நான் குறிப்பிட்ட, உதவித்தொகையாக நான் கிருஹஸ்த ஆஸ்ரமத்தில் இருக்கும் போது எனக்கு பிறந்தவர்களான ஸ்ரீ M.M. தே, பிரிந்தாவன் சந்திர தே, திருமதி பக்தி லதா தே மற்றும் ஸ்ரீமதி ஸுலுர்மன தே மற்றும் என் மனைவியான ஸ்ரீமதி ராதாராணி தே போன்றவர்களுக்கு என்னுடைய உயிலில் 8-ஆம் பத்தியில் நான் குறிப்பிட்டபடி கொடுப்பது தொடர்பாக. நான் கவனமாக அதனைப் பார்த்தபோது அந்த பத்தியில் என்னுடைய மனோவிருப்பம் உண்மையில் சரியாக வெளிப்படுத்தப்படவில்லை என உணர்கிறேன். எனவே அதனை தெளிவுபடுத்தும் வகையில் ஸ்ரீமதி ராதாராணி தே-வின் வாழ்க்கைக்கு ரூ 1000 /- மாதந்தோறும் உதவித்தொகையாக, ஏதேனும் இஸ்கானின் நிரந்தர வைப்பு (Fixed Deposit) நிதியில் ஒருலட்சத்து இருபதாயிரம் இருப்பிலிருந்து வரும் வட்டித்தொகையை அவளுக்கு கிடைக்கும்படி செய்திட வேண்டும். அதனை அதிகாரிகள் இஸ்கானின் பெயரில் 7-வருடங்கள் வரை வைப்பு நிதியாக வைத்திருக்கும் தொகையிலிருந்து வரும்படி பார்த்து செய்ய வேண்டும். ஆனால் அவளுடைய இறப்பிற்குப் பிறகு அவளுடைய சந்ததிக்கு கிடைக்கக் கூடாது. அவளின் இறப்பிற்குப் பிறகு இந்தப்பணம் இஸ்கானுடைய அதிகாரிகளால் இஸ்கானின் தேவைக்காகவே பயன்படுத்தப்படும்.
ஸ்ரீ M.M. தே, பிரிந்தாவன் சந்திர தே, திருமதி பக்தி லதா தே மற்றும் ஸ்ரீமதி ஸுலுர்மன தே ஆகியோர் சம்பந்தமாக, இஸ்கானின் நான்கு வெவ்வேறு 7-வருடங்களுக்கான வைப்பு நிதிகளில் போடப்பட்டிருக்கும் தனிப்பட்ட ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயிலிருந்து வரும் குறைந்தபட்சம் ரூ 1000/-த்தை ஒருவருக்கு 250/- ரூபாய் என மாதந்தோறும் கொடுக்கவேண்டும். மீதம் 750/- ரூபாயை மீண்டும் அவரவர்கள் பெயரிலேயே 7-வருட நிரந்தர வைப்புக் கணக்கை அவர்கள் பெயரிலேயே உருவாக்கி பணம் போட வேண்டும். குறிப்பிட்ட இந்த தொகைகள் அவர்கள் பெயரிலேயே ஏதேனும் அரசின் பாண்டு பத்திரம் மூலம் முதலீடு செய்யப் படும். அந்த நிரந்தர வைப்புநிதியிலிருந்து வரும் தொகைகள் அல்லது ஏதேனும் அரசு சலுகைகள் வரும்போது அதை பயன்படுத்தி அசையா சொத்தையோ அல்லது சொத்துக்களையோ வாங்கவேண்டும். இவ்வாறாக அந்த பணம் பாதுகாப்பாக இருக்கும் அல்லது சிதறிப்போகாமல் இருக்கும். ஒருவேளை, மேற்குறிப்பிட்ட பெயரைக்கொண்ட நபர்கள், இந்த கட்டுப்பாடுகளை மீறும் பட்சத்தில் அதாவது மேற்குறிப்பிட்ட விதத்தில் அல்லாமல் வேறு ஏதேனும் முறையில் பயன்படுத்தினால், இஸ்கானின் அதிகாரிகள் மாதந்தோருமான அந்த 120000/- வைப்பு நிதியிலிருந்து வரும் பராமரிப்புத் தொகையை நிறுத்துவதற்கும் அதற்கு பதிலாக அதன் வட்டித்தொகையான ரூ 1000/-த்தை பக்திவேதாந்த ஸ்வாமி அறக்கட்டளைக்கு கொடுப்பதற்கு முழு சுதந்திரமும் உண்டு. இங்கு தெளிவாகக் கூறுவது யாதெனில், வாரிசாக கூறப்படும் அந்த நபர்களுக்கு எனது முந்தைய வாழ்க்கையின் நபர்களாதலால் அவர்களின் சொந்த தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதை தவிர வேறு எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது. அதுவும் அவர்கள் வாழும் வரை மட்டுமே.
நான் இந்த உயிலை செயல்படுத்த சிலரை நியமித்துள்ளேன். இப்போது மேற்கு வங்காளம், நதியா, மாயாப்பூர் சந்திரோதய மந்திரில் வசிக்கும் என்னுடைய சீடரான ஸ்ரீ ஜெயபதக ஸ்வாமியையும் 1977, ஜூன் 4-ஐ உயிலை செயல்படுத்தும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட நபர்களில் ஒருவராக சேர்க்கிறேன். நான் இங்கு மேற்கொண்டு வழிகாட்டுவது என்னவென்றால் என்னுடைய செயலாளர்கள் ஒன்றாக இணைந்தோ அல்லது தனிப்பட்ட முறையிலோ நான் உயிலில் கூறப்பட்டுள்ளவாறான கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும்.
எனவே என்னால் இங்கு திருத்தி மாற்றியமைத்து செயல்படுத்தும் 1977, ஜூன் 4-ஆம் தேதியிட்ட உயிலை மேற்கண்டவாறு மாற்றியுள்ளேன். எல்லாவழிகளிலும் கூறப்பட்ட உயிலானது நன்மையையே தொடர்ந்து கொடுக்கும் மற்றும் நன்மையையே பெற்றிருக்கும்.
என்னால் இவ்வாறு இந்த உயிலானது நவம்பர் 5-ஆம் தேதி, 1977- ல் என்னுடைய முழு அறிவு கொண்டும், முழுமனதுடன், யாருடைய தூண்டுதலும், கட்டாயமும், வற்புறுத்துதலும் இல்லாமல் இயற்றுகிறேன்.
சாட்சி:
(கையொப்பங்கள் மூல பத்திரத்தில் காணப்படும் )
அ .ச . பக்திவேதாந்த ஸ்வாமி
அறை உரையாடல் ஏப்ரல் 22, 1977, பாம்பே
|
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ணா:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ணா:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ணா:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ணா:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ணா:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ணா:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ணா:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ணா:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ணா:
ஸ்ரீல பிரபுபாதர்: |
“நான் அவனிடம் கூறினேன் “உன்னால் சுதந்திரமாக செயல்பட முடியாது. நீ நன்றாகத்தான் செய்துகொண்டிருக்கிறாய், ஆனால் இவ்விதமாக செய்யக்கூடாது… நீ ஒப்புக்கொள்”. மக்கள் ஹம்ஸதுத்தாவிற்கு எதிராக புகார் அளித்துள்ளனர். உனக்கு அதைப்பற்றி தெரியுமா?”
“எனக்கு குறிப்பிட்டு இந்தந்த சம்பவங்கள் என்று தெரியாது. ஆனால் நான் பொதுப்படையாக கேள்விப்பட்டேன்…”
“ஜெர்மனியில். ஜெர்மனியில்.”
“அங்கிருக்கும் பக்தர்கள்”
“பற்பல புகார்கள்.”
“எனவே, மாற்றமே நல்லது”
“இல்லை, நீ குருவாக வேண்டும், ஆனால் அதற்குமுன் கண்டிப்பாக நீ தகுதியுள்ளவனாக இருக்க வேண்டும்“.பின்னர் நீ ஆகலாம்.
“ஓ! அப்படிப்பட்ட புகார்கள்தான் உள்ளன”
“உனக்கு அதைத் தெரியுமா”
“ஆம், நான் அதைக் கேள்விப்பட்டேன் , ஆம் “
“சில அயோக்கிய குருக்களை உருவாக்குவதால் என்ன பயன் இருக்கிறது?”
“நன்று, நான் என்னையும் உங்களுடைய எல்லா சீடர்களையும் ஆராய்ந்ததில் தெளிவாக தெரிகின்ற விஷயம் என்னவென்றால் நாங்கள் அனைவரும் கட்டுண்ட ஆத்மாக்கள். எனவே எங்களால் குருவாக முடியாது. ஏதாவது ஒருநாள் இது சாத்தியமாகலாம்…”
“ம்ம்”
“...ஆனால் இப்போது அல்ல”
“ஆம். நான் சில குருக்களை தேர்ந்தெடுப்பேன். நான் கூறுவேன், “இப்போது நீங்கள் ஆச்சாரியராகுங்கள். நீங்கள் அங்கீகரிப்பவராவீர்கள்.” நான் அதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் அனைவரும் ஆச்சாரியாராவீர்கள். நான் முழுமையாக ஒய்வு பெறுவேன். ஆனால் பயிற்சி கண்டிப்பாக முழுமையடைய வேண்டும்.”
“பவித்ரமடைவதற்கான வழிமுறை கண்டிப்பாக இருக்கிறது”
“ஆம், கண்டிப்பாக இருக்கிறது. சைதன்ய மஹாப்ரபு வேண்டுவது என்னவெனில், “ஆமார ஆக்ஞா குரு ஹாய்” [சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 7.128]. “நீங்கள் குருவாக ஆகுங்கள்”(சிரிக்கிறார்) ஆனால் தகுதியுடையவனாயிரு. சிறிய விஷயம், பிறழாமல் பின்பற்றுபவர்…”
“வெறும் முத்திரையிட்டவர் அல்ல”
“பின்னர் நீ சக்தியுள்ளவனாய் இருக்க முடியாது. நீ ஏமாற்றுவாய், ஆனால் அதனால் பிரயோஜனம் இருக்காது. நம் கௌடிய மடத்தைப் பாருங்கள். ஒவ்வொருவரும் குருவாக மாற விரும்புகிறார்கள், ஒரு சிறிய கோயில் , ஒரு “குரு”. எவ்விதமான குரு? புத்தக பதிப்பு இல்லை, பிரச்சாரம் இல்லை, வெறுமனே சில உணவுப் பொருட்களை கொண்டுவருகின்றனர்… என் குரு மஹாராஜர் வழக்கமாக கூறுவது என்னவெனில், “சாப்பாட்டுக் கூட்டம்” சாப்பிடுவதும் தூங்குவதுமான ஒரு இடம். ஆமார் ஆமார் ஆர தகன: சாப்பாட்டுக் கூட்டம்” அவர் இதைக் கூறினார்” |
அறை உரையாடல் மே 27, 1977, விருந்தாவனம்
|
பாவானந்தா:
தமால கிருஷ்ணா:
பவானந்தா:
ஸ்ரீல பிரபுபாதர்: |
“எனக்கு தெரிந்த சில நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை குருவாக காண்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.”
“அது பல வருடங்களாகவே சென்றுகொண்டிருக்கிறது. உங்கள் ஆன்மீக சகோதரர்கள் அவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கின்றனர். மாதவ மஹாராஜா…”
“ஓ ஆமாம், ஓ தாவுவதற்கு தயாராக இருக்கிறார்கள் ”
“மிக பலமான நிர்வாகம் மற்றும் கவனம் மிகுந்த கண்காணிப்பு தேவைப்படுகிறது” |




அறை உரையாடல் மே 28, 1977, விருந்தாவனம் *
|
சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண கோஸ்வாமி:
ஸ்ரீல பிரபுபாதர்:
சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி:
ஸ்ரீல பிரபுபாதர்:
சத்ஸ்வரூபதாஸ கோஸ்வாமி:
ஸ்ரீல பிரபுபாதர்:
சத்ஸ்வரூபதாஸ கோஸ்வாமி:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமாலகிருஷ்ண கோஸ்வாமி:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமாலகிருஷ்ண கோஸ்வாமி:
ஸ்ரீல பிரபுபாதர்:
சத்ஸ்வரூபதாஸ கோஸ்வாமி:
தமாலகிருஷ்ண கோஸ்வாமி:
சத்ஸ்வரூபதாஸ கோஸ்வாமி:
தமாலகிருஷ்ண கோஸ்வாமி:
ஸ்ரீல பிரபுபாதர்:
|
பிறகு எங்களுடைய அடுத்த கேள்வி எதிர்காலத்தில் தீக்ஷை(கள்) பற்றியது, அதிலும் குறிப்பாக தாங்கள் எங்களுடன் இனி இருக்க மாட்டீர்கள் என்ற காலத்தில்.முதல் மற்றும் இரண்டாம் தீக்ஷை(கள்) எவ்வாறு நடத்துவது என்று நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.”
“ஆமாம், நான் உங்களில் சிலரை தேர்ந்தெடுப்பேன். அது முடிவுசெய்த பின்னர்,உங்களில் சிலரை ஆச்சாரியரின் பிரதிநிதி(களாக)யாக செயல்படுவதற்கு பரிந்துரைப்பேன்”.
ரித்விக் ஆச்சாரியார் என்று அழைக்கப்படுமே அதுவா ?
ரித்விக். ஆமாம், (ஆமாம், ரித்விக்)
(பிறகு) தீக்ஷை கொடுப்பவருக்கும் அந்த நபருக்கும் என்ன உறவு மற்றும் (அந்த )...
அவர் குரு, அவர் குரு (அவரே குரு)
ஆனால் அதை அவர் தங்கள் சார்பில் செய்கிறார்.”
ஆம், அது சடங்கு. ஏனெனில் நான் இருக்கும்போது, ஒருவர் குருவாக ஆகக் கூடாது, ஆகவே என்னுடைய சார்பாக, என்னுடைய கட்டளையின்படி, ஆமார ஆக்ஞா குரு (ஹாய்), (அவரே) (இருப்பார்)) உண்மையில் குரு. ஆனால் என்னுடைய கட்டளையின்(பேரில்) படி“
ஆகவே (பிறகு) (அவர்கள்) (அவர்கள் ஆகுவார்கள்) (ஆகலாம்) அவர்களும் தங்கள் சீடர்கள் ஆவார்கள் ?”
“ஆம், அவர்கள் (அவர்களின்) சீடர்கள், (ஆனால்) (ஏன்) யாரை கருதி”
இல்லை. அவர் கேட்பது (கேட்டுக்கொண்டிருப்பது) என்னவெனில், இந்த ரித்விக் ஆச்சாரியர்கள், அவர்கள் பிரதிநிதிப்பவர்கள், தீக்ஷை கொடுக்கிறார்கள். (அவர்களின்)... யாருக்கு தீக்ஷை கொடுக்கிறார்களோ, அவர்கள் யாருடைய சீடர்கள்?”
அவர்கள் அவரின் சீடர்கள் (யார் தீக்ஷை கொடுக்கிறாரோ அவரின் சீடர்கள்)”
அவர்கள் அவரின் சீடர்களா?
யார் தீக்ஷை கொடுக்கிறாரோ. (மேலும் அவர்கள் என்னுடைய) (அவருடைய) (அவர்தான்) பேர சீடர்(கள்)...
(ஆமாம்)
(இது தெளிவாகியது)
(மேலும் தொடர்வோம்)
பிறகு அது தொடர்பாக ஒரு கேள்வி இருக்கிறது…
நான் உனக்கு கட்டளையிடும்போது, அவர் (நீ) வழக்கமான குருவாக மாறுவார். அவ்வளவுதான். அவர் (மற்றும் அவர்கள்) என்னுடைய சீடர்களின் சீடராக மாறுவார்கள். (அவ்வளவுதான்) (பாருங்கள்). |
*மேலே கொடுக்கப்பட்ட தொகுப்பு GBC-யின் கீழ்கண்ட வெளியீடுகளிலிருந்து நான்கு விதமான மொழிமாற்றங்கள் (transcripts) சேர்த்து வழங்கப்பட்டவை:
1983: ஸ்ரீல பிரபுபாதா லீலாம்ருதா, பகுதி 6 (சத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி, BBT )
1985: என்னுடைய கட்டளையின் பேரில் (Under My Order )(ரவீந்திர-ஸ்வரூப தாஸா)
1990: இஸ்கான் பத்திரிகை(ISKCON Journal, GBC)
1995: இஸ்கானில் குரு மற்றும் தீக்ஷை (GBC)
அறை உரையாடல் ஜூலை 7, 1977, விருந்தாவனம்
|
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
|
“ஸ்ரீல பிரபுபாதா? இப்போது நாம் பல எண்ணிக்கையில் கடிதங்களை பெற்றுக் கொண்டிருக்கிறோம், அதாவது இந்த நபர்கள் தீக்ஷை பெற விரும்புகிறார்கள். ஆகவே இன்றுவரை தாங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதனால், நாங்கள் அவர்களை காத்திருக்குமாறு கூறியுள்ளோம்.”
“அவ்வூர்களில் இருக்கும், அதாவது மூத்த சந்யாசிகள் அதனை செய்யலாம்”.
”நாங்கள் அதை செய்துகொண்டுதான் இருக்கிறோம்… நான் கூறுவது என்னவென்றால், சடங்கு ரீதியாக நாங்கள், உள்ளூர் GBC, சந்நியாசிகள் அவர்களின் ஜெப மணியில் ஜெபம் செய்தல், தெய்வத்திருவாகிய தங்களுக்கு அதனை கடிதம் மூலம் தெரிவித்தல் அதன்படி தாங்கள் ஆன்மீக பெயரை வழங்குதல் போன்றவற்றை செய்துகொண்டுதான் இருக்கிறோம்…” ஆக அந்த வழிமுறையே தொடர வேண்டுமா, அல்லது நாங்கள் ஏதாவது….? நான் கூறுவது என்னவெனில், ஒரு விஷயம் என்னவெனில், ஆன்மீக குருவானவர் எடுக்கின்றார்… தங்களுக்கு தெரியும். அவர் எடுக்கிறார்.. அவர் அவ்விதமாக சீடர்களை பவித்ரப் படுத்துகிறார்… ஆகவே நீங்கள் அதை செய்வதை நாங்கள் விரும்பவில்லை.. உங்கள் உடல்நிலை அந்தளவுக்கு சரியில்லாததால், நீங்கள் செய்யவேண்டாமென்று… அதனால்தான் நாங்கள் அனைவரையும் காத்திருக்கும்படி கூறியுள்ளோம். நாங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டுமா என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.”
“வேண்டாம், மூத்த சந்நியாசிகள்…”
“ஆக, அவர்கள் தொடர வேண்டும்…”
“நீ சந்யாசிகளின் பெயர் பட்டியலை என்னிடம் கொடு. நான் யார்யாரென்று குறிக்கிறேன்…” “சரி.”
“நீ செய்யலாம். கீர்த்தனானந்தா செய்யலாம் மற்றும் நம் சத்ஸ்வரூப செய்யலாம். ஆக நீங்கள் மூவரும் கொடுக்கலாம். தொடங்குங்கள்.”
“”ஒருவேளை சிலர் அமெரிக்காவில் இருக்கின்றனர் என்றால் அவர்கள் நேரடியாக கீர்த்தனானந்தாவிற்கோ அல்லது சத்ஸ்வரூபருக்கோ எழுத வேண்டுமா?”
“அருகிலிருக்கும் ஜெயதீர்த்தா கொடுக்கலாம்.”
“ஜெயதீர்த்தா.”
“பாவாணன், தவறு, பகவான்”
“பகவான்.”
“மற்றும் ஹரிகேஷா கூட அதைச் செய்யலாம்.“
“ஹரிகேஷ மஹாராஜா”
“மற்றும்… மிக அருகிலிருக்கும் ஐந்து, ஆறு நபர்களுக்கு நீ பங்கிடவேண்டும்”
“யார் அருகிலிருக்கிறார்களோ. ஆக நபர்கள் தெய்வத்திருவான தங்களுக்கு எழுதவேண்டும் என்பதில்லை. அவர்கள் நேரடியாக அந்தந்த நபர்களுக்கு எழுதலாம்? ”
“ம்ம்ம்”
“உண்மையில், அவர்கள் தெய்வத்திருவாகிய தங்களின் சார்பாக தீக்ஷை அளிக்கிறார்கள். இருந்தாலும் தீக்ஷை பெற்ற நபர்கள் தங்களுடைய…. ”
“இரண்டாவது தீக்ஷையைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும். இரண்டாம் தீக்ஷை.” “இது முதல் தீக்ஷைக்கானது. சரி. இரண்டாம் தீக்ஷையை பொறுத்தவரை, தற்போதைக்கு அவர்கள் …” “இல்லை, அவர்கள் காத்திருக்கட்டும். இரண்டாம் தீக்ஷை அது கொடுக்க வேண்டும்…”
“நிச்சயமாக…. சில பக்தர்கள் இரண்டாம் தீக்ஷைக்காக தங்களுக்கு கடிதம் எழுதுகிறார்கள். மற்றும் நான் அவர்களிடம் தங்கள் உடல்நிலை சரியில்லாததால் காத்திருக்கும்படி கடிதம் எழுதுகிறேன். அதனால் இதையே அவர்களிடம் தொடர்ந்து சொல்லவா?”
“அவர்கள் இரண்டாம் தீக்ஷையை செய்யலாம்.”
“உங்களுக்கு எழுத்துவதாலா?”
“இல்லை, இந்த நபர்களுக்கு”
“இந்த நபர்களுக்கு, அவர்களும் இரண்டாம் தீக்ஷையை செய்யலாம். அப்படியானால் முதல் மற்றும் இரண்டாம் தீக்ஷைக்காக பக்தர்கள் தங்களுக்கு எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் அருகிலிருக்கும் நபர்களுக்கு எழுதினாலே போதுமானது. ஆனால், அப்படியிருந்தும் அவர்கள் அனைவரும் தங்களுடைய சீடர்கள் ஆவார்கள். யாரேனும் தீக்ஷை கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் தங்கள் சார்பாக கொடுக்கிறார்கள்.”
“ஆமாம்”
“நான் தங்களுடைய சீடர்கள் பெயர்கள் கொண்ட புத்தகத்தை பராமரித்து வருகிறேன் என்று தங்களுக்கு தெரியுமல்லவா? அதை நான் தொடரட்டுமா?”
“ம்ம்ம்”
“ஆக ஹரிகேஷ மஹாராஜா போன்றவர்கள் தீக்ஷை கொடுத்தார்கள் என்றால், அவர் அவர்களின் பெயர்களை இங்கு நம்மிடம் அனுப்பிவைக்க வேண்டும், மேலும் நான் அதனை இந்த புத்தகத்தில் பதிவிடுவேன். சரியா. இந்தியாவில் இருக்கும் யாரேனும் இதனை செய்யவேண்டும் என்ற தாங்கள் விரும்புகிறீர்களா?”
“இந்தியா. நான் இங்குதான் இருக்கிறேன். நாம் பார்ப்போம். இந்தியாவில் ஜெயபதாக.”
“ஜெயபதாக மஹாராஜா.”
“நீயும் இந்தியாவில் தானே இருக்கிறாய்”
“ஆமாம்”
“அந்த பெயர்களை நீ குறித்துவைத்துக் கொள்”
“ஆம். நான் அவர்களை குறித்து வைத்துள்ளேன்”
“யார் அவர்கள்?”
“கீர்த்தனானந்தா மஹாராஜா, சத்ஸ்வரூப மஹாராஜா, ஜெயதீர்த்த மஹாராஜா, பகவான் பிரபு, ஹரிகேஷ மஹாராஜா, ஜெயபதாக மஹாராஜா மற்றும் தமால கிருஷ்ண மஹாராஜா.”
“அது நல்லது. இப்போது இதை விநியோகம் செய்.”
“ஏழு, இங்கு ஏழு பெயர்கள் உள்ளன.”
“தற்போதைக்கு ஏழு பெயர்கள் போதும். ராமேஸ்வரா- வையும் சேர்த்துக்கொள்.”
“ராமேஸ்வர மஹாராஜா”
“மற்றும் ஹ்ருதயானந்தா,”
“ஓ, ஆமாம். தென் ஆப்ரிக்கா.”
“ஆகவே எனக்காக காத்திருக்காமல், எங்கெங்கெல்லாம் சரி என்று நீ கருதுகிறாயோ… அது பகுத்தறிவை சார்ந்திருக்கிறது.”
“பகுத்தறிவையா”
“ஆமாம்”
“அது முதல் மற்றும் இரண்டாம் தீக்ஷைக்காகக் தானே”
“ம்ம்ம்.”
“சரி, நான் கீர்த்தன குழுவை அனுப்பட்டுமா ஸ்ரீல பிரபுபாதா?” |
அறை உரையாடல் ஜூலை 19, 1977, விருந்தாவனம்
|
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண: |
“உபேந்திரனும் நானும் கடந்த … அதை பார்க்க முடிந்தது”
“மேலும் அங்கே உங்களை யாரும் தொந்தரவு செய்யப் போவதில்லை. உங்களுக்கான களத்தை ஏற்படுத்தி ரித்விக்காக தொடர்ந்து இருந்து என் சார்பாக செயல்படுங்கள். அங்குள்ள மக்கள் கருணையுள்ளவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இடம் நன்றாக இருக்கிறது”
“ஆம், அவர் கூறுகிறார், ‘பகவத் கீதைக்கான அறிமுகம் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது, மேலும் நான் அந்த இரண்டாம் அத்தியாயத்தினை முடித்துவிடுவேன். பின்னர் உடனடி விநியோகத்திற்காக ஒரு சிறிய புத்தகத்தை வெளியிடுவோம்.’”
|
அறை உரையாடல் அக்டோபர் 18, 1977, விருந்தாவனம்
|
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
பகவான்:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
கிரிராஜா:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமால கிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்: |
“ஹரே கிருஷ்ணா. நியூயார்க்கிலிருந்து ஒரு பெங்காலி கனவான் வந்திருக்கிறாரா? (ஒரு நபர் நியூயார்க்கிலிருந்து பயணம் செய்து ஸ்ரீல பிரபுபாதரால் தீக்ஷையளிக்கப்பட வந்திருக்கிறார்)
“ஆமாம். திரு. சுகுமால் ராய் செளத்ரி.”
“ஆக நான் உங்களில் சிலரை தீக்ஷை அளிப்பதற்காக நியமித்திருக்கிறேன். ம்ம்ம்?
“ஆமாம். உண்மையில்…. ஆம். ஸ்ரீல பிரபுபாதா.”
“எனவே அவர் விரும்பினால் ஜெயபதாக கொடுக்கலாம் என்று நான் யோசிக்கிறேன். நான் ஏற்கனவே நியமித்திருக்கிறேன். அவரிடம் சொல்.”
“ஆமாம்.”
“ஆகவே, நியமிக்கப் பட்டவர்களில், ஜெயபாதகவினுடைய பெயர் உள்ளதல்லவா?”
“அதில் ஏற்கனவே உள்ளது, ஸ்ரீல பிரபுபாதா. அவருடைய பெயர் அந்த பட்டியலில் உள்ளது”
“எனவே அவரை மாயாப்பூரில் அதனைச் செய்ய நியமிக்கிறேன். மேலும் நீ அவருடன் செல்லலாம். நான் தற்காலிகமாக நிறுத்துகிறேன். அது சரிதானே?”
“எதை செய்வதை நிறுத்துகிறீர்கள் ஸ்ரீல பிரபுபாதா?”
“இந்த தீக்ஷையை. அதனால்தான் நான் இந்த என்னுடைய சீடர்களை… நியமித்தேன. இது தெளிவாகியதா இல்லையா?”
“தெளிவாகியது”
“உனக்கு அந்த பெயர் பட்டியல் கிடைத்ததா?”
“ஆம், ஸ்ரீல பிரபுபாதா.”
“மேலும் கிருஷ்ணரின் கருணையால், நான் இந்நிலையிலிருந்து தேறினால், பின்னர் மீண்டும் நான் தொடங்குவேன், அல்லது இந்நிலைமையில் நான் தீக்ஷை அளித்து எனக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்கலாம். அது நல்லதம் அல்ல.” |
அறை உரையாடல் நவம்பர் 2, 1977, விருந்தாவனம்
(ஸ்ரீல பிரபுபாதர் விருந்தினர்களிடம் உரையாடிய விஷயத்தை விளக்கிக் கொண்டிருக்கிறார்)
|
ஸ்ரீல பிரபுபாதர்:
தமாலகிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்:
பக்தர்:
ஸ்ரீல பிரபுபாதர்:
தமாலகிருஷ்ண:
ஸ்ரீல பிரபுபாதர்: |
“...அது “உங்களுக்கு பிறகு, யார் தலைமை ஏற்பார்கள் ?” மேலும் “என்னுடைய சீடர்கள் எல்லாருமே ஏற்கலாம். நீங்கள் விரும்பினால் நீங்களும் ஏற்கலாம். (சிரிப்பு.)ஆனால் நீ பின்பற்றினால் மட்டுமே. அவர்கள் அனைத்தையும் தியாகம் செய்ய தயாராயினர். ஆக அவர்கள் தலைமை ஏற்பார்கள். நான் ஒருவேளை சென்றுவிடலாம், ஆனால் பின்னர் நூற்றுக்கணக்கானவர்கள் இருப்பார்கள், மேலும் அவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். நீ விரும்பினால் நீயும் தலைவராகலாம். நமக்கு ‘இங்குதான் தலைவர் இருக்கிறார்’ என்று எதுவுமில்லை. யார் முந்தைய தலைமையை பின்பற்றுகிறார்களோ அவரும் ஒரு தலைவர் தான்.”
“ம்ம்ம்”
“‘இந்தியன்’. நமக்கு அப்படிப்பட்ட எந்த பாகுபாடும் இல்லை, ‘இந்தியன்’, ‘ஐரோப்பியன்’”
“அவர்கள் இந்தியன்தான் தலைவராக வேண்டும் என்று விரும்புகின்றனரா?”
“ஆம் (சிரிப்பு.) “எனது சீடர்கள் எல்லோருமே தலைவர்கள். எந்த அளவிற்கு அவர்கள் சுத்தமாக பின்பற்றுகிறார்களோ, அவர்கள் தலைவர்களாவார்கள். நீ பின்பற்ற விரும்பினால், நீயும் தலைவராகலாம்—நீ இந்தியன்–-ஆனால் நீ வேண்டாம் என்கிறீர்” அவர்களிடம் நான் அதைத்தான் சொன்னேன்.”
“ஆம், அவர்கள் அநேகமாக நம்முடைய இயக்கத்தை கைப்பற்ற எவரோ ஒருவரை பரிந்துரைக்க விரும்புகிறார்கள்.”
“ஆம். தலைவர்கள். எல்லாம் முட்டாள்தனம். தலைவர் என்பவர் முதல் தரமான சீடராக ஆகவேண்டும். அவரே தலைவர். ஏவம் பரம்பரா ப்ராப்த… யாரொருவர் முழுமையாக பின்பற்றுகிறார்களோ… நம்முடைய உபதேஷமானது, ஆர நா கரிஹ மன ஆஷா. உனக்கு இது தெரியுமா? என்னது அது? குரு-முக-பத்ம-வாக்யா, சித்தேதே கரியா ஐக்யா, ஆர் நா கரிஹ மனே ஆஷா. யார் தலைவர்? ஒரு தலைவர்… தலைவராவது மிகக் கடினமான விஷயமல்ல, நிபந்தனை என்னவென்றால் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை பின்பற்ற தயாராக இருக்க வேண்டும்.” |
பிரமிட் வீட்டில் தனது தவறை ஒப்புக்கொள்ளுதல், டிசம்பர் 3, 1980
தமால கிருஷ்ண மஹாராஜ: “நான் சில விஷயங்களை ஒரு சில நாட்களுக்கு முன்பு உணர்ந்தேன். [...] ஸ்ரீல பிரபுபாதரால் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்களின் மூலம் தெளிவாகின்ற விஷயம் என்னவெனில் அவருடைய குரு மஹாராஜர் அவருக்குப் பின் எந்த ஆன்மீக வாரிசையும் நியமிக்கவில்லை என்று. [...] ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகத்திலும்கூட குரு என்பவர் தகுதியினால் என்று அவர் கூறுகிறார். [...]
இந்த விஷயம் கிருஷ்ணர் கூறுவதுபோல் என் பக்கமிருந்து ஒரு கேள்வியாக எழுந்துள்ளது. உண்மையில், பிரபுபாதர் எவரையும் குருவாக நியமிக்க வில்லை. [...] அவர் பதினோரு ரித்விக்குகளை மட்டுமே நியமித்தார். அவர் அவர்களை குருவாக நியமிக்கவே இல்லை. நானும் மற்ற GBC யும் கடந்த மூன்று வருடங்களாக ரித்விக்குகளாக நியமித்த நம்மை குருவாக நியமித்தார் என்று கூறியதன் மூலம் இந்த இயக்கத்திற்கு மாபெரும் துரோகம் செய்துவிட்டோம்.”
உண்மையில் என்ன நடந்தது என்று நான் விளக்குகிறேன். நான் ஏற்கனவே விளக்கியிருந்தாலும் அந்த விளக்கம் தவறானது. உண்மையில் நடந்தது என்னவெனில் பிரபுபாதர் சில ரித்விக்குகளை நியமிக்கலாம் என்றிருந்தபோது, GBC-யினர் பல்வேறு காரணங்களை கருதி, எங்களில் ஐந்து அல்லது ஆறு நபர்கள் ஸ்ரீல பிரபுபாதரிடம் சென்றனர். (இது மே 28, 1977 ல் நடந்த சந்திப்பை குறிக்கிறது). நாங்கள் அவரிடம் கேட்டோம், “ஸ்ரீல பிரபுபாதா, நீங்கள் போன பிறகு, நாங்கள் சீடர்களை ஏற்றுக்கொண்டால், அந்த சீடர்கள் உங்களுடைய சீடர்களா அல்லது எங்களுடையவர்களா?”
பின்னர் அப்போது தீக்ஷைக்காக சில நபர்களின் பெயர்களை பட்டியலிடப்பட்டிருந்தது. நான் கூறினேன், ‘ஸ்ரீல பிரபுபாதா, நீங்கள் ஒருமுறை ரித்விக்குகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள், நான் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் உங்களை அணுக விரும்பவில்லை, ஆனால், இங்கு நூற்றுக்கணக்கான பக்தர்களின் பெயர்கள் உள்ளன. நான் அந்த எல்லா கடிதங்களையும் வெறுமனே வைத்துள்ளேன். தாங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று தெரியவில்லை’.
ஸ்ரீல பிரபுபாதர் கூறினார், ‘எல்லாம் நல்லதுதான், நான் பலரை நியமிப்பேன்…” என்று கூறி அவர்களின் பெயர்களை கூறினார் [...] அவர் தெளிவாக கூறியது என்னவென்றால் அவர்கள் அனைவரும் அவருடைய சீடர்கள். அந்த விஷத்தில் எனது மனதில் தெளிவாகிய விஷயம் என்னவெனில் அவர்கள் அவருடைய சீடர்கள். பின்னர், நான் அவரிடம் இரண்டு கேள்விகளை கேட்டேன். ஒன்று: ‘ப்ரஹ்மானந்த ஸ்வாமியை பற்றி என்ன கூறுகிறீர்கள்?’ இதை நான் கேட்டதிற்கான காரணம் நான் ப்ரஹ்மானந்த ஸ்வாமியின் மீது தனி அக்கறை கொண்டிருந்ததனால் [...] அதற்கு பிரபுபாதர் கூறினார், “கூடாது, அவர் தகுதியாகும் வரை கூடாது”. நான் கடிதத்தை தட்டச்சு செய்ய தயாராவதற்கு முன்பு, நான் அவரிடம் இரண்டாவது கேள்வி கேட்டேன், “ஸ்ரீல பிரபுபாதா, இவ்வளவுதானா அல்லது தாங்கள் மேலும் சேர்க்க விரும்புகிறீர்களா?”. அவர் கூறினார், ‘தேவைப்பட்டால் மற்றவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.’ எனக்கு இப்போது புரிவது என்னவெனில் அவர் செய்த விஷயம் மிகத்தெளிவானது. அவரது உடல் பலவீனமாக இருந்த காரணத்தால், உடல்ரீதியாக இருந்து தீக்ஷை நிகழ்வை நடத்த முடியாததனால், அவர் அவரைப் பிரதிநிதிக்கும் பூஜாரிகளை அவர் சார்பாக தீக்ஷை அளிக்க நியமித்தார். அவர் பதினோரு பேரை நியமித்து தெளிவாகக் கூறினார். ‘யார்யாரெல்லாம் அருகிலிருக்கிறார்களோ அவர்கள் தீக்ஷை அளிக்கட்டும்’ என்று. இது மிக முக்கியமான விஷயம். ஏனென்றால் தீக்ஷை அளிக்கும் விஷயம் என வரும்போது, அருகிலிருக்கும் யாரிடமாவது என்று அர்த்தமல்ல. மாறாக யாரிடம் உங்கள் மனம் போகிறது என்பதுதான். யாரிடம் உங்களுடைய நம்பிக்கையை கொண்டிருக்கிறீர்களோ, அவரிடமிருந்து தீக்ஷை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் பிரதிநிதிக்கும் போது, அது யார்யாரெல்லாம் அருகிலிருக்கிறார்களோ என்பதுதான், அதில் அவர் தெளிவாக இருந்தார். அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார். அவர்கள் உலகம் முழுவதும் பரவியிருந்ததன் காரணமாக அவர் கூறியதாவது, “யார் உனக்கு அருகிலிருக்கிறார்களோ, நீங்கள் அந்த நபரை அணுகுங்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். பின்னர் என் சார்பில் அவர்கள் தீக்ஷை அளிப்பார்கள்.”
நீங்கள் உங்களது நம்பிக்கையை அந்த நபரின் மீது வைக்க வேண்டும் என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. அது குருவினுடைய செயல்பாடு. ‘இந்த இயக்கத்தை நிர்வகிக்கும் பொருட்டு’ ஸ்ரீல பிரபுபாதர் கூரியதாவது, “நான் GBC- யை உருவாக்கி கீழ்கண்ட நபர்களை நியமிக்கிறேன். நம்முடைய இயக்கத்தில் மக்கள் இணைந்து தீக்ஷை பெறும் வழிமுறை தொடர்ந்து நடக்கும் பொருட்டு, எனக்கு உதவும் வகையில் நான் சில பூஜாரிகளை நியமிக்கிறேன். ஏனென்றால் என்னாலேயே எனது உடல்ரீதியாக எல்லாவற்றையும் நிர்வகிக்க முடியவில்லை. நானே எல்லோரையும் உடல்ரீதியாக இருந்து எல்லோருக்கும் தீக்ஷை வழங்க முடியாது.”
இதுதான் நடந்தது, இதற்கு மேல் ஒன்றுமே இல்லை. இதற்கு மேல் வேறேதாவது இருக்கிறது என்றால், அதனை நீங்கள் சவாலாக ஏற்று, பிரபுபாதர் எங்காவது நாள் கணக்கிலோ, மணிக்கணக்கிலோ வாரக்கணக்கிலோ அல்லது முடிவிலோ எந்த விதத்தில் குருவுக்கான அமைப்பை ஏற்படுத்தியதாக ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. ஏனென்றால் ஏற்கனவே அதைப் பற்றி லட்சக்கணக்கான முறை பேசியுள்ளார். அவர் கூறினார், ‘என்னுடைய குரு மஹாராஜர் யாரையும் நியமிக்கவில்லை. அது தகுதியைப் பொறுத்தது’. நாம் மாபெரும் தவறை செய்துவிட்டோம். பிரபுபாதரின் மறைவிற்குப் பிறகு, இந்த பதினோரு நபர்களின் நிலைப்பாடு என்ன?[...]
ஸ்ரீல பிரபுபாதர் காண்பித்தபடி அது வெறுமனே சந்நியாசி என்பதல்ல. அவர் இரண்டு கிரஹஸ்தர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களும் ரித்விக்குகளாக இருக்கலாம் என்றும், அவர்களும் மற்ற சன்யாசிகளுக்கு சமமானவர்களே என்றும் காண்பித்துள்ளார். ஆகவே யாரொருவர் ஆன்மீக ரீதியாக தகுதியுடையவராய் இருக்கிறாரோ—எப்போதும் புரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்கள் குரு இருக்கும்போது நீங்கள் சீடர்களை ஏற்க முடியாது, ஆனால் குரு மறையும் போது, நீங்கள் தகுதியுடையவராய் இருந்தாலும் தங்களின் மீது யாரேனும் நம்பிக்கை கொண்டாலோ மட்டும் சீடர்களை ஏற்கலாம். உண்மையில், அவர்கள் (வளருகின்ற பக்தர்கள்) முறையான குரு யாரென்று பகுத்தறியும் அளவுக்கு அவர்கள் முன்னேறியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் முறையான குரு என்றால், உங்கள் குரு இல்லாதபோது அது உங்களுடைய உரிமையாகிறது. இது ஒரு மனிதன் தன் இனத்தை பெருக்குவது போல [...]. துரதிஷ்டவசமாக, GBC இந்த விஷயத்தை அடையாளம் காணவில்லை. அவர்கள் உடனடியாக இந்த பதினோரு நபர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட குருக்களாக அமர்த்திவிட்டனர். நானே இந்த விஷயத்தை அறுதியிட்டு கூறுகிறேன், எனக்கும் கூட கட்டுப்படுத்தி ஆளும் மனோபாவனை ஓரளவிற்கு இருக்கிறது. அதற்காக நான் தங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்[...] இதுவே கட்டுண்ட ஆத்மாவின் நிலையாகும். அது எல்லாவற்றிலும் உயர்ந்த பதவியான “குரு, ஆஹா அற்புதம்! இப்போது நான் குரு, இப்போது இந்த பதினோரு பேர்கள் மட்டுமே”[...] என்பதிலிருந்து வருகிறது. நான் உணர்வது என்னவெனில், அடுத்தடுத்து வரும் பிரச்சினைகளை நாம் தவிர்க்க வேண்டுமெனில் இந்த தன்னுணர்வு அல்லது இந்த புரிந்துணர்வு சாராம்சமானது, ஏனெனில் நான் சொல்வதை நம்புங்கள் இது திரும்பத்திரும்ப வரப்போகிறது. இப்போது வெறும் காலஇடைவெளி மட்டும்தான், இப்போதே சின்ன சின்ன விஷயங்கள் சாயலாக தெரிகிறது, மேலும் சில சம்பவங்கள் நடைபெறப் போகிறது, அது இங்கு L.A (லாஸ் ஏஞ்செலஸ்)-விலோ அல்லது வேறெங்கோ. இந்த கிருஷ்ணருடைய உண்மையான ஆன்மீக ஆற்றலை எந்த தடையுமில்லாமல் வெளிப்படுத்துவதற்கு நீங்கள் அனுமதிக்கும் வரை இது தொடர்ந்து நடைபெறப் போகிறது.[...] நான் உணர்வது என்னவென்றால் GBC குழு இந்த விஷயத்தை வெகு விரைவில் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், இந்த உண்மையை அவர்கள் உணரவில்லை என்றாலும்: நீங்கள் எந்தவொரு ஒலிநாடாவையோ அல்லது எழுத்து பூர்வமாகவோ பிரபுபாதர் கீழ்கண்டவாறு கூறுவதை காண்பிக்க முடியாது: “நான் இந்த பதினோரு பேரை குருவாக நியமிக்கிறேன்”. அவ்வாறு இல்லவே இல்லை. ஏனென்றால் அவர் யாரையும் குருவாக நியமிக்க வில்லை. அவ்வாறு நினைப்பதும் கூட ஒரு கட்டுக்கதை.[...] எந்தவொரு நாளில் நீங்கள் தீக்ஷை பெருகிறீர்களோ அந்த நாளில் தான் நீங்கள் தந்தையாகிறீர்கள் அதுவும் உங்கள் தந்தை மறைந்த பிறகு, அதுவும் நீங்கள் தகுயுள்ளவராய் இருந்தால் எந்த நியமனமும் இல்லை. எந்த நியமனமும் தேவையில்லை, ஏனென்றால் இங்கு ஒன்றுகூட இல்லை.
இலவசமாக IRM -உடைய இதழைப் பெற சந்தாதாரராகுங்கள்.
இலவசமாக கால் ஆண்டு இதழைப் பெறுவதற்கு, தங்களுடைய முழு பெயரையும் உங்கள் முகவரியையும் எங்களுடைய irm@iskconirm.com என்ற ஈமெயில்-க்கு அனுப்பவும்

இஸ்கான் மறுமலர்ச்சி இயக்கத்தின் (IRM) மற்ற புத்தகங்கள்
● ஸ்ரீல பிரபுபாதா, இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியர்: GBC யின் அடிப்படை ஆவணங்களின் முடிவுகளை வழங்குதல்
● புத்தகங்களை மாற்றியவர்: அருள்திரு ஜெய அத்வைத ஸ்வாமியின் வாழ்க்கையும் போதனைகளும்
● 100 திசைதிருப்பங்கள்: அருள்திரு சிவராம ஸ்வாமியின் வாழ்க்கையும் போதனைகளும்
● 100 முரண்பாடுகள்: அருள்திரு பக்தி சாரு ஸ்வாமியின் வாழ்க்கையும் போதனைகளும்
● அங்கீகரிக்கப்பட்ட பாகவதம்: ஸ்ரீல பிரபுபாதர் தன்னுடைய பாகவதத்தை முழுமைப்படுத்துமாறு மற்றவர்களுக்கு எப்போதும் கட்டளையில்லை என்பதனை நிரூபிக்கிறது.
மேற்கண்ட எந்தவொரு பதிவின் நகலையும் இலவசமாகப் பெற எங்களுடைய irm@iskconirm.com என்ற ஈமெயிலுக்கு உங்கள் வேண்டுகோளை அனுப்புங்கள்.